குழந்தைகளை எடுத்துக்கொண்டு பொதுநிகழ்ச்சிகளுக்கு செல்கிறவர்கள், பெரும்பாலும் குழந்தைகளுக்கு `டயப்பர்’ அணிவிக்கிறார்கள். எப்போதாவது அதை பயன்படுத்தினால், தொந்தரவு ஏற்படுவதில்லை. தொடர்ந்து அதனை பயன்படுத்தும்போது குழந்தைகளின் மென்மையான சருமத்தில் அலர்ஜி ஏற்படலாம். சருமத்திற்கு பாதிப்பு ஏற்படாத அளவிற்கு டயப்பர் அணிவிப்பது எப்படி? டயப்பர் கட்டுவதற்கு முன்பு, துணியை தண்ணீரில் நனைத்து குழந்தையின் உடலை துடைக்கவேண்டும். கால் பகுதிகள், முன் பகுதி, பின் பகுதி எல்லாம் துடையுங்கள். அடுத்து உலர்ந்த துணியால் ஈரப்பதத்தை துடைத்து சுத்தமாக்குங்கள். டயப்பர் கட்டும்போது பசைத்தன்மை கொண்ட பின்பாகம், தொப்புளின் சம அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். குறிப்பிட்ட...
Monday, 11 November 2013
குழந்தைகளுக்கான இயற்கை மருத்துவம்!
சமீபத்திய ஆண்டுகளில் இயற்கை மருத்துவம் அதிகரித்து வருகிறது. புள்ளிவிவரத்தை ஆராய்ந்த போது மருந்துகளை விட இயற்கை மருத்துவத்தை அதிகம் பயன்படுத்தியது தெளிவாகிறது.. அனைவருக்கும் உதவும் இயற்கை மருத்துவம் குழந்தைகளுக்கு மட்டும் விதிவிலக்கல்ல. பல பெற்றோர்கள் குழந்தைகளுக்கு செய்யப்படும் இயற்கை சிகிச்சைகளை மேற்கொள்வதில்லை. பொதுவாக அனைத்து இயற்கை வைத்தியமும் நான்கு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் இயற்கை வைத்தியம். இருமல்குழந்தையின் பிஞ்சு உடல்களை எளிதில் தாக்கும் இருமல். இருமல், சளி வந்ததும் அலையாத விருந்தாளியாக வந்து விடுவது மூச்சு பிரச்சனையும் இவை குழந்தைகளின்...
குறட்டையை விரட்டும் சிகிச்சை!
குறட்டை என்பது மற்றவர்களால் கேலி செய்யப்படும் விஷயம் அல்ல. அது ஒரு நோய். தூங்கும் போது மூச்சுப் பாதை சிறிதளவோ அல்லது முழுவதுமாகவோ அடைத்துக் கொள்வதால்தான் குறட்டை தோன்றுகிறது. உடல் எடை அதிகரித்தால், அதிக கொழுப்பு சேரும். அப்போது நுரையீரலால் தேவையான அளவுக்கு விரிவடைய இயலாது. அதனால் மூச்சை உள்ளே இழுப்பதிலும், வெளியேற்றுவதிலும் சிக்கல் ஏற்பட்டு குறட்டை என்னும் முரட்டுச் சத்தமாக வெளியேறும். குறட்டையால் அருகில் தூங்குபவர்களுக்கு மட்டும்தான் தொந்தரவு என்பதில்லை. குறட்டைவிடுபவர்களுக்கு தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்படும். குறட்டையை கட்டுப்படுத்தாவிட்டால் இதய பாதிப்பு, ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பல நோய்கள் ஏற்படக்கூடும். குறட்டையை கட்டுப்படுத்துவதற்கு...
குழந்தைக்கு கபவாத காய்ச்சலா இயற்கை மருந்து இருக்கு!
குழந்தைக்கு வரும் சுரங்களில் கடுமையானது கபவாத காய்ச்சல். காய்ச்சல் அதிகமாக இருக்கும். சுவாசம் தீவிரமாகவும், நாடி படபடத்துமிருக்கும். அடிக்கடி வறட்சியான இருமலிருக்கும். கோழையும் வெளிப்படும். இருமும் போதே சில சமயம் இழுப்பும் காணும். ஆரம்பத்திலிருந்தே சிகிச்சை செய்து கவனிக்க வேண்யது. இதற்கு வீட்டிலே இயற்கை மருந்து தயாரிக்கலாம்என்னென்ன தேவை?
நிலவேம்பு – 15 கிராம்
சீந்தில் தண்டு – 15 கிராம்
சிற்றரத்தை – 15 கிராம்
திப்பிலி – 15 கிராம்
கடுக்காய் – 15 கிராம்
கண்டங்கத்திரி வேர் – 15 கிராம்
பூனைக்காஞ்சொறி – 15 கிராம்
கடுகு ரோகிணி – 15 கிராம்
பற்பாடகம் - 15 கிராம்
கிச்சிலிக் கிழங்கு – 15 கிராம்
கோஷ்டம் – 15 கிராம்
தேவதாரு – 15 கிராம்
சுக்கு – 15...
முதுகு வலியை போக்கும் பயிற்சி!
சிலவகை உடற்பயிற்சிகள் விரைவில் பலன் தரக்கூடியவை. அந்த வகையில் இந்த பிலேட்ஸ் பயிற்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த பயிற்சி செய்ய ஆரம்பத்தில் சற்று கடினமாக இருக்கும். ஆனால் செய்ய செய்ய விரைவில் நல்ல பலன் தரக்கூடியது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கால்களை நீட்டி மல்லாந்து படுத்துக் கொள்ளவும். பின்னர் இயல்பாக சுவாசத்தில் மெதுவாக கால்களை பாதி வரை மேலே தூக்கவும். அப்போது தலை, உடலை தோள்பட்டை வரை மெதுவாக தூக்கவும். கைகளை சற்று மேலே படத்தில் உள்ளபடி தூக்க வேண்டும். இந்த நிலையில் 15 விநாடிகள் இருந்தபின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு இந்த பயிற்சியை 20 முறை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்து சற்று கடினமாக இருக்கும். அதனால்...