Ion எனும் நிறுவனமானது Air Pro 3 எனும் நீர் உட்புகாத தொழில்நுட்பத்தினைக் கொண்ட கமெராவினை வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது.
நீரினுள் 49 அடிகள் ஆழம் வரை கொண்டு சென்று பயன்படுத்தக்கூடியதாக காணப்படும் இக்கமெராவானது 60 fps வேகத்தில் வீடியோ பதிவு செய்யக்கூடியதாக உள்ளது.
மேலும் இதில் 12 Megapixel Sony IMX117 CMOS சென்சார் காணப்படுகின்றது.
வயர்லெஸ் தொழில்நுட்பமான Wi-Fi இனையும் கொண்டுள்ள இக்கமெரா மூலம் 160 டிகிரியில் காட்சிப்பதிவு செய்ய முடியும்.
ஒரு இணையதளத்தை எந்த விதமான வடிவமைப்பு அலங்காரங்களும் இல்லாமல் அதன் வரி வடிவிலான தகவல்களை மட்டும் பார்க்க விரும்பினால்,டெக்ஸ்ட்மிரர் இணையதளம் அவ்வாறு அந்த தளத்தை மாற்றி தருகிறது.
எந்த இணையதளத்தை மாற்ற வேன்டுமோ அதை இந்த தளத்தில் சமர்பித்தால், அதில் உள்ள இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் நீக்கிவிட்டு வெறுமையாக தருகிறது.அப்போது வெறும் வரி வடிவிலான தகவல்கள் மட்டுமே இருக்கும்.மற்றபடி, புகைப்படங்களோ,விளம்பரங்களோ வேறு எந்த அம்சமும் இருக்காது.
எதோ கம்ப்யூட்டர் புரோகிராமிங் எழுதப்பட்டது போல அந்த பக்கம் காட்சி அளிக்கும்.சரி, இப்படி இணையதளங்களை அவற்றின் வடிவமைப்பு மற்றும் எச்டிஎமெல் சார்ந்த அம்சங்களை நீக்கி விட்டு வெறும் எலும்புக்கூடு போல பார்க்க வேண்டியதன் அவசியம் என்ன?
பல பிரவுசர்களில் வரி வடிவில் மட்டும் சேமிப்பதற்கான வசதி இருக்கிறதே என்று கேட்கலாம். உண்மைதான் பிரவுசர்கள் மூலமே ஒரு தளத்தின் வரி வடிவத்தை மட்டும் சேமிக்கலாம் தான்,ஆனால் டெக்ஸ்ட்மிரர் பயன்படுத்தும் போது தளத்தின் மூல வடிவமைப்பு அப்படியே பாதிக்காமல் இருக்கிறது.அதாவது இடது புறம் இருந்த தகவல்கள் அங்கேயே மாறாமல் இருக்கும் . இது ஒரு அணுகூலம்.
மற்றபடி அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட பேஸ்புக் போன்ற பக்கங்களை இப்படி வடி வடிவில் பார்க்கலாம்.
வரி வடிவம் என்பதால் குறிப்பிட்ட இணையதளம் துரிதமாக வந்து நிற்க வாய்ப்புள்ளது.
எது எப்படியோ, இணைய கட்டுரைகளை விளம்ப தொல்லை இல்லாமல் படிக்க விடும்பினால் அதற்கு இன்ஸ்டபேப்பர் போன்ற அருமையான தளங்கள் இருக்கின்றன.
என்ன பொருள் வாங்குவது என்பது? பரிசுப்பொருள் வாங்க முற்படும் போது எல்லோருக்கும் ஏற்படகூடிய குழப்பம் தான். வாங்கித்தரும் பரிசுப்பொருள் வழக்கமானதாக இல்லாமல் வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என் நினைப்போம்.அதே நேரத்தில் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்! அது மட்டுமா?
பரிசளிப்பது என்பது வெறும் சம்பரதாயம் மட்டுமா என்ன? அது அன்பின் வெளிப்பட்டும் அல்லவா? அதனால் தான், பரிசுப்பொருள் தேர்வு செய்யும் போது பலரும் அதற்காக மெனக்கெட விரும்புகின்றனர்.பரிசுப்பொருளைபிரித்து பார்க்கும் போதே அதை பெறுபவரின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கின்றனர்.
இது போன்ற நேரங்களில் நண்பர்களிடமும் தெரிந்தவர்களிடமும் விசாரித்து,கடை கடையாக ஏறி இறங்க வேண்டியிருக்கும்.இந்த சுமையை குறைத்து பரிசுப்பொருளுக்கான தேடலுக்கு விடையாகும் வகையில் விஷ்பிக்கர் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல விஷ்பிக்கர் பரிசுப்பொருள் தேடலில் எதிர்படக்கூடிய இரண்டு கேள்விகளுக்கும் விடையாக அமைகிறது.அதாவது என்ன பொருள் வாங்குவது? எங்கே வாங்குவது? ஆகிய இரண்டு கேள்விகளுக்கும் இந்த தளம் தீர்வாகிறது.
பொருத்தமான பரிசுப்பொருளை தேர்வு செய்ய விரும்புகிறவர்களுக்கு அழகான அருமையான வாய்ப்புகளை இந்த தளம் முன் வைக்கிறது.இதற்காகவே முகப்பு பக்கத்தில் மூன்று கட்டங்கள் இருக்கின்றன. அவற்றில் பரிசுப்பொருள் யாருக்கு, அவரது வயது வரம்பு என்ன? பரிசளிப்பதற்கான நிகழ்வு என்ன? போன்றவிவரங்களை இந்த கட்டங்களில் குறிப்பிட வேண்டும். உடனே இந்த தளம் பொருத்தமான பரிசுப்பொருட்களை பட்டியலிடுகிறது.அந்த பட்டியலில் இருந்து விருப்பமானதை தேர்வு செய்யலாம்.
முதல் கட்டத்தில் பரிசு அப்பாவுக்கா,அம்மாவுக்கா, மனைவிக்கா அல்லது நண்பருக்கா என குறிப்பிடலாம்.இரண்டாவது கட்டத்தில் அவர்களின் வயதை குறிப்பிட்டு விட்டு மூன்றாவது இடத்தில் பரிசளிப்பதற்கான காரணம் என்ன என குறிப்பிடலாம்.
பரிசுப்பொருட்கள் அனுபவமாகவோ அல்லது பொருட்களாக இருக்க வேண்டுமா என்றும் தீர்மானித்துகொள்ளலாம். இந்த தேர்வில் பரிசுக்கூப்பன்களும் உள்ளன.
பரிசளிக்கும் சூழலுக்கேற்ப விதமவிதமான பரிசுகளை பட்டியில் இருந்து சுலபமாக தேர்வு செய்தவுடன் இந்த தளத்தி இருந்தே வாங்கி கொள்ளும் வசதியும் இருக்கிறது. எனவே எங்கு வாங்குவது என்ற கவலையும் இல்லை.
இணையம் முழுவதும் கிடைக்கும் பொருட்களில் இருந்து சிறந்தவற்றை தேர்வு செய்து பட்டியலிட்டு பரிந்துரைக்கிறது இந்த தளம்.
ஒவ்வொரு பிரிவிலும் பட்டியலிடப்பட்டுள்ள பரிசுகளை பார்த்தும் சரியானதை தேர்வு செய்து கொள்ளலாம்.அழகான புகைப்படங்களோடு இந்த பரிசுகளை அலசிப்பார்ப்பதே ஆனந்தமாக இருக்கலாம்.
பரிசுப்பொருள் தேடலுக்கான ஓரிடச்சேவை என சொல்லக்கூடிய இந்த தளத்தை தில்லியை சேர்ந்த அபூர்வ் பன்சல் என்னும் இளைஞர உருவாக்கியுள்ளார். தனது காதலிக்க பரிசளிக்க விரும்பிய போது பொருத்தமான பரிசை தேர்வு செய்ய வழி இல்லாமல் திண்டாடியிருக்கிறார். இதற்கான தீர்வை தானே உருவாக்க தீர்மானித்து நண்பருடன் சேர்ந்து விஷ்பிக்கர் தளத்தை உருவாக்கினார்.
இது தொடர்பாக தனது அனுபவத்தை யுவர்ஸ்டோரி தளத்தில் அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில் ஒரு சுவாரஸ்யமான விஷயமும் இருக்கிறது.அதாவது காதலிக்கு பரிசாக நட்சத்திர ஓட்டலில் விருந்துக்கு அழைத்து சென்றிருக்கிறார்.ஆனால் இதனிடையே வேலையை விட்டுவிட்டு விஷ்பிக்கர் இணையநிறுவனத்தை துவக்கியதால் விருந்துக்கான பில்லை காதலி தான் கொடுக்க வேண்டியிருந்தது.
“புதையல் இருப்பது உறுதி. ஆனால் புதையல் எடுப்பதற்காக தோண்டும் இடத்திற்கு என்னை அனுமதிக்காமல் அதனை கண்டு பிடிக்க முடியாது அதிலும் ராணுவத்தால் தோண்டும் பணி நடத்த வேண்டும். அத்துடன் மீடியாக்கள் சம்பவ இடத்திற்கு அனுமதிக்கப் பட வேண்டும்.” சாமியார் சோபன் சர்க்கார் மறுபடியும் கூறியுள்ளார்.
உ.பி. மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பழங்கால கோட்டையின் இடிபாடுகளுக்கு அடியில் 1,000 டன் தங்கம் புதைத்து வைத்திருப்பதாக, சோபன் சர்க்கார் என்ற பிரபல சாமியார் கனவு கண்டார். அவர் கொடுத்த தகவலை தொடர்ந்து, தங்கப்புதையலை எடுப்பதற்காக அந்த பகுதியில் தோண்டும் பணி, கடந்த 18-ந்தேதி தொடங்கியது. மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை சார்பில் இந்த பணி நடைபெற்று வந்தது.
மத்திய தொல் பொருள் ஆய்வு துறை சார்பில், கடந்த 12 நாட்களாக தொடர்ந்து தோண்டியும், புதையல் எதுவும் சிக்கவில்லை. பூமிக்கு அடியில் புதைந்திருந்த செங்கல் சுவரின் சிதைந்த பகுதிகள் மட்டுமே காணப்பட்டன. தங்கப்புதையல் வேட்டை தோல்வியில் முடிந்ததால், அந்த பகுதியில் தோண்டும் பணியை தொல் பொருள் ஆய்வுத்துறை திடீரென்று நிறுத்திவிட்டது. சாமியார் சோபன் சர்க்கார் கூறியபடி, புதையல் எதுவும் இல்லாததால், தோண்டும் பணி கைவிடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கனவு கண்ட சாமியார் சோபன் சர்க்கார் பேசுகையில், புதையல் எடுப்பதற்காக தோண்டும் இடத்திற்கு என்னை அனுமதிக்காமல் அதனை கண்டு பிடிக்க முடியாது என்று கூறியுள்ளார். தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் புதையல் இருப்பது தெரியவந்த பின்னர் உண்மையை அறிவார்கள். புதையல் இருப்பது உறுதி. ராணுவத்தால் தோண்டும் பணி நடத்த வேண்டும். ஏன் மீடியாக்கள் சம்பவ இடத்திற்கு அனுமதிக்கப்படவில்லை என்று சாக்கார் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அங்கு ந
காலையில் எழுந்தவுடனே நமக்கு ஒரு சுறுசுறுப்பு இருந்தாதான் அன்றைய வேலைகள் எல்லாம் சிறப்பா முடியும். அப்படி இல்லாமால் ஒரு அயர்ச்சியுடன் எழுந்திருக்கணுமான்னு நினைச்சோம்னா அன்றைக்கு முழுக்கவே மந்தமா தான் இருக்கும். பொதுவா சிலர்கிட்ட ஏன் டல்லா இருக்கன்னு கேட்டா ஒரே தலைவலின்னு சொல்வாங்க.ஆன காலம் மாறிட்டு வருது அதனால இப்பல்லாம் தலைவலின்னு சொல்லமாட்டாங்க. ஒற்றைத் தலைவலின்னுதான் சொல்வாங்க. ஏன் அப்படி?
பொதுவா டாக்டர்கள் சொல்வது தீய பழக்கங்கள் இல்லாமல் இருந்தாலே 90 சதவீதம் நோய்கள் வராது. அதோட 6 மணி நேர தூக்கம் மற்றும் வேளைக்கு உணவு மற்றும் மனசு விட்டு பேசுதல், கொஞ்சம் உடற்பயிற்சி செஞ்சாலே பல வியாதிகளை தவிர்க்கலாம்னு தீர்வு சொல்றாங்க.
சரி இந்த ஒற்றைத் தலைவலிக்கு தீர்வு என்ன என்று பார்ப்போம்.
ஒற்றைத் தலைவலி (Migraine) :
உலகில் 70 சதவீதம் பெண்கள் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். முறையான வழிகாட்டுதல்களும் சிகிச்சைகளும் இல்லாததால், அல்லது இருந்தும் எடுத்துக் கொள்ளாததால் பலர் தலைவலியை முற்றவிட்டு, பக்கவாதம் உட்பட வேறு சில ஆபத்தான நோய்களுக்கும் ஆட்படுகிறார்கள். சிலருக்குக் கண்பார்வை கூட மங்கிப் போகும் வாய்ப்பு இதனால்தான் உருவாகிறது.
அறிகுறிகள்:
ஒற்றை தலைவலி என்று சொல்லப்படும் மைக்ரேன் ஒரே பக்கமாக வலிக்கக் கூடிய தலைவலி என்றாலும், தலை முழுவதும் வலி தெரியும். தலையின் மேல் பகுதியிலோ, பக்கவாட்டிலோ துடிப்பது போலவும் அடித்துக் கொள்வது மாதிரியும் லேசாக வலி ஆரம்பிக்கும்.
படிக்கட்டில் ஏறும்போது, வீட்டு வேலைகளைச் செய்யும் போது வலி கூடும். ஒலியைக் கேட்கவோ, ஒளியைப் பார்க்கவோ கூச்சமாக இருக்கும். கூடவே குமட்டலும் வாந்தியும் வரும்.
1. கிளாசிக் மைக்ரேன்: (Classic Migraine)
தலைவலியின்போது நரம்பு தொடர்பான அறிகுறிகள் தென்படுவதை (avra) இது குறிக்கும். அதாவது தலைவலி வருவதற்கான அறிகுறிகள் இல்லாமல், நோய் வருவது போன்ற உணர்வு மட்டும் எழுவது.
தலையில் நெற்றிப்பொட்டில், பொட்டெலும்பு, பின்பக்கத் தலை போன்ற இடங்களில் இதன் வலி தெரியும். கண்களிலும், தாடையிலும், முதுகிலும்கூட வலி தெரியலாம். பேச்சு குழறுதல், கவனமின்மை, மனநோய் போன்றவை இதனால் வர வாய்ப்புண்டு. தற்காலிகமாக பார்வையில் கோளாறு, உணர்வில் கோளாறு, கண்களுக்குள் மின்னல் போன்ற ஒளிக்கீற்று வந்து மறைதல் போன்றவை ஏற்படும்.
நெற்றிப் பொட்டிலும், கண்ணிலும் வலி ஏற்பட்டு, வலி அதிகரிப்பதால் சிலர் தாங்க முடியாமல் தவிப்பார்கள். சிலர் எதிலாவது தலையை முட்டிக்கொண்டு அழுவது கூட உண்டு.
கை, கால்களைப் பலவீனப்படுத்தும் இந்த வலி இரண்டு நாட்களுக்கு ஒருமுறைகூட வரலாம்.
2. பொதுவான மைக்ரேன்: (Common migraine)
மனநிலையில் பாதிப்பு, அடிக்கடி மூடு மாறுதல், சோர்வுறுதல், மனப்பதட்டம் ஆகியவற்றால் இத்தலைவலி ஏற்படும். இது தொடர்ந்து மூன்று நான்கு நாட்களுக்கு இருந்தால் குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, சிறுநீர் அதிகரித்தல் ஆகியன உண்டாகும்.
ஒற்றைத் தலைவலி எதனால் வருகிறது?
migraine-headaches
மூளை இயங்குவதற்குத் தேவைப்படும் செரடோனின் என்ற வேதியியல் திரவத்தின் அளவு குறையும் போதுதான் இந்த ஒற்றைத் தலைவலிகள் ஏற்படுகின்றன. பல ஆண்டுகளாக, தலைக்குச் செல்லும் நரம்புகள் சுருங்கி இரத்த ஓட்டம் தடைப்படுவதால்தான் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் நம்பினார்கள். புதிய கண்டு பிடிப்புகளின்படி, மூளையைச் சேர்ந்த சில செல்களில் ஏற்பட்டுள்ள பரம்பரைக் குறைபாடுகள் தான் காரணம் (gentic disorder) என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படும்போது, மூளைக்குச் செல்லும் செல்கள் அழிந்துபோக வாய்ப்புகள் உண்டு. அதனால் தலைவலி ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
பரம்பரை நோயா?
ஒற்றைத் தலைவலி பரம்பரையாக வரக்கூடியது என்று சொல்லப்படுகிறது என்றாலும், இது மரபில் உள்ள கோளாறால்தான் என்று திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. கணவன்- மனைவி இருவருக்கும் ஒற்றைத் தலைவலி இருந்தால் பிள்ளைகளுக்கு 75 சதவிகித வாய்ப்பு உண்டு. இருவரில் ஒருவருக்கு மட்டும் இருந்தால் 50 சதவிகித வாய்ப்புகள் உண்டு. அவ்வளவுதான். மற்றபடி, கட்டாயம் வரும் என்று சொல்லமுடியாது. அறிகுறிகளை வைத்தே ஒற்றைத் தலைவலியை நெருங்க விடாமல் செய்ய முடியும். இதற்கு சில வழிகள்.
1. உணவுமுறையில் மாற்றம்:
சரியாக உணவு உண்ணாததும், ஒத்துக்கொள்ளாத சில உணவுவகைகளை உண்பதும், அளவுக்கு அதிகமாக உண்பதும் ஒற்றைத் தலைவலிக்கு முக்கியக் காரணங்களாகும். இதனால் நல்ல ஆரோக்கியமான உணவை, வேளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பால், காய்கறி வகைகள் நல்லது. இறைச்சி வகைகளைத் தவிர்த்தல் மிக நல்லது.
2. முறையான தூக்கம்:
தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் காலையில் எழுந்ததும் தலைவலிப்பதாகச் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. அதனால் நல்ல தூக்கம் வரச்செய்யும் வழி முறைகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக தூக்கம் வரும்வரை படிப்பது.
walking_exercise
3. உடற்பயிற்சி:
உடற்பயிற்சிதான் உடலில் உள்ள வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. இதனால் மூளை நன்கு செயல்படத் தொடங்கும். முறையான தொடர் உடற்பயிற்சி இருந்தாலே ஒற்றைத் தலைவலி அண்டாது.
4. சுற்றுச்சூழலில் கவனம்:
அதிக சூரிய வெப்பம் படுதல், வானிலை மாற்றங்கள், காற்றோட்டமில்லாத புழுக்கமாக சூழலில் வாழ்தல் ஆகிய சுற்றுச்சுழல்களாலும் சிலருக்கு தலைவலி வரும். அதனால் இவற்றைத் தவிர்த்தல் வேண்டும். காற்றோட்டமுள்ள இடத்தில் தூங்குவதும், மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வதும் மிக அவசியம்.
5. மது, புகை, காபி தவிர்த்தல் :
மது அருந்துதல், புகை பிடித்தல், காபி குடித்தல் சிலருக்கு தலைவலியை உண்டாக்கும். இவை முற்றிலும் நிறுத்தப்படல் வேண்டும். சிலருக்குக் காப்பி சாப்பிட்டால் தலைவலி நிற்பது போல் தெரியும். ஆனால் அது நிரந்தரமற்றதாகும்.
6. கவலை, சோர்வு, மனஅழுத்தம் வேண்டாம் :
அதிகமாகக் கவலைப்படுபவர்கள், அடிக்கடி சோர்வு அடைபவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி ஒற்றைத் தலைவலி வரும். இவற்றில் இருந்து விடுபட, மற்றவர்களுடன் நட்பாகப் பேசிப் பழக வேண்டும். மனம் விட்டுப் பேசி குறைகளைக் களைய வேண்டும்.
7. தடுப்புமுறைகள்:
ஒற்றைத் தலைவலி எதனால் வந்தது என்பதை அறிந்துகொண்டு அவற்றைத் தவிர்த்தலே மிக நல்லது. உதாரணமாக, ஒரு நிகழ்ச்சிக்குப் போனால் தலைவலி வந்திருக்கும். திரும்பவும் அந்த நிகழ்ச்சியைக் காணாது தவிர்த்தல். சில பொருட்கள் அலர்ஜியாகி தலைவலி கொடுத்திருக்கும். அவற்றைத் தவிர்த்து முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளலாம்.
8. மருந்துகள்:
இது போன்று ஒற்றைத் தலைவலி அல்லது பொதுவான தலைவலி அடிக்கடி வரும் போது, டாக்டர்களை அணுகித்தான் மருந்துக்களை சாப்பிட வேண்டும். தங்களுக்கு தெரிந்த மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதும் அல்லது தலைவலிக்கு மருந்துக் கடைகளில் தரும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதும் முறையானது அல்ல.
அதிக அளவில் மருந்து எடுத்துக் கொள்வதும் சிலருக்குத் தலைவலி வரக் காரணமாக இருக்கும். இதனால் மருத்துவர் ஆலோசனைப்படி மட்டுமே மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும்