வரலாறு தந்த பொக்கிஷம் சாம்பானர்- பாவாகத்
சாம்பானர்- பாவாகத் ஆர்க்கியாலஜிக்கல் பார்க்! அழகு தமிழில் சொன்னால் சாம்பானர்- பாவாகத் தொல்லியல் பூங்கா!. குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் தகதகத்துக் கொண்டிருக்கும் வரலாற்றுப் பொக்கிஷம். சுமார் 800மீட்டர் உயரம் கொண்ட பாவாகத் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பகுதியே சாம்பானர்- பாவாகத் என்றழைக்கப்-படுகிறது. மலை உச்சியில் உள்ள காளிக்கமாதா கோவில் மிகவும் பிரசித்தம். அடிவாரத்தில் உள்ள அரண்மனை கட்டிடங்கள், மசூதிகள் போன்றவை 8 - 14ம் நூற்றாண்டுகளுக்கு இடையே கட்டப்பட்டதாகும். சோலங்கி மன்னர்கள், பிறகு கிக்சி சவுகான்கள் வசம் இருந்து வந்த இந்தப்பகுதியை குஜராத் இளம்சுல்தானாக...
Monday, 28 October 2013
கோயம்புத்தூர் மாவட்டத்தின் வரலாறு!
கோயம்புத்தூர், மாநிலத்தில் மூன்றாவது பெரிய நகரம், தமிழ் நாட்டில் ஒரு சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் ஜவுளி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம், நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது. கோசர்கள் இன மக்கள் கோசம்புத்துர் என்னும் இடத்தை தலைமையிடமாக கொண்டு வசித்து வந்தனர். இவர்கள் வாழ்ந்த இடமான கோசம்புத்துர் காலப்போக்கில் பெயர் மருவி கோயம்புத்தூர் என்றே அழைக்கபடுகிறது. கோயம்புத்தூர் முற்கால சோழனாகிய கரிகாலனின் ஆட்சிக் காலமான இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது. இதனை இராஷ்டிரகுட்டர்கள், சாளுக்கியர்கள், பாண்டியர்கள், ஹோசைளர்கள்...
ஒற்றுமை நீங்கின்........(.நீதிக்கதை )

வேடன் ஒருவன் பறவைகளைப் பிடிப்பதற்காக வலையை விரித்திருந்தான்.அவன் எதிர்பார்த்தபடி பல பறவைகள் வலையில் சிக்கின.
அவற்றைப் பிடிக்க அவன் வலையின் அருகே வந்தான்.உடனே அனைத்துப் பறவைகளும் வலையையே தூக்கிக்கொண்டு பறந்தன.
வேடனும்...அப்பறவைகளைத் துரத்திக்கொண்டு ஓடினான்.
அதைப் பார்த்த ஒருவர்' வேடனே..ஏன் வீணாக ஓடுகிறாய்.ஒற்றுமையாய் வானத்தில் பறக்கும் பறவைகளை உன்னால் பிடிக்க முடியாது' என்றார்.
அதற்கு வேடன்..' ஆம்..ஒற்றுமையுடன் அவை பறக்கும் வரையில் அவற்றை என்னால்
பிடிக்க முடியாது.ஆனால் அவை ஒற்றுமையுடன் எவ்வளவு தூரம் பறந்து
செல்லும்...விரைவில் அவற்றின் ஒற்றுமை நீங்கிவிடும் ' என்றான்.
அதற்கேற்றாற்போல மாலை நேரம் வந்தது.வலையை தூக்கிக்கொண்டு பறந்த...
2014 உலக கோப்பை டி20 முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா , பாகிஸ்தான் மோதல்!
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 10 சுற்று தொடக்க லீக் ஆட்டத்தில், இந்தியா , பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது.
2012, அக். 8ம் தேதி வரையிலான உலக டி20 தரவரிசையில் முதல் 8 இடத்தை பிடித்த அணிகள், சூப்பர் 10 சுற்றில் நேரடியாக இடம் பெற்றுள்ளன. மீதம் உள்ள 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டியில் (மார்ச் 16,21) மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. இதில் வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகளும் அடங்கும்.
இரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர் 10 சுற்றுக்கு முன்னேறும். மார்ச் 21ம் தேதி மாலை...
இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-07

இந்திய வரலாறும்
பழங்கால இந்திய வரைபடங்களும் என்ற தலைப்பில் ஆறு பதிவுகளை வெற்றிகரமாக கடந்து வந்துள்ளோம் தொடர்ந்து ஆதரவளித்து வரும்
நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. வாரம் ஒரு பதிவாவது பதிவிட வேண்டும் என்று தான்
முயற்சி செய்கிறேன் வேலைபளு காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்குள் பதிவிட இயலவில்லை. ஏழாவது பதிவில் அடிஎடுத்துவைப்பதற்கு முன்பு
இது வரை நாம் பார்த்து வந்த வரலாற்றின் காலக்கோடு (timeline) பார்த்து செல்வோம்.
இப்பிரபஞ்சத்தில்,
அண்டங்கள்
உருவானது ...