.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 10 October 2013

விஞ்ஞானி பென்சிகர் ராஜன் தகவல் மங்கல்யான் விண்கலம் வரும் 29ல் விண்ணில் ஏவப்படும்!




குமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் எல்எம்எஸ் மேல்நிலைப்பள்ளியில் உலக விண்வெளி வாரவிழா நடைபெற்றது.  விழாவில் மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி பென்சிகர் ராஜன் பேசியதாவது, 


மங்கல்யான் விண்கலம் வரும் 29ம் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.இது அதன் சுற்றுவட்டப்பாதையை சென்றடைய சுமார் 300 நாட்கள் ஆகும். இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு இருக்கிறதா? நீர்ப்பரப்பு இருக்கிறதா என  ஆய்வு செய்யும். மீத்தேன் வாயு இருந்தால் அங்கு உயிர்கள் வாழ வாய்ப்புண்டு. 


இந்தியா அனுப்பியுள்ள ஐஆர்எஸ் என்ற தொலை உணர்வு செயற்கைக்கோள் மூலம் காடு, மீன், கனிமவளங்கள் ஆகியவற்றை மேம்படுத்த முடியும்.  70 நாடுகள் இணைந்து ஐநா சபை ஒப்புதலுடன் உலகம் முழுவதும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் மூலம் மாணவ, மாணவிகளுக்கு விண்வெளி பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

‘நான் மலாலா’ புத்தகம் விற்பனைக்கு வந்தது!


தலிபான்களிடம் சிக்கி அனுபவித்த வேதனைகளை ‘நான் மலாலா’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட மலாலா விரும்பினார். இதற்கான உரிமையைப் பெற இங்கிலாந்தை சேர்ந்த வெயிடென்பெல்ட் அண்ட் நிகோல்சன் பதிப்பகம் மலாலாவிடம் 15 கோடி ரூபாய்க்கு கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்தது.இங்கிலாந்து நூலாசிரியர் கிரிஸ்டினா லாம்ப் எழுதியுள்ள ‘நான் மலாலா’ என்ற 276 பக்க புத்தகம் உலக நாடுகளில் நேற்று விற்பனைக்கு வந்தது.தற்போது பாகிஸ்தானில் கூட இந்த புத்தகம் ரூ.595க்கு விற்பனை செய்யப்படுகிறது.


10 - malala
 


பாகிஸ்தானில் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக பிரசாரம் செய்த மலாலா என்ற 15 வயது மாணவியை தலிபான்கள் சுட்டனர். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவருக்கு இங்கிலாந்து அரசு இலவச சிகிச்சை அளித்தது.தற்போது பூரண குணமடைந்துள்ள அவர் இங்கிலாந்து பிர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் என்ற பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார்.


பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்றுள்ள மலாலாவின் பெயர் உலகின் உயரிய பரிசாக கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் மலாலாவின் பெயரும் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், தலிபான்களிடம் சிக்கி அனுபவித்த வேதனைகளை இங்கிலாந்து நூலாசிரியர் கிரிஸ்டினா லாம்ப் எழுதி ‘நான் மலாலா’ என்ற பெயரில் 276 பக்க புத்தகமாகி உலக நாடுகளில் நேற்று விற்பனைக்கு வந்தது..


New book from Malala Yousafzai details journey from schoolgirl to activist

****************************************


 

easy to forget she is still a teenager, and now a long way from home.The memoir I Am Malala goes some way toward redressing that balance. Published around the world on Tuesday, the book reveals a girl who likes Ugly Betty and the cooking show Masterchef, worries about her clothes and her hair, but also has an iron determination that comes from experience beyond her 16 years.The book, written with the British journalist Christina Lamb, recounts Malala’s life before and after the moment on Oct. 9, 2012, when a gunman boarded a school bus full of girls in Pakistan’s Swat Valley and asked “Who is Malala?” Then he shot her in the head.

வெட்கபட வைக்கும் புள்ளி விவரம்!



உலகிலேயே அதிகக் குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா இருப்பது குறித்து வருத்தம் மட்டுமல்ல வெட்கமும் பட வேண்டும். 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 14 வயதுக்கும் கீழே 1 கோடியே 30 லட்சம் குழந்தைகள் உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் ஏறத்தாழ 5 லட்சம் பேர்! இதில் முதன்மைத் தொழிலாளர்கள் 50.78 லட்சம் பேர். குறுந்தொழிலில் ஈடுபடுவோர் 60.89 லட்சம்.


அதன்பின் வெளியான் “தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (என்.எஸ்.எஸ்.ஓ.) 2007′ தகவல்படி தொழிலாளர் சந்தையில் 50 லட்சம் குழந்தைகள் தீவிரமாகத் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது 5-லிருந்து 14 வயது வரையிலான குழந்தைத் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கையில் 2 சதவீதம்.


10 - child labour

 


அரசின் இந்தப் புள்ளிவிவரங்களை மறுக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், 5 கோடி குழந்தைகள் 5-லிருந்து 14 வயதுக்குள்ளும், 7 கோடி குழந்தைகள் 14-லிருந்து 18 வயதுக்குள்ளும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று தெரிவிக்கின்றன.


1986-இல் குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குபடுத்துதல்) சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் 14 வயதுக்குக் கீழே உள்ளவர்களை “குழந்தைகள்’ என்று வரையறைத்தது. தடை செய்யப்பட வேண்டிய குழந்தைத் தொழில்கள் மற்றும் செயல்முறைகளைப்பிரிவு 3-இல் அட்டவணை “அ’ மற்றும் “ஆ’ வில் குறித்துரைத்தது.


இவ்விரண்டில் சொல்லப்படாத அனைத்து பிற தொழில்களிலும் ஈடுபடும் குழந்தைத் தொழிலாளர்களின் வேலை நேரம், வாராந்திர விடுமுறை, வேலையளிப்போர் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள், அனுசரிக்க வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பு, சுகாதார நடவடிக்கைகளை – “ஒழுங்குபடுத்துதல்’ என்ற அம்சத்தின் கீழ் வரையறுத்தது.


தமிழகத்தில் மட்டும் 1997-லிருந்து 2006 வரை 12,32,050 தொழிற்சாலை ஆய்வுகளும் 6,122 விதி மீறல்களும், 4,165 குற்ற விசாரணைகளும், 11,054 குற்றங்களுக்கான தண்டனைகளும், 323 குற்ற விடுதலையும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எவ்வளவு குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றனர், மறுவாழ்வு பெற்றனர், எந்தச் சமுதாய மக்களிடையில் வாழ்நிலையிலும் சூழ்நிலையிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் வந்தது என்பதைப் பற்றிய புள்ளிவிவரங்களோ, வாழ்க்கை ஆய்வுகளோ அரசிடம் இல்லை.


2012 டிசம்பர் 4-ல் மாநிலங்களவையில், “”வரைவு குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குபடுத்துதல்) திருத்த மசோதா – 2012” தாக்கல் செய்யப்பட்டது. இது தாரா சிங் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இக் குழு பொதுமக்கள் மற்றும் குழந்தை உரிமை ஆர்வலர்களிடமிருந்து உகந்த பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும் கேட்டிருக்கிறது. இதில் முதன்மைச்சட்டப்பிரிவு 2-இல், குழந்தை என்போர் 14 வயது பூர்த்தியடைந்தவர் அல்லது 2009-ம் ஆண்டின் கட்டாயக் கல்விச்சட்டம் வகுத்துரைத்த வயது அடைந்தோர் – இதில் எது அதிகமோ அது பொருந்தும் என்று கூறுகிறது.


சட்டப்பிரிவு 3, 14 வயதுக்குள்ளான குழந்தைகள் எந்தவொருதொழிலிலும் தொழில்சார்ந்த செயல்முறைகளிலும் ஈடுபடுவதை முழுமையாகத் தடை செய்கிறது. முந்தைய சட்டத்தில் அபாயகரமற்ற தொழில்களில் ஈடுபடுத்துவதை ஒழுங்குபடுத்தலாம் என்றிருந்தது அறவே நீக்கப்பட்டிருக்கிறது. ஆனால் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்த பிறகு குடும்பத்துக்கு உதவுவதற்காக வெளியிடங்களிலோ, வயல்வெளிகளிலோ, வீடு சார்ந்த பணிகளிலோ, வனங்களில் விளைபொருள்களைச் சேகரிக்கவோ செல்வதைத் தடை செய்யவில்லை.


அடுத்து புதியதாக பிரிவு 3 (அ)-ல் “வளரிளம் குழந்தைகள்’ என்று 14 வயது பூர்த்தியடைந்து 18 பூர்த்தியடையாத பிரிவினர் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். 1992-ம் ஆண்டு இந்தியா ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்ட “சர்வதேச குழந்தை உரிமைகள் உடன்பாட்டின்படி’ 18 வயது பூர்த்தியடையாத அனைவரையும் குழந்தைகள் என்றே கருதவேண்டும். வளரிளம் பருவத்தினர் என்ற செயற்கைப் பிரிவினை 14 முதல் 18 வயது வரை உள்ளவர்களின் உரிமைகளைப் பறிப்பதாகும்.


குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் வழங்கப்படும் சிறைத்தண்டனை, விதிக்கப்படும் அபராதம் ஆகியவை முதன்மைச் சட்டப்பிரிவில் அதிகரிக்கப்பட்டுள்ளன. வியாபார நோக்கத்துக்காக இக்குழந்தைகள் வேலை செய்வதை பெற்றோரோ, காப்பாளரோ அனுமதித்தால் “தண்டிக்கலாம்’ என்றும் சொல்லியுள்ளது.


அதைவிட முக்கியம் முதன்மைச்சட்டப் பிரிவு 3-இல் அட்டவணை “அ’ மற்றும் “ஆ’வில் சொல்லி தடை செய்யப்பட்ட 18 குழந்தைத் தொழில்கள், 65 செயல்முறைகளை முழுவதும் நீக்கிவிட்டது. சுரங்கம், தீப்பற்றக்கூடிய – வெடிக்கக்கூடிய பொருள்கள், அபாயகரமான தொழில் செயல்முறைகள் ஆகிய 3-இல் மட்டும் குழந்தைத் தொழிலாளர்களை கட்டாயம் ஈடுபடுத்தக்கூடாது என்று பொத்தம் பொதுவாகக் கூறியிருக்கிறது. இது, பழைய சட்டமே பரவாயில்லை என்ற அளவுக்கு இருக்கிறது.
பிரிவு 14 (அ), இச்சட்டம் மீறுவதை குற்றச் செயலாக, காவல்துறை வழக்காகப் பதிந்து நீதிமன்ற நிவாரணம் மூலம் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாக வரையறைத்துள்ளது. இது குழந்தை உரிமை ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.


பிரிவு 17 (அ), இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய அதிகாரத்தையும் கடமையையும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வழங்கியுள்ளது.
பிரிவு 17 (ஆ), அபாயகரமான தொழில், தொழில் செயல்முறை இடங்களுக்குச் சென்று குழந்தைத் தொழிலாளர் ஈடுபடுத்தப்படுகின்றனரா என்று ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று விளக்கியுள்ளது.


இப்புதிய சட்டத்தில் மறுவாழ்வுக்கு என்று தனி விதிகள் உருவாக்கப்படவில்லை. திருத்தங்கள் போதாது.


மலர்ந்து மணம்பரப்ப வேண்டிய இளம் தளிர்கள், குடும்ப வறுமை காரணமாக இளவயதுத் தொழிலாளியாக வேலைபார்த்து தங்களுடைய குழந்தைப் பருவத்தையும் மகிழ்ச்சியையும் தொலைத்து மலர்வதற்குப் பதிலாக வெம்பி,கருகி உதிர்ந்துவிடுகின்றனர். இந்த அவலநிலை நீங்க அரசு, தன்னார்வத் தொண்டர்கள், மக்கள் என்று அனைவரும் பாடுபட வேண்டும்.

(பி. கிருஷ்ணமூர்த்தி) தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கூர் நோக்கம் சார்பான குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர்).

2020-க்கு பிறகு சாக்லேட் சாமான்யர்களுக்கு எட்டாத அரிபொருளாகி விடுமாக்கும்!


கொஞ்சுண்டு சாக்லேட் சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிப்பது மட்டுமின்றி அதிகளவில் சாப்பிடுவதால் போதைக்கு அடிமையானவர்களாக மாறவும் வாய்ப்புள்ளது என்று மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.அதிலும் அதிக அளவு சாக்லேட் சாப்பிடுவதால் போதையில் தள்ளப்படுவர்களாம்! மேலும் அபின் போன்ற போதை மருந்து சாப்பிடுவர் போன்று அடிமையாக மாறி விடுவர்கள் என்று ஒரு அதிர்ச்சி தரும் தகவல் மிக்சிகன் பல்கலைக்கழக ஆய்வில் ஆய்வாளர்கள் கண்டறிந்து சொல்லியிருந்தனர்ர்.


10 - choclets.MINI

 

அதாவது இயற்கையாவே நம் மூளையினுள் என்கெப்லின் என்ற ரசாயன திரவம் உள்ளது. சாக்லேட் அதிகம் சாப்பிடும் போது என்கெப்லின் திரவம் இரு மடங்காக சுரக்கின்றது. எனவே மூளைக்கு செல்லும் உணர்வு நரம்புகளை பாதித்து செயலிழக்க செய்து போதையை உண்டாக்குகிறது.எனவே தொடர்ந்து சாக்லேட் சாப்பிடுவது, அபின் போன்ற போதை பொருள் சாப்பிடுவதற்கு சமம் என்றுதான் மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர்.


ஆனாலும் இப்போதும் குழந்தைகள் முதல் முதியவர் வரை சாக்லேட் என்ற மந்திர வார்த்தையை கேட்டவுடன் இளமுறுகலான அந்த பொன்னிறமும், மனதை சுண்டி இழுக்கும் அதன் மணமும், சுவையும் நாக்கில் நீரை சுரக்கச் செய்து விடுவதை யாரும் தடுக்க இயலாது.


என்வே கோக்கோ என்னும் மூலப்பொருளால் தயாரிக்கப்படும் அசல் சாக்லேட்களுக்கு உலகளாவிய அளவில் கடும் கிராக்கி உள்ளது. ஒருபுறம் சாக்லேட் பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் மற்றொரு புறம், கோக்கோவை பயிரிடும் விளை நிலங்கள் நாளடைவில் குறுகிக்கெண்டே போகின்றன.கோக்கோவை பணப் பயிராக விளைவித்து வந்த விவசாயிகள் பலர் தற்போது அதிக லாபம் தரக்கூடிய ரப்பர் மரத்தின் மீது கவனத்தை செலுத்த தொடங்கி விட்டனர்.


தரமான கோக்கோ விளைச்சலுக்கு பெயர் போன தென்னாப்பிரிக்க நாடுகளும் இனி கோக்கோவை பயிரிடுவதால் பெரிய லாபத்தை பார்க்க முடியாது என்று முடிவெடுத்து விட்டது. இந்நிலையில், தேர்வில் ‘பாஸ்’ ஆகிய செய்தியை சொல்ல, காதலை வெளிப்படுத்த என ஆண்-பெண் இருபாலருக்கும் அருமையான தூதுவனாக இருந்து வந்த சாக்லேட்டின் விலை தாறுமாறாக எகிறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 


அதுவும், முழுக்க முகுக்க பதப்படுத்திய கிரீமி சாக்லேட்களுக்கு பதிலாக, சிறிதளவு சாக்லேட் கலக்கப்பட்ட மொறுமொறுப்பான ‘வேஃபர்’ வகைகள் தான் சந்தையில் கிடைக்கும்.ஆக -2020-க்கு பிறகு தூய சாக்லேட் என்பது சாமான்ய மக்களின் கைகளுக்கு எட்டாத அரிபொருளாகி விடும் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்..


தாம்பத்ய உறவால் விளையும் நன்மைகளின் பட்டியல்!


தாம்பத்ய உறவின் மூலம் உடலிலுள்ள அத்தனை நரம்புகளும், அணுக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன என்றும்,புற்று நோய் வரும் வாய்ப்பைக் கூட தாம்பத்ய உறவு குறைக்கிறது என்றும் சமீப கால ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன .தற்போது தாம்பத்ய உறவு என்பது உடலுக்கு பல நன்மைகளைத் தரக்கூடிய மிகச்சிறந்த உடற்பயிற்சி என்றே கூறுகின்றனர. உறவின் போது ஏற்படும் அசைவுகளினால் அந்தப் பகுதியில் உள்ள தசைகள் மட்டுமல்லாமல் முதுகுத்தண்டுவடப் பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறுகின்றன. அதோடு முதுகுத் தண்டுவடப் பகுதியில் உள்ள சிறிய முட்கள்போன்ற எலும்பு அமைப்புகளும் சிதைவு மாற்றங்களுக்கு ஆளாகாமல் தடுக்கப்படுகின்றன.


9 - sex_

 



அத்துடன் உடலுறவினால் ஜலதோஷம், உடல்வலி போன்ற சிறு சிறு பலவீனங்கள் வரும் வாய்ப்பும் குறைகிறதாம். எலும்புகளுக்கும், தசைகளுக்கும் கூட வலிமை கூடுவதாகவும் அச்சமயம்அதிக கலோரிகள் கரைக்கப்படுவதால் தேவையற்ற கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடல் குண்டாவதும் தடுக்கப்படுகிறது. எது எப்படியோ, இந்த உற்சாகமான இந்த உடற்பயிற்சியினை காதலர்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை.



இதற்கிடையில் தாம்பத்ய உறவிற்கு மிக முக்கிய எதிரி மன அழுத்தம் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சமீப காலமா மூடு சரியா இல்லைன்னு உங்களவர் சொல்கிறார் என்றால் எதற்காக இப்படி சொல்கிறார் என்று பாருங்கள். மனரீதியான சிக்கல்கள், மனச்சோர்வு, உடல்சோர்வு இவற்றில் ஏதாவது ஒரு காரணத்தினால் பாதிக்கப் பட்டிருக்கிறாரா என்பதை கண்டறிந்து அதனை தீர்க்க முயலுங்களேன்.



மேலும் புகைப் பழக்கமும், மதுப்பழக்கமும் தாம்பத்யத்தின் முக்கிய எதிரி. இந்த பழக்கங்கள் இருந்தால் உறவின் போது ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனால் உற்சாக உறவு ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே மூச்சுவாங்கி உங்கள் துணையிடம் திட்டு வாங்கவேண்டியிருக்கும். எனவே தாம்பத்ய உறவின் மிக முக்கிய எதிரியாக உள்ள புகை, மது பழக்கங்களை உடனடியாக நிறுத்த முடியாவிட்டாலும் படிப்படியாக நிறுத்துங்கள்.



பொதுவாக மனிதனோ, விலங்கோ காம உணர்வு இன்றி இருக்க முடியாது. காம உணர்வு அளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. இது உடலுக்கும் மனதிற்கும் நல்லது. காம உணர்வுகள் அளவிற்கு அதிகமாக இருந்து அதை அடக்க முடியாமல் போகும் பட்சத்தில் பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், கொள்ளைகள் போன்றவைகள் நடக்கின்றன. 



செக்ஸ் உணர்வுகளை அதிகமாக கட்டுப்படுத்தினால் அது வெடித்து வெளிக்கிளம்புமாம். எனவே செக்ஸ் உணர்வுகளை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். மனிதர்கள் உணர்ச்சிக்குவியலால் ஆனவர்கள். கோபம், அழுகை, ஆனந்தம், ஆசை, வெறுப்பு, காமம் என பலவித உணர்வுகளுக்கு ஆட்பட்டவர்கள். ஆணும், பெண்ணும் திருமணத்திற்குப் பின்னர் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக இணைந்து காம உணர்வுகளை பகிர்ந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை. 



அதேசமயம் காம உணர்வுகள் அதிகமாகி அதை அடக்கமுடியாத பட்சத்தில் அதை தவறான முறையில் வெளிப்படுத்துவதன் மூலம்தான் குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன. டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்முறை சம்பவம் தொடங்கி பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவது வரை நடைபெறுவதற்குக் காரணம் காம உணர்வுகளை சரியான முறையில் கையாளத் தெரியாத காரணத்தினால்தான் என்கின்றனர் நிபுணர்கள். 



காம உணர்வுகளை அடக்கி வைப்பதன் மூலம் மனநோய், தலைவலி போன்றவை வருமாம். திடீர் ஜுரம், மூட்டுக்களில் வீக்கம், இடுப்புவலி, உடல்பலவீனம், நடுக்கம், மார்புவலி, மயக்கம், போன்றவைகளோடு திடீரென இருதய நோய் கூட வரும் என்கின்றனர் நிபுணர்கள். முருங்கைக்கீரை, முருங்கைக்காய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் போன்றவைகளை சாப்பிடுவதன் மூலம் காம உணர்வுகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அது எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லையாம். அதேபோல முட்டைக்கோஸ், கொத்தமல்லி, புதினா போன்ற உணவுகளுக்கு செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. 



செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் ஹார்மோன்களை உடற்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்த முடியுமாம். ஏனென்றால் உடல் உழைப்பு இன்றி உண்டு கொழுப்பவர்களுக்குத்தான் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கிறதாம். ஆன்மீக நூல்கள் வாசிப்பது, நல்ல இசையை கேட்பது என அனுபவிப்பதன் மூலம் காமத்தை கரைக்கச் செய்யலாமாம். காம உணர்வுகளை குறைக்க மது, போதையில் மூழ்க வேண்டாம். அது காம உணர்வுகளை அதிகரிக்குமாம். 


அடிக்கடி காம உணர்வுகள் ஏற்பட்டாலோ, அதீத காம வயப்பட்டாலோ மனதிற்கு மிகவும் நெருக்கமான நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள். அதற்கு கூச்சப்பட்டால் செக்ஸாலஜிஸ்ட்களை சந்தித்து ஆலோசனை கேட்கலாம்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top