அமெரிக்க அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும், மிகவும் அரிதான, சண்டையிட்டதில் உயிரிழந்ததாக கருதப்படும் இரண்டு டயனோசர்களின் படிமங்கள் ஏலத்திற்கு விடப்படவுள்ளன.
தென் அமெரிக்காவில் 680 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய வகை டயனோசர்களின் உடல் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டன. மிகவும் அரிதான, சண்டையிட்ட நிலையில், உயிரிழந்ததாக கருதப்படும் இந்த டயனோசர்களின் படிமங்கள் அமெரிக்காவின், நியூயார்க் நகரில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இவை ஏலம் விடப்படுகின்றன.
இவற்றில் 26 அடி நீளம் கொண்ட டயனோசர் மட்டுமின்றி, 36 அடி நீளம் கொண்ட மற்றொரு டயனோசரும் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளன. இவை பலகோடி அமெரிக்க டாலர்களுக்கு...
Friday, 15 November 2013
கழிவுகளை அழித்து மனித குலத்தை காப்போம்!
17:36
ram
No comments
கழிவு என்பது எல்லா இடங்களிலும் எல்லோராலும் உருவாக்கப்படுவதே. நகரங்களில் மீதமாகும் கழிவுகளுக்கு வடிகாலாக கிராமங்களை மாற்றிவிடுவது என்பது இயற்கையின் சமநிலையை பாதிக்கும் முக்கிய விஷயங்களில் ஒன்றாகும்.தற்போது வேகமாக மாறிவரும் கலாசார மாற்றங்களினால் புதியன புகுதலும் பழையன கழிதலும் சாதாரணமான நிகழ்வு என்றாலும்கூட பழையவற்றை சுற்றுச்சூழல் மாசுபடாமல் கழிப்பதை மனித சமுதாயம் கற்றுக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் சுற்றுச்சூழல் மிகப்பெரிய பாடத்தை நமக்கு கற்றுக்கொடுக்கும்.முந்தைய காலங்களில் கழிவுகளை ஒரு குழி வெட்டி அதில் கொட்டி அது மக்கியபின் விவசாயத்திற்குப் பயன்படுத்தி வந்தனர். தற்போது கண்ட இடங்களில் கழிவுகளைக் கொட்டுவதால் கிருமிகள் பெருகி நோய்கள்...
300 ரூபாய் செலவில் – சாதா டீவி – டச் ஸ்க்ரீன் டிவியாக மாற்ற முடியும்!
17:20
ram
No comments
மனுஷன் டச் ஸ்க்ரீன் மொபைலை பயன்படுத்த ஆரம்பித்த பழக்கத்தில் பார்க்கும் பொருட்களை எல்லாம் டச் முறையில் உபயோகிக்க ஆசை.அந்த வரிசையில் டேப்ளட் / ஐபேட் / இப்போது லேப்டாப்பும் டச் ஸ்க்ரீன் வந்துவிட்டது. அப்புறம் இப்போது தொலைக்காட்சியில் மூவிங் சென்சார் தான் வந்திருக்கிறது.
அந்த வரிசையில் டச் ஸ்க்ரீன் வந்தால் நன்றாக இருக்கும் என எதிர்ப்பார்ப்பால் இந்த டெக்னாலஜி வர வைப்பதற்க்கு பதிலாய் வழக்காமான எல் சி டி / பிளாஸ்மா டிவியை 300 ரூபாய் செலவில் டச் ஸ்க்ரீனாய் மாற்ற முடியும் என வாஷிங்டன் பல்கலைகழக ஆராய்ச்சி நிருபித்திருக்கிறது.
இதில் குப்தா என்னும் இந்தியர் தான் முக்கிய பங்கு. இது மின்காந்த அலையால் நடக்கும் ஒரு அதிசயம். சீக்கிரம் வீட்ல இந்த...
3டி தொழில்நுட்ப உதவியுடன் சர்ஜரி!- அசத்தும் லண்டன் மருத்துவர்கள்!
17:08
ram
No comments
பொதுவாக மனித மூளையில் நினைவுகள் எவ்வாறு பதிவாகின்றன என்ற கேள்விதான் மருத்துவ உலகின் மில்லியன் டாலர் கேள்வியாக நேற்று வரை இருந்தது. நியூரான்களின் உதவியோடு நினைவு களை சேமித்து வைத்து கொள்கிறது மூளை. இதில் சிக்கலான நரம்பு முனைகளின் வலை பின்னலை நேரடியாக கண்டறிய முடியாமல் மருத்துவ உலகம் திணறி வந்தது.
அதற்கு விடை கிடைக்கும் வகையில், மூளையில் நினைவுகள் பதிவாவதை ஒளிரும் துணுக்குகளைக் கொண்டு அதை 3டி படமாக காட்டி விஞ்ஞானிகள் குழு சாதனை படைத்தனர்.கடந்த ஜூலையில்.அமெரிக்க விஞ்ஞானி டான் அர்னால்டு இதை சாதித்து காட்டிய நிலையில் விபத்தில் சீர்குலைந்த முகத்தை 3டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சீர்படுத்தும் நவீன சிகிச்சை முறையை லண்டன் மருத்துவர்கள்...
கழுத்து வலியும் அதை களையும் வழியும்!
16:58
ram
No comments
நிமிடத்திற்கு நிமிடம் வேகமான வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தற்போதைய உலகில் பெரும்பாலான மக்களுக்கு கழுத்திலும், முதுகிலும் வலி ஏற்படுகிறது. அதிலும் சுமார் 70 சதவீத மக்கள் அடிக்கடியோ அல்லது அவ்வப்போதோ இந்த வலியினால் அவதியுறுகின்றனர்.நம் முன்னோர்கள் எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்ற சித்தர்களின் முதுமொழியை அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கலாம்.உண்மையில் மனிதனின் இயக்கங்கள் அனைத்திற்கும் உள்ள சூட்சும பகுதிதான் சிரசு. பஞ்ச பூதங்களின் செயல்பாடுகள், பிரபஞ்ச சக்தியை உணரும் தன்மை அனைத்தும் சிரசின் வழியே தான் நடை பெறுகிறது. இத்தகைய சக்திகள் அனைத்தையும் தன்னுள் அடக்கி பல கோடிக் கணக்கான அணுக்களைக் கொண்ட பந்து போல தோற்றமளிக்கும் சிரசை தாங்கி நிற்பது கழுத்துப் பகுதிதான். கழுத்து உடலின் முக்கிய உறுப்பாகும். கழுத்தில்தான் முக்கிய நாடி நரம்புகள் நெருக்கமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும்....