.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 13 November 2013

ஓய்வு பெறும் சச்சினுக்கு ‘ஆட்டோகிராப் நினைவுப்பரிசு’ வழங்கும் மகாராஷ்டிர அமைச்சர்கள்!

 ஓய்வு பெறும் சச்சினுக்கு ‘ஆட்டோகிராப் நினைவுப்பரிசு’ வழங்கும் மகாராஷ்டிர அமைச்சர்கள்

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ள மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரை கவுரவித்து, வித்தியாசமான நினைவுப்பரிசு வழங்க மகாராஷ்டிர மாநில அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர். அதாவது, சச்சினிடம் ஆட்டோகிராப் வாங்க முண்டியடிக்கும் ரசிகர்களின் மத்தியில், அமைச்சர்கள் தங்கள் ஆட்டோகிராப் அடங்கிய அழகிய நினைவுப்பரிசை வழங்க உள்ளனர்.

முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 40 உறுப்பினர்களும் தங்கள் கையெழுத்து பிரதிகளை விரைவாக அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தங்கள் கையெழுத்து எப்படி இடம்பெறவேண்டும் என்பதையும் அவர்கள் தெரிவிக்கலாம். இந்த கையெழுத்து பிரதிகளுடன் கூடிய தனிச்சிறப்பு மிக்க நினைவுப்பரிசு ஜே.ஜே. ஓவியப்பள்ளியில் வடிவமைக்கப்படுகிறது.

இந்த நினைவுப்பரிசு தயாரானதும் பிரமாண்ட பாராட்டு விழா நடத்தி சச்சினிடம் அதனை வழங்க உள்ளனர். 4 மணி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகளையும் நடத்த உள்ளனர்.

சச்சினின் அலுவலகத்துடன் இணைந்து விழா நடைபெறும் தேதி மற்றும் நேரத்தை முடிவு செய்யும்படி விளையாட்டுத்துறை துணை இயக்குனர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

ஓட்டுனரின் மூடுக்கு தகுந்தாற்போல் நிறம் மாறும் கார்! வீடியோ!

நீங்கள் ஒட்டிச செல்லும் கார் உங்களது விருப்பத்திற்கேற்ப திடீரென நிறம் மாறினால் எப்படி இருக்கும். இதை மனதில் கொண்டு ஒரே காரின் நிறத்தை பாவனையாளர்கள் விரும்பியவாறு மாற்றக் கூடிய நூதன கார்களை Peugeot நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


இந்த காரை இங்கிலாந்தின் Peugeot RCZ நிறுவனம் தயாரித்துள்ளதுடன் இதற்கான தொழில்நுட்பத்தை இங்கிலாந்தில் உள்ள Peugeotநிறுவன பொறியியலாளர்கள் வழங்கியுள்ளார்கள்.


இதன் டெக்னாலஜி மூலம் ஓட்டுனரின் உடல் வெப்பநிலை அறியப்பட்டு காரின் நிறம் மாறும் உயர்ந்த தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் இயக்கும் ஸ்டியரிங் மூலம் கார் சக்கரங்களிலும், இந்த தொழிநுட்பம் மூலம் ஓட்டுனரின் எண்ணம் பிரதிபலிக்கும் வகையில் அதனுடன் வெப்பதோடு உணர்வும் இணைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற கார் தயாரிக்கப்படுவது உலகிலேயே இதுவே முதல் முறை என்பதுடன்,இது தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் எனவும் Peugeotநிறுவன மேலாளர் தெரிவித்துள்ளார்.


ஏலத்துக்கு வரும் ‘ஆரஞ்சு வைரம்’ அரிய தகவல்கள் +வீடியோ!

உலகின் அரிய வகை வைரங்களுள் ஒன்றாக கருதப்படும் பெரிய அளவிலான ஆரஞ்சு நிற வைரம் இன்று ஜெனிவாவில் ஏலம் விடப்படுகிறது.நெருப்பு வைரம் என்ற வகையை சேர்ந்த இந்த வைரத்திற்கு ‘ஆரஞ்சு வைரம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அரிய வைரங்களுள் ஒன்றாக கருதப்படும் இது தென் ஆப்பிரிக்காவில் கண்டுக்கப்பட்டது. இதன் எடை 14.8 கேரட் ஆகும்.14 கேரட் எடையை தாண்டிய வைரங்கள் கிடைப்பது அரிது என்பதால் இந்த ஆரஞ்சு வைரம் தனது விலை மதிப்பை நிர்ணயித்துக் கொள்வதற்காக உலகையே ஒரு சுற்று சுற்றிவந்து, நிபுணர்களின் சான்றுடன் மீண்டும் ஜெனிவாவை வந்தடைந்துள்ளது.

இங்குள்ள கிரிஸ்டீஸ் ஏல நிறுவனம் இந்த வைரத்தை இன்று ஏலம் விடுகிறது.இது 17 மில்லியன் – 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 125 கோடி ரூபாய்) வரை விலை போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.







இதற்கிடையில் இந்த வைரத்தின் வரலாறு பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?


இவைரம் ..ந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும்.உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது.

இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இந்தியாவிலிருந்து தான் “வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்” என்ற பழமொழியும் வந்தது.

வைரம் எப்படி உருவாகிறது?


பூமியின் மேற்பரப்பில் இருந்து 150-200 கிலோ மீட்டர் ஆழத்தில் 1200 முதல் 1800 டிகிரி சென்டி கிரேடு வெப்பம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கும் போது சுத்தமான கார்பன் மூலக்கூறுகளால் வைரம் உருவாகிறது.

வைரம் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும் ?

இன்றைக்கு நாம் உபயோகிக்கும் வைரங்களில் மிகவும் வயது குறைந்த வைரம் 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக 1977-ல் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.

வைரம் ஏன் இவ்வளவு ஜொலிக்கிறது ?


வைரம் மட்டுமே தன்னுள் பாய்கின்ற வெளிச்சத்தில் 85 சதவீதம் ஒளியை பல கோணங்களில் பிரதிபலித்துத் திருப்பி வெளியிலேயே அனுப்பி விடும். வேறு எந்த ரத்தினத்துக்கும் இந்த தன்மை கிடையாது. இதனை ஆங்கிலத்தில் Internal Reflection (TIR) முழுமையான உள்பிரதிபலிப்பு என்பர். அதனால் தான் இதனை அடம் பிடிக்கும் ஜொலிப்பு (Adamantine Luster) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

வைரத்தின் ஆங்கிலப் பெயர் Admas என்பதாகும்.
இந்த வார்த்தை மருவி, Diamond என்று வழக்கத்தில் ஆகிவிட்டது.

வைரத்தை ஏன் காரட்(Carat)முறையில் எடை போடுகிறார்கள் ?


இந்தியாவிற்குப் பிறகு, 1870 லிருந்து தென் ஆப்பிரிக்காவில் வைரங்கள் கண்டெடுக்கப்ப டுகிறது. இங்கு, எடை அளவுகள் நிர்ணயிக்கப் படாத காலகட்டத்தில் காரப் விதை (Carob Seeds) என்ற ஒருவித விதைகளையே எடையாக பயன்படுத்தினர். ஏனென்றால் இந்த விதைகள் அனைத்தும் அநேகமாக ஒரே அளவு எடை உடையவை.இந்த காரப் என்ற பெயர் மருவி, காலப்போக்கில் காரட் என்றாகி விட்டது.ஒவ்வொரு காரப் விதையும் 200 மில்லி கிராம் எடை கொண்டது. ஆகவே, ஒரு காரட் வைரத்தின் எடை 200 மில்லி கிராம். அதாவது 5 காரட் 1 கிராம் எடை.

வைரத்திற்கு இவ்வளவு விலை ஏன் ?

ஒரு காரட் வைரம் தோண்டி எடுக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 350 டன் (35/40 லாரி லோடு) பூமியை தோண்டி எடுக்க வேண்டும். அதிலும் நிச்சயமாய் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இதற்காகும் செலவு, பட்டை தீட்டும் போது ஏற்படும் சேதம், சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்), இதில் செய்யும் முதலீடு, தரம் பிரித்தல் மற்றும் பிற செலவுகள் சேரும் போது விலை கூடுகிறது.

இந்தியாவில் எங்கு வைரம் கிடைக்கிறது ?

இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் பன்னா (Panna) என்னும் இடத்தில் உள்ள வைர சுரங்கத்திலிருந்து தினமும் வைரம் தோண்டி எடுக்கிறார்கள். இங்கிருந்து இன்றும் நல்ல தரமான வைரங்கள் கிடைக்கிறது. ஆனால் ஆப்பிரிக்காவை ஒப்பிட்டால், மிகவும் குறைந்த அளவே இங்கு கிடைக்கிறது.

பெல்ஜியம் கட்டிங் என்றால் என்ன ?
முதல் முதலில் இந்திய வல்லுநர்கள் பட்டை தீட்டியதை இன்னும் மேம்படுத்தி, பெல்ஜியம் நாட்டை சேர்ந்த லோடெவிஜ்க் வேன் பெர்க்காம் என்ற வல்லுநர் 58 பட்டைகளோடு மிகவும் நன்றாக ஜொலிக்கும் முறையில் வைரத்தை பட்டை தீட்டினார். இதற்கு (Round Brilliant cut) என்று பெயர். இது தான் பெல்ஜியம் கட்டிங்.

வைரம் உலகிலேயே மிகவும் கடினமானது என்கிறார்களே ?


வைரத்தை வெட்டவோ, பட்டை தீட்டவோ செய்வதற்கு வைரத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் வைரத்தை வைத்து மற்ற எல்லா ரத்தினக் கற்களையும் பட்டை தீட்டலாம். ஆனால் வைரத்தை பட்டை தீட்ட, வைரத்தால் மட்டுமே முடியும்.
பட்டை தீட்டிய வைரக்கல்லில் உலகில் உள்ள எந்தப் பொருளை வைத்து உரசினாலும் அதில் கீறல் விழாது. இதைத்தான் வைரத்தின் கடினத்தன்மை Hardness என்கிறோம்.

வைரம் என்னென்ன நிறங்களில் கிடைக்கிறது ?

வெள்ளை (நிறமற்றது), மஞ்சள், பிரவுன், கிரே பச்சை, ஆரஞ்சு, பிங்க், நீலம், வெளிர்பச்சை, வயலட் கலர்களில் கிடைக்கிறது. முழுக்கறுப்பிலும் காணப்படுகிறது.

இந்தியாவில் கிடைத்த மிகப் பெரிய வைரம் எது ?

கோல்கொண்டாவில் கிடைத்த கோகினூர் வைரம் தான் மிகப் பெரியது. இதன் எடை 105.80 காரட்கள். இன்று இங்கிலாந்தில் Tower of London என்னும் இடத்தில் அரச பரம்பரை நகைகள் ஒரு மகுடத்தில் சூட்டப்பட்டு காட்சியளிக்கிறது.

இதுவரை உலகில் கிடைத்த மிகப்பெரிய வைரம் எது ?


தென் ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட Golden Jubilee தான் மிகப்பெரியது இதன் எடை : 545.67 காரட்டுகள், தாய்லாந்து அரசரிடம் உள்ளதாக்க கூஇப்பாட்ட இந்த வைரம்தான் ஏலத்திற்கு வருகிறது.

அஜீத்தை ரூமுக்குள் வைத்து நான் அடிச்சேன் என்பது பத்திரிகைகளின் கற்பனை! பாலா பதில்!

 

‘நான் கடவுள்’ படத்தின் போது அஜீத்துடன் மனஸ்தாபம் இருந்தது உண்மை என்று இயக்குனர் பாலா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இயக்குனர் பாலா, தனியார் தொலைக் காட்சியில் நடிகை சங்கீதா நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர், சங்கீதாவின் கேள்விகளுக்கு தனக்கே உரிய பாணியில் பதில் சொன்னார். ‘நான் கடவுள்’ படம் ஆரம்பிக்கும்போது உங்களுக்கும் அஜீத்துக்கும் என்ன பிரச்சனை? நீங்க அஜீத்தை ரூமுக்குள் வைத்து அடித்ததாக சொல்கிறார்களே?

“நான் அடிச்சேன், மிதிச்சேன்னு சொல்றதெல்லாம் பத்திரிகைகளின் கற்பனை! மேலே தெரிஞ்சுக்கணும்னா.. நீங்க அல்ட்டிமேட்டுக்கிட தான் கேட்டுக்கணும்’. ஆனால் எங்களுக்குள் மனஸ்தாபம் இருந்தது உண்மை.

தொடர்ந்து அவரது கழுத்தில் கிடந்த மாலையை பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு பாலா பின்வருமாறு பதிலளித்தார்…(கழுத்திலிருந்து மாலையை வெளியே எடுத்தப்படியே…) ‘இது அகோரி (பிணம் தின்பவர்கள்) கொடுத்தது. தினமும் ஒரு மனித பிணத்தை தின்பவர்கள். 108 மனிதர்களின் முதுகெலும்புகள், வெவ்வேறு மனிதர்களுடைய முதுகெலும்பின், ஒவ்வொரு துண்டுகளை கொண்டு மண்டை ஓடு வடிவில் செய்யப்பட்டுள்ளது என்றார்.

10 வகுப்பு + Fireman Training + Driving License வைத்திருபோருக்கு ONGC நிறுவனத்தில் பணி!

 

Dehradun செயல்பட்டு வரும் Oil and Natural Gas Corporation limited (ONGC) நிறுவனத்தில் காலியாக உள்ள Asst Technician and Jr. Fireman பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



மொத்த காலியிடங்கள்: 13

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: 01. Assistant Technician (Electronics) A2 Level – 08

வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: Electronics/ Telecom/ E&T Engineering பிரிவில் 3 வருட முழுநேர டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: 02. Jr Fireman W1 Level – 05

வயதுவரம்பு: 27-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: பத்தாம் தேர்ச்சியுடன் Fireman Training மற்றும் Driving License வைத்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் written test, personal interview, physical standard test, physical efficiency test மற்றும் driving test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. மற்ற பிரிவினர்களுக்கு ரூ.100.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, இதர சலுகைகள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.ongcindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.11.2013

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top