.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 21 October 2013

பீதியை கிளப்புது உணவு பாதுகாப்பு துறை நீங்க வாங்கும் ஸ்வீட் தரமானதா!

தீபாவளிக்கு புத்தாடை, பட்டாசு வரிசையில் ஸ்வீட்டும் தவிர்க்க முடியாத அயிட்டம். தீபாவளிக்காக சென்னையில் உள்ள எல்லா ஸ்வீட் ஸ்டால்களிலும் பலதரப்பட்ட புதுவகையான ஸ்வீட்கள் தயாராகி வருகின்றன.இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு உணவு பாதுகாப்பு துறை அதிரடி ரெய்டு நடத்தியது. சென்னையில் உள்ள அனைத்து ஸ்வீட் ஸ்டால்களிலும் ஆய்வு நடத்தியதில், பெரும்பாலான கடைகளில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் தரமற்றவையாக இருப்பதாக பீதி கிளம்பியுள்ளது. ஸ்வீட் தயாரிக்கப்படும் இடம், அவற்றில் கலக்கப்படும் பொருட்கள் ஆகியவை தரமில்லாதவை என கூறப்படுகிறது. மேலும், எப்போது ஸ்வீட் தயாரித்தார்கள், அவை எத்தனை நாட்களுக்கு கெடாமல் இருக்கும் என்கிற தகவலையும் தயாரிப்பவர்கள் குறிப்பிடுவதில்லை.  இதனால்,...

சென்னையிலுள்ள பழமையான கட்டடங்களுக்கு வரைபடங்கள் தயாரிப்பு!

சென்னையிலுள்ள புனித ஜார்ஜ் கோட்டை, சேப்பாக்கத்தில் உள்ள பழமையான கட்டடங்கள் மற்றும் எக்மோர் அருங்காட்சியகம் போன்றவை அனைத்தும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை. இந்தக் கட்டடங்களுக்கு உரிய வரைபடங்கள் பொதுப்பணித் துறையிடமோ அல்லது அவற்றை மேற்பார்வை செய்து வரும் பொதுத்துறையிடமோ இதுவரை இல்லை. இதனால் இந்த பில்டிங்குகளின் வரைபடங்களைத் தயாரித்து அளிக்க பொதுப்பணித் துறைக்கு பொதுத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பழமையான கட்டடங்கள் ஒவ்வொன்றையும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அவற்றை அளவிட்டு வருகிறார்கள். தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கட்டடங்கள் உள்ளன. இந்தக் கட்டடங்களில் அரசுத் துறைகளின்...

கூகுளில் தேடலின் சுவடே இல்லாமல் தேடிக்கொள்ள ஒரு லிங்க்!

கூகுள் சிறந்த தேடியந்திரம் தான். ஆனால் இது நல்லதொரு தேடியந்திரம் இல்லை என்கின்றனர். நம்பிக்கையோடு தேடி வரும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் சேமித்து வைப்பதால் கூகுள் அந்தரங்க ஊடுருவலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கு மாற்றாக டக்டக்கோ போன்ற தேடியந்திரங்கள் முன வைக்கப்படுகின்றன.இந்த நிலையில் கூகுள் தேடல் முடிவுகளை கவலையில்லமல் தேடித்தருவதற்காக ஒரு தேடியந்திரம் அறிமுகமாகியிருக்கிறது. ஸ்டார்ட்பேஜ் எனும் அந்த தேடியந்திரம் தன்னை உலகின் அந்தரங்கமான தேடியந்திரம் என வர்ணித்து கொள்கிறது. இணைய மொழியில் பாதுகாப்பான தேடியந்திரம் என இதை புரிந்து கொள்ளலாம். ஸ்டார்ட்பேஜ் என்ன செய்கிறது என்றால் கூகுளில் நேரடியாக தேடாமல் தன் மூலமாக கூகுளுக்கு...

கவிதை............

நெஞ்சில் வீரம் உண்டு கண்ணில் கருணையும் உண்டு சொல்லில் அற்புதம் உண்டு பிறர் மனம் குளிர வாழ்ந்தால் வாழ்வில் என்றும் வெற்றி உண்டு...

கவிதை.... கவிதை...

அனைத்தும் இருப்பவனிடம் உதவிட எண்ணம் இல்லை உதவிட நினைப்பவனிடம் அனைத்தும் இருப்பதில்லை...
Page 1 of 87912345Next

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top