.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 22 October 2013

துணியாலான சோஃபாக்களை பராமரிக்க சில யோசனைகள்!!!

சோஃபாக்களை தேர்வு செய்யும் போது, அதன் மேலுறையை தேர்வு செய்வதே மிகுந்த சவால் நிறைந்த ஒன்றாகும். லெதர் மற்றும் துணியாலான சோஃபாக்கள் இரண்டுமே குளிர் கால மாதங்களின் போது நற்பயன்களை அளிக்கக்கூடியவையே. ஆயினும், துணியாலான சோஃபாக்களில் கிடைக்கக்கூடிய கதகதப்பு, அவற்றில் காணப்படும் விதவிதமான ரகங்கள் மற்றும் விரும்பியவாறு வடிவமைத்துக் கொள்ளக்கூடிய வசதி போன்ற அம்சங்கள் துணிப் பிரியர்களின் மனதை வெகுவாக கவர்கின்றன.


கிங் ஃபர்னிச்சர் நிறுவனத்தைச் சேர்ந்த உள்நாட்டு நாகரீக கலாச்சார நிபுணரான ட்ரையானா ஓடோன் கூறுகையில், துணியாலான சோஃபாக்களின் தேர்வு பெரும்பாலும் ஒருவரது தனிப்பட்ட விருப்பம் மற்றும் அவர்தம் வாழ்க்கை முறையைப் பொறுத்தே அமைவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் சோஃபாவிற்கு ஏற்ற துணியை தேர்வு செய்வதற்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவத்தை, அதன் பராமரிப்பிலும் காட்ட வேண்டியது அவசியம்.



 1. துணியாலான சோஃபாக்களை சீரான இடைவெளிகளில் அப்ஹோல்ஸ்டரி இணைப்புடன் கூடிய குறைவான உறிஞ்சியை உபயோகித்து வாக்யூம் க்ளீனரினால் சுத்தப்படுத்த வேண்டும்.

2. சோஃபாவில் தேன் சிந்தி விட்டாலோ அல்லது கறை பட்டு விட்டாலோ, அதனை உடனே துடைத்து விடுங்கள். ஏனெனில் இவ்வாறு படியும் கறைகளை கவனிக்காமல் விட்டு விட்டால், அவற்றை அகற்றுவது மிகவும் கடினம்.

3. சாதாரண வீட்டு சுத்திகரிப்பு திரவங்கள் துணிகளை சேதப்படுத்தவோ அல்லது துணியை சாயம் போகவோ செய்துவிடும். அதனால், கறைகள் மற்றும் படிமங்களை அகற்றுவதற்கு கிங்-கேர் ஃபேப்ரிக் க்ளீனரை பயன்படுத்துங்கள். சோஃபா துணியில் காணப்படும் தகுந்த பராமரிப்பு முறைக்கான லேபிளை பார்க்கத் தவறாதீர்கள்.

4. துணியை இழுத்தோ அல்லது கிழித்தோ சேதமாக்கி விடக்கூடிய வெல்க்ரோ மற்றும் வளையங்கள், பக்கிள்கள் போன்ற கூர்மையான பொருட்கள் சோஃபாவின் மீது படாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

5. அழுக்கு மற்றும் லூசாக இருக்கக்கூடிய நூலை அகற்றும் பொருட்டு, அடிக்கடி வாக்யூம் க்ளீனரை உபயோகிப்பதனால் வரக்கூடிய பில்லிங்கை தவிர்க்கப் பாருங்கள்.
அப்படியே பில்லிங் நேரும் பட்சத்தில், அனைத்து டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களிலும் கிடைக்கக்கூடிய ஃபேப்ரிக் பில் ரிமூவர் உபயோகிப்பது, துணிக்கு பாதுகாப்பானது.

6. துணியை வெளுக்க வைத்து, அதன் நூல்களை வலுவிழக்கச் செய்யக்கூடியதான நேரடி சூரிய வெளிச்சத்தில் இருந்து சோஃபாவை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

7. திரவம் ஏதேனும் மேற்புறத்தில் சிந்தினாலும், அது பரவாமல் உறிஞ்ச வழி வகை செய்து, துணியின் ஆயுளை நீட்டிக்கும் வகையில், சோஃபாவின் உருவாக்கத்தின் போதே அதன் துணியை பாதுகாக்க மெனக்கிடுங்கள்.

8. சோஃபாவை நன்கு பராமரிக்க வேண்டுமெனில், வருடத்திற்கு ஒரு முறை அப்ஹோல்ஸ்ட்ரி க்ளீனர் ஒருவரைக் கொண்டு தொழில்முறையிலான சுத்திகரிப்பை மேற்கொள்வது அவசியம்.

நிலம் வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளவேண்டிய முழு விவரங்கள்!

நிலம் வாங்குவதற்கு முன் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும் போதும், விற்கும் போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ் நாடு அரசின் எந்தெந்த துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற விவரங்கள் தெரிவதில்லை. நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.

புல எண் (Survey Number) :
ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும். அதற்குப் புல எண் (survey Number) என்று பெயர்.

நிலம் தொடர்பான விவரங்கள் இருதுறைகளில் பராமரிக்கப்படுகின்றன.

1. பதிவுத்துறை
2. வருவாய்த்துறை
அதைப் பற்றி சுருக்கமாக காண்போம்

1. பதிவுத்துறை :
நாம் சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தை (Sale Deed) சார்பதிவாளர் (Sub- Registration Office) அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும்.

2. வருவாய்த்துறை :
இந்த துறையில்தான் நிலத்திற்கான விவரங்கள் கீழ்க்கண்ட பதிவேட்டில் இருக்கும்.
பட்டா (Patta)
சிட்டா (Chitta)
அடங்கல் (Adangal)
அ' பதிவேடு ('A' Register)
நிலத்திற்கான வரைபட எல்லை (FMB)

பட்டா (Patta) :
நிலத்தின் உரிமை நமக்கு தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் பட்டாவாகும்.
பட்டாவை வைத்துதான் ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு
செய்யப்படுகின்றது. பின்வரும் விவரங்கள் பட்டாவில் இருக்கும் :-
1. மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர் மற்றும் கிராமத்தின் பெயர்
2. பட்டா எண்
3. உரிமையாளர் பெயர்
4. புல எண்ணும் உட்பிரிவும் (Survey Number and Subdivision)
5. நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா
6. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை

சிட்டா (Chitta) :
ஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.

அடங்கல் (Adangal) :
ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்பன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.

அ' பதிவேடு ('A' Register) :
இப்பதிவேட்டில்
1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),
3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு,
4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,
5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற விவரங்கள் இருக்கும்.

நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) :
நிலத்திற்கான வரைபடம். இது இடம் எவ்வாறு பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது .

கிரயப் பத்திரம் (Sale Deed) :
சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தைச் சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub- Registration office) பதிவு செய்ய வேண்டும். கிரயப் பத்திரத்தில் கீழ்க்கண்ட முக்கியமான விவரங்கள்
இருக்கும்.

1. எழுதிக் கொடுப்பவரின் பெயர், முகவரி
2. எழுதி வாங்குபவரின் பெயர், முகவரி
3. எவ்வளவு அளவு
4. எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது
5. சொத்து விவரம்

சொத்து விவரத்தில் நாம் வாங்கும் நிலத்தின் அளவு, அது எந்தப் புல எண்ணில் அமைந்திருக்கிறது, பட்டா எண், அது எந்தக் கிராமத்தில் இருக்கிறது மற்றும் வட்டம், மாவட்டம் பற்றிய விவரங்கள் இருக்கும். நிலம் வீட்டு மனையாக இருந்தால் அதனுடைய அங்கீகாரம் பெற்ற விவரங்கள் மற்றும் பிளாட் எண் முதலியவை இருக்கும்.

கிரயப் பத்திர முதல் தாளின் பின் பக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட முழு விவரங்கள் இருக்கும்.
1. பதிவு எண் மற்றும் வருடம்
2. சொத்து எழுதிக் கொடுப்பவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
3. சொத்து எழுதி வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
4.புகைப்படங்களில் சார் பதிவாளரின் கையொப்பம்
5. பதிவு செய்யப்பட்ட நாள், விவரம், பதிவு கட்டணம் செலுத்திய விவரம்
சார்பதிவாளர் அலுவலகத்தின், விவரம் ஆகியவை
6. இரண்டு சாட்சிகளின் கையொப்பம் மற்றும் முகவரி
7. மொத்தம் எத்தனை பக்கங்கள்
8. மொத்தம் எத்தனை தாள்கள்
9. தமிழ்நாடு அரசின் ஸ்டிக்கர்.

புதிதாக வெளிநாடு செல்பவர்களுக்கு உதவ சில விஷயங்கள்...

* டிக்கெட் வாங்கும்போது குறைந்த நிறுத்தங்கள் (stopover) இருக்குமாறு வாங்குங்கள்..transit இருக்கும் பட்சத்தில்,   connecting flight நீங்கள் அங்கு வந்து குறைந்தது ரெண்டு மணி நேரம் கழித்து கிளம்புவதாக தேர்வு செய்யுங்கள்..விமான தாமதங்கள் சகஜமாக இருப்பதால் இரண்டு மணி நேரத்துக்கு குறைவாக இருந்தால் connecting flightஐ விட்டுவிட வாய்ப்பு அதிகம்..

* இந்தியாவிலிருந்து எடுத்து செல்லும் மசாலாக்களை விமானத்துக்குள் எடுத்து செல்ல முடியாது.. அதனால் அதை செக்-இன் செய்ய வேண்டும்.. மறக்காதீர்கள்.. வளைகுடா நாடுகளில் நாம் குருமாவுக்கு போடும் கசகசா தடை செய்யப்பட்ட போதைபொருள் வரிசையில் வருவதால் ஜாக்கிரதை..மாட்டினால் கண்டிப்பாக கம்பி எண்ண வேண்டியிருக்கும் . (அதை நாம் குருமாவுக்கு போடுவோம்ன்னு அவங்களுக்கும் தெரியும்.. ஆனாலும் அரப்பசங்க ஒதுக்கமாட்டானுங்க )

* புதிய இடம், புதிய உணவு, புதிய மக்கள், பிரிவு என்று முதல் ஒரு மாசம் வர இருக்கும் மன அழுத்தத்தை புரிந்து எதிர்கொள்ள வேண்டும்..வீட்டில் செல்லமாக வளர்ந்த "குழந்தைகள்" ஜாக்கிரதை... ரூமுக்குள் அடைபட்டு கிடைக்காமல் முடிந்தவரை வெளியே இருந்தால் நல்லது.. குளிராக, வெயிலாக இருக்கும் பட்சத்தில் ரயில், பஸ்களில் பிரயாணிக்கலாம்..

* வங்கிக்கணக்கு ஆரம்பிப்பது தான் முதல் வேலை.. போன், இன்டர்நெட், காஸ், மின்சாரம் என்று பல இதை சார்ந்தே இருக்கும்.. மாணவர்களாக இருந்தால் உங்கள் கல்லூரியின் அடையாள அட்டை தேவை.. வேலை செய்யும் பட்சத்தில் இது ரொம்ப சுலபம்.. அவர்களே பார்த்துகொள்வார்கள்...

* தயங்காமல் எந்தவொரு விஷயத்தையும் கேட்டு செய்யுங்கள்.. நீங்க பாட்டுக்கு பராக்கு பாத்தா காசு வீணாயிடும்.. ஒரு விஷயம் தெரியாம இருந்தாலும் காசு வீணாயிடும்.. டாக்சிக்களை தவிர்த்து அரசு வாகனங்களை பயன்படுத்துங்கள்..

* சக இந்தியர்களை தெரிந்து கொள்வது ரொம்ப முக்கியம்.. சில பேரு அவங்க சொத்தை நீங்க எழுதி வாங்கிடுவீங்களோன்னு கண்டும்காணமா இருப்பாங்க.. ஆனா விடாதீங்க.. விஷயங்களை இயல்பாக கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.. அவர்களை சந்திக்க சிறந்த இடம் பக்கத்தில் இருக்கும் வழிபாட்டு இடங்கள், (வேலை இடம், கல்லூரி தவிர).. உணவு, இருப்பிடம், உடை பற்றிய சிறந்த அறிவுரைகளை அவர்களை தவிர வேறு யாரும் தர முடியாது.. இந்திய காய்கறிகள், மசாலாக்கள் அநேகமாக எல்லா வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்.. ஆனால் preservatives அதிகமாக இருப்பதால் சுவை மாறுபடும்..

* மேற்கத்திய நாடுகளான ஸ்வீடன், நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகளில் மக்களிடையே technology acceptance ரொம்ப அதிகம்.. எனக்கு தெரிந்த ஒரு பாட்டி அங்கு 500 Mbps இன்டர்நெட் உபயோகிக்கிறார்... விலையும் அதிகமில்லை.. நல்ல இன்டர்நெட் இணைப்பு வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.. மொக்கையாக வாங்கிவிட்டு.. contract இல் நுழைந்துவிட்டு சங்கடப்படாதீர்கள்... இந்தியாவிற்கு பேச இன்டர்நெட் கண்டிப்பாக தேவை... உங்கள் வீட்டிலும் இன்டர்நெட் கொடுத்து பெற்றோர்களுக்கு கற்றுகொடுப்பது ரொம்ப முக்கியம்.. டிவி இணைப்பும் (ADSL) பெரும்பாலும் சேர்ந்து வருவதால் டிவியும் வாங்கிடலாம்..

*பஸ், ரயில் என்று எங்கு சென்றாலும் ஸ்மார்ட்கார்டுகள் தான்..போக்குவரத்துக்கு சலுகை அட்டைகளை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.. மாணவர்களுக்கு விசேஷ சலுகைகள் உண்டு.. எல்லாமே நேரத்துக்கு நடப்பதால் தாமதமா வந்தால் தர்மசங்கடங்கள் நிச்சயம்...

* வசிக்கும் நாட்டில் வரி பற்றிய தகவல்களை கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள்... சில சமயம் நம் நாடு திரும்பும்போது கட்டிய வரி பணத்தில் சிலதை திரும்ப பெறலாம்.. வளைகுடாவில் வரி கிடையாது

* இன்சூரன்ஸ் ரொம்ப முக்கியம்.. பல்லுக்கு தனியாக இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும்.. இது இல்லையென்றால் தீட்டி விடுவார்கள்..
* இந்தியாவுக்கு கொண்டு செல்ல Electronic பொருட்கள் வாங்கும்போது அது இந்தியாவில் என்ன விலை என்று தெரிந்து வாங்குங்கள்..உதாரணமாக ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவை விட சில பொருட்கள் விலை அதிகம்.. இந்தியா புறப்பட ரெண்டு மாதங்களுக்கு முன் taxfreeயாக வாங்கலாம்.. பிரிக்கமுடியாதபடி சீல் செய்து தருவார்கள்.. இந்தியா எடுத்து வந்து உபயோகிக்கலாம்...

* கல்லூரி மாணவர்களுக்கு: ஜெராக்ஸ் எடுப்பது, மாற்று சாவி செய்வது எனக்கு தெரிந்து ஸ்வீடன், பின்லாண்டு, நார்வேயில் ரொம்ப கஷ்டம்... பிரிட்டனில் இதெல்லாம் சர்வ சாதாரணம்.. அதனால் தயாராக இந்தியாவில் வாங்கி வந்து விடுங்கள் .. ஏனென்றால் புத்தகங்கள் விலை அதிகம்..

* பிரிட்டன், scandinavia போல் இல்லை...ஸ்வீடன் போன்ற நாடுகளிலிருந்து பிரிட்டன் வந்தால், பிரிட்டனிலிருந்து இந்தியா வந்தது போல் இருக்கும்..பிரிட்டனில் possibilities அதிகம்..நவீன இந்தியா மாதிரி இருக்கும்..எல்லா பொருளும் கிடைக்கும்.. பொது இடங்களில் ஆண்-பெண் நெருக்கங்கள் ஸ்வீடனில் மிக அதிகம்..யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.. topless ஆகா குளிக்கவும் சட்டபடி முடியும்.. பிரிட்டனில் அப்படி இல்லை... முத்தமே சில நேரங்களில் தான் ... ஸ்வீடனில் என்னால் சொல்ல முடியவில்லை.. நான் சொல்ல வருவது என்னவென்றால்.. இதையெல்லாம் நீங்களும் கண்டு காணமல் இருக்க வேண்டும் என்பதே...staring is considered indecent .. (அப்ப அவங்க பண்றது என்னவாம்ன்னு கேக்காதீங்க..)

* Pub களில் குடித்துவிட்டு, டான்ஸ் ஆடிவிட்டு வந்துவிடுங்கள்..அதுக்கு மேல் அடியெடுத்து வைக்காதீர்கள்...சோக்காளியா இருந்தா சீக்காளியா ஆயிடுவீங்க..

* கடைசியாக...இந்தியா வரும்போது, ஸீன் போடுவதை தவிர்த்து, நம் நாட்டில் இருக்கும் சிறப்புக்களை எண்ணி பாருங்கள்... இந்தியாவை அடிக்கடி compare செய்து எரிச்சலூட்டாதீர்கள்..  நண்பர்களுக்கு தண்ணி, தம் வாங்கி வருவதை விட ஷூக்கள், துணிகள் வாங்கி வந்து கொடுங்கள்... கண்டிப்பாக பெற்றோரை அழைத்து செல்லுங்கள்.."


குழந்தை வளர்ப்பு!


* அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது.

* கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.

* குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.

* அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக்கொள்கிறது.

* பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.

* ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.

* புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது.

* நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது.

* நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது.

* * 4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்.

** தினமும் அரை மணி நேரமாவது தந்தை, குழந்தைகளிடம் நண்பனைப்போல் உரையாடுங்கள்.

லெனோவா நிறுவனம் 10.1-அங்குல HD டச் ஸ்கிரீன் கொண்ட A10 லேப்டாப் அறிமுகம்!



லெனோவா நிறுவனம் தனது முதல் அண்ட்ராய்டில் இயங்கும், A10 லேப்டாப் அறிமுகப்படுத்தப்பட்டது. சீனாவின் பிசி தயாரிப்பு நிறுவனமான லெனோவா லேப்டாப்-ன் விலை மற்றும் கிடைக்கும் விவரங்களை வெளிப்படுத்தப்படவில்லை. புதிய சாதனத்தில் டூயல் மோட் கன்வெர்டிபிள் லேப்டாப் உடன் 10.1-அங்குல HD டச் ஸ்கிரீன் கொண்ட 1366x768p தீர்மானம் கொண்டுள்ளது.


அதன் டிஸ்ப்ளேவை சாதனத்தில் இருந்து அகற்ற முடியாது ஆனால் அதை நிலைப்பாட்டு முறையில்(stand mode) சாதனத்தை 300 டிகிரி சுழற்சி முறையில் பயன்படுத்த முடியும். லேப்டாப்-ல் அக்யூடைப் கீபோர்ட் கொண்டு ஹோம், பேக், மல்டி டாஸ்கிங் மற்றும் அமைப்புகள் போன்றவற்றை அண்ட்ராய்டு கீபோர்ட்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. லெனோவா A10 லேப்டாப் ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குகிறது.


1.6GHz Quad-core ப்ராசசர் மற்றும் தொடர்ச்சியாக ஒன்பது மணி வரை வீடியோ பிளேபேக்கில் இருக்கும் போதும் தாங்கக்கூடிய பேட்டரி ஆயுள் துணைபுரிகின்றது. ப்ளூடூத் 4.0 மற்றும் ஒரு HDMI (ஹை வரையறை மல்டிமீடியா இன்டர்ஃபேஸ்) போர்ட் போன்ற இணைப்பு விருப்பங்கள் கொண்டுள்ளன. 0.3MP வெப்கேம் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. A10 லேப்டாப், ஒரு கிலோவை விட குறைவானதாக இருக்கும்  மற்றும் அதன் அடர்த்தி 17.3mm  புள்ளி கொண்டுள்ளன.


லெனோவா A10 லேப்டாப் அம்சங்கள்:



10.1-அங்குல HD டச் ஸ்கிரீன் கொண்ட 1366x768p தீர்மானம்

1.6GHz Quad-core ப்ராசசர்,

ரேம் 2GB,

32GB சேமிப்பு built-in,

microSD அட்டை விரிவாக்க கூடியது,

இரண்டு USB 2.0 போர்ட்கள்

HDMI போர்ட,

ப்ளூடூத் 4.0,

0.3MP வெப்கேம்,

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்,

ஒன்பது மணி வரை தாங்கக்கூடிய பேட்டரி ஆயுள்,

ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top