|
Saturday, 12 October 2013
வாழும் வரலாற்றுக்களம் மாமல்லபுரம் - சுற்றுலாத்தலங்கள்!
18:12
ram
No comments
ஒற்றுமை.... (நீதிக்கதை)!
18:02
ram
No comments
நாலு மாடுகள் மிகவும் நண்பர்களாய் இருந்தன.
அவை தினமும் காட்டுப்பகுதிக்குச் சென்று புல் மேய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தன.
நன்கு கொழுத்துக் காணப்பட்ட அவற்றை அடித்து உண்ண சிங்கம் ஒன்று விரும்பியது.
அதற்காக அது ஒரு முறை முயன்றபோது ...நாலு மாடுகளும் சேர்ந்து சிங்கத்தைத் தாக்கி...அதற்கு காயத்தை
ஏற்படுத்த ....தப்பினால் போதும் என அவைகளிடமிருந்து சிங்கம் ஓடியது.
பின் ஒரு நாள்..தனக்கு ஆலோசனைகள் கூறும் நரியைப் பார்த்து சிங்கம் அந்த மாடுகள் பற்றிக் கூறியது.
அதற்கு நரி...'சிங்க ராஜாவே....அவைகள் ஒற்றுமையாய் இருப்பதாலேயே பலமுள்ளதாய் தெரிகிறது. அவற்றை பிரித்தால் ...தனித்தனியாக அவற்றை அடித்து உண்ணலாம்' என்று தெரிவித்ததோடு ...அவற்றை பிரிக்கும் பணியையும் ஏற்றது.
ஒரு நாள் நான்கு மாடுகளில் ஒன்று சற்று தனியாக இருந்தபோது ...நரி அதைப் பார்த்து ' உங்கள் நால்வரில் நீயே பலசாலி...ஆகவே நீ தனித்து புல் மேயப்போனால் உனக்கு அதிக புற்கள் கிடைக்கும் ....மேலும் உன்னுடைய பலமும் அப்போதுதான் மூன்று பேருக்கும் புரியும்' என்றது.
அப்படியே மற்ற மூன்று மாடுகளிடமும் சொன்னது.
நரி சொல்வதை உண்மை என்று நம்பிய மாடுகள்...அடுத்த நாள் தனித்தனியாக புல் மேய தனி இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்தது.
தினமும் ஒன்றாக...அவற்றை சிங்கம் அடித்து உண்டது.
மாடுகள் ஒற்றுமையாய் பிரியாமல் இருந்தால் பலமுள்ளதாக இருந்திருக்கும். பிரிந்ததால் பலமற்றுப் போய் மடிந்தன.
ஒற்றுமையாய் இருந்தால் நம்மால் பல சாதனைகளை சாதிக்கமுடியும்.ஒற்றுமையின்மையால் நாம் செயலற்று போவோம்.
பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை - 2...!
17:54
ram
No comments
கடந்த பதிவில் ஏழாம் நூற்றாண்டு வரை உள்ள உலக
வரைபடங்களைபார்த்தோம் இந்த பதிவில் எட்டாம் நூற்றாண்டு வரைபடத்திலிருந்து
பார்ப்போம் அதற்கு முன் நண்பர்கள் சிலர் ஈமெயில் மூலம் தொடர்பு கொண்டு
கேட்ட கேள்விக்கு விடையளித்து விட்டு
தொடர்கிறேன் ஏனெனில் அந்த கேள்வி உங்களுக்கும் தோன்றியிருக்கும்.
உலகின் முதல் வரைபடம்னு குறிப்பிட்டிருக்கும் வரைபடத்தில் உலகம் முழுவதும் இல்லையே? என்பதே அந்த கேள்வி.
விடை: மனித நாகரிகம் முதன் முதலாக தோண்டியதாக
கருதப்படும் மெசபடோமியாவை (பாபிலோனியர்கள்) சுற்றி மட்டுமே அந்த வரைபடம்
இருந்திருக்கும் ஏனெனில் மனிதன் உலகம் என்று நினைத்தது அந்த பகுதியை
மட்டுமே. மனிதன் பயணம் செய்ய செய்ய உலகம் எவ்வளவு பெரியது என்பதை
அறிந்தான், உணர்ந்தான்.
எட்டாம் நூற்றாண்டு உலக வரைபடம்:
Albi or Merovingian இன மக்களால் வரையப்பட்ட உலக வரைபடம் வரையப்பட்ட ஆண்டு தெரியவில்லை
திபெத்தியர்களால் கி.பி 733 ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக வரைபடம்.
ஒன்பதாம் நூற்றாண்டு உலக வரைபடம்:
அரேபியர்களால் கி.பி 804 ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக வரைபடம்
பெர்சியா நாடு Balkhi என்பவரால் கி.பி 816 ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக காலநிலை வரைபடம்.
பத்தாம் நூற்றாண்டு உலக வரைபடம்:
Anglo-Saxon Cottonian களால் கி.பி 900 ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக வரைபடம்
அரேபியர்களால் கி பி 980 ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக வரைபடம்
பதினொன்றாம் நூற்றாண்டிலிருந்து அடுத்த பதிவில் தொடர்வோம்.....
ஒவ்வொரு தங்க நகைக்கும் பிரத்யேக தரச் சான்றிதழ் -புதிய சட்டம் அமலாகிறது!
14:12
ram
No comments
மக்கள் வாங்கும் ஒவ்வொரு தங்க நகைக்கும் பிரத்யேக தரச் சான்றிதழ் வழங்கும் திட்டம் வரும் 2014ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.இதனால் திருட்டு நகைகளை அதிகாரபூர்வமாக கடைகளில் விற்கும் போக்கு குறையும் என்பதுடன் தங்கம் வாங்குதல் மற்றும் நகை விற்பனை தொடர்பான தில்லுமுல்லு கணக்குகள் முடிவிற்கு வரும் என அரசு கருதுகிறது.
தற்போது தங்க நகைகளின் தரத்திற்கு இந்திய தர நிர்ணய கழகம் (பீ.ஐ.எஸ்.,) ‘ஹால்மார்க்’ முத்திரை வழங்குகிறது. நகைகளில் பதிக்கப்பட்டுள்ள இந்த முத்திரையில் தங்கத்தின் தூய்மையை குறிக்கும் எண் (22 காரட்டிற்கு – 916), விற்பனையாளர் குறியீடு வருடத்தை குறிக்கும் சங்கேத எழுத்து உள்ளிட்டவை அடங்கியுள்ளன.
இவற்றுடன் மேலும் பல விவரங்களை மக்கள் படித்து தெரிந்து கொள்ளும் நோக்குடன் ‘நகை சான்றிதழ்’ திட்டத்தை செயல்படுத்த பீ.ஐ.எஸ்., திட்டமிட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக, சென்னை, டில்லி, மும்பை, கோல்கட்டா உள்ளிட்ட முக்கிய பெரு நகரங்களில் வரும் புத்தாண்டு முதல் இத்திட்டம் அமலுக்கு வர உள்ளது. இதன் படி மக்கள் வாங்கும் ஒவ்வொரு ‘ஹால்மார்க்’ நகையுடன் அதன் தரம், பயன் படுத்தப்பட்ட இதர உலோகம், பதிக்கப்பட்டுள்ள கற்கள் உள்ளிட்ட விவரங்கள் அச்சிட்ட சிறிய அட்டை வழங்கப்படும்.இந்த சான்றிதழ் அட்டையில், குறிப்பிட்ட நகையின் படமும் இடம் பெற்றிருக்கும்.
இத்தகைய நடைமுறை நகை மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்க உதவும் என்பதோடு சுலபமாக மறு விற்பனைக்கும் உதவும்’ என பீ.ஐ.எஸ்., அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்த விதிமுறை அமலுக்கு வரும்பட்சத்தில் குறிப்பாக பெரு நகரங்களில் கடைகளில் திருட்டு நகைகளை விற்பது கட்டுப்படுத்தப்படும். சான்றிதழ் இருந்தால் தான் நகைகளை விற்பனை செய்ய முடியும் என்ற நிலை ஏற்படும்.
அதே சமயம் கடத்தி வரப்படும் நகைகளை விற்பதும் குறையும். இதனால் நகைக் கடைக்காரர்கள் தாங்கள் வாங்கும் தங்கம், தயாரித்த நகைகள் அவற்றின் விற்பனை குறித்த விவரங்களை துல்லியமாகவும், வெளிப்படையாகவும் பராமரிக்கும் நிலை ஏற்படும்.
தற்போது இந்த திட்டம் பெருநகரங்களில் மட்டுமே அமலுக்கு வரஉள்ளது. இதர பகுதிகளில் நடைமுறைப்படுததப்பட மாட்டாது.எனினும் இந்த புதிய விதிமுறையால் பெரு நகர நகைக் கடைக்காரர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் வர்த்தகம் இதர சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்கு சென்று விடுமோ என அஞ்சுகின்றனர்.
இந்திய இளைஞருக்கு ஐ. நா. விருது - இணையதளம் மூலம் திறந்தவெளி கல்வி திட்டத்தை உருவாக்கியதற்கு!!
13:56
ram
No comments
பள்ளிக்கல்வி திட்டம் உருவாக்கியதற்காக ஐ.நா.வின் சிறப்பு விருதுக்கு இந்தியாவை சேர்ந்த வருண் அரோரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கு இணையதளம் மூலம் திறந்தவெளி கல்வி திட்டத்தை உருவாக்கியதை பாராட்டி அவருக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது.
உலக அளவில் தொழில் நுட்ப துறைகளில் சிறந்த திட்டங்களை உருவாக்கும் இளைஞர்கள் 10 பேரை, சர்வதேச தொலைத் தொடர்பு யூனியன்(ஐ.டி.யூ.) தேர்வு செய்து ஐ.நா. சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கிறது. இதற்கான போட்டியில் 88 நாடுகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
18 வயது முதல் 26 வயதிற்குட்பட்டவர்களே பங்கேற்க முடியும். இந்த விருதுக்கு தேர்வு பெற்ற 10 பேரின் பெயர் விவரத்தை ஐ.டி.யூ. அமைப்பின் பொதுச்செயலாளர் ஹாமாடோவின் தோரே நேற்று அறிவித்தார்.
இந்த விருதுக்கு இந்தியாவை சேர்ந்த வருண் அரோரா தேர்வு பெற்றார். தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கு இணையதளம் மூலம் திறந்தவெளி கல்வி திட்டத்தை உருவாக்கியதை பாராட்டி அவருக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது.
மேலும் வியட்னாம், டிரினிடாட் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களும் தேர்வாகி இருக்கிறார்கள். வெற்றி பெற்ற 10 பேரும் நவம்பர் மாதம் பாங்காக்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Indian youth wins UN award
*********************************************
A young man from India is among 10 people from around the world selected for a prestigious United Nations award in recognition of their work as entrepreneurs and use of technology to change the world.