.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 11 November 2013

குறட்டையை விரட்டும் சிகிச்சை!

 குறட்டையை விரட்டும் சிகிச்சை

குறட்டை என்பது மற்றவர்களால் கேலி செய்யப்படும் விஷயம் அல்ல. அது ஒரு நோய். தூங்கும் போது மூச்சுப் பாதை சிறிதளவோ அல்லது முழுவதுமாகவோ அடைத்துக் கொள்வதால்தான் குறட்டை தோன்றுகிறது. உடல் எடை அதிகரித்தால், அதிக கொழுப்பு சேரும்.

அப்போது நுரையீரலால் தேவையான அளவுக்கு விரிவடைய இயலாது. அதனால் மூச்சை உள்ளே இழுப்பதிலும், வெளியேற்றுவதிலும் சிக்கல் ஏற்பட்டு குறட்டை என்னும் முரட்டுச் சத்தமாக வெளியேறும். குறட்டையால் அருகில் தூங்குபவர்களுக்கு மட்டும்தான் தொந்தரவு என்பதில்லை.

குறட்டைவிடுபவர்களுக்கு தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்படும். குறட்டையை கட்டுப்படுத்தாவிட்டால் இதய பாதிப்பு, ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பல நோய்கள் ஏற்படக்கூடும். குறட்டையை கட்டுப்படுத்துவதற்கு குறட்டை விடுபவரை தூக்கத்தில் ஆழ்த்தி, ஆய்வு செய்யவேண்டும்.

அதன் மூலம் தூக்கத்தில் குறட்டை எந்த அளவுக்கு, எந்த நேரத்தில் வருகிறது என்பதை முழுமையாக ஆய்வு செய்யமுடியும். இதற்கென இருக்கும் சிறப்பு ஆய்வுக்கூடத்தில், சிறந்த பரிசோதனை கருவிகளோடு அதை செய்யவேண்டும்.

பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் சிகிச்சை நடக்கும். மேல் தாடை மற்றும் கீழ் தாடைகளை சரியான முறையில் பொருத்துவதன் மூலம் பெரும்பாலான குறட்டை பிரச்சினையை தீர்த்துவிட முடியும்.

குறட்டையை சரிசெய்வதற்காக தாடை, நாக்கு, கன்னப்பகுதிகள், அண்ணப்பகுதிகள் மற்றும் சுவாச பகுதியுடன் இணைத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். குறட்டை இல்லாத நிம்மதியான தூக்கம்தான் ஆரோக்கியமானது.

குழந்தைக்கு கபவாத காய்ச்சலா இயற்கை மருந்து இருக்கு!

 Curankal child in the harsh curamakum kapavata. It will be higher. Severe breathing and pulse are tensions. In the binary is often dry.

குழந்தைக்கு வரும் சுரங்களில் கடுமையானது கபவாத காய்ச்சல். காய்ச்சல் அதிகமாக இருக்கும். சுவாசம் தீவிரமாகவும், நாடி படபடத்துமிருக்கும். அடிக்கடி வறட்சியான இருமலிருக்கும். கோழையும் வெளிப்படும். இருமும் போதே சில சமயம் இழுப்பும் காணும். ஆரம்பத்திலிருந்தே சிகிச்சை செய்து கவனிக்க வேண்யது. இதற்கு வீட்டிலே இயற்கை மருந்து தயாரிக்கலாம்

என்னென்ன தேவை?


நிலவேம்பு – 15 கிராம்

சீந்தில் தண்டு – 15 கிராம்

சிற்றரத்தை – 15 கிராம்

திப்பிலி – 15 கிராம்

கடுக்காய் – 15 கிராம்

கண்டங்கத்திரி வேர் – 15 கிராம்

பூனைக்காஞ்சொறி – 15 கிராம்

கடுகு ரோகிணி – 15 கிராம்

பற்பாடகம் - 15 கிராம்

கிச்சிலிக் கிழங்கு – 15 கிராம்

கோஷ்டம் – 15 கிராம்

தேவதாரு – 15 கிராம்

சுக்கு – 15 கிராம்

கண்டுபரங்கி – 15 கிராம்

இவற்றை எல்லாம் பொடி செய்து சுத்த நீரில் போட்டு கால் லிட்டராகும் வரை சுண்டைக் காய்ச்சிய கசாயத்தில் வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் கொடுக்க குணமாகும். தினசரி 3 வேளை இதை கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் காய்ச்சல் எளிதில் குணமாகும்.

முதுகு வலியை போக்கும் பயிற்சி!

முதுகு வலியை போக்கும் பயிற்சி


 சிலவகை உடற்பயிற்சிகள் விரைவில் பலன் தரக்கூடியவை. அந்த வகையில் இந்த பிலேட்ஸ் பயிற்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த பயிற்சி செய்ய ஆரம்பத்தில் சற்று கடினமாக இருக்கும். ஆனால் செய்ய செய்ய விரைவில் நல்ல பலன் தரக்கூடியது.

இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கால்களை நீட்டி மல்லாந்து படுத்துக் கொள்ளவும். பின்னர் இயல்பாக சுவாசத்தில் மெதுவாக கால்களை பாதி வரை மேலே தூக்கவும். அப்போது தலை, உடலை தோள்பட்டை வரை மெதுவாக தூக்கவும்.

கைகளை சற்று மேலே படத்தில் உள்ளபடி தூக்க வேண்டும். இந்த நிலையில் 15 விநாடிகள் இருந்தபின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு இந்த பயிற்சியை 20 முறை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்து சற்று கடினமாக இருக்கும்.

அதனால் 10 முறை செய்தால் போதுமானது. பின்னர் நன்கு பழகிய பின்னர் 20 முறையும் அதற்கு மேலும் செய்யலாம். இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் முதுகு வலி பிரச்சனைகள் தீரும். மேலும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் தொப்பை மற்றும் தொடையில் உள்ள அதிகப்படியான சதை குறையும்.

Sunday, 10 November 2013

டார்க் சொக்லேட்டின் மகத்துவங்கள்!

 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்று தான் டார்க் சொக்லேட்.

சில சொக்லெட்டில் உலர்ந்த பழங்களும், முந்திரி, பாதாம் போன்ற பருப்புகளும் போட்டு தயாரிக்கப்படுகின்றன.

கருப்பு நிறத்தில் சற்றே கசப்பும் இனிப்பும் சேர்ந்த டார்க் சொக்லெட்டை அனைவரும் உண்ண வேண்டும்.

ஏனெனில் அந்த அளவில் சத்துக்களானது இவற்றில் உள்ளன.

இதை உண்பதால் இதய நோய், மூளை நோய், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவையிலிருந்து எளிதாக விடுதலை பெற முடியும்.

இதயத்திற்கு நல்லது

டார்க் சொக்லெட்டை ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக் கொண்டால், இரத்த அழுத்தத்தை போக்கும் என்று ஆய்வு கூறுகின்றது.

ஏனெனில் இதன் தன்மை இரத்தத்தை பெருக்குவதுடன், இரத்தம் உறைவதையும் தடுக்கும்.

அதிலும் இதை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால், தமனிகள் கடினமாகாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மூளைக்கு நல்லது

டார்க் சொக்லெட் இரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு, மூளையையும் சிறப்பாக செயல் பட வைக்கின்றது. அதிலும் இவை மூளைக்கு சிந்திக்கும் திறனை வழங்குகின்றன.

மேலும் வலிப்பு வராமல் காக்க டார்க் சொக்லெட் உண்ண வேண்டும். மூளைக்கு நல்ல ஆற்றலை வழங்கவும், சிந்திக்கும் திறனை வளர்க்கவும் உதவுகின்றது.

இதில் PEA உள்ளது. இதனால் காதல் உணர்வு ஏற்படும் போது கிடைக்கும் ஒருவித மகிழ்ச்சியை போன்று இவற்றை உண்ணும் போது அடைய முடியும்.

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகின்றது

இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். மேலும் சர்க்கரை நோயின் இரண்டாம் நிலையை போக்கவும் இவை உதவும்.

ஏனெனில் இதில் ஃப்ளேவோனாய்டுகள்(flavonoids) இருப்பதால், இவை செல்களை சீராக செயல்பட உதவுகின்றது.

அதுமட்டுமின்றி, இதில் குறைந்த அளவு க்ளைசீமிக் இண்டெக்ஸ்(glycemic index) இருப்பதாலும், இன்சுலின் அளவை கூட்டி இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்துகின்றது.

புற்றுநோயை தடுக்கும்

இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிகமாக உள்ளது. இதனால் செல்களுக்கு பாதிப்பு அளிக்கும் ரேடிக்கல்களை(radicals) போக்கி ஆரோக்கியத்தை அளிக்கின்றது.

இந்த ரேடிக்கல்கள் வயதாவதால் தோன்றும். மேலும் இதன் மூலம் புற்றுநோய் வரும் அபாயமும் உள்ளது. ஆனால் இதை டார்க் சொக்லெட் முற்றிலும் குணப்படுத்துகின்றது.

வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்தது

இதில் அதிகளவில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்து இருக்கின்றது. இதனால் உடல் ஆரோக்கியத்தை பெற முடியும்.

அதுமட்டுமல்லாமல் இதில் வேறு சில சத்துக்களும் நிறைந்துள்ளன. அவை பொட்டாசியம், காப்பர், மெக்னீசியம், இரும்புச்சத்து போன்றவை ஆகும்.

இதில் பொட்டாசியமும், காப்பரும் இதயத்திற்கு நல்லது. இரத்த சோகை, இரண்டாம் ரக சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவையும் டார்க் சாக்லெட் எடுத்துக் கொள்வதால் குணமாகும்.

பல் பிரச்சனையை போக்கும்

இதில் உள்ள தியோப்ரோமைன் பற்களில் உள்ள எனாமல் தன்மையை பலப்படுத்தும்.

அதவாது மற்ற இனிப்பை போன்று இவை பற்குழியை ஏற்படுத்தாது.

ஆனால் சொக்லெட் சாப்பிட்டவுடன் நன்றாக வாய் கொப்பளித்தால் போதுமானது. குறிப்பாக இந்த தியோப்ரோமைன் சளியையும் குணப்படுத்தும்.

இரண்டாம் உலகில் சந்திக்கும் காதலர்கள்!

இரண்டாம் உலகம் படத்தில் நடிகர் ஆர்யா மற்றும் நடிகை அனுஷ்கா

ஆர்யா, அனுஷ்கா நடிப்பில், செல்வராகவன் இயக்கியிருக்கும் படம் 'இரண்டாம் உலகம்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, பி.வி.பி சினிமாஸ் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. நவ. 22ம் தேதி வெளியாகவிருப்பதால் 'இரண்டாம் உலகம்' படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் படத்தை பற்றி 'இரண்டாம் உலகம்' குழுவினரிடம் விச்சரித்தோம். மது - ரம்யா ரெண்டு பேரும் இந்த பூமியில் அழகான காதலர்கள். அவர்கள் இருவரும் இன்னொரு உலகில் மருவன் - வர்ணா என்கிற பெயரில் இரண்டு பாத்திரங்களாக சந்திக்கிறார்கள். அவர்கள் எப்படி அந்த இரண்டு பாத்திரங்களாக சந்திக்கிறார்கள், அந்த உலகத்துக்கு எப்படி போனார்கள், அவர்களின் அனுபவம் எப்படி இருந்தது என்பதுதான் 'இரண்டாம் உலகம்' படத்தில் செல்வராகவன் சொல்லவரும் கதை.

தனுஷ், ஆண்ட்ரியா நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட படம், பின்னர் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிக்க 'மயக்கம் என்ன' படத்தினை இயக்கினார் செல்வராகவன். அப்படத்தினைத் தொடர்ந்து செல்வராகவன் மீண்டும் கையில் எடுத்த கதைத்தான் 'இரண்டாம் உலகம்'.

இப்படத்தில் தனது வேடத்திற்காக உடலமைப்பை எல்லாம் மாற்றியிருக்கிறார் ஆர்யா. அத்துடன் முதன் முறையாக இசைக்கு ஹாரிஸ் ஜெயராஜுடன் கூட்டணி அமைத்து புதியதொரு டீமுடன் களம் இறங்குகிறார் செல்வராகவன். ஒளிப்பதிவிற்கு மட்டும் நெருங்கிய நண்பரான ராம்ஜியை ஒப்பந்தம் செய்தார். முதலில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன், படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்ய செல்வராகவன் மற்றும் ராம்ஜி பயணம் செய்தார்கள். இதுவரை தமிழ் சினிமாவில் காட்டாத இடங்களைக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஜார்ஜியாவில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

இதுவரை இந்திய திரையுலகில் எந்தொரு படமும் அங்கு படப்பிடிப்பு நடத்தியதில்லை. ஸ்பாட்டுக்கு போய் சேரவே சில நாட்கள் ஆகும் என்பதால் படக்குழுவில் முக்கியமானவர்களை மட்டும் அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு சுமார் 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. முக்கிய காட்சிகளை அங்கு படமாக்கிய பின் அதன் கிராபிக்ஸ் பணிகள் மும்பையில் நடந்துள்ளது.

ஜனவரி 2014ல் படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட படத்தின் டிரெய்லரை பார்த்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் செல்வராகவன். தெலுங்கில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில், "அவதார் மாதிரியான படங்கள் இந்தியாவில் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்கான தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது" என்று அவர் கூற இப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் ஒரு பாடலை உஸ்பெகிஸ்தான் நாட்டில் படமாக்கலாம் என்று விசாவிற்கு அப்ளை செய்தார்கள். ஆனால் விசா குழப்பத்தில் திரும்பி விட்டார்கள். கடைசியில் அங்கு படமாக்க இருந்த காட்சிகள் அனைத்தையுமே சென்னையில் ECR பகுதியில் பிரம்மாண்ட செட் போட்டு படமாக்கி இருக்கிறார் செல்வராகவன்.

படத்தின் படப்பிடிப்பு அனைத்தையும் முடிப்பதற்குள் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இதர படங்களில் பிஸியாகி விட்டார். இதனால், பின்னணி இசையை மட்டும் அனிருத் அமைத்திருக்கிறார். பின்னணி இசைக்காக ஹங்கேரி நாட்டிற்கு சென்று அங்குள்ள இசை கலைஞர்களை பயன்படுத்திருக்கிறார் அனிருத்.

தற்போது படத்தின் அனைத்து பணிகளும் முடிந்தவுடன், சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு அனைத்தையும் முடிப்பதற்குள் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இதர படங்களில் பிஸியாகி விட்டார். இதனால், பின்னணி இசையை மட்டும் அனிருத் அமைத்திருக்கிறார்.

பின்னணி இசைக்காக ஹங்கேரி நாட்டிற்கு சென்று அங்குள்ள இசை கலைஞர்களை பயன்படுத்திருக்கிறார் அனிருத். தற்போது படத்தின் அனைத்து பணிகளும் முடிந்தவுடன், சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். இப்படம் தனக்கு மிகவும் பிடித்துப் போனதால் அதன் சிங்கப்பூர், மலேஷியா உரிமை வாங்கியிருக்கிறார் நடிகர் ஆர்யா.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top