.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 7 November 2013

நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள் ( 30+ )

30 வயதானவர்களுக்கான முதலீடு!

சுகமான ஓய்வு காலத்துக்கு எந்த வயதினர் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்று பார்ப்போம். செந்திலுக்கு இப்போது வயது 30. வேலைக்குச் சேர்ந்து 5 ஆண்டுகள் முடிந்துவிட்டன. திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கும் அவருக்கு, நிறைய செலவுகள் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. பி.பி.ஓ. நிறுவனம் ஒன்றில் பிடித்தம் போக மாதம் கையில் 21,500 ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

வீட்டுச் செலவு, மருத்துவச் செலவு, மகன் விக்ரமின் படிப்பு, சொந்த வீடுகட்ட வாங்கிய ஹோம் லோனுக்கான இ.எம்.ஐ. – இவற்றை எல்லாம் தாண்டித்தான் செந்தில் தன் ஓய்வு காலத்துக்கு சேமிக்க வேண்டியிருக்கிறது. செந்திலின் இன்றைய லைஃப் ஸ்டைல் எப்படி இருக்கிறதோ அதுபோலவே பணி ஓய்வின் போதும் இருந்தால்தான் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க முடியும்.


செந்தில் தன் குடும்பத்தின் அடிப்படைச் செலவுகளுக்கு மட்டும் மாதத்துக்கு
15,300 செலவு செய்கிறார். ஆண்டுக்கு சுமார் 7% பணவீக்க விகிதம் என்று
எடுத்துக் கொண்டால் 30 ஆண்டுகள் கழித்து அவர் பணி ஓய்வு பெறும் போது ஒரு மாதத்துக்கு 1,16,468 ரூபாய் இருந்தால்தான் சாமாளிக்க முடியும். இந்தத்
தொகை மாதம்தோறும் கிடைக்க வேண்டும் என்றால், அவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் 1.75 கோடியை தொகுப்பு நிதியாக கையில் வைத்திருக்க வேண்டும்!

இவ்வளவு பெரிய தொகையை ஈட்ட என்ன செய்வது என்று மலைக்க வேண்டியதில்லை. இதற்கு 12% வருமானம் தரக்கூடிய திட்டங்களில் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து 5,000 முதலீடு செய்து வரவேண்டும்


 40 வயதானவர்களுக்கான முதலீடு!


இந்தப் பிரிவில் இருப்பவர்களுக்கு 40 வயதான முத்துவை ஒர் உதாரணமாக
எடுத்துக்கொள்வோம். அவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள். பணி ஓய்வுக்கு இன்னும் 20 ஆண்டுகள் இருக்கிறது. இவர்களின் இன்றைய அடிப்படைச் செலவு மாதம் 22,000 என்றால், 20 ஆண்டுகள் கழித்து (7% பணவீக்கம்) 85,133 இருந்தால்தான் சமாளிக்க முடியும். இந்தத் தொகை மாதம்தோறும் கிடைக்க வேண்டும் என்றால் அவர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் 1.27 கோடி தொகுப்பு நிதியை கையில் வைத்திருக்கவேண்டும். இதற்கு 12% வருமானம் தரக்கூடிய திட்டங்களில் மாதம்தோறும் தொடர்ந்து 12,909 முதலீடு செய்ய வேண்டும்.


50 வயதானவர்களுக்கான முதலீடு!


இந்த வயதுள்ளவர்களுக்கு 50 வயதுள்ள ராமகிருஷ்ணனை உதாரணமாக எடுத்துக்கொள் வோம். அவருக்கு மனைவி, இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். பணி ஓய்வுக்கு இன்னும் 10 ஆண்டுகள் இருக்கிறது. இவர்களின் இன்றைய அடிப்படைச் செலவு மாதம் 25,000 என்றால், 10 ஆண்டு கழித்து (7% பணவீக்கம்) 49,179 இருந்தால் தான் சமாளிக்க முடியும். இந்தத் தொகை மாதம் தோறும் கிடைக்க வேண்டும் என்றால் அவரிடம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் 73.77 லட்சம் தொகுப்பு நிதி கையில் இருக்க வேண்டும். இதற்கு 12% வருமானம் தரக்கூடிய திட்டங்களில் மாதம் தோறும் தொடர்ந்து 32,068 முதலீடு செய்ய வேண்டும்.

மின்னஞ்சலில் அரட்டையா? உஷார்!

மின்னஞ்சலில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது என்பது எல்லோருக்குமே மிகப் பிடித்தமான விஷயம்தான். அதுவும் ஒரு குழுவாக அரட்டை அடிப்பதில் இருக்கும் மகிழ்ச்சியே தனிதான்.

நமக்குத் தெரிந்த, பழகிய நண்பர்களுடன் அரட்டை அடிப்பது என்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நாம் எல்லோரும் தெரிந்த நண்பர்களுடன் மட்டுமா அரட்டை அடிக்கின்றோம். இல்லையே...

சாட்டில் புதிதாக எத்தனை நண்பர்களை பிடிக்கின்றோம். அவர்களுடன் மணிக்கணக்காக அரட்டை அடிக்கின்றோம். அதையும் தாண்டி அவர்களை சந்திப்பது, அவர்களுடன் ஊர் சுற்றுவது, டேட்டிங் என எங்கெங்கோ போய்க் கொண்டிருக்கிறது உலகம்.

சரி இதெல்லாம் நல்ல நண்பர்கள், நல்ல நபர்களுடன் பழகும்போது சரி.... ஏதாவது ஓரிடத்தில் சரியில்லாமல் போகும்போது என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதையெல்லாம் தவிர்க்க வேண்டாமா? அது நம் கையில்தான் இருக்கிறது.

அதற்கு என்னென்ன தேவை.... எவ்வாறு எச்சரிக்கையாக இருப்பது என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு தெரியாதல்லவா அதற்காக....

இதோ ஒரு சில டிப்ஸ்.....


யாரிடமும் முதலில் அறிமுகம் ஆகும் போது, நீங்கள் அவரை நேரில் பார்க்கவில்லை. அவரைப் பற்றி எதுவும் தெரியாது. எனவே மிக நிதானமாக உங்களது அறிவைப் பயன்படுத்தி அவரிடம் மெல்ல மெல்ல பழக வேண்டும். எதிலும் அவசரம் கூடாது.


மின்னஞ்சலில் சாட் செய்யும் அனைவரும் நேர்மையாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க இயலாது. நீங்கள் உங்களால் முடிந்தவரை நேர்மையாக இருங்கள். மற்றவரிடம் அதையே எதிர்பாருங்கள். ஆனால் அவ்வாறே இருப்பார் என்று எப்போதும் நினைக்காதீர்கள்.

இன்னுமொரு விஷயம் என்னவென்றால்.... இளைய தலைமுறையினர் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேடும் ஒரு முக்கிய இடமாகவும் இந்த அரட்டை அமைந்துள்ளது. இதில் தவறில்லை. ஆனால் எப்போதுமே அது சரியாகவும் இருப்பதில்லை. இதற்காக ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அதாவது மின்னஞ்சல் அரட்டையில் ஈடுபடுவோரில் 15 விழுக்காட்டினர் திருமணமானவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (உடனே திருமணம் ஆனவர்கள் அரட்டை அடிக்கக் கூடாதா என்று கேட்காதீர்கள்.)

பல இணையதளங்கள் தற்போது அரட்டை அடிப்பவர்களின் விவரங்களை சுய பரிசோதனைக்குட்படுத்துதல், ஒப்புதல் பத்திரம் வாங்குதல் போன்றவையுடன், குற்றவாளிகளின் பட்டியலையும் உடன் வெளியிடுகிறது.

நீங்கள் அரட்டை அடிப்பவர் தன்னைப் பற்றி அளிக்கும் தகவல்களுக்கு குறைந்தபட்ச மதிப்பையே அளியுங்கள். ஏனெனில் அவர் அளிப்பதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கும் என்பதை அறிய இயலாது.

நீங்கள் அரட்டை அடிக்கும் நபரைப் பற்றிய உண்மையான நிலை தெரிந்துகொள்ளாமல் உங்கள் முழுப் பெயரையோ, முகவரி, தொலைபேசி எண், பணியிடம் போன்ற எதையும் அளிக்க வேண்டாம்.

பொதுவாக மின்னஞ்சலுக்கும் சரி, அரட்டைக்கும் சரி நீங்கள் உங்கள் பெயரை பயன்படுத்தாமல் ஏதாவது செல்லப் பெயரை வைத்துக் கொள்வது அதிக பயனளிக்கும்.

ஒருவரைப் பார்த்தே ஓரளவிற்கு அவரைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். எனவே நீங்கள் தொடர்பு கொள்ளும் நபரின் புகைப்படத்தைக் கேட்கலாம்.

புகைப்படத்தை அனுப்ப ஏதேனும் சாக்குப்போக்கு சொன்னாலோ, அனுப்பாமல் இருந்தாலோ அவருடனான தொடர்பை குறைத்தோ அல்லது நிறுத்திக் கொள்வதோ நல்லது. அப்படியே அந்த புகைப்படத்தை அனுப்பினாலும் அது தற்போதைய புகைப்படம் அல்லது அவருடையதுதான் என்பதில் எந்த ஆதாரமும் இல்லையே.

கணினியின் திரையில் உங்களுடன் உரையாடும் நபரின் அரட்டைப் பேச்சும் அவரது குணநலனும் ஒன்றுபோல இருக்கும் என்று நினைத்து ஏமாறாதீர்கள்.

பார்க்க ஸ்மார்ட்டாக இருப்பது போலவும், பெரிய நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும், திருமணமாகாதவர் என்றும் கூறுபவர்கள் பயங்கர குண்டாகவும், வேலையில்லாமல் சுற்றித் திரிபவராகவும், கல்யாணமாகி பல குழந்தைகள் பெற்றெடுத்தவராகவும் இருக்கலாம்.

அப்பப்பா......... இவ்வளவு பிரச்சினைகளா? என்று பெருமூச்சு விடாதீர்கள். நீங்கள் தெளிவாகவும், நிதானமாகவும், புத்திசாலித்தனமாகவும் மின்னஞ்சலில் அரட்டை அடித்து நல்ல நல்ல நண்பர்களையும் பெறலாம். அவர்களை ஆயுள் வரை நண்பர்களாகவும் தொடரலாம்.

மிகவும்...

*மிகவும் கசப்பானது தனிமையே!

*மிகவும் மரியாதைக்குரியவர் அன்னையே!

*மிகவும் துயரமானது மரணமே!

*மிகவும் அழகானது அன்புணர்வே!

*மிகவும் கொடுமையானது பழி வாங்குதலே!

*மிகவும் கவலை தருவது செய்நன்றி மறப்பதே!

*மிகவும் மகிழ்ச்சியானது சிறந்த நட்பே!

*மிகவும் வெறுமையானது இல்லையென்பதே!

*மிகவும் ரம்மியமானது நம்பிக்கையே!

தேவையான மூன்றுகள்!


இருக்க வேண்டிய மூன்று - தூய்மை, நீதி, நேர்மை. 

ஆள வேண்டிய மூன்று  - கோபம், நாக்கு, நடத்தை.

பெற வேண்டிய மூன்று - தைரியம், அன்பு, மென்மை.

கொடுக்க வேண்டிய மூன்று  - இரப்போர்க்கு ஈதல், துன்புறுவோர்க்கு ஆறுதல், தகுதியானவர்க்குப் பாராட்டு.

அடைய வேண்டிய மூன்று  - ஆன்ம சுத்தம், முனைவு, உள்ள மகிழ்வு.

தவிர்க்க வேண்டிய மூன்று  - இன்னா செய்தல், முரட்டுத்தனம், நன்றியில்லாமை.

பரிந்துரைக்க வேண்டிய மூன்று  - சிக்கனம், தொழிலூக்கம், நாணயம்.

நேசிக்க வேண்டிய மூன்று  - அறிவு, கற்பு, மாசின்மை.  
 

அன்பின் மூன்று வகைகள்!


    அன்பு என்ற வார்த்தை எல்லோருக்கும் பிடித்த ஒன்று ஆகும். இந்த வார்த்தைக்கு பாசம், நேசம், காதல் என்று பல்வேறு பரிணாமங்கள் உள்ளது. இந்நாட்களில் அனேக மனிதர்களிடம் வெகு வேகமாக குறைந்து கொண்டே போகும் இந்த அன்பை பொதுவாக மூன்று வகைகளாக பிரிக்கலாம்.


    1. மிருக அன்பு :

    மிருகம் என்பது பகுத்தறிவு இல்லாத உயிரினமாக இருக்கின்ற போதிலும் அவைகளிடத்திலும் அன்பு உண்டு. அதிலும் சில மிருகங்கள் மனிதனைவிட ஒருபடி அதிகமான அன்பும் நன்றியும் உள்ளதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


    என்னதான் மிருகங்களிடம் அன்பு காணப்பட்டாலும் அந்த அன்பு பொதுவாக சுயநலம் சார்ந்த அன்பாகவே இருக்கும். தனக்கும் தன் குட்டிகளுக்கும் போகத்தான் எதுவுமே என்ற நிலையில் வாழும். தன்னை வாழ வைப்பது யார், யாரிடம் தஞ்சமாக உள்ளோம், தனக்கு உணவு கொடுப்பது யார் என்ற எந்த ஒரு உணர்வும் இல்லாமல் அது சுகமாய் தங்கி இருக்கும் இடத்தில் அந்நியர் யாரும் வந்துவிட்டால் உடனே ஒரு சத்தமிட்டு தன் எதிர்ப்பை வெளிப்படுத்துவதொடு கடும் கோபத்துடன் எதிராளி மீது மோதும் தன்மையுடையது


    இது போன்ற அன்பு இன்று அனேக மக்களிடமும் காணப்படுவதுதான் மிகவும் வேதனையான விஷயம். எங்கும் சுயநலம், எல்லாமே ஏதாவது ஆதாயத்தை எதிர்பார்த்து செய்யும் நிலைமை, யார் நஷ்டம் அடைகிறார், அதனால் என்ன பாதிப்பு என்றெல்லாம் கொஞ்சமும் யோசனை செய்யாமல் தானும் தன் குடும்பமும் நன்றாக இருந்தால் போதும் யார் எப்படி போனால் நமக்கென்ன என்ற நோக்கோடு இன்று மனித கூட்டம் செயல்படுகிறது.


    உயிர்காக்கும் மருந்திலிருந்து உணவு பொருள்கள் வரை எல்லாவற்றிலும் கலப்படம், தெரு பொறுக்கும் கார்பரேசன் துடப்பத்தில் இருத்து மனிதனின் கிட்னி வரை எங்கும் திருட்டு. இவை எல்லாம் மிருக அன்பை விட கேவலமான அன்பு மனிதனிடம் புகுந்து விட்டதால் வந்த அலங்கோலங்கள். .


    2. மனித அன்பு:-

    மனித அன்பு என்பது மாறும் அன்பாகும். இன்று "நீ இல்லாமல் வாழவே முடியாது" என்று சொல்லும் அதே வாய் நாளை "நீ இருந்தால் என்னால் வாழவே முடியாது" என்று மாறி பேசும். இன்று "உன்னை போல் நல்லவன் இல்லை" என்று சொல்லும் வாய் நாளை "உன்னை போல ஒரு கெட்டவனை நான் பார்த்ததே இல்லை" என்று சொல்லும். அகவே மனித அன்பு நம்பகத்தன்மை அற்றது ஆகும்.

    மேலும் இந்த அன்பு பச்சோந்தி போல அவ்வப்பொழுது நிறம் மாறும் தன்மை கொண்டது. ஏழை, பணக்காரன், பெண், ஆண், தொழிலாளி, முதலாளி, என்பதின் அடிப்படையிலும் வயது மட்டும் இருக்கும் சூழ்நிலை தகுந்தார்போலவும் நிறம் மாறும் தன்மையுள்ளது.


    ஞாயிற்று கிழமை இயேசு எருசலேம் உள்ளே நுழையும் போது அவருக்கு மிக பெரிய வரவேற்பு கொடுத்து "உன்னதத்தில் இருந்து வந்தவருக்கு மகிமை" என்று பாட்டு பாடிய மக்கள் வியாழக்கிழமைக்குள் "அவரை அகற்றும்" "சிலுவையில் அறையும்" என்று சத்தம்போடும் அளவுக்கு மாறிவிட்டார்கள் என்றால் பாருங்களேன். காரணம் அவர்கள் இயேசுவை புகழ்ந்தால் தனக்கும் அவர்போல் அடி உதை கிடைத்து விடும் என்ற பயம்தான்.

    ஆளை பார்த்தல் ஒரு அன்பு ஆளை பார்க்காவிட்டால் ஒரு அன்பு, தனியாக இருக்கும் போது ஒரு அன்பு கூட்டமாக இருக்கும் போது ஒரு அன்பு, பணம் இருந்தால் ஒருஅன்பு பணம் இல்லாவிட்டால் ஒரு அன்பு அப்பப்பா எத்தனை விதமான மனித அன்புகள்!

    மனிதர்களின் நடிப்பையும் பச்சோந்தி தனத்தையும் விளக்கி சொல்ல முடியவே முடியாது! .


    3. தெய்வீக அன்பு:

    "தன் சகோதரனுக்காக தன் ஜீவனையும் கொடுக்கும் அன்பிலும் மேலான அன்பு ஒன்றுமில்லை" என்ற வார்த்தையில் வரும் அன்பினையே தெய்வீக அன்பு என்றும் நேசம் என்றும் சொல்ல முடியும்.


    தெய்வீக அன்பு என்பது தன்னை பற்றி என்றுமே கவலைப்படாது, பிறர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்க்காக தன்னையே கொடுக்க கூட தயங்காது. ஒருவன் எத்தனை முறை திட்டினாலும், எத்தனை முறை கடன் வங்கி திருப்பிதாராமல் போனாலும், எவ்வளவுதான் துரோகம் செய்திருந்தாலும் அவன் மீதிலும் அன்பு வைக்கும் நிலையான அன்பே தெய்வீக அன்பு.

    இந்த அன்பு மனிதன் எப்படிப்பட்டவன் என்று பார்க்காது, தனக்கு ஏதாவது கைமாறு கிடைக்குமா என்று பார்க்காது, ஏழை பணக்காரன் வித்தியாசம் பார்க்காது, இருக்கும் சூழ்நிலையை பார்க்காது ஆனால் பிறருக்கு எவ்விதத்திலாவது உதவ வேண்டும் என்று நினைக்கும். இறைவனின் ஆவி நம்முள் உற்றப்பட்டால் ஒழிய இப்படி ஒரு அன்பை நாம் ருசித்து பார்க்க முடியாது.

    நரகம் என்று ஒரு கொடிய இடம் இருக்கிறது என்பதை நேரடியாக பார்த்த தெய்வீக மனிதர்கள், எப்படியாவது இந்த ஜனங்களை அங்கு போவதிலிருந்து மீட்க வேண்டும் எந்த ஆதங்கத்தில் சொந்த நாட்டை, நல்ல வாழ்க்கையை துறந்து காடு மேடு என்று அலைந்து இயேசுவை அறிவிக்கும் அந்த அன்பை என்னே சொல்வது.

    நல்ல வாழ்க்கையை துறந்து இந்தியாவுக்கு வந்து இந்திய மக்களுக்காக உழைத்து மரித்த "கார்மைக்கேல் அம்மையார்" "மதர் தெரசா", பைபிளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததர்க்காக நெருப்பால் கொளுத்தப்பட்ட வில்லியம் கேரி, மார்டின் லூதர் போன்ற தேவே மனிதர்களிடமே இந்த அன்பை கான முடியும்.

    கண்ணதாசன் சொன்னதுபோல் "கருணையும் இரக்கமும் பொங்கும் உள்ளம் தான் கடவுள் வாழ்கின்ற இல்லமாகும்" " கருணை மறந்து வாழும் மக்கள் கடவுளை தேடி எங்கு அலைந்தாலும் அவரை கண்டுகொள்ள முடியாது"  

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top