.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 12 November 2013

மாரடைப்பு ஏற்படுவதை முன்னரே கண்டுபிடிக்கும் புதிய ஸ்கேன் தொழில்நுட்பம்!

நாம் நெஞ்சு வலி என்றாலே அது, மாரடைப்புதான் என்று நினைக்கும் அளவுக்கே மருந்துவத்தை பலர் அறிந்து வைத்திருக்கிறார்கள். பொதுவாக வலியின் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கொருவர் நோயின் தன்மை வேறுபடுகிறது. எனவே அறிகுறிகளை அறிந்து, அதற்கெற்ப உரிய மருந்துக்களை அணுகி தகுந்த சிகிச்சையைப் பெற வேண்டும். அதை விடுத்து, ஐயோ நெஞ்சுவலிக்கிறதே, மாரடைப்பு தான் ஏற்பட்டு விட்டாதோ என தவறான கணிப்பை உங்களுக்கு நீங்களே கொள்ள வேண்டாம்.உடல் வலி, அழுத்தம், இறுக்கம், போன்றவை உடல் நலமின்மையை உணர்த்துகின்றன. ஒருவருக்கு கடினமான நெஞ்சு வலி இருக்கும். ஆனால் அவருக்கு பெரிதாக ஒன்றும் இருக்காது. ஒரு சிலருக்கு லேசான நெஞ்சு வலி இருக்கும். ஆனால், நோய் தீவரம் அதிகம் இருக்க கூடும்.இந்த நிலையில்...

நேருவிற்கும் பட்டேலுக்கும் இடையே விருப்பும் வெறுப்பும் கலந்த உறவே இருந்து வந்தது.

இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் பற்றி சமீப காலமாக பரவலாக பேசப்படுகிறது. படேலின் கொள்கைகளுக்கு உண்மையான வாரிசு யார் என்ற விவாதத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டு அரசியல் மற்றும் மதவாத கோஷங்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. உண்மையில் நேருவும் படேலும் வெவ்வேறு தனித்தனியான கொள்கைகளை, தன்மைகளை, கருத்துக்களைக் கொண்டவர்களாக இருந்தனர். அவர்கள் இருவருக்கும் இடையேயான வேறுபாடு அடிப்படையானது.                                    நவீன இந்தியாவை...

‘கொக்கைன்’ மற்றும் ஹோமோ மோகத்தில் வளர்ந்தவர் ஒபாமா!

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மாணவ பருவத்தில் கொக்கைன் மற்றும் ஓரினச் சேர்க்கையில் அதிக நாட்டம் கொண்டிருந்தார் என அவரது பள்ளித் தோழி மியா மேரி போப் என்பவர் கூறியுள்ளார்.                               இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,”பள்ளியில் படிக்கும் போது தன்னை ஒரு வெளிநாட்டு மாணவனாக வெளிப்படுத்துவதில் ஒபாமா அதிக ஆர்வம் காட்டினார்.அவருக்கு பெண்கள் மீது அதிகமான ஈடுபாடு இருந்தது கிடையாது. மாறாக, தன்னை விட அதிக வயதுடைய வெள்ளை இன ஓரினச் சேர்க்கையாளர்களிடம் அதிக தொடர்பு வைத்திருந்தார். அப்போதெல்லாம்,...

தமிழரின் கலைகள் - களரிப் பயிற்று!

முன்னுரை: சமூக அமைப்பில் பொழுதுபோக்கிற்காகவும் பிறரை மகிழ்விப்பதற்காகவும் தோற்றம் பெற்ற கலைகள் பலவாகும். அவற்றுள் சில உடல்உரத்தையும் வீரத்தையும் வளர்க்கும் வீரக் கலைகளாக வளர்ந்துள்ளன. இவ்வாறு வளர்ந்த வீரக் கலைகள் ”தற்காப்புக் கலைகள்” என்று வழங்கப்படுகின்றன. பண்டைக் காலங்களில் கோயில் திருவிழாக்களில் பிறரை மகிழ்விப்பதற்காகவும் போர்க்காலங்களில் எதிரியைச் சமாளிப்பதற்காகவும் இக்கலைகள் பயன்பட்டன. (க. இரவீந்திரன்: நாட்டுப்புறவியல் ஆய்வுக்கோவை). தற்காப்புக் கலைகளாக குத்து, சுருள், கட்டாரி, களரிப்பயிற்று, சிலம்பம், வர்மம் போன்றவைகள் இடம் பெறுகின்றன. இதில் களரிப்பயிற்று பற்றியும் களரியில் சிலம்பம், வர்மம் ஆகியவற்றின் பங்கு பற்றியும் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றன.களரிப்பயிற்று: களரிப்பயிற்று என்ற கலை ”களரி” என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. களரி என்பது போர்ப்பயிற்சி செய்யும் களம் (கழகத் தமிழகராதி) என்றும்...

அழகிய குறிப்புகள்...

 ஆரோக்கியமான உடல், அழகான முகம் இவை இரண்டையும் விரும்பாதவர் யாரேனும் உண்டா?    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக்கேற்ப, ஒருவரின் உடல் நிலையின் தன்மையும், மன நிலையின் தன்மையும் முகத்தில் தான் தெரியவரும். சில அழகு சாதனப் பொருட்கள் உடல் ஒவ்வாமை அதாவது அலர்ஜியை உண்டாக்கி தோலில் மாறுதல் ஏற்படச் செய்கின்றன. எனவே இயற்கை மூலிகைகளைக் கொண்டு எளிய முறையில் முகத்தின் அழகை மெருகூட்டச் செய்யலாம்.நெல்லி வற்றலை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து காலை எழுந்தவுடன் அந்த நீரில் முகம் கழுவி வரவேண்டும். அப்போது முகத்தில் உள்ள வெப்பக் கட்டிகள், பருக்கள், தழும்புகள் வடுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பிக்கும். நாளடைவில் உங்கள் முகம் அழகான தோற்றத்தைப் பெறும்.உடலும் முகமும் வசீகரம் அடைய சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.· மலச்சிக்கல் இருந்தால் முகத்தின் பொலிவு கெட்டுவிடும்....
Page 1 of 87912345Next

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top