.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 11 November 2013

‘ஷோலே’ – 3 டி எபெக்டில் வரப் போகுதில்லே!

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் இந்தியில் வெளிவந்து கலக்கிய .‘ஷோலே’ படத்தை பார்க்காத ரசிகர்கள் இருக்க முடியாது. இருந்தாலும் இன்றைய இளைய தலைமுறையினர் அனைவரும் பார்த்து ரசிக்கும் விதமாக தற்போது இந்தப்படத்தை ‘3டி’யில் உருவாக்கியுள்ளார்கள்.இதையடுத்து மும்பையில் நடைபெறவுள்ள இந்த புதிய பதிப்பின் அறிமுக விழாவில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா உள்ளிட்ட நடிகர் – நடிகைகள் பங்கேற்கிறார்கள்.



                  nov 11 - cine sholey

பல வருடங்களுக்கு முன் வெளிவந்த சூப்பர்ஹிட் படங்களை டிஜிட்டலுக்கு மாற்றி வெளியிடுவதும் 3டியில் மாற்றி வெளியிடுவதும் இப்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் இந்தியில் வெளிவந்து ஏகப்பட்ட கலெக்‌ஷனை அள்ளிய ‘ஷோலே’ படமும் 3டியில் வெளியாக இருக்கிறது.

இந்திய திரையுலகில் வெளியான படங்களில் முக்கியமான படங்களை பட்டியலிட்டால், அதில் தவறாமல் இடம்பிடிக்கும் படம் ‘ஷோலே’. ரமேஷ் சிப்பி இயக்கத்தில் தர்மேந்திரா, அமிதாப் பச்சன், ஹேமமாலினி மற்றும் பலர் நடிப்பில் 1975 ஆகஸ்ட் 15ல் வெளியானது ‘ஷோலே’. அமிதாப், தர்மேந்திரா மட்டுமல்ல இந்தப்படத்தின் வில்லனாக நடித்திருந்த அம்ஜத்கானுக்கும் இந்தப்படம் புகழ்மாலை சூட்டியது.

இந்தப்படம் வெளியானபோது முதல் இரண்டு வாரங்களுக்கு வசூல் குறைவாகவே இருந்தது. ஆனால் 3ஆம் வாரத்தில் இருந்து வசூல் மழை கொட்ட ஆரம்பித்தது. அதற்கு முன்பு வெளியான அனைத்து படங்களின் வசூலையும் முறியடித்தது ‘ஷோலே’. அதுமட்டுமன்றி 100 திரையரங்குகளில் 25 வாரங்கள் ஓடியது.

‘3டி’க்கு மாற்ற சுமார் மூன்று ஆண்டுகள் கடுமையாக உழைத்து முடித்துள்ள இந்தப் படத்தை யுடிவி மோஷன் பிக்‌ஷர்ஸ் நிறுவனம் வரும் 2014 ஜனவரி 3ஆம் தேதி வெளியிட தீர்மானித்திருக்கிறது.

அதிமுக இணையதளத்தை பொழுதுபோக்குக்காக முடக்கிய சென்னை இளைஞர் கைது!

அதிமுக இணைய தளத்தை முடக்கிய சென்னை இளைஞர் கைது செய்யப்பட்டார்.இதை ‘விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் செய்தேன்’ என்று விசாரணையில் கூறியிருக்கிறார். இதையடுத்து ஈஸ்வரனை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


              


அதிமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.aiadmkallindia.org. கடந்த 1-ம் தேதி இந்த இணைய தளத்துக்குள் புகுந்த ஒருவர் அதை செயல்படவிடாமல் முடக்கி விட்டார். மேலும், இஸ்லாம் ஜிந்தாபாத், லாங் லிவ் முஸ்லிம்ஸ், பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற வாசகங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. பாகிஸ்தான் கொடியுடன் மனித மண்டை ஓட்டின் உருவமும் அதில் இருந்தன. நாங்கள் பாகிஸ்தான் ஹாக்கர்ஸ் க்ரூ. எங்களுக்கு நீதியும், அமைதியும் தேவை என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தனர்.

இதுகுறித்து அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். ஆணையரின் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் சாப்ட்வேர் நிபுணர்களின் உதவியுடன் நடந்த இந்த தீவிர விசாரணையில் பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜீனியராகப் பணியாற்றி வரும் சென்னையைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர்தான் இந்த வேலையைச் செய்ததாக தெரிய வந்தது.

இது குறித்து இவ்வழக்கை விசாரித்த காவல் துறை அதிகாரிஇடம் பேசிய போது,”அதிமுக இணைய தளத்துக்குள் நுழைந்தவர்களின் பட்டியலை சர்வர் மூலம் முதலில் சேகரித்தோம். அதில் ஒருவர் மட்டும் 300-க்கும் அதிகமான முறை அந்த இணைய தளத்துக்குள் நுழைந்து, அதிக நேரம் இணைப்பில் இருந்தது தெரிந்தது. அவரது முகவரியை சர்வர் மூலம் தேடியபோது, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஈஸ்வரன் என்பது தெரிந்தது. உடனே சனிக்கிழமை இரவில் அவரை கைதுசெய்து அவரிடம் இருந்த மடிக்கணினியையும் பறிமுதல் செய்தோம்.

இது குறித்து அவரிடம் விசாரித்த போது, ‘விளையாட்டுக்காகவும், பொழுது போக்குக்காகவும் செய்தேன்’ என்று சாதாரணமாக கூறினார். ஈஸ்வரன் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 66-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்து விட்டோம்.

இந்த ஈஸ்வரன் 2011 ம் ஆண்டு கணினி பொறியியல் படிப்பை முடித்து, பெங்களூரில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் இணைய தளத்துக்குள் நுழைந்து பிரச்சினைக்குரிய வாசகங்களை பதிவு செய்ததுதான் எங்களுக்கு புரியவில்லை. அவருக்கும், அவர் பதிவு செய்திருக்கும் வாசகங்களுக்கும் தொடர்பில்லாததுபோல உள்ளது.

எனவே அவர் மட்டும்தான் இந்த செயலை செய்தாரா அல்லது வேறு யாருடைய தூண்டுதலின் பேரில் இதை செய்தாரா என்பதை மேலும் விசாரிக்க வேண்டியுள்ளது. இதனால் ஈஸ்வரனை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்கிறோம்” என்றார்..

பேஸ்புக் லைக் வசதியில் மாற்றம்!

தற்போது இணையத்தளங்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் தம்மை பிரபலப்படுத்திக்கொள்வதற்காக பேஸ்புக் தளத்தினை பயன்படுத்தி வருகின்றமை மறுக்க முடியாத ஒன்றாகும்.


இதற்காக பேஸ்புக் ஆனது லைக் பேஜ் வசதியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வசதியில் இதுவரை காலமும் காணப்பட்ட கைவிரல் அடையாளம் தற்போது நீக்கப்பட்டுள்ளது.


நாள்தோறும் சுமார் 22 பில்லியனிற்கும் மேற்பட்டவர்கள் இந்த கைவிரல் அடைய பொத்தானை கிளிக் செய்து வந்ததோடு, 7.5 மில்லியன் வரையான இணையத்தளங்களில் இவை இணைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிப்பது எப்படி!

 குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிப்பது எப்படி

குழந்தைகளை எடுத்துக்கொண்டு பொதுநிகழ்ச்சிகளுக்கு செல்கிறவர்கள், பெரும்பாலும் குழந்தைகளுக்கு `டயப்பர்’ அணிவிக்கிறார்கள். எப்போதாவது அதை பயன்படுத்தினால், தொந்தரவு ஏற்படுவதில்லை. தொடர்ந்து அதனை பயன்படுத்தும்போது குழந்தைகளின் மென்மையான சருமத்தில் அலர்ஜி ஏற்படலாம்.

சருமத்திற்கு பாதிப்பு ஏற்படாத அளவிற்கு டயப்பர் அணிவிப்பது எப்படி? டயப்பர் கட்டுவதற்கு முன்பு, துணியை தண்ணீரில் நனைத்து குழந்தையின் உடலை துடைக்கவேண்டும். கால் பகுதிகள், முன் பகுதி, பின் பகுதி எல்லாம் துடையுங்கள். அடுத்து உலர்ந்த துணியால் ஈரப்பதத்தை துடைத்து சுத்தமாக்குங்கள்.

டயப்பர் கட்டும்போது பசைத்தன்மை கொண்ட பின்பாகம், தொப்புளின் சம அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். குறிப்பிட்ட நேரத்தில் டயப்பரை மாற்றவேண்டும். சிறுநீர், மலம் கழித்திருந்தால் அதிக நேரம் டயப்பரை மாற்றாமல் இருக்கக்கூடாது. சிலவகை டயப்பர்கள் குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.

அதை கட்டியிருக்கும் சருமப் பகுதியில் சிவப்பு திட்டுக்கள் போல் ஏற்பட்டால் அந்த பிராண்டை பயன்படுத்த வேண்டாம்.டயப்பர் இறுகக்கூடாது. இறுக்கமாக இருந்தால், குழந்தையை அது அவஸ்தைக்குள்ளாக்கும்.

கால், இடுப்பு பகுதியில் இறுக்கத்தால் ஏற்படும் பாதிப்பு தென்பட்டால் அதைவிட சற்று பெரிய அளவிலான டயப்பரை பயன்படுத்துங்கள்.சருமத்தில் சிவப்பு திட்டுகள் தென்பட்டால் `ஸிங்க் ஆக்சைடு’ கொண்ட ஆயில்மென்ட் பயன்படுத்தலாம்.

நாள் முழுக்க டயப்பர் பயன்படுத்தக்கூடாது. தினமும் சிறிது நேரமாவது சாதாரண ஆடையுடன் குழந்தையை வைத்திருங்கள். வெளியே குழந்தையை தூக்கி செல்லும்போது காட்டன் துணியை மடக்கி, குழந்தைக்காக பயன்படுத்துவது நல்லது.

குழந்தைகளுக்கான இயற்கை மருத்துவம்!

Natural medicine is growing in recent years. Statistics show that all disciplines of alternative medicine have grown and more people   prefer rather

சமீபத்திய ஆண்டுகளில் இயற்கை மருத்துவம் அதிகரித்து வருகிறது. புள்ளிவிவரத்தை ஆராய்ந்த போது மருந்துகளை விட இயற்கை மருத்துவத்தை  அதிகம் பயன்படுத்தியது தெளிவாகிறது.. அனைவருக்கும் உதவும் இயற்கை மருத்துவம் குழந்தைகளுக்கு மட்டும் விதிவிலக்கல்ல. பல பெற்றோர்கள்  குழந்தைகளுக்கு செய்யப்படும் இயற்கை சிகிச்சைகளை மேற்கொள்வதில்லை. பொதுவாக அனைத்து இயற்கை வைத்தியமும் நான்கு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் இயற்கை வைத்தியம்.

இருமல்

குழந்தையின் பிஞ்சு உடல்களை எளிதில் தாக்கும் இருமல். இருமல், சளி வந்ததும் அலையாத விருந்தாளியாக வந்து விடுவது மூச்சு பிரச்சனையும் இவை குழந்தைகளின் உடல்நலத்தை அடிக்கடி பாதிக்கும் பொதுவான நோய்தொற்றுகளில் ஒன்று.. குழந்தைகளை தாக்கும் இருமல் பிரச்சனையிலிருந்து  விடுபட ஒமவல்லி இலையை நன்கு கழுவி கொதிக்கும் சுடு தண்ணீரில் போட்டு ஒரு கப் வந்ததும் குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கவும் குடிப்பதற்கு  முன்னர் ஒரு சில நிமிடங்கள் ஒய்வு எடுக்க செய்ய வேண்டும். இந்த மூலிகை தண்ணீர் குடித்து வந்தால் இருமல், சளி பிரச்சனை வராமல்  தடுக்கலாம்.

மேலும் இருமல் பிரச்சனைக்கு பெருந்துத்தி பூக்களைக்கொண்டு குளிர்பானம் தயாரித்து குழந்தைகளுக்கு தரலாம். குளிர்பானத்தை வடிகட்டி ஒரு சிறிய  துணியில் ஈரமாக்கி குழந்தையின்  தொண்டை, மூச்சு குழாய், நுரையீரல் போன்ற பகுதிகளில் தேய்க்க இருமல் குணமாகும்.

டயாபர் ஒவ்வாமை

டயாபர் அதிகம் உபயோகிப்பதனால் குழந்தைகளுக்கு அரிப்பு, அலர்ஜி போன்றவை ஏற்படுகிறது. இந்த அலர்ஜியை தடுக்க குழந்தைகளை குளிக்க  வைப்பதற்கு வைத்துள்ள தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று சொட்டு வெள்ளை வினிகர் கலந்து குழந்தைகளை குளிக்க வைக்கலாம்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top