.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 16 November 2013

சச்சினுக்கு பாரத ரத்னா விருது!

 

கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் மற்றும்  வேதியியல் விஞ்ஞானி 

சி.என்.ஆர்.ராவுக்கும் இந்திய நாட்டின் உயரிய விருதாக கருதப்படும் பாரத

ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.





இருவருக்கும் பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

அறிவித்தார்.


 

இந்த விருது பெறும் முதல் கிரிக்கெட் வீரர் சச்சின் என்பது

குறிப்பிடதக்கது


பீர் பாட்டில்களின் மேல் இந்து தெய்வங்களின் உருவங்கள் நீக்கம்!

பீர் பாட்டில்களில் இந்து கடவுளர்களான விநாயகர், லக்ஷ்மி ஆகியோரின் உருவங்களை லேபிள்களாகப் பதிந்து விற்பனை செய்து வந்த ஆஸ்திரேலிய நிறுவனத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, அந்த நிறுவனம் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டதுடன், லேபிள்களை அகற்றுவதாகவும் கூறியது.இதையடுத்து இந்த விஷயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்த ஆஸ்திரேலிய நிவேதா பகுதி இந்து அமைப்பைச் சேர்ந்த ராஜன் ஸேத் இது சரியான, வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று கூறினார்.இதற்காக, தங்களுக்கு உதவி புரிந்த, தங்கள் குரலுக்கு செவிசாய்த்து, ஆதரவுக் கரம் நீட்டிய அனைத்து ஹிந்துக்களுக்கும் தங்கள் நன்றியைத் தெரிவிப்பதாக அவர் வெள்ளிக்கிழமை இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

                                                       nov 9 - vanigam god beer


சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் மதுபான நிறுவனம் ஒன்று தங்களது பீர் பாட்டில்களின் மேல் இந்துக் கடவுள்களாகிய பிள்ளையார், லக்ஷ்மி போன்ற தெய்வங்களின் உருவங்களை அச்சடித்திருந்தது. இதனைக் கேள்விப்பட்ட ஆஸ்திரேலியாவாழ் இந்து மதத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இத்தகைய தெய்வ உருவங்களை மதுபாட்டில்களின் மேல் வெளியிடுவது மிகவும் பொருத்தமற்ற செயலாகும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

தற்போது வர்த்தகம் என்பது, மத நம்பிக்கைகளிலிருந்து வேறுபட்டது என்பதை அவர்கள் உணரவேண்டும் என்று கூறியுள்ள அவர், மத நம்பிக்கைகளை வியாபாரிகள் மதிக்க வேண்டும் என்றார்.இதை அடுத்து, நவ.24ம் தேதிக்குள் பீர் பாட்டில்களில் வேறு டிசைன்களை அளிப்பதாகவும், அதற்காக உலகெங்கிலும் இருந்து கிராபிக் டிசைனர்கள், ஓவியர்களிடம் டிசைன்களை வரவேற்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

அமெரிக்காவில் மருத்துவ ஜெனரலாகிறார் இந்தியரான டாக்டர் விவேக் மூர்த்தி!

 nov 16 - America Dr Murthy.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மருத்துவ சட்டத்தை நடைமுறை படுத்தும் குழுவுக்கு தலைவராக அமெரிக்காவின் தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுணரான இந்தியர் விவேக் எச். மூர்த்தி இருந்து வருகிறார். இந்த விவேக் எச். மூர்த்தியை அமெரிக்காவின் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ சிகிச்சைத் துறையை ஒட்டுமொத்தமாக நிர்வகிக்கும் உயரிய பதவியில் ஒபாமா நியமிக்க திட்டமிட்டிருப்பதாக நேற்று அறிவித்தார். இவரது பரிந்துரையை செனட் சபை ஏற்ருக் கொண்டால் அமெரிக்க வரலாற்றிலேயே மிகச்சிறிய வயதில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணரான பெருமைக்குரியவராக மூர்த்தி விளங்குவார்.                                  

ஹார்வார்டு மருத்துகல்லூரியில் மருத்துவம் பயின்ற இவர் தற்போதைய சர்ஜன் ஜெனரலான உள்ள ரெஜினா பெஞ்சமின் என்பவருக்கு பதிலாக பொறுப்பேற்பார். அமெரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவராகவும், இணை நிறுவனராகவும் உள்ள மூர்த்தி ஹார்வார்டு மருத்துவ நிறுவனத்தின் மருந்தியல் பிரிவின் மருத்துவர் மற்றும் பயிற்றுவிப்பாளராகவும் இருந்து வருகிறார். இதற்கிடையில் ஒபாமாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்க இந்திய மருத்துவ சங்கத்தினர் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

Obama Nominates Dr. Vivek Murthy as the Next U.S. Surgeon General

***************************************************
 

On Thursday night, the White House announced President Obama’s nomination for the next U.S. Surgeon General.The ideal nominee, Dr. Vivek Hallegere Murthy, is the co-founder and president of Doctors for America, a group that has been supporting and promoting Obama’s health care law.

சர்வதேச சகிப்புத் தன்மை தினம் – நவம்பர் 16

கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்க, ஐ.நா.வின் ஓர் அங்கமாக யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வண்ணம், வருங்காலத் தலைமுறையினரை கருத்தில் கொண்டு, அகில உலக சகிப்புத்தன்மை நாள் கடைபிடிக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் 1995ம் ஆண்டு ஐ.நா. பொது அவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த உறுதிமொழியின்படி 1996ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 16ம் தேதி சர்வதேச உலக சகிப்புத் தன்மை நாளாகக் கடைபிடிக்கப்படுகின்றது.

                                            nov 16 - edit tolerance-day

இன்றைய மக்களிடையே சகிப்புத்தன்மை இல்லாததால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அகிம்சை, சகிப்புத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும்தான் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

வருங்காலச் சந்ததியினரை போர் என்ற சாபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற தீர்க்கமான எண்ணத்துடன் ஐக்கிய நாடுகள் அமைப்பில் உள்ள பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து எடுத்துக் கொள்ளும் உறுதி மொழியாவது…’ என்று ஆரம்பமாகும் ஓர் உறுதி மொழியை ஐ.நா. அமைப்பைச் சார்ந்த அனைத்து நாட்டுப் பிரதிநிதிகளும் 1995ம் ஆண்டு எடுத்தனர்.யுனெஸ்கோ (UNESCO) நிறுவனத்தின் அடிப்படைக் கூறுகள் இவ்வுலகில் நிலைத்து நிற்க, மனிதகுலம் அறிவுப்பூர்வமாகவும், நன்னெறியின் அடிப்படையிலும் ஒருங்கிணைய வேண்டும் என்று இவ்வுறுதிமொழி எடுத்துரைக்கிறது.

‘உலகில் நிலவும் பல்வேறு கலாச்சாரங்களையும் வியந்து பாராட்டி, ஏற்றுக் கொள்வதையே சகிப்புத்தன்மை என்று அழைக்கிறோம். இது வெறும் நன்னெறி கோட்பாடு மட்டும் அல்ல் மாறாக, இது சட்ட திட்டங்களாக, அரசியல் கோட்பாடுகளாக நிலை நிறுத்தப்பட வேண்டும்’ என்று இவ்வறிக்கையில் சகிப்புத்தன்மையின் இலக்கணம் வரையறுக்கப்பட்டுள்ளது.
 
மனிதகுலம் வாழ்வதற்குத் தேவையான அன்பு, பரிவு, ஒற்றுமை ஆகிய பல உயர்ந்த உணர்வுகளுக்கு அடிப்படையாக, குறைந்தபட்சம் சகிப்புத் தன்மையாகிலும் நம்மிடையே இருக்க வேண்டும் என்பதை நவம்பர் 16 நமக்கு நினைவுறுத்துகிறது!

சர்வதேச ரோமிங் சிம் கார்ட் சென்னையில் சேல்ஸ்!

ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பயணம் செய்வோருக்கு உதவும் வகையில் சர்வதேச ரோமிங் சிம் கார்டை லைகா மொபைல் நிறுவனம் சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த சிம் கார்டுக்கு வரும் அழைப்புகளுக்கு கட்டணம் கிடையாது. அத்துடன் வாழ்நாள் முழுவதும் இந்த சிம் கார்டுகளுக்கு வாடகை கிடையாது என்பதுடன் முன் பணம் செலுத்தத் தேவையில்லை என்பதும விசேஷ தகவல்.

                                             nov 16 - vanigam mobile.mini

இந்த சர்வதேச சிம் கார்டில் வாடிக்கையாளர்கள் செலுத்திவரும் கட்டணத்தைவிட 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குறைவான கட்டணத்தில் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள முடியும்.வெளிநாட்டுக்குச் செல்லும் இந்தியர்கள் அந்த நாட்டிலிருந்து ஒரு ரூபாய் செலவில் இந்தியாவில் உள்ள உறவினர்கள், நண்பர்களைத் தொடர்பு கொள்ள முடியும். அலுவலக விஷயங்களையும் பரிமாறிக் கொள்ள முடியும். இந்த சிம் கார்டுக்கு வரும் அழைப்புகளுக்கு கட்டணம் கிடையாது. வாழ்நாள் முழுவதும் இந்த சிம் கார்டுகளுக்கு வாடகை கிடையாது. முன் பணம் செலுத்தத் தேவையில்லை.

ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, போலந்து, டென்மார்க், நார்வே, ஸ்வீடன், அயர்லாந்து, பெல்ஜியம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள் ளிட்ட 13 நாடுகளில் இந்த சிம் கார்டு மூலம் தொடர்பு கொள்ளலாம். இங்கிலாந்தின் செல்பேசி எண்ணைக் கொண்டிருக்கும் இந்த சிம் கார்டு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

சிறு, குறு, நடு த்தரத் தொழில்முனைவோர், வங்கிகள், நிதி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகள், உயர் கல்விபெறச் செல்லும் மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் குறைந்த கட்டணத்தில் வேகமான இணைப்புத் திறனுடன் கூடிய இந்த சிம்கார்ட் மிகவும் உபயோகமானதாக இருக்கும் என்று சிம்கார்டை அறிமுகப்படுத்தியுள்ள லைகா டெலிகாம் நிறுவன தலைமை செயல் அதிகாரி மிலிந்த் காங்லே தெரிவித்தார்.

சர்வதேச ரோமிங் கார்ட் அனைத்து விசா பரிசீலனை மையங்கள், சர்வதேச விமான நிலையங்கள், சென்ட்ரம் போரக்ஸ் எக்ஸ்சேஞ்சின் 700 கிளைகள் மற்றும் ஆக்சிஸ், யெஸ் வங்கிகளில் கிடைக்கும். இது தவிர 1800 103 6699 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டால் 24 மணி நேரத்தில் வாடிக்கையாளரின் வீட்டிற்கே சிம் கார்ட் அளிக்கப்படும் என்று நிறுவனத்தின் சி.ஓ.ஓ. பிரேமானந்தன் சிவசாமி தெரிவித்தார்.

Lyca Mobile offers international roaming SIM for corporate travellers

**************************************


Lyca Telecom, a subsidiary of UK- based Lyca Mobile, today introduced its post-paid international roaming SIM card priced at Rs 250 targeting the corporate customers.
The company, which was offering services to UK customers, expanded its horizon and currently offers the international roaming post-paid SIM cards to Indian customers. 

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top