.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 8 October 2013

செய்வன திருந்தச்செய் (நீதிக்கதை)




 
 
ஒரு குளத்தில் இரண்டு தவளைகள் இருந்தன.வெயில் காலம் வந்தபோது அந்த குளத்தில் நீர் வற்றத் தொடங்கியது.


ஆகவே அத்தவளைகள் குளத்திலிருந்து வெளியேறி வேறு இடம் தேடிச்சென்றன.


வழியில் தண்ணீர் நிறைந்திருந்த கிணற்றைப் பார்த்தன.உடன் ஒரு தவளை " நாம் இக்கிணற்றில் இறங்கி...இதிலேயே இருப்போம்.தண்ணீர் நிறைய இருக்கிறது" என்றது.


உடன் இரண்டாவது தவளை ...'வெயில் அதிகமாக அதிகமாக ...இக்கிணற்று நீரும் வற்றிவிட்டால் இந்த ஆழமான கிணற்றிலிருந்து நாம் எப்ப்டி வெளியே வருவது' என்று கேட்டது.


இரண்டாவது தவளை....புத்திசாலித்தனமாக யோசித்து ...ஒரு காரியத்தில் ஈடுபடும்போது ....அதற்குப்பின்னால் ஏற்படும் விளைவுகளைப்பற்றியும் யோசித்தது.


நாமும் எந்தக் காரியத்தை செய்தாலும் அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை யோசித்து....செய்யும் காரியத்தை திருந்தச் செய்யவேண்டும்.
 

தமிழர்கள் வரலாறு!



 
 

                  தமிழக கோவில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைபாடுகலாகட்டும்,   தூண்களில் ஒரு நூல் இல்லை கூட கோணல் இல்லாமல் கட்டப்பட்ட 1000 கால் மண்டபங்கள் ஆகட்டும், 1000 ஆண்டுகளாக இயற்க்கை சீற்றங்களால் கூட சிறு தேய்வுகள் இன்றி, எந்த வண்ண பூச்சும் இன்றி  நிமிர்ந்து நிற்கும் தஞ்சை கோபுரம் ஆகட்டும். 
 
 
 
 இன்னும் ஆதி தமிழர்கள் செய்த பற்பல அற்புதமான விஷயங்கள் பற்றி வியப்புடன் பேசும் நாம் இதை பற்றிய தேடலை மேற்கொண்டோமா? அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அறிய விஷத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்....

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 -  அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்று மா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி (வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால் வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரிமா
1/64 - கால்வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ் முந்திரி
1/2150400 - இம்மி
1/165580800 - அணு  --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைபடி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.


அடேங்கப்பா எந்த மொழியிலும் இல்லாத decimal calculation !!!!!!!


           nano particle தான் மிக சிறியது என்று உலகமே பேசிகொண்டிருக்கையில் நம் முன்னோர்கள் அதைவிட சிறிய துகளுக்கு கூட calculation போடிருக்கிரார்கள் என்றால் மிகவும் வியக்கத்தக்க ஒன்றே.
 
 

  இவ்வளவு கணிதமும் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது!!!!!
           இந்த எண்களை வைத்தே நுணுக்கமான பல வேலைகளை செய்துள்ளனர் என்றால் நம் முன்னோர்களின் அறிவையும் ஆற்றலையும் எண்ணி பாருங்கள்.
 

           இன்றைக்கு உள்ள மேம்பட்ட தொழில்நுட்பத்தை வைத்தே நம்மால் செய்ய இயலாத பல அற்புதங்களை அன்றே செய்து வைத்து விட்டனர்.
 
 

           கால்குலேடரையும், தொழில்நுட்ப வளர்ச்சி என்று இளைய தலை முறை கூறிக்கொண்டிருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம், தமிழர்களின் சாதனையை பற்றிய தேடல் தொடரும்...!!!


உலகிலேயே மிக வேகமாக ஓடும் WildCat ரோபோ!




இதுவரை உலகில் தயாரிக்கப்பட்ட ரோபோட்டுக்களிலேயே தரையில் மிக வேகமாக ஓடும் விதத்தில் உருவாக்கப்பட்ட 4 கால்கள் உடைய WildCat ரோபோட் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.


இந்த ரோபோட் பரிசோதிக்கப்பட்ட போது அதிகபட்சமாக 16mph வேகத்தில் ஓடியுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். WildCat ரோபோ DARPA இன் M3 செயற்திட்டத்தால் நிதி திரட்டப் பட்டு பாஸ்டன் டைனமிக்ஸ் (Boston Dynamics) எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ரோபோ ஆகும்.


சத்தியமங்கலம் அருகே தங்ககாசு புதையல் கண்டெடுப்பு!


சத்தியமங்கலம் அருகேயுள்ள தாமிர்பள்ளம் கிராமத்தில் 262 தங்க காசுகளுடன் கூடிய மண்கலயம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


ரமேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான நிலத்தை பண்படுத்தும் போது இப்புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 


கலயத்தில் உள்ள காசுகளில் நட்சத்திரம், வைர சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

கொசுக்கள் ஏன் சிலரை மட்டுமே அதிகமாகக் கடிக்கின்றன?


 


சாதாரணமாக நம்மைக் கடிப்பது பெண் கொசுக்கள்தான். அவை யாரைக் கடிக்க வேண்டும் என்பதைப் பார்வை, மோப்ப சக்தி மூலம் கண்டறிகின்றன. 


அவற்றின் உணர்கொம்புகள் மூலம் 72 வகையான மணங்களை உள்வாங்கிக்கொள்ள முடியும். இந்த 72 வகையான மணங்களில் 27 வேதிப்பொருள்கள் நமது வியர்வையில் இருப்பவை. 


நமது வியர்வையில் இருக்கும் அப்படிப்பட்ட வேதிப் பொருள்களில் கார்பன் டை ஆக்சைடு, ஆக்டனால், நோனனால் போன்றவை அடங்கும். 


ஒருவரது வியர்வையில் இந்த வேதிப்பொருள்களின் அடர்த்தி அதிகமாக இருந்தால், கொசுக்கள் அவர்களைக் குறி வைத்துக் கடிக்கின்றன. 


எனவே, இனிமேல் கொசு உங்களை அதிகமாகக் கடித்தால், அதற்குக் காரணம் என்ன என்று தேடாதீர்கள். எல்லாம் உங்கள் வியர்வையில் இருக்கிறது. 


வியர்வை வருவதை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது என்பதால், தற்போது மேலே சொன்ன வேதிப்பொருள்கள் வெளியே தெரியாத வண்ணம் மறைக்கும் வகையில் பூச்சித் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பது பற்றி ஆராய்ச்சி நடந்துவருகிறது.


 சீக்கிரம் கண்டுபிடித்தால், கொசுக் கடியில் இருந்து நாமும் சீக்கிரமாகத் தப்பிக்கலாம்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top