.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 11 November 2013

உங்களுக்கேற்ற ராசியான செடி இங்க இருக்கு பாருங்க...

செடி, மரம், கொடி போன்றவை இயற்கை நமக்கு தந்த ஒரு வரப்பிரசாதம். இவை உணவு, சுத்தமான காற்று, தங்குவதற்கு இடம் மற்றும் பலவாறு பெரிதும் உதவியாக உள்ளது. இவை இல்லாமல் நம்மால் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழவே முடியாது. இத்தகையவற்றை வீட்டின் வெளியே மட்டும் வளர்க்காமல், வீட்டின் உள்ளே கூட வளர்க்கலாம். அதற்காக அனைத்து செடிகளும் வீட்டினுள் வளரும் என்று நினைத்தால் அது தவறு. ஏனெனில் ஒவ்வொரு செடியும், ஒவ்வொரு தன்மையைக் கொண்டவை.ஆகவே அவற்றில் ஒருசில செடிகளை மட்டுமே வீட்டின் உள்ளே வளர்க்கலாம். அதுமட்டுமின்றி, அவற்றினுள் வீட்டினுள் வளர்க்கும் சில செடிகள் வீட்டில் சந்தோஷத்தையும், அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் வாரி வழங்கும். மேலும் வீட்டில் உள்ள கெட்ட சக்தியை வெளியேற்றி, நல்ல சக்தியை வீட்டில் நிலைக்க வைத்து, வீட்டில் எப்போதும் நல்லதே நடைபெற வழிவகுக்கும். இப்போது அப்படி வீட்டில் சந்தோஷத்தை வாரி வழங்கக்கூடிய சில...

மயில் தேசியப்பறவையானது எப்படி?

டோக்கியோவில் 1960-ஆம் ஆண்டு சர்வதேச பறவை பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. அழிந்து வரும் பறவைகள், விலங்குகளைக் காக்க வேண்டும். அதை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து கூட்டத்தில் ஆராயப்பட்டது. அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சிறப்புமிக்க பறவையைத் தேர்வு செய்து அதை தேசியப்பறவை என்று அறிவிக்க முடிவெடுத்தனர்.  அப்போது இந்தியா சார்பில் வனவிலங்குகள் பாதுகாப்புக் கழகம் "நீல நாரையை' தேசியப் பறவையாக தேர்வு செய்யப் பரிந்துரைத்தது. இப்பறவை அழகானது என்றாலும் இந்தியாவில் பஞ்சாப், தமிழ்நாடு மாநிலங்களில்  மட்டுமே அதிகம் உள்ள பறவையாகும். எனவே, இப்பறவை வேண்டாம் எனத் தீர்மானித்து, கொக்கு, அன்னம் என ஆலோசிக்கப்பட்டது.  ஆனாலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அப்போதுதான் அழகு ததும்பும் ஆண் மயிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் காணப்படும்...

கூச்சத்தை விரட்ட....

நீங்கள் பிறருடன் பழகக் கூச்சப்படுபவரா?இதோ,கூச்சத்தை விரட்ட உங்களுக்கு ஒன்பது வழிகள். 1.நம்மைப் பற்றி பிறர் என்ன நினைப்பார்களோ என்ற நினைப்பைக் கை விடுங்கள். 2.எப்போதும் யாரோ ஒருவர் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று நீங்களாகவே நினைத்து வேதனைப் படாதீர்கள்.அவரவர்களுக்கு அவரவர் வேலைகள்.உங்களைத்தானா கவனித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்? 3.எப்போதும் பிறர் உங்களுக்கு ராஜ மரியாதை தர வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள்.   4.தர்ம சங்கடமான நிலைமைகளை தைரியமாக எதிர் கொள்ளுங்கள் . 5.மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கலாம்.அதனால் மற்றவர்களின் நட்பில் உங்களது கூச்சத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். 6.உண்மையில் ஒரு நண்பனுக்கு நீங்கள் ஏங்கும் போது ,'நமக்கு நாமே நண்பன்' என்று உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. 7.ஏதாவது தவறு செய்து விட்டால்,இன்று மிகப் பிரபலமாக...

INDIA தேசிய கீதத்தின் பொருள்....

ஜன கன மன அதிநாயக ஜய ஹே - மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !பாரத பாக்ய விதாதா – இந்தியத் திருநாட்டுக்கு பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே.பஞ்சாப சிந்து குஜராத் மராத்தாதிராவிட உத்கல பங்காஐந்து பெரிய நதிகள் ஓடும் நிலம், பெரும் வீரர்கள் தோன்றிய இடம், சமய ஒற்றுமையை வலியுறுத்தும் சீக்கியத்தின் பிறப்பிடம் – பஞ்சாப் மாகாணம் உன்னுடையது.புராதன பாரதத்தின் தலை வாசல், நான்கு வேதங்களின் பிறப்பிடம் , பழம்பெரும் சிந்து சமவெளிக் கலாச்சாரம் தழைத்தோங்கிய இடம் – சிந்து நதிப்பிரதேசம் உன்னுடையது.குஜராத் மாநிலம் உன்னுடையது .வீர மராட்டிய மாநிலம் உன்னுடையது .பழம்பெரும் திராவிடக் கலாச்சாரத்தின் தொட்டில், செம்மொழியாம் தமிழ்மொழியின் பிறப்பிடம், இந்தியக் கலாச்சாரத்தின் மிக முக்கிய பாகங்களை அளித்த பெருநிலம் – திராவிட பீடபூமி உன்னுடையது.பூரி ஜெகன்னாதம், கொனாரக் போன்ற...

உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை ஹீனா சிந்துக்கு தங்கம்!

  உலகின் டாப்-10 துப்பாக்கி சுடும் வீரார்கள் பங்கேற்கும் உலகக்கோப்பை துப்பாக்கி சூடுதல் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற தகுதி பெற்ற இந்திய வீராங்கனை ஹீனா சிந்து, மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலந்துகொண்டார். நேற்று நடைபெற்ற இறுதி சுற்றில் மொத்தம் 384 புள்ளிகள் எடுத்து தங்கப் பதக்கம் வென்றார். நடப்பு சாம்பியன் சோரனா அருணோவிக் (செர்பியா) 2 புள்ளிகள் பின்தங்கி வெள்ளிப் பதக்கமும், 381 புள்ளிகள் பெற்றிருந்த விக்டோரியா சாய்கா (பெலாரஸ்) வெண்கலப் பதக்கமும் வென்றனர். இதன்மூலம், உலகக் கோப்பை இறுதியில் தங்கம் வென்ற இந்திய வீரர்களில் அஞ்சலி பகவத்...
Page 1 of 87912345Next

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top