.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 15 November 2013

அஞ்சலியை ‘ஹீரோயின்’ ஆக்கியது நான்தான்: சித்தி பாரதிதேவி பேட்டி

 

நடிகை அஞ்சலி தனது சித்தி பாரதிதேவிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். வீட்டை அபகரித்துக் கொண்டதாகவும், வெற்று காசோலையில் கையெழுத்து வாங்கி தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.57 லட்சத்து 30 ஆயிரம் தொகை மற்றும் 50 பவுன் நகை உள்ளிட்ட உடமைகளை எடுத்துக் கொண்டதாகவும், அடுக்கடுக்கான புகார் கூறியுள்ளார்.


எனது அக்காள் பார்வதி தேவி மகள்தான் அஞ்சலி. கணவர் இல்லாமல் சிறு வயதில் அஞ்சலியை வளர்க்க கஷ்டப்பட்டார். இதனால் 2001–ல் என்னுடன் அஞ்சலியை அழைத்து வந்து விட்டேன்.

எனது கணவர் அரிபாபு பில்டர் ஆக இருக்கிறார். எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அஞ்சலியை நாங்கள் மகளாக வளர்த்தோம். நடிகையாக்க டான்ஸ் கற்றுக் கொடுத்தேன். மேக்கப்புக்கும் பணம் கொடுத்தேன். எங்கள் தகுதிக்கு மீறி செலவு செய்து அஞ்சலியை கதாநாயகி ஆக்கினேன். நான் இல்லாமல் அஞ்சலி நடிகையாகி இருக்க முடியாது.

2006–ல் தெலுங்கு படமொன்றில் அறிமுகமானார். சரியாக ஓடவில்லை. மீண்டும் தெலுங்கு படமொன்றில் நடித்தார். அது ரிலீசே ஆகவில்லை. தமிழில் ‘கற்றது தமிழ்’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு ‘அங்காடி தெரு’ படம் வந்தது. ‘எங்கேயும் எப்போதும்’ படம் வந்த பிறகு அஞ்சலி பேசப்பட்டார். அதன்பிறகு பெரிய படங்கள் குவிந்தன.

என்மேல் அஞ்சலி இப்போது குற்றச்சாட்டு கூறுகிறார். அஞ்சலியை முறைப்படி நான் தத்து எடுத்து உள்ளேன். எங்கள் வீட்டில் செல்லமாக வளர்த்தோம். நாங்கள் குடியிருக்கும் வளசரவாக்கம் வீட்டை எனது கணவர்தான் கட்டினார். அதை அஞ்சலி பெயரில் எழுதி வைத்தோம். ரேசன்கார்டு, பாஸ்போர்ட்டுகளில் அஞ்சலியின் அம்மா, அப்பா பெயரில் எங்கள் பெயர்கள்தான் உள்ளன. அஞ்சலியை மகள் மாதிரிதான் வளர்த்தேன். என்மேல் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்.

இவ்வாறு பாரதிதேவி கூறினார்.

அஞ்சலி உங்களை விட்டு பிரிந்து போக காரணம் என்ன என்று கேட்டபோது சில விஷயங்களை வெளிப்படையாக பேச முடியாது. இப்போதும் அஞ்சலியை மகளாகத்தான் நினைக்கிறேன். நான் இல்லை என்றால் அஞ்சலி இல்லை. என் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்திப்பேன். டைரக்டர் களஞ்சியம் மீது புகார் சொல்லி இருப்பது தேவையற்றது. அஞ்சலியை வைத்து சில படங்களை அவர் எடுத்தார். சில காரணங்களால் அது வரவில்லை. அவரும் அஞ்சலியை நடிகையாக்க உதவினார் என்றார்.

கூகுள் புரொஜெக்ட் லூன் தொடர்பில் மற்றுமொரு தகவல்!




எந்தவொரு தருணத்திலும் தடங்கலற்ற இணைய சேவையை வழங்கும் முகமாக கூகுள் நிறுவனம் புரொஜெக்ட் லூன் எனும் சேவையை அறிமுகப்படுத்தவிருக்கின்றது.

பறக்கும் பலூன்கள் மூலம் Wi-Fi தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி இணைய இணைப்பினை வழங்குதலே இச்சேவையின் நோக்கமாகும்.

இதேவேளை இச்சேவையில் பங்குகொள்ளும் ஒவ்வொரு பலூனும் 100 நாட்களில் பூமியை 3 தடவைகள் சுற்றிவரும் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் குறித்த பலூன்கள் எந்தவொரு காலநிலையையும் தாங்கும் வகையில் பொருத்தமான ஊடகத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டி ரெக்ஸ் டைனசோரின் மூதாதை விலங்கு கண்டுபிடிப்பு

 

சுமார் 70 மிலியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கொடூரமான விலங்கான, திரன்னோசோரஸ் ரெக்ஸ் (டி.ரெக்ஸ்) என்ற டைனசோரின் முன்பு வந்த , அதன் உறவு என்று கருதப்படும் மற்றொரு விலங்கை , அமெரிக்காவின் யுட்டா மாகாண விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

யுட்டா மாகாண பல்கலைக்கழகத்தின் , டைனசோர் ஆராய்ச்சியாளர்கள் , இந்த ஜந்து, பரிணாம வளர்ச்சி அடிப்படையில் பார்த்தால், டி-ரெக்ஸின் மாமா-கொள்ளுத்தாத்தாவாக இருக்கவேண்டும் என்றும் அது , பிரபலமாக அறியப்படும் டி.ரெக்ஸ் வாழ்ந்த காலத்துக்கு சுமார் 10 அல்லது 12 மிலியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தது என்று கூறுகிறார்கள்.

லித்ரொனக்ஸ் ஆர்கெஸ்டெஸ் அல்லது கோர் அரசன் என்று அறியப்படும் இந்த விலங்கு, இரண்டு கால்களில் நின்று, பெரும் வாட்களைப் போன்ற பற்களைக் கொண்டிருந்தது என்றும், வேட்டைக்காக நேரடியாக முன்னோக்குப் பார்க்கும் கண்களைக் கொண்டிருந்தது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

சுமார் ஏழரை மீட்டர் நீளம் கொண்ட இந்த விலங்கு அது வாழ்ந்த சூழலில், மிகவும் சக்தி வாய்ந்த ,வேட்டை மிருகமாக இருந்திருக்கும் என்றும் இந்த ஆராய்ச்சிக்குழு கூறுகிறது.

இந்தக் கண்டுபிடிப்பு பழங்கால சுற்றுச்சூழல்கள் குறித்த முக்கிய தகவல்களை வெளிப்படுத்தும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.


மனிதர்களின் முழங்காலில் புதிய தசைநார் கண்டுபிடிப்பு!

 புதிய தசைநார் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது

மனிதர்களின் முழங்கால் பகுதியில் முன்னெப்போதும் அறியப்படாத தசைநார் ஒன்று காணப்படுவதைக் கண்டறிந்துள்ளதாக பெல்ஜியத்தின் முழங்கால் மருத்துவ நிபுணர்கள் அறிவித்திருக்கின்றனர்.
தொடை எலும்புக்கு மேல்புறத்திலிருந்து முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடைப்பட்ட முன்னங்கால் வரையான பகுதிவரை இந்த தசைநார் அமைந்துள்ளதாக மருத்துவர் க்ளஸ் மற்றும் பேராசிரியர் ஜோஹன் பெல்லெமன்ஸ் ஆகிய மருத்துவ நிபுணர்கள் இருவரும் கண்டறிந்துள்ளனர்.


நாம் நடந்துசெல்லும்போது திடீரென்று திசைமாற்றி கால்களை திருப்பி நகர்த்தும்போது இந்த தசைநார்கள் தான் கால்களுக்கான பாதுகாப்பு அரணாக அமைவதாக இவர்கள் கூறுகிறார்கள்.

இப்படி ஒரு தசைநார் முழங்காலை ஒட்டி அமைந்திருக்கும் என்று நீண்டகாலமாக கருத்துக்கள் இருந்துவந்த போதிலும் இப்போது தான் அதுபற்றிய ஒரு தெளிவு ஏற்பட்டிருக்கிறது என்று பிரிட்டனிலுள்ள முழங்கால் சிகிச்சை நிபுணரான ஜோயல் மெல்டன் கூறுகிறார்.

மருத்துவ பரிசோதனைக்கான உடல் உறுப்பு தானமாகக் கிடைத்த 41 பேரின் முழங்கால்களை நுண்ணோக்கி கருவி மூலம் ஆராய்ந்துபார்த்த விஞ்ஞானிகள், எல்லா முழங்கால் எலும்புகளில் இந்த தசைநார்கள் காணப்பட்டதை கண்டறிந்துள்ளனர். அதுவும் அவை எல்லாம் ஒரே வடிவமைப்பில் இருப்பதாகவும் இவர்கள் கண்டறிந்தார்கள்.

பொதுவாக விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படக்கூடிய முழங்கால் காயங்களின்போது, அவற்றை சரியாக புரிந்துகொள்ளவும் சிகிச்சை அளிக்கவும் இந்த தசைநாரின் அமைப்பு உதவும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

கால்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், பனிச்சறுக்கல் மற்றும் ஓட்டப் போட்டிகள் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடும் வீரர்கள் தங்களின் கால்கள் செல்லும் திசையை திடீரென்று மாற்றும்போதோ நிறுத்தும்போதோ இவ்வாறான முழங்கால் உபாதைகள் ஏற்படுகின்றன.

இவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளால் முன்னேற்றம் ஏற்படுகின்ற போதிலும் 10 முதல் 20 வீதமானோருக்கு முழுமையான குணம் கிடைப்பதில்லை.

கால்களின் முன் பக்கவாட்டில் இருக்கின்ற இந்த தசைநாரில் ஏற்படுகின்ற காயங்களும் அனேகமான முழங்கால் உபாதைகளுக்கு பகுதியளவில் காரணமாகின்றன என்று மருத்துவர் க்ளஸ் மற்றும் பேராசிரியர் ஜோஹன் பெல்லமன்ஸ் நம்புகின்றனர்.

முழங்கால் காயங்களால் பாதிக்கப்படுவோரை குணப்படுத்த இந்த புதிய கண்டுபிடிப்பை எந்தளவுக்கு பயன்படுத்த முடியும் என்று அறிய இன்னும் மேலதிக ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வு!

மனிதர்களுக்கு பல சிக்கலை ஏற்படுத்துவது மலச்சிக்கல் நோயே. மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக மூலநோய் இருக்கும். வயிற்று தொந்தரவுகள் இருந்தால் மனதில் தெம்பு இருக்காது. பணிகள் செய்ய சுறுசுறுப்பு இருக்காது. ஏராளமான குறைகளை ஏற்படுத்தும் இந்த நோய்க்கு மிக சாதாரண மருந்து உள்ளது. முருங்கை கீரை பொரியலை சற்று அதிகமாக எடுத்து கொண்டாலே போதும். இரவு உணவு சாப்பிடும்போது, சோறு பாதி, முருங்கை கீரை பாதியாக பிசைந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலே இருக்காது. எவ்வித தொந்தரவும் இல்லாமல் இலகுவாக மலம் வெளியேறும்.

வெளி மூலம்:


முருங்கை இலையும், முத்து என்னும் சிற்றாமணக்கு இலையும் சம அளவில் பொடியாக அரிந்து விளக்கெண்ணெய் விட்டு லேசாக வதக்கி மூலத்தின் மேல் வைத்துக்கட்டினால் வெளி மூலம், மூளை மூலம், சதை மூலம் போன்ற அனைத்து மூலங்களும் சுருங்கி குணமாகும். மூலம், பௌத்திரம் (பகந்தரம்) நோய் குணமாக முருங்கை கீரை 2 பங்கு, ஊமர்த்தன் இலை 1 பங்கு ஆகியவற்றை பொடியாக அரிந்து வேப்ப எண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் ஆசனவாயின் மேல் வைத்துக்கட்டினால் கிருமி, பௌத்திரம், நச்சு தண்ணீர் வடியும் பௌத்திரம், நீண்ட நாள்கள் உள்ள மூலம், பௌத்திரம் தொந்தரவுகள் குணமாகும்.

வாந்தி உண்டாக்க:

சித்தர்களின் கூற்றுப்படி ஆறு மாதத்திற்கு ஒருமுறை இயல்பாக பேதி மருந்து சாப்பிட்டு வயிற்றை சுத்தம் செய்தல், வாந்தி எடுக்க மருந்து சாப்பிடுதல், பித்த வாந்தி எடுத்தல் மனித ஆரோக்கிய விதிமுறை ஆகும். இந்த காரத்திற்காகவும், வேறெதேனும் விஷத்தை குடித்த பிறகு அதை வாந்தி மூலம் வெளியே எடுக்க வேண்டும் என்றால், காட்டு முருங்கை இலைச்சாற்றை 36 கிராம் வாயில் ஊற்றி வாந்தி எடுக்க செய்ய வேண்டும். முருங்கை இலை சாற்றை வாயில் ஊற்றினாலே வாந்தி வந்திவிடும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top