எந்த இடத்தில் எரிவாயு இணைப்பு கொடுக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. கீழ்க்கண்ட முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை சமையலறையில் பின்பற்றினாலே அது எரிவாயுவினால் ஏற்படும் விபத்துகளுக்கான காப்பீடு போலாகும்.
•எரிவாயு சிலிண்டர் வைக்கும் அறை அல்லது சமையலறையில் நல்ல காற்றோட்டம் இருக்கவேண்டும். ஜன்னல்கள் மற்றும் கதவுகள் மூடியிருக்கும் அறையில் எரிவாயு சிலிண்டரை உபயோகிக்கக்கூடாது
•எரிவாயு சிலிண்டர், அதன் அழுத்தத்தினை சரி செய்யும் நாப் அல்லது பட்டன், எரிவாயு செல்லும் இரப்பர் குழாய் போன்றவற்றை எளிதில் கையாளுமாறு எரிவாயு இணைப்பு அமைக்கப்பட வேண்டும்
•தரைமட்டத்தில் எரிவாயு சிலிண்டர் இருக்குமாறு அமைக்கவேண்டும். ஆனால் தரைமட்டத்திற்கு கீழ் அதாவது தரைக்கு கீழ் இருக்கும் தளங்களில் எரிவாயு சிலிண்டர் இருக்குமாறு அமைக்கக்கூடாது.
•சிலிண்டரை அலமாரியில் வைக்கும்போது அதன் தரைத்தளத்திலும் அதன் மேல்தளத்திலும் காற்றோட்டத்திற்கு...
Saturday, 9 November 2013
ஆன்டிபயாட்டிக் எடுக்கும் போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா ?
தற்போது ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கையினால், உடல் நிலை சரியில்லாமல் நிறைய பேர் தினமும் மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர்.சொல்லப்போனால் அது ஒரு அழையா விருந்தாளியைப் போல், அனைவரிடமும் வந்துவிடுகிறது. அவ்வாறு உடல் நிலையை தேற்றுவதற்காக மருந்து மாத்திரைகளை எடுக்கும் போது, அந்த மருந்து உடலில் நன்கு வேலை செய்ய வேண்டுமென்றால், ஒரு சில உணவுகளை சாப்பிடக் கூடாது. ஏனென்றால் அவ்வாறு சாப்பிட்டால், உடலில் அந்த மருந்துகள் சரியாக வேலை செய்யாமல் போய்விடும். இப்போது அத்தகைய உணவுகள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளங்களேன்…ஆல்கஹால்-மருந்து மாத்திரைகளுக்கு ஆல்கஹால் முற்றிலும் ஒரு எதிரி. ஏனெனில் அந்த ஆல்கஹால், மாத்திரைகளில் உள்ள மருந்துகளின் தன்மையை குறைத்துவிடுகின்றன. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள நோய்கள் விரைவில் குணமாவது தடைப்பட்டு, நீண்ட நாட்கள் அந்த நோயை உடலில் வைத்துக் கொள்ள நேரிடும்....
முக பள்பளப்புக்கும் முதுமையை துரத்துவதற்கும் கூட உதவும் தண்ணீர்!
நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்பட்டு நீண்ட நாட்கள் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்க தண்ணீர் மிகவும் இன்றியமையாததாகும்.
எப்படியெனில், தண்ணீர் அதிகம் பருகினால் உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் எடுத்துச் செல்வதோடு மெட்டபாலிசம் அதிகரிக்கப்பட்டு உறுப்புகள் பாதுகாப்பட்டு நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு உடலின் வெப்பமும் சீராக இருக்கும்.மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீராக உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும் 83 சதவீத தண்ணீரால் இரத்தமும் உருவாகியுள்ளது.
எனவே தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. ஆகவே தான், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு...
எல்லா நெஞ்சு வலியும் மாரடைப்பின் அறிகுறி அல்ல...
சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்று எல்லோருக்கும் நெஞ்சு வலி வருகிறது. மற்ற வலிகளைக் கண்டு பயப்படுகிறோமோ இல்லையோ, நெஞ்சு வலி என்றால் துடித்துப் போகிறோம். காரணம், நெஞ்சுவலியை மக்கள் எப்போதும், மாரடைப்பின் அறிகுறியாகப் பார்ப்பதுதான். ‘‘எல்லா நெஞ்சு வலிகளும் மாரடைப்பின் அடையாளமில்லை...’’ என்கிறார் வலி நிர்வாக சிறப்பு சிகிச்சை நிபுணர் குமார்.‘‘மாரடைப்பினால் வரும் நெஞ்சு வலியானது, முதலில் நெஞ்சின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கும். மயக்கம், படபடப்பு, அதிக வியர்வை, வலி இடது கைக்குப் பரவுவது, நெஞ்சைப் பிசைகிற மாதிரியோ, அழுத்துகிற மாதிரியோ வலிப்பது, மூச்சுத் திணறல், அரிதாக சில நேரம் கழுத்திலும் வலி போன்றவை இருக்கும். ஆனால்,...
லெனோவா நிறுவனம் ஐடியாபேட் ஃப்ளெக்ஸ் 2 நோட்புக் ரூ.42.250 விலையில் அறிமுகம்!
லெனோவா நிறுவனம் டச்ஸ்கிரீன் கொண்ட ஐடியாபேட் ஃப்ளெக்ஸ் 2 நோட்புக் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிறுவனத்தின் இந்த புதிய மாடல் 10 புள்ளி மல்டி டச் கொண்ட உலகின் முதல் டூயல் மோட் நோட்புக் ஆகும். இந்த புதிய ஐடியாபேட் ஃப்ளெக்ஸ் 2 நோட்புக் விலை ரூ.42.250 ஆகும்.புதிய மாடல் விண்டோஸ் 8 இயக்கத்தளம் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 300 டிகிரி வரை சுழற்ற முயன்ற டிஸ்ப்ளே கொண்டுள்ளது. புதிய லெனோவா ஐடியாபேட் ஃப்ளெக்ஸ் 2 1366x768p தீர்மானம் கொண்ட ஒரு 14 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் நிறுவனத்தின் AccuType கீபோர்டு உடன் வருகிறது. அதை 4GB ரேம் உடன் நான்காவது தலைமுறையின் இன்டெல் கோர் i3 ப்ராசசர் (வரை i7) உடன் வருகிறது. மற்றும் விருப்பத்தேர்வு 2GB என்விடியா...