.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 9 October 2013

அவசர புத்தி (நீதிக்கதை)




ஒரு ஊரில் ஒர் அரசன் இருந்தான்.அவன் நல்லாட்சியால் மக்கள் மகிழ்ச்சியாய் இருந்தனர்.

ஒரு நாள்..அவனது அமைச்சர் அவனிடம் ' அரசே..உங்களுக்கு வைரம் என்றால் ஆசை என்று அறிவேன்.நம் நாட்டில் மருதன் என்னும் வியாபாரியிடம் விலை மதிபற்ற வைரம் இருக்கிறது' என்றான்.

உடன் அரசனும் மருதனுக்கு...அவனிடம் உள்ள வைரத்தை தனக்குக் கொடுக்குமாறும் அதற்குரிய விலையை கொடுத்து விடுவதாகவும் ஒரு கடிதம் எழுதி சேவகனிடம் கொடுத்து அனுப்பினான்.

மருதனிடம் உண்மையாக வைரம் இல்லை.அதை தெரியப்படுத்த...ஒரு கடிதம் எழுதத் தொடங்கினான்.

" அரசே என்னிடம் அப்படி ஏதும் வைரம் இல்லை....அப்படியே இருந்திருந்தாற் கூட ....' என்று எழுதிக் கொண்டிருந்தபோது ...வேறு வேலை ஒன்று வரவே எழுந்திருந்துச் சென்றான்.

சென்ற மருதன் திரும்ப நேரமானதால் சேவகர்கள் அவன் முற்றுப்பெறாமல் எழுதியிருந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு அரசனிடம் விரைந்தனர்.

அரசன் அக்கடிதத்தைப் படித்து ...முற்றுப் பெறாத அக்கடிதத்தில் என்ன எழுதியிருக்கக்கூடும் என அமைச்சரைக் கேட்டான்.

அரசே....அக்கடிதத்தில் 'என்னிடம் அப்படி ஏதும் வைரம் இல்லை...அப்படியே இருந்திருந்தாற் கூட...என எழுதிய மருதன்....'இருந்திருந்தாற் கூட உங்களுக்குத் தர விருப்பமில்லை' என எழுதியிருப்பான் என்றான்.

உடனே அரசன் மருதனை அழைத்து கோபமாகக் கேட்டான்.

உடன் மருதன் ' அரசே ...இருந்திருந்தாற் கூட....உங்களிடம் எந்த விலையும் எதிர்பாராது இலவசமாக தந்துவிடுவேன் 'என்றே எழுத நினைத்தேன் என்றான்.

அமைச்சரின் அவசர புத்தியால் மருதனை கோபப்பட்டோமே என அரசன் எண்ணி வருந்தினான்.

நாமும் எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் நன்கு ஆலோசித்தபின்னரே சரியான முடிவு எடுக்கவேண்டும்.
 

இணையதளங்களை கண்காணிக்க 20 லட்சம் சைபர் கிரைம் போலீசார் சீனா அதிரடி முடிவு!



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


சீனாவில் அரசுக்கு எதிராக இணையதளங்களில் ஏராளமானோர் கருத்துகள் வெளியிட்டு வருகின்றனர். மேலும், அரசு வெப்சைட்களில் ஊடுருவி ரகசியங்களை திருடுகின்றனர். இந்நிலையில், சீனாவில் ஆளும் கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசார குழு சார்பில் இணையதளங்கள் மற்றும் ஊடகங் களை கண்காணிக்க 20 லட்சம் சைபர் கிரைம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இதுகுறித்து பிரசார குழு தலைவர் கூறுகையில், மக்கள் மத்தியில் நடத்திய கருத்து கணிப்பின் அடிப்படையிலும், தொடர் ந்து சீன இணையதளங்களில் நடைபெறும் ஊடுருவல்களை தடுக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் நாள்தோறும் இணையதளங்களில் பதிவு செய்யப்படும் பிளாக்கர்களின் செய்திகளை ஆய்வு செய்வது, டுவிட்டர், சீனாவெய்போ போன்ற சமூக இணையதளங்களை கண்காணிப்பது ஆகிய பணிகளில் ஈடுபடுவர். மேலும் அவற்றில் பதிவு செய்யப்படும் கருத்துகளையும், செய்திகளையும் ஆய்வு செய்து அது குறித்த அறிக்கையை அரசுக்கு அனுப்புவர் என்றார்.



இதன் மூலம் அரசுக்கு எதிராக பிரசாரம் செய்பவர்களை கண்டறிந்து கண்காணிக்க முடியும்.  சீனாவின் முக்கிய தகவல்கள் வெளிநாடுகளுக்கு பரவாமல் தடுக்கும் பணியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபடுவார்கள். சீன இணையதளங்களை ஊடுருவி தகவல்களை திரட்டியதாக அமெரிக்க உளவு நிறுவனம் எப்பிஐ.யின் முன்னாள் அதிகாரி ஸ்நோடென் வெளியிட்ட தகவல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஏழைகள்தான் 90 வயது வரை வாழ்கிறார்கள்- லேட்டஸ்ட் சர்வே ரிசல்ட்!


நெதர்லாந்து நாட்டில் உள்ள லேடன் பகுதியில் முதுமை, உயிர் வாழ்தல் தொடர்பான ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இதில் ஹெர்பர்ட் கிளேடன் தலைமையிலான குழு கடந்த சில ஆண்டாக தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. பல ஆண்டாக பேசப்பட்டு வரும், அதிக நாள் உயிர் வாழ பணம் போதும் என்பது பற்றி ஒரு சர்வேயை இந்த குழு எடுத்தது.


9 - rich vs poor.2. MINI
 


இதில் வியப்பான ஒரு முடிவு கிடைத்தது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வயதானவர்களில் 80 வயதை நெருங்க முடியாமல் இறந்தவர்கள் எண்ணிக்கையை கணக்கிட்டால் பணக்காரர்கள் தான் அதிகம் என்று தெரியவந்துள்ளது. அதே சமயம், ஏழைகள் பலரும் 90 வயதை தாண்டி வாழ்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.


இந்த தகவல், இந்த ஆராய்ச்சி குழுவுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது. 1950 ல் இருந்து 2008 வரை அமெரிக்கா, பிரிட்டன் , ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் உட்பட 19 நாடுகளில் உள்ள இறப்பு சதவீதம் 70 , 74 வயதுள்ளவர்கள் 0.45 சதவீதம் அதிகரித்து இருந்தது தெரியவந்தது. 




இதேபோல, இந்தியா போன்ற வேறு சில மொத்த உற்பத்தி திறன் சதவீதம் குறைவாக உள்ள வளர்ந்த நாடுகளில் உள்ளவர்களில் இதே வயதினர் இறப்பு சதவீதம் மிகவும் குறைவாக இருந்தது மட்டுமல்ல, 90 வயது வரை வாழ்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது தெரியவந்தது. 



இப்படி வாழ்நாள், முதுமை விஷயங்களில் ஆராய்ச்சி செய்த நிபுணர்களுக்கு , நாட்டின் மொத்த உற்பத்தி மற்றும் வாழ்நாள் நீடிப்பு ஆகிய இரண்டும் எந்த வகையில் ஒத்துப்போகின்றன. வாழ்நாளை ஒரு நாட்டின் உற்பத்தி திறன் எந்த வகையில் முடிவு செய்கிறது என்பதற்கு மட்டும் உறுதியான காரணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை; இது தொடர்பாக ஆராய்ச்சி நீடிக்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

எல்ஜி ஜி பேட் 8.3 புதிய டேப்லெட் முக்கிய அம்சங்கள்!




எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் ஜி பேட் 8.3 என்ற புதிய டேப்லெட்  அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த வாரம் முதல் தென் கொரியாவில் $ 510 விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 30 நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும்.


இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிப்படும், மற்றும் அதன் விலை யிடும் போது அறிவிக்கப்படும். 1.7GHz Quad-core CPU உடன் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 600 பிராசசர் கொண்டுள்ளது. இதுவரை இந்த டேப்லெட்டில் 3G பதிப்பு இல்லை. ஜி பேட் 8.3 கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு வண்ணங்களில் வரும்.



ஜி பேட் 8.3 முக்கிய அம்சங்கள்:

• பிராசசர்: 1.7GHz Quad-core குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 600 பிராசசர்
 

• டிஸ்ப்ளே: 8.3-இன்ச் WUXGA (1920 x 1200 பிக்சல்கள் / 273 பிபிஐ)
 

• நினைவகம்: 16GB eMMC
 

• ராம்: 2GB
 

• கேமரா: பின்புற 5.0MP / முன்னணி 1.3MP
 

• பேட்டரி: 4,600 Mah
 

• ஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.2.2
 

• அளவு: 216,8 x 126.5 x 8.3mm
 

• எடை: 338g
 

• நிறங்கள்: கருப்பு / வெள்ளை


கூகுள் ஜெம் ஸ்மார்ட்வாட்ச் அக்டோபர் 31-ம் தேதி வெளியீடு!

கருத்துகள்

 
 
 
சாம்சங் கேலக்ஸி கியர் மற்றும் சோனியின் ஸ்மார்ட்வாட்ச் 2 அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனம் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கூகுள் நெக்சஸ் ஸ்மார்ட்வாட்ச் என்று முன்பு அழைக்கப்பட்ட ஸ்மார்ட்வாட்ச் இந்த மாதம் அக்டோபர் 31-ம் தேதி ஜெம் ஸ்மார்ட்வாட்ச் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 
 
 
இந்த புதிய ஜெம் ஸ்மார்ட்வாட்ச் அண்ட்ராய்டு 4.4 கிட்காட் ஓஎஸ் உடன் இணைந்து வரும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஜெம் ஸ்மார்ட்வாட்ச் மியூசிக், ஃபோன் கால்கள் மற்றும் செய்திகள் ஆகியவற்றை கையாள முடியும். ஜெம் ஸ்மார்ட்வாட்ச் நான்காவது காலாண்டில் wearable கம்ப்யூட்டிங் உடன் வெளியிடப்பட்டு விற்பனை தொடங்கப்பட உள்ளது என்றும் கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top