உத்தம வில்லன் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் உலகநாயகன். |
விஸ்வரூபம் 2 படத்துக்குப் பிறகு கமல் நடிக்கவிருக்கும் அடுத்த படத்துக்கு உத்தம வில்லன் என்று பெயரிடப்பட்டுள்ளது. லிங்குசாமி தயாரிக்கும் இந்தப் படத்தில் கமல் வில்லனாக நடித்தாலும், நல்ல வில்லனாகத்தான் வருகிறாராம். ஆரம்பத்தில் இந்தப் படத்தை கமலே இயக்குவதாக இருந்தது. ஆனால் பின்னர் அந்த வாய்ப்பை தன் நண்பரான ரமேஷ் அர்விந்துக்கு தந்துவிட்டார். இதை கமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தும்விட்டார். இதுகுறித்து ரமேஷ் அரவிந்த் கூறுகையில், கமல் நடிக்கும் படத்தை இயக்குவது மகிழ்ச்சியாகவும் பயமாகவும் இருக்கிறது. ஏற்கனவே கமலை வைத்து கன்னடத்தில் சதிலீலாவதி படத்தை ரீமேக் செய்து இயக்கினேன். தற்போது லிங்குசாமி தயாரிப்பில் கமலை வைத்து இயக்குகிறேன். மேலும் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது என்றும் கொமடி, பொழுதுபோக்கு அம்சங்கள், ஆக்ஷன் என கலந்து உருவாகவிருக்கும் இப்படத்தில் கமலின் கதாபாத்திரம் ரசிகர்களை ரொம்ப கவரும் விதமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். |
Wednesday, 9 October 2013
வில்லன் அவதாரத்தில் உலகநாயன்!
20:59
ram
No comments
துரியோதனன் வேடத்தில் கலக்கும் ரஜினி!
20:41
ram
No comments
கோச்சடையான் படத்தில் துரியோதன கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் ரஜினி. |
ரஜினி நடிப்பில் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் படம், கோச்சடையான். செளந்தர்யா அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்தில் மூன்று வேடங்களில் தோன்றுகிறார் ரஜினி. அப்பா, மகன்கள் இருவர் ஆகியவை தான் அந்த மூன்று வேடங்கள். இவற்றில், அப்பா வேடம் மிகவும் அப்பாவியாக சித்தரிக்கப்பட்டுள்ளதாம். இரு மகன்களில் ஒருவர் அர்ஜூனன் புத்தி கொண்ட நல்லவராகவும், இன்னொருவர் துரியோதனன் குணாதிசயம் கொண்ட வில்லனாகவும் இருப்பார்களாம். மற்ற இரண்டு கதாபாத்திரங்களைவிட துரியோதன வேடத்தில் தூள் கிளப்பி இருக்கிறாராம். வில்லனாக இருந்தாலும் ரசிகர்கள் கொண்டாடும் கதாபாத்திரமாக இந்த வேடம்தான் இருக்கும் என்கிறார்கள். அப்பா ரஜினிக்கு ஷோபனாவும், நல்ல புத்தி கொண்ட மகன் ரஜினிக்கு தீபிகா படுகோனும் ஜோடியாம். வில்லன் ரஜினிக்கு ஜோடி உண்டா, இல்லையா என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள். |
இணையதளங்களில் அதிகம் தேடப்பட்ட இந்திய தலைவர் மோடி- கூகுள் தகவல்!
16:43
ram
No comments
இணையதளங்களில் அதிகம் தேடப்பட்ட இந்திய அரசியல் தலைவர்கள் பற்றிய ஆய்வை கூகுள் நிறுவனம் சமீபத்தில் நடத்தியது. இதில் மோடி முதலிடம் பிடித்துள்ளது தெரிய வந்துள்ளது. மோடியை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், சோனியா, மன்மோகன் சிங் மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் உள்ளனர்.
கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய தலைவர்களில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்களை பின்னுக்குத் தள்ளி இந்த ஆய்வில் மோடி முதலிடத்தில் உள்ளார்.மேலும் இணையதளங்களில் அதிகம் தேடப்பட்ட அரசியல் கட்சியும் பா.ஜ., தான். பா.ஜ.,வை தொடர்ந்தே காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, சிவசேனா ஆகிய கட்சிகள் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 160 இடங்களின் வெற்றியை சமூக வலைதளங்கள் தான் தீர்மானிக்கும் எனவும் கூகுளின் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. இது குறித்து கூகுள் இணையதள ஆய்வாளர் நமான் புகாலியா தனது டுவிட்டர் பகுதியில் கூறுகையில், சமூக வலைதளங்கள் சிறிய அளவு பங்கு பெற்றாலும் மிக முக்கியமான பங்கினை லோக்சபா தேர்தலில் செய்ய உள்ளது என தெரிவித்துள்ளார். சமூக தளங்கள் மூலம் விவாதிக்கப்படும் விஷயங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருப்பதே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
37 சதவீதம் நகர்புற வாக்காளர்கள் ஆன்லைன் பயன்படுத்துபவர்களாக உள்ளனர். மேலும் 45 சதவீத வாக்காளர்கள், யாருக்க ஓட்டளிப்பது என்பது குறித்த விபரங்களை ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். 42 சதவீதம் நகர்புற வாக்காளர்கள் ஓட்டளிப்பதில் குழப்பமான நிலையிலேயே இருந்து வருகின்றனர். நகர்புற வாக்காளர்கள் ஓட்டளிப்பதை தவிர்த்து வருவதாக நிலவும் கருத்திற்கு மாறாக கடந்த தேர்தலில் ஆன்லைன் பயன்படுத்தும் நகர்புற வாக்காளர்கள் 85 சதவீதம் பேர் ஓட்டுப் போட்டுள்ளனர். இவ்வாறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
Google survey says Narendra Modi most searched politician in India
************************************
Bharatiya Janata Party’s prime ministerial candidate Narendra Modi is the most Google-searched politician in India, followed by Congress vice-president Rahul Gandhi, a survey by Google India and research agency TNS released on Tuesday said. Sonia Gandhi, Manmohan Singh and anti-corruption campaigner, Arvind Kejriwal, follow Rahul.
Galaxy Note 10.1:Samsung புதிய அறிமுகம்!
16:24
ram
No comments
Samsung நிறுவனமானது Galaxy Note 10.1 எனும் தனது புதிய டேப்லட்டினை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
10.1 அங்குல அளவு மற்றும் 2560 x 1600 Pixel Resolution தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட்டில் 1.9GHz வேகம் கொண்ட Quad Core Samsung Exynos 5420 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM ஆகியன காணப்படுகின்றது.
மேலும் இவற்றின் சேமிப்பு நினைவகமாக 16GB மற்றும் 32GB கொள்ளளவு தரப்பட்டுள்ளதுடன் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களுக்கான 2 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா போன்றவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
அவசர புத்தி (நீதிக்கதை)
09:45
ram
1 comment
ஒரு ஊரில் ஒர் அரசன் இருந்தான்.அவன் நல்லாட்சியால் மக்கள் மகிழ்ச்சியாய் இருந்தனர்.
ஒரு நாள்..அவனது அமைச்சர் அவனிடம் ' அரசே..உங்களுக்கு வைரம் என்றால் ஆசை என்று அறிவேன்.நம் நாட்டில் மருதன் என்னும் வியாபாரியிடம் விலை மதிபற்ற வைரம் இருக்கிறது' என்றான்.
உடன் அரசனும் மருதனுக்கு...அவனிடம் உள்ள வைரத்தை தனக்குக் கொடுக்குமாறும் அதற்குரிய விலையை கொடுத்து விடுவதாகவும் ஒரு கடிதம் எழுதி சேவகனிடம் கொடுத்து அனுப்பினான்.
மருதனிடம் உண்மையாக வைரம் இல்லை.அதை தெரியப்படுத்த...ஒரு கடிதம் எழுதத் தொடங்கினான்.
" அரசே என்னிடம் அப்படி ஏதும் வைரம் இல்லை....அப்படியே இருந்திருந்தாற் கூட ....' என்று எழுதிக் கொண்டிருந்தபோது ...வேறு வேலை ஒன்று வரவே எழுந்திருந்துச் சென்றான்.
சென்ற மருதன் திரும்ப நேரமானதால் சேவகர்கள் அவன் முற்றுப்பெறாமல் எழுதியிருந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு அரசனிடம் விரைந்தனர்.
அரசன் அக்கடிதத்தைப் படித்து ...முற்றுப் பெறாத அக்கடிதத்தில் என்ன எழுதியிருக்கக்கூடும் என அமைச்சரைக் கேட்டான்.
அரசே....அக்கடிதத்தில் 'என்னிடம் அப்படி ஏதும் வைரம் இல்லை...அப்படியே இருந்திருந்தாற் கூட...என எழுதிய மருதன்....'இருந்திருந்தாற் கூட உங்களுக்குத் தர விருப்பமில்லை' என எழுதியிருப்பான் என்றான்.
உடனே அரசன் மருதனை அழைத்து கோபமாகக் கேட்டான்.
உடன் மருதன் ' அரசே ...இருந்திருந்தாற் கூட....உங்களிடம் எந்த விலையும் எதிர்பாராது இலவசமாக தந்துவிடுவேன் 'என்றே எழுத நினைத்தேன் என்றான்.
அமைச்சரின் அவசர புத்தியால் மருதனை கோபப்பட்டோமே என அரசன் எண்ணி வருந்தினான்.
நாமும் எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் நன்கு ஆலோசித்தபின்னரே சரியான முடிவு எடுக்கவேண்டும்.