மாவீரன் சத்ரபதி சிவாஜியின் ஆன்மிகப்பற்று, இந்து சமயத்திற்கு அவர் ஆற்றிய தொண்டு மற்றும் அவர் கட்டிய கோயில் திருப்பணிகள் எல்லாமே மிகப்பெரியன. மஹாராஷ்டிரா மாநிலம் கொங்கண் கடற்கரையை ஒட்டிய காட்டுப்பகுதியில் சில கோயில்கள் உள்ளன. அவற்றுள் பகவதி தேவி கோயில், கணபதிதாரி கோயில் மற்றும் சிவாஜி கட்டிய சிவராஜேஸ்வர் கோயில்கள் மிகவும் புகழ்பெற்றவை. கொங்கண் காட்டுப்பகுதியில் உள்ள சவந்தவாடி என்ற குன்றிலிருந்து உற்பத்தியாகும் நீர், கர்லா என்ற நதி வழியாக தாமாப்பூர் ஏரிக்கு வந்து சேருகிறது. அந்த ஏரிக்கரையின்மேல் அமைந்துள்ள கோயிலில் பகவதி தேவி தரிசனமளிக்கிறார். அக்கோயிலைச் சுற்றி ஓடுகள் வேயப்பட்டு கேரளபாணியில் கட் டப்பட்ட மண்டபங்கள் உள்ளன. அவை...
Friday, 15 November 2013
கர்ப்பம் தரிப்பதற்கு முன்!
‘உலகிலேயே மிக உயர்ந்த, உன்னதமான பதவி தாய்மை. அன்புதான் அதற்கான சம்பளம்...’ பெருமைக்குரிய இந்தப் பதவிக்கு எல்லாப் பெண்களும் தகுதியுடையவர்களே... அதற்கு முன் தேவை கொஞ்சம் ஆலோசனைகள்... கொஞ்சம் முன்னெச்சரிக்கைகள்...இவை இரண்டும் இருந்தால், தாய்மைப் பதவிக்காக எந்தப் பெண்ணும் தவிக்க வேண்டியிருக்காது. குழந்தை வேண்டும் என விரும்புகிற பெண்கள், திருமணத்துக்கு முன்பிலிருந்தே கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார் குழந்தையின்மை சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவர் மனு லட்சுமி.திருமணத்துக்கு முன்...குழந்தைப்பேறு என்பது திருமணத்துக்குப் பிறகு திட்டமிட வேண்டிய விஷயமில்லை. திருமணத்துக்கு முன்பிலிருந்தே, அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பமாக...
புராதன சின்னமாகிறது திருமால்கோனேரி மலை! ஒரே இடத்தில் கிமு, கிபி ஓவியங்கள்!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமால்கோனேரி மலை புராதன சின்னமாக தொல்லியல் துறையால் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. மதுரையை சுற்றியுள்ள மலைகளில் பாரம்பரிய சின்னங்கள், கல்வெட்டுக்கள், சமணர்களின் வாழ்வு நிலை, ஓவியங்கள் என ஏராளமான பொக்கிஷங்கள் உள்ளன. இம்மலைகளை கண்டறிந்து தொல்லியல் துறை புராதன சின்னங்களாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. அந்த வரிசையில், சிவகங்கை மாவட்டம் திருமால்கோனேரி மலை தொல்லியல் துறையால் விரைவில் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட உள்ளது.இந்த மலையில் 5ம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஓவியங்கள், தமிழீ எழுத்துக்கள் (அப்போதைய தமிழ் எழுத்து வடிவம்), 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சமணர்களின் மந்திரமாக இருந்த ஸ்வஸ்திக் சின்னம், சமணர் படுக்கைகள்,...
சில நிமிடங்களிலேயே பணம் அனுப்பும் செல்போன் வழி பரிமாற்றம் !
சில நிமிடங்களிலேயே பணம் அனுப்பும், செல்போன் வழியிலான பணப் பரிமாற்றம் என்ற புதிய சேவையை இந்திய தபால் துறை தமிழகத்தில் நாளை அறிமுகம் செய்கிறது. தில்லி, பஞ்சாப், பிகார், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், குஜராத், ஹரியானா, மத்திய பிரதேசம், இமாசல பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட இச் சேவை தற்போது தமிழகத்திலும் நடைமுறைக்கு வருகிறது. தபால் துறையின் தென் மண்டலத்தில் 95 தபால் நிலையங்களிலும், அதில் மதுரை கோட்டத்தில் 32 தபால் நிலையங்களிலும் இச் சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. செல்போன் வழி பணப்பரிமாற்ற சேவையைப் பயன்படுத்த விரும்புவோர், இச் சேவை வழங்கும் தபால் நிலையத்தில் பணத்துடன் தங்களது செல்போன் எண்ணையும், பணம் அனுப்ப வேண்டியவரின் முழு முகவரி, செல்போன் எண்ணையும் குறிப்பிட்டு அதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க...
உலக செஸ் சாம்பியன்ஷிப்: 5-வது சுற்றில் ஆனந்துக்கு சவால்
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 5-வது சுற்று வெள்ளிக்கிழமை துவங்குகிறது. இதுவரை நடந்த சுற்றுக்கள் டிராவில் முடிந்த நிலையில், 6-வது மற்றும் 7-வது சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாட உள்ள ஆனந்துக்கு 5-வது சுற்றில் சவால் காத்திருக்கிறது.சர்வதேச செஸ் கூட்டமைப்பு நடத்தும், உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சென்னையில் நடந்து வருகிறது. இதில், இந்தியாவின் ஆனந்த், நார்வேயின் கார்ல்ùஸன் மோதுகின்றனர். இதுவரை நடந்த நான்கு சுற்றுகளும் டிராவில் முடிவடைந்தன. இதனால் இருவரும் தலா 2 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் சமநிலையில் உள்ளனர். முதல் சுற்றில் ஆனந்த் சுதாரித்தார். இரண்டாவது சுற்றில் கார்ல்ùஸன் எழுச்சி பெற்றார். 3-வது சுற்றில் ஆனந்த், கார்ல்ùஸனுக்கு...