.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 24 October 2013

துர்நாற்றம் தராத உள்ளாடைகள் வந்தாச்சாகும்!

உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை விரும்பி அணியும் காலம் இது. அதிலும் இபபோதைய இளம் பெண்கள் உடை அணிந்ததே தெரியாத அளவுக்கு, லெகின்ஸ், டைட்ஸ் என நவநாகரிக கலாசாரத்தில் சிட்டாகப் பறக்கின்றனர்.’நடந்து செல்வதற்கும், வண்டி ஓட்டுவதற்கும், இறுக்கமான உடைதான் சௌகரியம்’ என்பது அவர்களின் கருத்து.

                                                         24 - lady futureclothes3

ஆனால், உடலை ஒட்டிப்பிடிக்கும் உடைகள் குறித்து தோல் மருத்துவ நிபுணர்களிடம் கேட்டபோது,’காலச் சூழலுக்கு ஏற்ற உடைகளை அணிய வேண்டுமே தவிர, சதாசர்வ காலமும் இறுக்கமான உடைகள் அணிவது நல்லது அல்ல. பெண்கள் இறுக்கமான உடைகளை அணியும்போது, வியர்வை வெளியேற முடியாமல், அதாவது வெளியே வர வாய்ப்பு இல்லாமல் கிருமிகளின் வளர்ச்சி பன்மடங்கு உயர்ந்துவிடும்.

இதனால், வேர்க்குரு, உஷ்ணக் கட்டிகள் மற்றும் கோடைக் கால நோய்கள் சருமத்தைப் பாதிக்கும். மேலும் அணியும் உள்ளாடைகள், சாக்ஸ் உட்பட இறுக்கமாக இருந்தால், உடலில் துர்நாற்றம் வீசுவதோடு, படை, சொறி சிரங்கு, அரிப்பு போன்றவை வரும்.” என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் லவ்பர்க் நகரில் உள்ள ஒரு தனியார் ஆடை நிறுவனம் துர்நாற்றத்தை பிரிக்கும் புதிய ரக உள்ளாடை தயாரித்துள்ளது.அதாவது உடலின் வியர்வை மற்றும் ஆசன வாய் வழியாக வெளியேறும் கார்பன்டை ஆக்சைடு போன்ற கழிவுகளால்தான் உள்ளாடைகளில் துர்நாற்றம் வீசுகின்றன என்றும் ஆனால் தற்போது அவற்றை பிரித்தெடுத்து எப்போதும் சுத்தமாக வைத்திருக்கும் வகையில் புதிய ரக உள்ளாடை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.மேலும்
அந்த உள்ளாடையில் ரசாயன தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளதால் அது அதில் உள்ள துர்நாற்றத்தை நீக்கி நறுமணத்தை ஏற்படுத்துகின்றன என்றும் கூறியுள்ளது.

மிகவும் மெல்லிய, நெகிழ்வு தன்மை கொண்ட நூலிழையால் உருவாக்கப்பட்ட துணிமூலம் இவை தயாரிக்கப்பட்டுள்ளன. இதைதான் லவ்பர்க் நகரில் உள்ள ஒரு தனியார் ஆடை நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதை சுத்தம் செய்வதும் மிகவும் எளிதாகும் என்று தெரிய வந்துள்ளது.

This Magical Pair of Underwear Can Filter Out Your Fart’s Smell


***********************************************


Here’s technology we can all get behind for our occasionally smelly behinds. Shreddies is a pair of underwear that promises to filter out farts. Seriously, it’s supposed kill your fart’s smell and be able to neutralize odors up to 200 times the stinky strength of the average fart. So even if you have a particularly foul brand of flatulence, Shreddies can let you fart wherever you want without feeling like you’ve dropped a bomb. Freedom farts.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் வரலாறு!



பாலாற்றின் கரையில் அமைந்துள்ளது காஞ்சிபுரம், காஞ்சிக்குத் சென்றால் காலாட்டிக் கொண்டே சாப்பிடலாம் என்பார்கள் பாரம்பரிய பட்டு நெசவுக்குப் பெயர் பெற்ற பட்டுத் தொழிலின் தலைநகரம். இந்தியாவின் ஏழு புனிதத் தலங்களில் ஒன்று. பல்லவர்களின் தலைநகர் என்ற பெருமைக்குரியது. சோழ விஜயநகர முகலாயப் பேரரசர்கள் ஆண்ட பூமி. அறிஞர் அண்ணா பிறந்த ஊர். தமிழ்ப் பண்பாட்டையும் வரலாற்றையும் மொழியையும் கற்பிக்கும் தமிழ்க் கல்லூரி இங்குண்டு. சென்னை வரை நீள்கிறது இம்மாவட்டம்.


இங்கு பல கோயில்கள் உள்ளன. அவற்றுள், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் ஆகியவை முக்கியமானவை. இவ்வாலயங்கள், சாக்தர், சைவர் மற்றும் வைணவர்கள் என பலவேறு சமயப் பிரிவினரும் இங்கு வந்து தரிசித்திட வழிவகுத்து இந்து சமயத்திற்கு சிறப்பு சேர்க்கின்றது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்த இடமெனும் சிறப்பையும் பெற்றது இந்நகரமாகும்.


காஞ்சி நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் பயின்று வருகின்றது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சி நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அரிய முடிகின்றது. கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் காஞ்சி குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சிபுரம், கலை, மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்கு முன் சென்னை, வேலூர், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளுர் ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் தலைநகராக விளங்கியது. பல்லவர்கள் ஆட்சி காலத்தில் காஞ்சிபுரம் அதன் தலைநகராக உச்ச புகழினை அடைந்தது.


புகழ் பெற்ற கைலாசநாதர் கோயிலை எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் நரசிம்மன் ஜெயசிம்மன் கட்டிடத் துவங்கிட, அவனது மகன் மகேந்திர வர்மனால் அப்பணி தொடரப்பட்டது. பின்னர், நந்திவர்மன் பல்லவமல்லன், பரமேஸ்வர விண்ணகரம் என்னும் விஷ்ணு ஆலயத்தைக் கட்டினான். அதே மன்னனே, தற்காலிகமாக சமண சமயத்தைச் சார்ந்திருந்தபோது, சமண பாரம்பரியம் காஞ்சியில் வளர பங்காற்றினான். சமண ஆலயங்களும் காஞ்சியில் செழித்தன.

இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும் - 02..!

 

பல 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உலகம் ஒரே நிலப்பகுதியாக இருந்திருக்கிறது அப்படி இருந்த அந்த உலகத்திற்கு வரலாற்று ஆசிரியர்கள் இட்ட பெயர் PANGAEA(which means"all lands"). சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு PANGAEA உலகம் இரண்டாக பிரிந்ததில் தெற்கில் கோண்ட்வானா, வடக்கில் LAURASIA என்ற இரு பெரிய கண்டங்கள் உருவாயின. இந்த பிரிதல் நடைபெற்றது உலகில் ஜுராசிக் உயிரினங்களின் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கும் பொழுது. இந்த நிகழ்வை ஆங்கிலத்தில் CONTINENTAL DRIFT என்றளைக்கின்றனர்.


 


 கோண்ட்வானா என்பது இந்தியாவில் உள்ள ஒரு ஊரின் பெயர் (எந்த மாநிலம் என தெரியவில்லை தெரிந்தவர்கள் கமெண்ட் இல் சொல்லுங்கள்) உலகில் முதன் முதலில் அந்த ஊரில் தான் கோண்ட்வானா கண்டத்தின் படிமங்கள் கண்டறியப்பட்டன. எனவே அந்த ஊரின் பெயரையே கண்டதுக்கும் சூட்டிவிட்டனர். கோண்ட்வானா கண்டத்தில் அண்டார்டிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா, ஆப்ரிக்கா, மடகஸ்கார், ஆஸ்திரேலியா இணைந்திருந்தன.


 


கோண்ட்வானா கண்டத்தில் இருந்து பிரிந்து வந்தது தான் நமது இந்தியா. ஆப்ரிக்காவிலிருந்து இந்தியா பிரியும் பொழுது கூடவே மடகஸ்கார் பிரிந்தது (இந்த நிகழ்வை சுட்டிக்காட்டும் அனிமேஷன் படத்தை மேலே காணலாம்).

 TETHYS கடலில் இந்தியா வடக்கு நோக்கி நகர்ந்து ஆசியாவுடன் இணைந்தது. இந்த மோதலில் ஆசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இமயமலை கிளர்ந்து எழுந்தது. இன்று இமயமலை இருக்கும் இடத்தில அன்று இருந்தது TETHYS கடல் தான். இன்றும் இமயமலையில் கடல் வாழ் உயிரினங்களின் எச்சங்களை  கண்டறிந்த வண்ணமே உள்ளனர். இந்தியா  கோண்ட்வானாவில் பிரிந்து ஆசியாவுடன் இணைந்தது சுமார் 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு.


 ஆனால் விந்திய மலை தொடரும் தமிழக, கர்நாடக, ஆந்திர நிலப்பகுதிகள் 30 கோடி ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளன. வடஇந்தியா மட்டுமே கோண்ட்வானாவில் இருந்து பிரிந்து வந்து தென்இந்தியாவுக்கும் ஆசியாவுக்கும் இடையில் இணைந்தது என்று கூறும் வரலாற்று ஆசிரியர்களும் உண்டு.



 

அமெரிக்கா கண்டத்தை பொறுத்த வரை தென்அமெரிக்கா மட்டும் கோண்ட்வானா கண்டதுடன் இருந்தது. கிழக்கு கோண்ட்வானா பகுதியில் இருந்த அண்டார்டிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, மடகஸ்கார் போன்ற பகுதிகள் ஆப்ரிக்காவிலிருந்து பிரிந்தது. தென்அமெரிக்கா ஆப்ரிக்காவிலிருந்து பிரிந்து வட அமெரிக்காவுடன் இணைந்து தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் உருவாகியது. பின்பு ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்து அண்டார்டிக்காவில் இருந்து  பிரிந்தது.


MESOSAURUS 
LYSTROSAURUS 
 

CYNOGNATHUS 

கோண்ட்வான கண்டத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் உயிரினங்கள்


 

    மனிதன் உலகெங்கும் பரவ கடவுள் செய்த வழி என்று கூட இதை சொல்லலாம். அன்று கண்டங்கள் அனைத்தும் பல இடங்களில் இணைந்திருந்தன. உலகின் வடக்கில் ஐஸ் இருந்ததால் மனிதனால் வட அமெரிக்காவிலிருந்து ஆசியா வரை நடந்தே செல்ல முடிந்தது. மனிதன் பயணத்தை ஆரம்பித்து உலகம் முழுவதும் பரவி முடிக்கவே ஒரு லட்சம் ஆண்டுகள் ஆயின.

                 60,00 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவை அடைந்த மனிதர்களில் ஒரு பிரிவினர் சீனாவை நோக்கி சென்றனர் இன்னோர் பிரிவினர் இந்தியாவுக்குள் வந்தனர்.

நியாண்டர்தால் இன மக்களும் அதற்கு முந்தய இனமான  homoerectus என்ற இனமும் இந்தியாவில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. நியாண்டர்தால் இனமக்களும் வேறு சில இன மக்களும் பயன்படுத்திய ஆயுதங்கள் சென்னைக்கு அருகில் அந்தரம்பாக்கம், கர்நாடகத்தின் சில பகுதிகளில் கிடைத்துள்ளன. நவீன இன மக்களின் வருகைக்கு பின்பு அந்த இனங்கள் அழிந்திருக்கலாம் அல்லது நாமே அளித்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


 

இந்தியாவில் ஆரம்பித்த மனிதனின் பயணம் இலங்கை வரை போக 20,000 ஆண்டுகள் பிடித்தன. அது வரை இலங்கை இந்தியாவுடன் தான் இணைந்திருந்தது. 30 கிலோ மீட்டர் நீளமுள்ள (adam's bridge) ஆதாம் பாலம் இந்தியாவையும் இலங்கையையும் இணைத்து இருந்துள்ளது. சமீபத்தில் நாசாவின் சாட்டிலைட் புகைப்படமே கூட இதை உறுதி செய்துள்ளது.


மனிதன் இந்தியாவிற்கு வருவதற்கு 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலும் டைனோசர் நடமாடியிருக்கின்றன . டைனோசர் இருந்த பொழுதே ராட்சச பறவை இனங்களும் இந்தியாவில் இருந்துள்ளன ஒரு விமானம் அளவுக்கு உருவம் உள்ள பறவை இனங்கள் கூட இருந்துள்ளன. மேலும் 17 வகையான யானை வகைகள் இருந்திருக்கின்றன. ஆனால் அதில் இபொழுது இருப்பது வெறும் 2 வகையே ஒன்று இந்திய யானை மற்றொன்று ஆப்ரிக்கா யானை.




 


 


இந்தியாவில் பருவநிலை மாற்றங்கள் சீராக சுமார் 20 லட்சம் ஆண்டுகளாக மாறாமல் நடை பெற்றுகொண்டிருக்கிறது.

நெடிய பயணத்தை முடித்த மனிதர்கள் ஒரு இடத்தில் நிலையாக வசிக்க ஆரம்பித்தனர். உடன் நாகரிகம் தோன்ற ஆரம்பித்தன.
மனித நாகரிகம் முதலில் எங்கு தோன்ற ஆரம்பித்தது அடுத்த பதிவில் பார்ப்போம்.

குழந்தை மலச்சிக்கலை போக்கும் கைவைத்தியம்!

குழந்தைகள் ஆரோக்யமில்லாத உணவுப் பொருட்களின் மீது ஆசைப்படுகின்றனர். அதனை பெற்றோர்களும் வாங்கிக் கொடுப்பதால் அவர்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது.அதுமட்டுமின்றி, போதிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தண்ணீர் இல்லாவிட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும்.


இவ்வாறு மலச்சிக்கல் ஏற்படும் போது குழந்தைகள் மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாவார்கள். ஆகவே பெற்றோர்கள் குழந்தைகளின் பிரச்சனையை புரிந்து கொண்டு அவர்களை அந்த மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து மீட்க வேண்டும்.


மேலும் இந்த மலச்சிக்கல் பிரச்சனையை போக்க பல்வேறு உணவுப் பொருட்கள் மற்றும் இயற்கை வைத்தியங்கள் உள்ளன.


தற்போது குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை சரிசெய்யும் சில கைவைத்தியங்கள் உள்ளன. அந்த கைவைத்தியங்களை படித்து உங்கள் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் அதன் படி செய்து பாருங்கள்.


தேன்


ஒரு டம்ளர் பாலில் 1-2 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் உள்ள குழந்தைக்கு கொடுத்தால் மலச்சிக்கல் குணமாகும்.


நார்ச்சத்துள்ள உணவுகள்


நார்ச்சத்து அதிகம் இருப்பதால் காய்கறிகள் மலச்சிக்கலை சரிசெய்யும் குணம் கொண்டவை. குறிப்பாக பச்சை இலைக் காய்கறிகளில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் இருக்கும்.


ஆகவே முட்டைக்கோஸ், பீட்ரூட், பூசணிக்காய், பசலைக் கீரை, கேரட் போன்றவற்றை குழந்தைகளின் உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருப்பதோடு மலச்சிக்கல் இருந்தால் அது சரியாகிவிடும்.


ஆளிவிதை


குழந்தைகளுக்கு உள்ள மலச்சிக்கலை ஆளிவிதை சரிசெய்துவிடும். அதற்கு ஆளிவிதையை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்க வேண்டும்.


விளக்கெண்ணெய்


பெரிய குழந்தையாக இருந்தால், அவர்களுக்கு ஒரு டம்ளர் பாலில் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து குடிக்க கொத்தால் மலச்சிக்கல் உடனே குணமாகும்.


தண்ணீர்


சில சமயங்களில் குழந்தைகளுக்கு உடல் வறட்சி இருந்தாலும் மலச்சிக்கல் ஏற்படும். ஆகவே அத்தகைய குழந்தைகளுக்கு அதிக அளவில் தண்ணீர் குடிக்க கொடுக்க வேண்டும்.


வாழைப்பழம்


குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலும் ஒரு சிறந்த நிவாரணியாக இருப்பது தான் வாழைப்பழம். அதிலும் வாழைப்பழத்தை, ஒரு டம்ளர் சூடான பாலுடன் கொடுக்க வேண்டும்.


ஓமம்


ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் 1 ஸ்பூன் ஓமம் மற்றும் சர்க்கரை கலந்து மலச்சிக்கல் உள்ள குழந்தைகளுக்கு கொடுத்தால் இந்த பிரச்சனை உடனே குணமாகும்.

கூகுள் பிளே ஸ்டோர் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு அறிமுகம்!

அன்ரோயிட் இயங்குதளங்களில் பயன்படுத்தக்கூடிய மென்பொருட்கள் உட்பட கூகுள் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் சாதனங்களை கொள்வனவு செய்தவற்கு கூகுள் பிளே ஸ்டோர் பயன்படுத்தப்படுகின்றது.
தற்போது இத்தளத்திற்கான புதிய பதிப்பில் உருவான Google Play Store 4.4 அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இந்த அப்பிளிக்கேஷன் ஆனது அடுத்தவாரம் அறிமுகப்படுத்தப்படவுள்ள Google Nexus 5 சாதனத்தில் உத்தியோக பூர்வமாக நிறுவப்பட்டு வெளியிடப்படவுள்ளது.


 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top