கடந்த ஆண்டு கொரியாவின் மிக சிறந்த ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி S3, இப்போது இணையத்தில் ரூ.20,000-க்கும் குறைவாக கிடைக்கின்றது. சாம்சங் தயாரிப்பாளர் ரூ.25,400-ல் விற்பனை செய்துகொண்டிருந்த சாம்சங் கேலக்ஸி S3 கடந்த வாரத்திலிருந்து கைப்பேசிகளின் விலை குறைத்துள்ளது.
ஆனால் ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான Flipkart இணையதளத்தில் இப்போது ஒரு பெரிய தள்ளுபடி விலையில் கேலக்ஸி S3 விற்பனை செய்கின்றது. அதாவது இந்தியாவில் கேலக்ஸி S3 விலை ரூ.24,899-க்கு விற்பனை செய்தாலும் அதனை Flipkart இணையதளத்தில் வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன் பரிமாற்றம் செய்துகொண்டால் மட்டுமே, ரூ.5,400 தள்ளுபடி செய்து ரூ.19,499 விலையில் வழங்கி வருகிறது.
இந்திய...
Thursday, 17 October 2013
செவ்வாய் கிரகத்துக்கு மங்கல்யான் விண்கலம்28ம் தேதி ஏவப்படுகிறது!
இந்திய விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக செவ்வாய்கிரகத்துக்கு மங்கல்யான் விண்கலம் 28ம் தேதி அனுப்பப்படுகிறது. புவி வட்டப்பாதை வரை பி.எஸ்.எல்.வி, சி,25 ராக்கெட்டில் செலுத்தப்படும் இந்த விண்கலம் மங்கல்யான், அதன்பிறகு அதிலேயே பொருத்தப்பட்டுள்ள மோட்டார் மூலம் புவி வட்டப்பாதையை கடந்து செவ்வாய் கிரகத்தின் வட்டப்பாதையில் நுழையும்.இந்திய விண்வெளி ஆய்வுக்கழகம் ( இஸ்ரோ) சார்பில் இதுவரை 105 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் இந்திய மற்றும் வெளிநாடுகளின் செயற்கை கோள்களை எடுத்துச்சென்று விண்ணில் நிலைநாட்டியுள்ளன. இதில் அதிகளவில் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள் வெற்றி பெற்றுள்ளன....
ஒபிசிட்டி பாதிப்பும் கலோரி பற்றிய தகவலும்!
உலக நாடுகளை பாடாய் படுத்தி வரும் நீரிழிவு, ஹார்ட் அட்டாக் நோய்களுக்கு உடல்பருமன் பிரச்னை முக்கிய காரணமாக, உடல் ரீதியான டாப் 10 பிரச்னைகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. உலகளவில் பார்க்கும்போது 100 கோடிக்கும் அதிகமானவர்கள், தங்களுக்கு பொருந்தாத எடையுடன் இருக்கிறார்களாம். கடந்த 30 ஆண்டுகளில் ஒபிசிட்டி பாதிப்பு 3 மடங்கு உயர்ந்திருக்கிறது எனும் தகவல் நம்மிடம் சரியான விழிப்புணர்வு இல்லை என்பதையே காட்டுகிறது.
என்ன காரணங்கள்
ஒரு நாளைக்கு சராசரியாக 1600 கலோரி ஆற்றல் தேவைப்படுகிறது. இது உடலுக்குள் செல்லும் போது சக்தியாக மாற்றப்படுகிறது. உடல் செயல்பாடுகளுக்கு மிஞ்சி சக்தி உள்ளே சென்றால், அதாவது அதிகமான...
பெண்களுக்கு உதவும் நவீன சாதனம்!
நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிரித்து வருகின்றன. இந்நிலையில் பெண்கள் தனியாக செல்லும் போதோ, அலுவலகத்திலோ அவர்களுக்கு ஏதேனும் தொந்தரவுகள் காரணமாக அச்சம் இருக்குமானால் அதை பதிவு செய்யும் கருவி ஒன்றை தெற்கு தில்லியை சேர்ந்த யாஷ்பாட்டியா என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
தில்லி தேசிய நிறுவனத்தில் பேஷன் டெக்னாலஜி பயின்ற பட்டதாரியான இவர் கண்டுபிடித்துள்ள இக்கருவி புளூடூத் தொழில் நுட்பத்தைக்க்கொண்டது. ஏழு கிராம் எடையுள்ள சதுர வடிவில் இருக்கும் இச்சாதனம் ரீச்சார்ஜபள் பேட்டரிகளை கொண்டது என தெரிவித்துள்ள்ளார். மேலும் இக்கருவியானது ரத்த அழுத்தம், இதய துடிப்பு, சுவாச விகிதம் போன்றவற்றையும் கண்டறிய உதவுகிறது.
அதோடு இக்கருவியை பொருத்திக் கொண்ட...
உங்கள் தெருவை 360 டிகிரி கோணத்தில் ஆன் லைனில் பார்க்கலாமா?
அமெரிக்கா உட்பட பல நாடுகளில் உள்ள தெருக்களை ‘லைவ்’வாக பார்க்க கூகுள் வசதி செய்துள்ளது. இந்தியாவில் உள்ள பல நகரங்களில் உள்ள தெருக்களையும் துல்லியமாக ‘லைவ்’ வாக காட்ட முயற்சி செய்து வருகிறது. ஆனால் இதுவரை அதை செய்ய முடியவில்லை. இந்தியாவின் முக்கிய பகுதிகளில் கூகுள் கண்காணிக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், ஜெனிசிஸ் நிறுவனம் இதற்கான ஏற்பாட்டை இப்போது செய்துள்ளது. அதிலும் உங்கள் தெருவை அல்லது நீங்கள் போக வேண்டிய தெருவை 360 டிகிரி கோணத்தில் முபபரிமாணத்தில் பார்த்து, எந்த முகவரிக்கு போக வேண்டுமோ அதை அறிந்து கொள்ளலாம். அவ்வசதியை ‘வோனோபா’ (www.wonobo.com)-க்குள் நுழைய வேண்டுமாக்கும்..
இந்த வசதியை ஏற்படுத்தித் தந்துள்ள...