.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 10 November 2013

5ஜி வலையமைப்புக்கு 600 மில்லியன் முதலீடு!


அடுத்த தலைமுறை வலையமைப்பான 5 ஜி (5th Generation) தொடர்பான ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கென 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக ஹுவாயி அறிவித்துள்ளது.

தற்போது சில நாடுகளில் மட்டுமே 4ஜி அதாவது 4 ஆம் தலைமுறை வலையமைப்பு பாவனையில் உள்ளது. சில நாடுகளில் பரீட்சாத்தமாக வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் 5ஜி தொழிநுட்ப ஆராய்ச்சிக்கென 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடவுள்ளதாக அறிவித்துள்ளது. 5ஜி வலையமைப்பானது எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பாவனைக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை தென்கொரிய நிறுவனமான செம்சுங் மின்னல் வேக 5ஜி கம்பியில்லா தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது.

இதன்மூலம் இரண்டு கிலோமீற்றர் தொலைவினுள் , செக்கனுக்குள் 1 ஜிகா பைட் தரவுப் பரிமாற்ற வேகம் சாத்தியப்பட்டுள்ளதாகவும் 2020 ஆம் ஆண்டளவில் இத்தொழில்நுட்பம் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுமெனவும் செம்சுங் தெரிவித்திருந்தது.

இத்தொழில்நுட்பத்தின் மூலம் முப்பரிமாண திரைப்படங்கள், கேம்கள், அல்ட்ரா எச்.டிரியல் டைம் ஸ்ட்ரீமிங் ஆகியவற்றை எவ்வித தங்கு தடையுமின்றி மேற்கொள்ள முடியுமென செம்சுங் சுட்டிக்காட்டியிருந்தது.

நாம் 100 கோடி இரசிகர்களை வைத்திருக்கிறோம் : கமல்!








 
 




 
ஆறு வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று தனது திரைப் பயணத்தை தொடங்கிய கமல், இன்றைக்கு ஐம்பது ஆண்டுகளான பிறகும் அதே மாணவ பருவத்தைப்போன்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.

குறிப்பாக விஸ்வரூபம் படத்தை ஹாலிவுட்டுக்கு இணையாக இயக்கி நடித்து மாபெரும் பரபரப்பை உண்டு பண்ணினார்.

அப்படம் சில சர்ச்சைகளை சந்தித்தாலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதோடு 200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை பட்டியலில் இடம்பிடித்தது.

அதனால் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை அதிக புத்துணர்ச்சியுடன் இயக்கிக்கொண்டிருக்கும் கமல், 200 கோடியெல்லாம் ஒரு பெரிய வசூல் இல்லை. அதிகபட்சமாக ஆயிரம் கோடி ரூபாய் வரை நம்மால் வசூலிக்க முடியும் என்கிறார்.

காரணம், நாம் 100 கோடி இரசிகர்களை வைத்திருக்கிறோம். அதனால் அவர்கள் விரும்பும் வகையில் நல்ல படங்களை கொடுத்தால் இது கண்டிப்பாக சாத்தியமாகும். இதை எதிர்காலத்தில் செய்து காட்ட வேண்டும் என்ற ஆர்வமும் எனக்குள் உள்ளது என்கிறார் கமல்.

ஃபேஸ்புக்கில் இணைந்த ஷங்கர்!

 

தன் இணைய தளத்தினைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் பேஸ்ஃபுக் தளத்தில் இணைந்திருக்கிறார்.

எந்தொரு படத்தினை இயக்கி வந்தாலும், அப்படத்தினைப் பற்றிய செய்தியை தனது இணையத்தில் (http://www.directorshankaronline.com/) அவ்வப்போது செய்தியாகவும், புகைப்படமாகவும் வெளியிட்டு வந்தார் இயக்குநர் ஷங்கர்.

தற்போது அந்த இணையத்தினைத் தொடர்ந்து, பேஸ்ஃபுக் தளத்திலும் இணைந்திருக்கிறார். அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் : https://www.facebook.com/shankarofficial
தனது ஃபேஸ்புக் இணையத்தில், “ஃபேஸ்புக்கி இணையலாம் என்று முடிவெடுத்து இணைந்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது, தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன். எனது பெயரில் நிறையப் பேர் போலியாக இயங்கி வருகிறார்கள். இதுவே எனது அதிகாரப்பூர்வ பக்கம்.

'ஆரம்பம்' படம் பார்த்தேன். முழுமையான பொழுதுபோக்குப் படம்! அஜித் மிகவும் அழகாக இருக்கிறார். யுவனின் பின்னணி இசை சிறப்பாக இருந்தது. ஏ.எம்.ரத்னம் சாரை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்படக்குழுவிற்கு எனது பாராட்டுக்கள்.” என தெரிவித்துள்ளார்.

மொபைலில் கட்டணத் திருட்டை தடுப்பது எப்படி?

மொபைல் போன்களுக்கான சேவையை வழங்கும் நிறுவனங்களான ஏர்செல், ஏர்டெல், டாட்டா டோகோமோ, ரிலையன்ஸ் என அனைத்து முன்னணி நிறுவனங்களின் கட்டணத்திருட்டுக்கு முடிவு கிடைத்துள்ளது. இது சாத்தியமா? மேற்படி அனைத்து நிறுவனங்களும் நமக்கு தெரியாமலே, நமக்கு தேவையே இல்லாத ஏதாவது சொத்தை சேவையை ஏக்டிவேட் செய்துவிடுவார்கள். தினசரி 2 ரூபாய், 5 ரூபாயென பிச்சையெடுக்காததுதான் குறை!

இது தொடர்பாக பல்லாயிரக்கணக்கான குற்றச்சாட்டுகள் குவியவே, ‘ட்ராய்’ இதற்கு முழுப்பொறுப்பேற்று விடையும் கொண்டுள்ளது. இனிமேல் இந்த அடாவடி திருட்டுகளை நிறுத்த நீங்கள் 155223 என்ற எண்னை பயன்படுத்துங்கள்.

இந்த எண்னானது அனைத்து நெட்வொர்க்குக்கும் பொதுவானதே! இதன் மூலமாக உங்களுக்கு தேவையில்லாத அனைத்து சேவைகளையும் நிறுத்த முடியும். இதனால் உங்களுடைய பணம் திருடப்படாது என்பது ட்ராயின் கருத்து!

அறிவோம் ஆயிரம்!


ஆற்று நீர் வாதம் போக்கும்
அருவி நீர் பித்தம் போக்கும்
சோத்து நீர் இரண்டையும் போக்கும்.....


எம் முன்னோர்களும், தற்காலத்தில் தாயகத்தில் வாழ்வோரும் தங்கள் காலை உணவாக சாப்பிடும் உணவுதான் பழஞ்சோறு. பழஞ்சோற்றுடன் எஞ்சியிருந்த கறிகளையும் சேர்த்து...ப் பிரட்டி சாப்பிடும் போது ஒரு தனி ருசியை உணர்ந்து கொள்ளலாம். கறி இல்லாத விடத்து அதனுடன் வெங்காயம், பச்சமிளகாய், ஊறுகாய், தயிர் என்பனவற்றை சேர்த்து திரணையாகவோ அல்லது நீர் ஆகாரமாகவோ அருந்தி உற்சாகமாகவும், தைரியசாலிகளாகவும், பலகாலம் சுகதேகிகளாக உயிர் வாழ்ந்துள்ளனர்.

நோய் எதிர்ப்பு சக்தி, உடல் சுறுசுறுப்பாக, பன்றிக் காய்ச்சல், எந்தக் காய்ச்சலும் அணுகாது!, உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி குணப்பட, சிறு குடலுக்கு நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாக, சட்டென்று இரத்த அழுத்தம் கட்டுக்குள் வர, உடல் எடையும் குறைய. பழஞ்சோறும் தொட்டுக் கொள்ள வெண்காயமும் சேர்த்துச் சாப்பிடுங்கள்.

முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்க மருத்துவர்.

தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

"காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.

மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".

பழைய சாதத்தை எப்படி செய்வது? (அது சரி!)

பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது புளுங்கல் அரிசி என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான்.

ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.) மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு!

ஏனைய நாட்களைவிட திருமணவீடுகள், சடங்கு நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் என எப்போதாவது உங்கள் வீட்டில் விருந்து நடந்தால் எதை மறந்தாலும் மறுநாள் பழஞ்சோற்றை சாப்பிட மட்டும் மறந்து விடாதீர்கள், அங்குதான் பல கறிகளும் நிறைய சோறும் மிஞ்சியிருக்கும், ஆட்களும் அதிகமாக இருப்பார்கள். எல்லோரும் சுற்றிவர இருந்து வெங்காயத்தை கடித்தபடி பழஞ்சோறு சாப்பிடும் அந்த சுவையும் மகிழ்ச்சியும் வார்த்தைகளால் சொல்லி விபரிக்க முடியாதவை.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top