.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 24 October 2013

கூகுள் பிளே ஸ்டோர் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு அறிமுகம்!

அன்ரோயிட் இயங்குதளங்களில் பயன்படுத்தக்கூடிய மென்பொருட்கள் உட்பட கூகுள் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் சாதனங்களை கொள்வனவு செய்தவற்கு கூகுள் பிளே ஸ்டோர் பயன்படுத்தப்படுகின்றது.
தற்போது இத்தளத்திற்கான புதிய பதிப்பில் உருவான Google Play Store 4.4 அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இந்த அப்பிளிக்கேஷன் ஆனது அடுத்தவாரம் அறிமுகப்படுத்தப்படவுள்ள Google Nexus 5 சாதனத்தில் உத்தியோக பூர்வமாக நிறுவப்பட்டு வெளியிடப்படவுள்ளது.


யூகலிப்டஸ் இலையில் தங்கம்

 


 யூகலிப்டஸ் மரத்தின் இலையில் தங்கத் துகள் படிந்திருப்பதை ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கல்கூர்லி என்ற பகுதி தாது வளம் நிறைந்த பகுதி. இங்கு தங்கம் அதிக அளவில் இருப்பதாக 1800ம் ஆண்டுகளிலே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். மண் வளத்துக்கும், அங்குள்ள தாவரங்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து இவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

கல்கூர்லி பகுதியில் உள்ள யூகலிப்டஸ் மரத்தின் இலைகளை அதிநவீன எக்ஸரே கருவி மூலம் படம் பிடித்து பார்த்தபோது, அதில் மிக நுண்ணிய அளவில், அதாவது தலைமுடியின் அகலத்தில் 5ல் 1 பங்கு அளவுக்கு தங்க துகள் படிந்திருந்ததை கண்டு பிடித்தனர். இது குறித்து புவிவேதியியல் நிபுணர் மெல் லிண்டர்ன் கூறுகையில், ‘‘யூகலிப்டஸ் மரத்தின் வேர்கள் தரையில் 100 அடி ஆழம் வரை ஊடுருவி தங்கத் துகள் அடங்கிய நீரை உறிஞ்சுகின்றன. தங்கத் துகள் இலைகள் மற்றும் பக்க கிளைகளுக்கு கடத்தப்படுகின்றன. அவை பின்னர் காய்ந்து உதிர்ந்து விடுவதால், மரத்துக்கு பாதிப்பில்லை’’ என்றார்.

இந்த ஆராய்ச்சி கட்டுரை ‘நேச்சர் கம்யூனிகேஷன்’ என்ற ஆய்வு இதழில் வெளியிடப்பட்டு ள்ளது. இதன் மூலம் பூமிக்கு அடியில் உள்ள தாது வளங்களை தோண்டி பார்க்காமலேயே, அங்குள்ள தாவரங்களின் மாதிரிகளை ஆய்வு செய்வதன் மூலம் கண்டுபிடித்துவிடலாம் என்பதை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியில் பொதிந்துள்ள தாமிரம் மற்றும் துத்தநாகம் போன்ற வளங்க ளையும் இதே முறையில் அங்குள்ள தாவரங்களை ஆராய்வதின் மூலம் கண்டுபிடித்துவிடலாம் என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். யூகலிப்டஸ் தங்கம் காய்க்கும் மரங்களா என்று ஆஸி. விஞ்ஞானிகளிடம் கேட்டால், 500 மரங்களை அழித்தால்தான், சிறிய மோதிரம் செய்யும் அளவுக்கு தங்கம் கிடைக்கும் என்கின்றனர்.

எக்ஸ்ட்ரா தகவல்

பூமியிலிருந்து இதுவரை 1 லட்சத்து 74 ஆயிரம் டன் தங்கம் எடுக்கப்பட்டுள்ளதாம். உலக தங்க கவுன்சில் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

Wednesday, 23 October 2013

நம்ம என்ட்ரி டெரரா இருக்கணுமில்ல? - வடிவேலு



'ரெடி... டேக்... ஆக்ஷன்!' சொல்கிறார் அந்த 75 வயது லேடி டைரக்டர். 'எட்டு மாதம் சுமந்து என்னை ஈன்றெடுத்த தாயே' - புலிகேசி வசனத்தைப் பேசிப் புல்லரிக்க வைக்கிறார் வடிவேலு. சுற்றி வேடிக்கை பார்க்கும் உறவுகள் கைதட்டி ஆரவாரிக்கிறார்கள்.



  Tamil Celebrity MY RE-ENTRY MUST BE TERROR: VADIVELU ஏய் வடிவேலு... சொன்னாலும் சொல்லாட்டியும் நீ எட்டு மாசத்துலயே பொறந்த புள்ளதான். புலிகேசி டைரக்டரு அவரா இந்த வசனத்த எழுதினாரா... இல்ல நீயா எடுத்து வுட்டியா? - அந்த 75 வயது டைரக்டர் விழுந்து விழுந்து சிரிக்கிறார். அவர் வடிவேலுவின் தாய் சரோஜினி.


ஆத்தா... எந்தெய்வமே... ஒம் மொகத்துல இப்பத்தானே சிரிப்பைப் பாக்குறேன். ஊரு ஒலகத்தையே சிரிக்கவெச்ச நானு, ஓடுற ஓட்டத்துல ஒங்கள எல்லாம் மறந்துட்டேன் அம்மா. ஒன்னைய ஆஸ்பத்திரிக்கு அள்ளிட்டுப் போனப்பதான் 'பெத்தெடுத்த இந்த ஆத்தாவை விட்டுட்டா காலுல றெக்கையக் கட்டிக்கிட்டுப் பறந்தோம்'னு மனசு குறுகுறுத்துச்சு. 'எங்களோட வைத்தியம் முடிஞ்சிடுச்சு. இனிமே உங்க வைத்தியந்தான் வடிவேலு, அம்மாவுக்கு முக்கியம்'னு மதுரை அப்போலோ ஆசுபத்திரி டாக்டருங்க சொன்னப்பதான் எம் மனசு குளிர்ந்துச்சு. எந்தாயக் காப்பாத்துற பாக்கியம் எனக்கு அமையணும்கிறதுக்காகவே இறைவன் இப்படியொரு இடைவெளியை உண்டாக்கி இருக்கான். வழக்கம்போலவே பரபரப்பா சுத்திக்கிட்டு இருந்திருந்தா இன்னிக்கு ஒம் பக்கத்துல உக்காந்து சிரிக்கவெக்கிற பாக்கியம் அத்துப்போயிருக்கும் என்னையப் பெத்த அம்மா!
வடிவேலு கண் கலங்க, ஆறுதலாக அவரை மார்போடு அணைத்துக்கொள்கிறார் சரோஜினியம்மா.


கடந்த இரு வாரங்களாக அம்மா முன்னால் தன் காமெடிக் காட்சிகளை நடித்துக்காட்டி, அவருக்குச் சிரிப்பு வைத்தியம் செய்துகொண்டு இருக்கிறார் வடிவேலு.



என்ன கையப் புடிச்சு இழுத்தியா..?

இதெல்லாம் நரம்பு இல்ல தாயி... நீங்க போட்ட நூடுல்ஸூ...

சங்கமே அபராதத்துலதான் ஓடிக்கிட்டு இருக்கு...

பலவித பாப்புலர் பஞ்ச்சுகளையும் வடிவேலு அள்ளிவிட... வயிறு வெடிக்கிறது சுற்றி அமர்ந்திருப்பவர்களுக்கு.

பரபரப்பா நடிச்சுக்கிட்டு இருந்த வடிவேலு இப்படி வீட்டுக்குள்ளேயே இருக்கிறதில் உங்களுக்கு வருத்தம் இல்லையா? - சரோஜினி அம்மாவிடம் கேட்டேன்.

அவன் நடிச்சு ஓய்ஞ்சிட்டதா நீங்க நெனைக்கிறீங்களா... அடப்போங்கப்பா. அவன் சம்பாதிக்க வேண்டிய புகழும் பணமும் இனிமேதான் இருக்கு. இதுவரைக்கும் அவன் நடிச்சதெல்லாம் பத்து சதவீதந்தான். இனிதான் இருக்கு பாக்கி தொண்ணூறும்! எம் புள்ள திரையில நடிச்சதை நான் பாத்திருக்கேன். ஆனா, நேர்ல அவன் பண்ற கூத்தும் கும்மாளமும் கொஞ்சமா, நஞ்சமா? எங்க வீட்டுக்காரரு இறந்தப்ப புள்ளைங்க எல்லாரும் வருத்தப்பட்டாக. அப்போ நான் வடிவேலுகிட்ட சொன்னேன், 'அப்பா செத்துட்டார்னு அழாதப்பா... நம்மளோட கஷ்டத்தை எல்லாம் அவரு அங்கே கொண்டுக்கிட்டு போயிட்டாருனு நெனச்சு நிம்மதியா இரு'னு. இப்பவும், 'இந்த ஓய்வு நல்லதுக்குத் தான்பா... உனக்குக் கெடுதல் பண்றவங்கள நம்ம குலசாமி அய்யனார் பாத்துப்பார்'னு எம் புள்ளைக்குத் தைரியம் சொல்றேன். எம் புள்ள மார்க்கெட்டு போயி வீட்ல கெடக்கல தம்பி. அது இப்போ கோடம்பாக்கத்துக்கு லீவு விட்டிருக்கு... அம்புட்டுத்தேன்!" - வாய்கொள்ளாத பூரிப்பில் சிரிக்கிறார் சரோஜினி.
ஒம் பேட்டி போதும்மா... இனி நான் பேசிக்கிறேன்- வான்ட்டடாக வருகிறார் வடிவேலு.


எப்போதான் ரீ - என்ட்ரி கொடுக்கப்போறீங்க?


கொடுப்போம்ணே... ஏன் அவசரப்படணும்? இப்பவும் நிறையப் பேர் கூப்பிட்டுக்கிட்டுதான் இருக்காங்க. ஆனா, இப்போதைக்கு காமெடி ரோல் பண்ண எனக்கு விருப்பம் இல்லண்ணே. இத்தன நாள் இடைவெளிக்கு அப்புறம் வாரப்ப... நம்ம என்ட்ரி டெரரா இருக்கணுமில்ல? அதுக்காகத்தான் ஹீரோ ரோல் பேசிக்கிட்டு இருக்கேன். புலிகேசி பார்ட் டூ ஒருபக்கம்... தெனாலிராமன்கிற கதை ஒரு பக்கம்னு டிஸ்கஷன் ஓடிக்கிட்டு இருக்கு. சம்மர் முடியட்டும்ணே... மக்களுக்கு பம்பர் பரிசு கொடுத்திருவோம்!


பெத்த அம்மாவைத் தாங்குதாங்குனு தாங்குறீங்க... ஆனா, முதல்வர் அம்மாவைப் பத்தி எதுவுமே சொல்றது இல்லையே... அவங்க ஆட்சி எப்படி இருக்கு?


ஆட்சியைப் பத்தியெல்லாம் பேசுற நிலையில நான் இல்லண்ணே... ஆனா, அவங்களைப் பத்தி நச்சுனு நாலே வார்த்தையில நான் சொல்ல நினைக்கிறது இது தான். காலுக்கு உதவாத செருப்பை கழட்டி எறியுறதுல அவங்க கரெக்டான முதலமைச்சர்.


தேர்தல் வெற்றிக்குக் கூட்டணிதான் முக்கியம்கிற இந்தக் காலகட்டத்துல ஒருத்தங்க வேண்டாம்னா, அடுத்தவங்க சேர்த்துக்கப்போறாங்க. அப்படி ஒண்ணு நடந்தா?


அது காலுக்கும் கேடு... அதை மாட்டிக்கிடற ஆளுக்கும் கேடு!


நீங்க இப்படிச் சொல்றீங்க. ஆனா, 'என்னை அடக்க நினைப்பவர்கள் அழிந்துபோவார்கள்'னு சொல்றாரே விஜயகாந்த்?


ஏங்காதுல அப்புடி ஏதும் விழலையேண்ணே... ஏங்காதுல கேட்குற குரல் என்ன தெரியுமாண்ணே... 'நா அடங்கிப் பல மாசமாச்சு... தேவையில்லாம ஏன் என்னையவே சீண்டுறீங்க. இது நல்லது இல்ல... யாருக்கு, எனக்கு!' அப்புடின்னுதான் யாரோ புலம்புற மாதிரி இருக்கு. எம் படத்துல பாக்குற அத்தனை கேரக்டர்களையும் ஒருசேரப் பாக்குற மாதிரி இருக்குண்ணே...


ஸ்நேக் பாபு, நாய் சேகர், கைப்புள்ளனு சிரிப்பா பார்த்த கேரக்டர் எல்லாம் ஒண்ணுசேர்ந்து சீரியஸா பேசுற மாதிரிதானே இருக்கு? சினிமாங்கிறது நிழல். நிஜ வாழ்க்கை வேறண்ணே... நகைச்சுவை, இசை, ஃபைட்னு மொத்த ரத்தமும் உடலோடும் உயிரோடும் கலந்து கட்டி மெனக்கெட்டுச் செய்யிற வித்தைண்ணே சினிமா. ஒரு மாஸ்டரும் ஏராளமான ஃபைட்டர்ஸூம் சேர்ந்து ரத்தம் சிந்தி நம்மள தைரியசாலியாக் காட்டுற வித்தியாசமான உலகம்ணே...


அங்க நாக்கைத் துருத்தி சேட்டையக் காட்டலாம்ணே. ஆனா, மக்கள் பிரதிநிதிகளும் முதல்வரும் அமர்ந்திருக்கிற ஒரு சபையில நாக்கைத் துருத்துறது நாகரிமாக படலையேண்ணே... நான் அன்னைக்குச் சொன்னது எல்லாம் இன்னைக்கு நடக்குறது நல்லாப் பார்த்தா தெரியும்ணே!


இத்தகைய விமர்சனங்களை எல்லாம் சட்டையே செய்யாமல், 'நிச்சயம் ஆட்சியைப் பிடிப்போம்!'னு விஜயகாந்த் நம்பிக்கையோடு சொல்றாரே?


என்னது ஆட்சியையா... இம்புட்டுக்காணு பூச்சியைக்கூட அவரால பிடிக்க முடியாது!


இன்றைய அரசியல் நிலவரங்களை எப்படிப் பாக்குறீங்க?


இன்னும் நாள் இருக்குண்ணே... ஏன் இம்பூட்டு அவசரப்படுறீங்க? இவ்வளவு அவசரம் உமக்கு ஆகாதையா. நான் ரொம்பப் பொறுமையா இருக்கேன். அதனாலதான், என் வூட்டுக்குப் பக்கத்துல எழுதிக்கிடக்குற கறுப்பு காமராஜரையும் கறுப்பு அண்ணாவையும் இன்னும் பல பல கறுப்புத் தலைவர்களையும் இந்தக் கறுப்பு பொறுமையோட பார்த்துக்கிட்டு இருக்கேன்!


நன்றி: விகடன்

15 ஆபரேஷன்களுக்குப் பிறகு நான் நடக்கறதே பெரிய விஷயம்: அஜித்!

 Tamil Celebrity AJITH CONVEYS PAIN ABOUT RASH COMMENTS IN INTERVIEW

என் நடிப்பு, முயற்சியைப் பாராட்ட மனமில்லாதவர்கள், என் தோற்றத்தையும் உடல் அமைப்பையும் கிண்டல் செய்கிறார்கள். 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு நான் நடப்பதே பெரிய விஷயம், என்கிறார் அஜித். சமீபத்தில் அவர் பிரபல வார பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் சில பகுதிகள்...



நான் 'மங்காத்தா'வில் இருந்து என் படங்களை புரொமோட் பண்ணிப் பேசறது இல்லைனு முடிவு பண்ணிட்டேன். அது 'பில்லா-2'-வுக்கும் பொருந்தும். ஜூன் மாசம் படம் ரிலீஸ். இதுக்கு மேல் இப்போதைக்கு எதுவும் இல்லை!
 


மனதை பாதித்த விமர்சனம்...

 
படம் நல்லா இருக்கா, இல்லையானு சொல்லாம, சிலர் நான் குண்டா இருக்கேன்னு பெர்சனலா கமெண்ட் அடிக்கிறாங்க. 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு என் மெட்டபாலிஸமே மாறிடுச்சு. நான் ரெண்டு காலையும் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம் சார். அதை நினைச்சு நான் சந்தோஷப்படுறேன்.
நான் நல்ல டான்ஸரா இல்லாம இருக்கலாம். ஆனா, அதுக்காக முயற்சி பண்றேன். இவ்வளவு சிகிச்சைகளுக்குப் பிறகும் ஹெலிகாப்டர்ல இருந்து குதிக்கிறேன்... சண்டை போடுறேன். ஆனா, தொடர்ந்து என் பெர்சனல் தோற்றத்தை சிலர் கிண்டல் செய்றது வருத்தமா இருக்கு!


நெகடிவ் விமர்சனங்கள் குறித்து...


என்கிட்டயே நிறையப் பேர் சொல்லியிருக்காங்க... பொறந்தா அஜித்குமாராப் பொறக்கணும்னு. அஜித்குமாருக்கு என்னல்லாம் கஷ்டம் இருக்குனு, அஜித்குமாரா வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். சச்சின் டெண்டுல்கர் இப்படி ஆடணும்னு சொல்றது ரொம்ப ஈஸி. ஆனா, கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைச் சுமந்துக்கிட்டு விளையாடுற சச்சின் டெண்டுல்கருக்குத்தான் அது எவ்வளவு கஷ்டம்னு தெரியும்.
கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துட்டு கருத்து சொல்றது ஈஸி. களத்துல இறங்கி நின்னாதான், அது எவ்வளவு கஷ்டம்னு புரியும். 30 வயசுல நம்மால எல்லாம் முடியும்னு தோணும். இப்போ 40 வயசுக்கு மேல நம்மளை மீறி ஒரு சக்தி இருக்கு... அதுதான் எல்லாத்தையும் தீர்மானிக்கும்னு தோணுது. என்னை விமர்சிக்கிற எல்லாருக்கும் அந்தப் பக்குவம் கிடைக்கணும்னு நான் கடவுளை வேண்டிக்கிறேன்!


ரசிகர்களுக்கு...


இத்தனை ஆண்டுகளில் ரசிகர்கள் பலம் கூடிக் கொண்டே இருப்பது கடவுள் ஆசீர்வாதம்தான். என் ரசிகர்களுக்கு வெறும் நன்றி சொன்னால், அது முழுமையாகாது. உண்மையைச் சொல்றேன்... தினமும் காலையில் கடவுளை வேண்டும்போது என் ரசிகர்களுக்காகவும் வேண்டிக்கிறேன். நான் இன்னைக்கு சினிமாவில் இருப்பேன். நாளைக்கு இல்லாமலும் போவேன். ஆனா, ஒரு அண்ணனா என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். அட்வைஸ்னு தப்பா நினைக்காதீங்க. உங்க தன்மானத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காதீங்க.


உங்க வேலையை 100 சதவிகிதம் ரசிச்சு செய்யுங்க. நல்லாப் படிங்க. நான் பத்தாவது வரைக்கும்தான் படிச்சேன். வாழ்க்கையில் கஷ்டப்பட்டுத்தான் பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். ஆனா, அந்த ரூட் ரொம்பக் கஷ்டம். படிச்சிருந்தா இவ்வளவு அடிபட்டு வந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே. அதனால நல்லாப் படிங்க. யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க. யார் பின்னாடியும் போகாதீங்க. மத்தவன் காலை மிதிச்சு முன்னேறாதீங்க. சிம்பிளா சொல்றேன்... வாழு... வாழவிடு!

கம்பெனிகளின் பெயர்களும் – விளக்கங்களும்!

கீழே சில பெயர்களும் அதின் விளக்கங்களும். சில சுவாரஸ்யமானவை:

Nissan-ன் விரிவாக்கம் Nippon Sangyo. Nissan ஒரு யூத மாதத்தின் பெயரும் கூட.

Yahoo-வின் விரிவாக்கம் Yet Another Hierarchy of Officious Oracle.

ADIDAS-ன் விரிவாக்கம் All Day I Dream About Sports (உண்மையில் அது அதன் நிறுவனர் பெயரில் உண்டான பெயர் Adolf (Adi) Dasler).

STAR TV- ன் விரிவாக்கம் Satellite Television Asian Region TV.

ICICI-ன் விரிவாக்கம் Industrial credit and Investments Corporation of India.

Oracle-என்றால் ஜோதிடம் கூறல் எனப் பொருள்.

COMPUTER- ன் விரிவாக்கம் Commonly Operated Machine Particularly Used for Trade Education and Research.

VIRUS- ன் விரிவாக்கம் Vital Information Resource Under Siege.

Wipro- ன் விரிவாக்கம் Western India Products.

googolplex-யிலிருந்து உருவாக்கப்பட்ட googol என்ற ஒரிஜினல் பெயரை,டொமைன் ரெஜிஸ்டர் பண்ணும் போது ஸ்பெல்லிங் தவறுதலாக இட்டப்படியால் இன்றைய google உருவானது.

MICROcomputer SOFTware தான் MicroSoft.முதலில் Micro-Soft என்று அழைக்கப்பட்டு பின் – நீக்கப்பட்டு வெறும் MicroSoft ஆனது.

IBM-ன் விரிவாக்கம் International Business Machines.

Pepsi-Cola டிரேட்மார்க் பதிவுபண்ணப்பட்ட ஆண்டு 1937. ஆனால்Coca-Cola டிரேட்மார்க் பதிவுபண்ணப்பட்ட ஆண்டு 1893.

HSBC-ன் விரிவாக்கம் Hongkong and Shanghai Bank Of Commerce.

HDFC-ன் விரிவாக்கம் Housing Development Finance Corporation Limited.

MRF-ன் விரிவாக்கம் Madras Rubber Factory.

TVS-ன் விரிவாக்கம் TV Sundram Iyengar and Sons Limited.

Java என்பது ஜாவா தீவில் உற்பத்தியாகும் ஒரு காபியின் பெயர்.

Linux செயலி Linus Torvalds உருவாக்கியதால் அப்பெயர் பெற்றது.

Cisco அதன் பிறப்பிடம் San Francisco -வை பெயராக கொண்டது.

KPMG என்பது நான்கு கம்பனிகளின் இணைப்பு.அதாவது K stands for Klynveld ,P is for Peat, M stands for Marwick,G is for Goerdeler.

Nokia-தனது பிறப்பிடமான பின்லாந்தின் ஒரு கிராமத்தின் பெயரை தன் பெயராக கொண்டுள்ளது.

இரு நிறுவனங்கள் Tokyo Denki யும் Shibaura Seisakusho யும் இணந்து புது நிறுவனம் Tokyo Shibaura Denki உருவான்து.அது தான் இன்றைய Toshiba.

நிறுவனர்கள் Bill Hewlett மற்றும் Dave Packard-ன் பெயரைக் கொண்டது HP.

Dell அதன் நிறுவனர் Michael Dell-ன் பெயரைக் கொண்டுள்ளது.


 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top