.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 13 October 2013

மூலிகை மருத்துவத்தில் நீரிழிவுக்கு தீர்வு!

Kallimutaiyan clean water and a thin stem, and two 3-inch stems to eat on an empty stomach every morning with the body melivat   controlling diabetes.


கள்ளிமுடையான்

கள்ளிமுடையானின் மெல்லிய தண்டை நீரில் சுத்தம் செய்து, 3 அங்குலத் தண்டுகள் இரண்டை தினமும் அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு  வர உடல் மெலிவதுடன் நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது.

இன்சுலின் செடி

இன்சுலின் செடியின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுப் பாருங்கள்... பலன் அறியலாம். இந்த  இலையைத்  தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் ஐரோப்பிய, அமெரிக்க  விஞ்ஞானிகள். ஆரம்ப நிலை  சர்க்கரையாளர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ்  எனும் இன்சுலின் செடி அதிக பலன் தருகிறது என  அவர்களின் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். இச்செடி  கேரளாவில் அதிகம் உபயோகிக்கப்படுகிறது.

சர்க்கரைக்கொல்லி


கசப்புச் சுவையுடையது. பெயருக்கேற்ப இலையை சாப்பிட்ட பின் சர்க்கரையை வாயிலிட்டால் இனிப்புச்சுவை தெரிவதில்லை.  இலையை உலர  வைத்து பொடியாக்கி தினமும் அருந்தலாம். இது கொடிவகை தாவரம்.

சிறியாநங்கை

கசப்புச் சுவையுடையது. இதன் இலையையும் சாப்பிடுகிறார்கள். சிறு செடி வகையை சார்ந்தது.

ஸ்டீவியா என்னும் சீனித்துளசி


தென்அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இனிப்புச்சுவையுடைய இதன் இலைகள் சர்க்கரைக்கு மாற்று. இலையை உலர வைத்து  பொடியாக்கி,  டப்பாக்களில் அடைத்து வைத்து சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தலாம். இது பூஜ்யம் கலோரி (ஞீமீக்ஷீஷீ  சிணீறீஷீக்ஷீவீமீ) மதிப்புடையது.   அதனால், இனிப்புக்குப் பதிலாக தாராளமாக உபயோகிக்கலாம். அதிக சூரிய ஒளியை விரும்பும்  இத்தாவரம், தமிழகத்தில் நன்கு வளர்கிறது.   இவற்றோடு காலையில் வெந்தயப் பொடி சாப்பிடுதல், பாகற்காய் சாறு அருந்துதல்,  வெள்ளரி விதைகளை சாப்பிடுதல், சீந்தில் சர்க்கரை பொடி என  நிறைய தாவரங்கள் சார்ந்த எளிய வழிமுறைகள் நீரிழிவைக் கட் டுக்குள் வைக்க உதவுகின்றன.




குட்டீஸ்களுக்கான உணவு முறைகள்!


இபோதைய காலகட்டத்தில் தனிக்குடித்தனம் என்பது அதிகமாகிவிட்டது. வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் வேலை என்று இருப்பதால், இது தவிர்க்க இயலாததும் ஆகிவிட்டது. பெரியவர்கள் துணை மற்றும் ஆலோசனை இல்லாத காரணத்தால் நிறைய தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பில் நிறைய சந்தேகங்கள் தோன்றும்.


பெரும்பாலான இளம் தாய்மார்கள் வருந்துவதும், குழம்புவதும் குழந்தையின் உணவு விசயத்தில்தான். எந்தக் காலக்கட்டத்தில் என்ன உணவு கொடுப்பது என்பது அனுபவசாலியான தாய்மார்களுக்குக்கூட தடுமாற்றம் தரும் விசயமாக இருக்கிறது.



                                             13 - health food-guide-pyramid-for-children.mini

 


என்னதான் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினாலும், சில நேரங்களில் மருத்துவர்கள் பரிந்துரைப்பது மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. பெரியவர்களிடம் கேட்டால், சமையல் குறிப்பில் தேவையான உப்பு என்பது போல், சிலர் “கொஞ்சமாக கொடுங்கள்” என்பார்கள், சிலர் “எல்லாமே கொடுக்கலாம்” என்பார்கள். ‘கொஞ்சமாக’ என்றால் எவ்வளவு என்பது யாருக்கு தெரியும்? எல்லாமே கொடுக்கலாம் என்றால் மட்டன் பிரியாணி கொடுக்கலாமா என்று கேட்கத் தோன்றும். எனவே, இந்த உணவு விசயத்தை இந்த பாகத்தில் கொஞ்சம் தெளிவாக விளக்கவேண்டும் என்பது ந்மது விருப்பம்.


இது குழந்தை பிறந்தது முதல் ஐந்து வயது வரை என்னென்ன உணவுகளை எப்படி கொடுக்க வேண்டும் என்று உலக அளவில் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் அமைப்பு (UNICEF) தெளிவாக வெளியிட்டிருக்கும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஏழைத் தாய்மாரும் செயல்படுத்தக் கூடிய வழி முறைகள்தான் இது என்பது கூடுதல் சிறப்பு. என்றாலும் குடும்ப மருத்துவருடன் கலந்தாலோசித்து இதை நடைமுறைப்படுத்துவது சாலச் சிறந்தது


முதல் ஆறு மாதங்கள் வரை:


குழந்தைக்கு தாய்ப்பால் எப்பொழுதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்பொழுதெல்லாம், அதாவது, ஒரு நாளைக்கு குறைந்தது 8 முறை கொடுக்க வேண்டும். மற்ற உணவுகள் அல்லது திரவ உணவுகள் – ஏன் தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது. கோடைக்காலம் என்றாலும் தண்ணீர் அவசியமில்லை. குழந்தை நோய்வாய்ப்பட்டிருந்தாலும் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக் கூடாது.


ஆறு மாதங்கள் முதல் ஒரு வயது வரை:


குழந்தை எப்பொழுதெல்லாம் விரும்புகிறதோ அப்பொழுது தாய்ப்பால் கொடுத்தால் போதும். மற்ற நேரங்களில் ஒரு கிண்ணம் உணவு, ஒரு முறை கொடுக்கலாம். நெய், எண்ணெய் கலந்த பருப்பு சாதம், கேழ்வரகு கஞ்சி, அரிசி கஞ்சி, பொட்டுக் கடலை கஞ்சி, உப்புமா, கிச்சடி, பொங்கல், மசித்த இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, வேக வைத்த மசித்த காய்கறிகள் (உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட்) ஆகியவற்றை கொடுக்கவும். வாழைப்பழம், மாம்பழம், பப்பாளி, சப்போட்டா ஆகிய பழங்களையும் கொடுக்கலாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு ஒரு நாளைக்கு மூன்று முறையும், தாய்ப்பால் குடிக்காத குழந்தைக்கு ஒரு நாளைக்கு ஐந்து முறையும் உணவு கொடுக்க வேண்டும்.இந்த உணவையும் குழந்தையை மடியில் வைத்து தாய் தன் கையால் ஊட்ட வேண்டும். ஸ்பூன் அவசியமில்லை அல்லது தேவையில்லை. ஒவ்வொரு முறை ஊட்டும்போது தாய் தன் கை மற்றும் குழந்தையின் கையை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.


ஒரு வயது முதல் இரண்டு வயது வரை:


குழந்தை விரும்பும்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். வீட்டில் பெரியவர்கள் உண்ணும் உணவையே குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். ஒரு வேளைக்கு ஒன்றரை கிண்ணம் உணவு என்ற அளவில் ஒரு நாளைக்கு ஐந்து வேளை கொடுக்க வேண்டும். குழந்தை சாப்பிடும் வரை பக்கத்தில் அமர்ந்திருப்பது நல்லது. அப்போதுதான் தேவைப்படும்போது உதவ முடியும். ஏனெனில் இந்த வயதில், தன் உணவை தானே எடுத்து சாப்பிட குழந்தையை பழக்கப்படுத்த வேண்டும். முடிந்தவரை ஊட்டக் கூடாது. சாப்பிடுவதற்கு முன்பு குழந்தையின் கையை சோப்பு போட்டு கழுவ பழக்கப்படுத்துங்கள்.


இரண்டு வயதுக்கு மேல்:


குழந்தை விரும்பினால் தாய்ப்பால் கொடுக்கலாம். என்றாலும் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு கொடுக்க வேண்டும். அதே போல் ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பாட்டுக்கு முன் ஊட்டச்சத்து நிரம்பிய உணவான வாழைப்பழம், மாம்பழம், முட்டை மற்றும் தின்பண்டங்களை கொடுக்கலாம். இத்துடன் பணி முடிந்தது என்று நினைக்காமல் குழந்தை சாப்பிட்டு முடிக்கும் வரை உடனிருக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் கை கழுவ பழக்க வேண்டும்.


மூடநம்பிக்கை:


வாழ்வின் முக்கியமான வளர்ச்சி, குழந்தைப் பருவத்தில்தான் நிகழ்கிறது. குழந்தை பிறக்கும்போது தலையின் சுற்றளவு 35 செ.மீ. இருக்கும். இது குறிப்பிட்ட வளர்ச்சி விகிதத்தில் வளர்ந்து குழந்தையின் ஒரு வயதில் 45 செ.மீ. ஆகிறது. ஐந்து வயதாகும்போது தலையின் சுற்றளவு 50 செ.மீ. இருக்கும். கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான். காரணம், வளர்ந்த மனிதனின் தலை சுற்றளவு 50 செ.மீ.தான். ஐந்து வயதுக்கு மேல் தலைச்சுற்றளவும், மூளையின் புற வளர்ச்சியும் அதிகரிப்பதில்லை. அறிவு மற்றும் சுற்றுப்புற சூழல் தூண்டுதல்களால் மூளையின் செயல்திறன் மட்டுமே அதிகரிக்கிறது. எனவே, இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த குழந்தைப் பருவத்தில் சத்துணவு மிக மிக அவசியம். குழந்தை பிறந்தவுடன் தாயிடம் சுரக்கும் சீம்பால், குழந்தைக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துக்களையும், அதிக அளவில் நோய் எதிர்ப்புச் சக்திகளையும் கொடுக்கக் கூடியது. இது குழந்தைக்கு செரிக்காது, வயிற்றுக்கு போதாது என்று சிலர் நினைக்கிறார்கள்.



அதனாலேயே சீம்பால் தருவதை தவிர்க்கிறார்கள். இது தவறு. அவசியம் சீம்பால் தர வேண்டும். தாய்ப்பால் தரும் தாய்க்கு வரும் பொதுவான நோய்களால் தாய்ப்பாலின் தரம் மாறாது. அவர்கள் உட்கொள்ளும் பொது வான மருந்துகளாலும் குழந்தைக்கு பாதிப்பில்லை. காச நோய், புற்று நோய், எய்ட்ஸ் நோய் வந்த தாய்மார்களும் தங்கள் குழந்தைக்கு பாலூட்டலாம். மிக அரிதான சில நோய்களாலும், மருந்துகளாலும் மட்டுமே குழந்தைக்கு பாதிப்பு உண்டாகும். மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகுதான் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும். அதே போல் தாயின் உணவுப் பழக்கங்களால் தாய்ப்பாலின் தரம் மாறுவதில்லை. எளிதில் செரிக்கக் கூடிய, எளிய சத்தான எல்லா உணவு வகைகளையும் தாய் உட்கொள்ளலாம்.


பழங்கள் மற்றும் பழச்சாறு உட்கொண்டால் தாய்க்கு சளி பிடிக்கும்; பலாப்பழம், மாம்பழம் மற்றும் முட்டையை பாலூட்டும் தாய் உட்கொண்டால் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்… என்பதெல்லாம் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எளிதில் செரிக்கக் கூடிய எல்லா உணவுகளையும் அவரவர் வழக்கத்துக்கு தகுந்தபடி தாய் சாப்பிடலாம். 


வேலைக்கு செல்லும் தாய், சிலமணி நேரத்துக்கு மேல் பாலூட்டவில்லையெனில் அது கெட்டு புளித்திருக்கும், குழந்தைக்கு செரிக்காது என்று சிலர் நினைக்கிறார்கள். இது தவறு. இப்படி எண்ணி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம். குழந்தை மார்பகத்தை சப்பிக் குடிக்கும்போது பால் சுரக்கிறது. சாதாரணமாக மார்பகத்தில் பால் சேமித்து வைக்கப்படுவதில்லை. பால் நாளங்களில் 10 – 20 மி.லி. பால் இருக்கும். அவ்வளவுதான். எனவே, தாய்ப்பால் புளித்துப் போக வாய்ப்பில்லை. இரு மாதங்கள் வரை பால் கொடுக்காமல் இருந்து, பிறகு கூட தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கலாம்.



பொதுவாக் குழந்தைக்கு தர வேண்டிய உணவுகள்:


முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று பார்த்தோம். அதன் பிறகு வீட்டில் தயாராகும் அவரவர் வழக்கத்துக்கு தகுந்த உணவை பழக்கலாம்.காலை 8 – 9 மணிக்குள் காலை உணவை கொடுக்க வேண்டும். சாப்பாட்டுக்கு இரண்டு மணி நேரங்களுக்கு பால் தரலாம். 


மொத்தத்தில் பசியுடன் இருந்தால்தான் உணவு உணபதில் குழந்தை ஆர்வம் காட்டும். மசித்த இட்லி, இடியாப்பம், மூடி வைக்கப்பட்ட ஆப்பம், மிருதுவான ஊத்தப்பம் போன்றவற்றை கைகளால் மசித்து சிறு சிறு கவளமாக தர வேண்டும். பருப்பு வேகவைத்த நீர், ரசம், புளிக்காத தயிர், பால் பயன்படுத்தி மசிக்கலாம். சர்க்கரை சேர்த்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும். காரணம், இனிப்பு சுவைதான் குழந்தைக்கு முதலில் புரியும்.


அதை ருசி பார்த்துவிட்டால் பிறகு காரம், உப்பு வகைகளை விரும்பாது. பேச்சு கொடுத்தபடியே ஊட்ட வேண்டும். காலை 11 – 12 மணியளவில் புதிதாக வீட்டில் ஆப்பிள், திராட்சை, மாதுளை ஆகியவற்றிலிருந்து தயாரான பழச்சாறை கொடுக்கலாம். திட உணவு பழகும்போது படிப்படியாக நிதானமாக செயல்பட வேண்டும். முதலில் 2 – 3 வாரங்களுக்கு காலை உணவு, பிறகு 2 – 3 வாரங்களுக்கு மதிய உணவு, பின்னர் 2 – 3 வாரங்களுக்கு மாலை உணவு… 


கடைசியாக இரவு உணவு. ஒவ்வொரு முறையும் புதிதாக சமைத்த உணவையே குழந்தைக்கு தர வேண்டும். ஆறிய உணவுகளை சுட வைத்து கொடுக்கக் கூடாது. ஊட்டும்போதும் உணவை வாங்கிக் கொள்ள, வாயைக் கூட்டி நாக்கை மடித்து விழுங்க… என்று படிப்படியாக பழக்கப்படுத்த வேண்டும்.


மதிய உணவில் சாதத்தை கையால் மசித்து சிறிது உப்பு, ஆறிய வெந்நீர் சேர்த்து ஊட்டலாம். பிறகு துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, சாம்பார், ரசம், கீரைச் சாறு என மாற்றி மாற்றி ஊட்டலாம். உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பரங்கி, பூசணி போன்றவற்றை நன்கு வேக வைத்து உப்பு சேர்த்து கொடுக்கலாம். 


புளிக்காத தயிரும், மோரும் குழந்தைக்கு நல்ல பயனளிக்கும். கடையில் விற்கும் இணை உணவுகளை வாங்கிக் கொடுக்காதீர்கள். அதே போல் பிஸ்கெட், ரொட்டி, கேக், சாக்லெட், நூடுல்ஸ், வறுவல்கள் (சிப்ஸ்) மாதிரியான ஜங்க் ஃபுட்டுக்கும் பழக்கப் படுத்தாதீர்கள். முடிந்தவரை இவற்றையெல்லாம் வாங்கிக் கொடுக்காமல் இருப்பதே நல்லது. 
 காரணம், அதிலுள்ள காரம் மற்றும் வேதிப் பொருட்கள் நச்சுத்தன்மையை அதிகரிக்கும். உடல் எடை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி குறையும். முக்கியமாக துரித உணவுகள் (ஃபாஸ்ட் ஃபுட்ஸ்) பக்கம் செல்லவே செல்லாதீர்கள்.

பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறது - வணக்கம் சென்னை!.

மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானத்தின் கலக்கல் காம்பினேஷனில் வெளியான படம் 'வணக்கம் சென்னை'.


தேனியில் இருந்து வேலைக்காக புறப்படும் சிவாவையும், லண்டனில் இருந்து புகைப்படம் எடுப்பதற்காக கிளம்பும் ப்ரியா ஆனந்தையும் அன்புடன் வரவேற்கிறது சென்னை.


இருவருக்கும் சென்னை புதிது என்பதால், தங்கள் குடியேறும் வீட்டின் ப்ரோக்கரின் தில்லு முல்லால் ஒரே வீட்டில் குடியேறும் சூழல் ஏற்படுகிறது.


பின் என்ன வந்தாரை வாழ வைக்கும் சென்னை, இவர்கள் இருவரையும் ஒரே வீட்டில் எலியும் பூனையுமாக டான்ஸ் ஆட வைக்கிறது கலகலப்புடன்.


ஹோலிப்பண்டிகையில் ப்ரியா ஆனந்த் பூசிய வண்ணத்தில் கலர்புல்லாக, காதலின் நிறம் தேட ஆரம்பித்து விடுகிறார் சிவா.


இந்நிலையில் இவர்களை ஏமாற்றி வீட்டு ப்ரோக்கராக நமது கொமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் என்ட்ரி கொடுக்க. அதை தெரிந்தும், தெரியாததைப் போல் சிவா சமாளித்து விட்டு விடுகிறார்.


பின் தன் காதலை ப்ரியா ஆனந்துடன் சொல்ல முயற்சிக்கிறார். ஆனால், ப்ரியா ஆனந்துக்கு ஏற்கெனவே நிச்சயதார்த்தம் நடந்திருப்பது தெரிய வருகிறது.


இதனால் கோபமடைந்த சிவா, தங்களை ஒன்றாக தங்கவைத்து எஸ்கேப்பான சந்தானத்தை கண்டுபிடித்து மாறுகால் மாறுகை வாங்குகிறார்.


அதற்கு பரிகாரம் செய்வதற்கு இவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக சிவாவிடம் சரண்டர் ஆகிறார் சந்தானம்.


வழக்கம் போல் சில முயற்சிகளில் மிஸ் ஆகி, இறுதில் ப்ரியா ஆனந்துக்கும் காதல் மலர்கிறது.


அங்கதான் கதையில ஒரு ட்விஸ்ட்... ஒன்னுமில்லைங்க நம்ம ப்ரியா ஆனந்துக்கு நிச்சயம் பண்ண அந்த அமெரிக்க மாப்பிள்ளை... ஆ..சாரி..சாரி... இதில் லண்டன் மாப்பிள்ளையாக ராகுல் ரவிந்திரன் என்ட்ரி கொடுக்கிறார்.

அப்புறம் என்ன, இவங்க காதல் கைகூடுச்சா..? இல்ல பிரிஞ்சுட்டாங்களா..? என்பது மீதிக்கதையின் சுருக்கம்.


சிவா வழக்கம்போல் ஒரே ஸ்டைலில் வந்து ஏதோ நடிக்க முயற்சி செய்திருக்கிறார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பிரதர்!


ப்ரியா ஆனந்த் தனது கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ, அதை கச்சித்தமாக செய்திருக்கிறார். கேட்ஸ் ஆப் ப்ரியா!


சந்தானம் கொஞ்சம் இடைவெளிவிட்டு(படத்தில்) வந்தாலும், கொமெடி சரவெடியை கோலாகலமாகவே வெடிக்கவைத்திருக்கிறார்.


ராகுல் நவிந்திரன், லண்டன் மாப்பிளையின் தேவைக்கேற்ப நடித்துள்ளார்.

பின், நிழல்கள் ரவி, ரேணுகா, ப்ளாக் பாண்டி, ஊர்வசி, நாசர், மனோபாலா, சுவாமிநாதன், ஆர்த்தி என்று அவரவர்கள் அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தியுள்ளனர்.


அறிமுக பெண் இயக்குனரான கிருத்திகா உதயநிதிக்கு வாழ்த்துக்கள். தான் நினைத்ததை பெர்பக்ஷனோடு எடுத்திருக்கிறார்.


கதையில் சில இடங்களில் ஓட்டை, உடசல்கள் தெரிந்தாலும் அதை தனது கொமெடிக் கலந்த திரைக்கதையால், நம் கண்களை மறைத்து விடுகிறார்.


அனிருத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இப்படத்திற்கு பெரிய பலம் சேர்த்திருக்கிறது.


லண்டன், சென்னை, தேனீ ஆகிய இடங்களுக்கு நம்மை பிக்னிக் கூட்டிச் செல்கிறது ரிச்சர்ட்.எம்.நாதனின் ஒளிப்பதிவு.


அதுவும் 'ஓ பெண்ணே..பெண்ணே' பாடல் கமெரா வெவ்வேறு கோணங்களில் நகர்வது மிக அழகு. சல்யூட் ரிச்சர்ட்!


படத்தின் திரைக்கதை நீண்ட நேரம் பயணித்தாலும்... பார்ப்பவர்களின் பார்வைக்கு சற்றும் சலனம் தராமல், தத்தம் தனது பணியை வெகு சிறப்பாக செய்திருக்கிறார் எடிட்டர் டி.எஸ்.சுரேஷ். சூப்பர் பாஸ்!


மொத்தத்தில் எந்தவித எதிர்பார்ப்புமின்றி, லாஜிக் விதிகளையும் மறந்து திரையரங்குக்கு வருவோரை பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறது இந்த வணக்கம் சென்னை.

நடிகர்கள்: சிவா, சந்தானம், ராகுல் ரவிந்திரன்

நடிகைகள்: ப்ரியா ஆனந்த், ஊர்வசி, ரேணுகா, ஆர்த்தி


ஒளிப்பதிவு: ரிச்சர்ட்.எம்.நாதன்



இசை: அனிருத்


இயக்கம்: கிருத்திகா உதயநிதி


தயாரிப்பு: உதயநிதி ஸ்டாலின்



அறிவியல் பின்னணியில் அப்புச்சி கிராமம்!


அறிவியல் சார்ந்த பின்னணியுடன் அப்புச்சி கிராமம் என்ற புதிய படம் உருவாகிறது.


எ கன் அன்ட் எ ரிங் என்ற கனடா நாட்டுப் படத்தைத் தயாரித்த விஷ்ணு முரளி என்பவர் இந்த அப்புச்சி கிராமத்தைத் தயாரிக்கிறார்.
கட்டடக்கலை நிபுணரான வி.ஆனந்த் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகிறார்.


இவர், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், ஹோசிமின், பிரதாப் போத்தன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார்.


ஜி.எம்.குமார், கும்கி ஜோசப், சிங்கம் புலி, கஞ்சா கருப்பு என கைதேர்ந்த நடிகர்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.


விஷால்.சி இசையமைக்கும் இப்படத்தை பிரசாத் ஜிகே ஒளிப்பதிவு செய்கிறார்.


இதுகுறித்து இயக்குனர் வி.ஆனந்த் கூறுகையில், எப்பொழுது ஒரு படம் மனித உறவுகளின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் பற்றி பேசுகிறதோ அது மக்களின் எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக இருக்கும்.


அதுபோல் தன் படமும் இந்த வரையறைக்குள் வரும் என அழுத்தமாக கூறியுள்ளார்.

iPhone 5S கைப்பேசியில் புதிய பிரச்சினை - iPhone 5s Blue Screen Of Death Bug!!!

                        




பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அப்பிள் நிறுவனத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட iPhone 5S ஸ்மார்ட் கைப்பேசியில் Blue Screen of Death பிரச்சினை ஏற்படுவதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.


விண்டோஸ் எக்.பி போன்ற இயங்குதளங்களைக் கொண்ட கணனிகளிலேயே இவ்வாறான பிரச்சினை இதுவரையில் காணப்பட்டு வந்தது.


இந்நிலையில் தற்போது முதன்முறையாக கைப்பேசிகளில் இப்பிரச்சினை ஏற்பட ஆரம்பித்துள்ளது.


எனினும் இந்தப் பிரச்சினைக்கான தீர்வு இதுவரையில் முன்வைக்கப்படவில்லை என்பதுடன் iPhone 5S கைப்பேசிகள் iOS 7 இயங்குதளத்தில் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top