இயற்கை எழில் ததும்பும் லட்ச தீவுகள்
|
இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றாக உள்ள லட்சதீவுகள், அரபிக்கடலில், கேரளக் கடற்கரையிலிருந்து சுமார் 250 கி.மீ. தொலைவில் 36 தீவுகளை கொண்ட எழிமிகு தீவுக் கூட்டம் தான் இலட்சத்தீவுகள் ஆகும். இத்தீவுகூட்டமானது பல்லவ அரசுக்குட்பட்டு இருந்தது என்பதை ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவகால
கல்வெட்டில் ''தீப லக்ஷம்'' என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளதில் இருந்து அரியலாம்.இத்தீவின் தலைநகரம் காவரத்தி. காவரத்தி, மினிக்கோய், அமினி ஆகிய தீவுகள் இத்தீவுக்கூட்டங்களில் முக்குஇய தீவுகளாகும்.
அகத்தி தீவு:
இலட்ச தீவுகளின் நுழைவாயிலாக அமைந்திருப்பது அகத்தி தீவு. சுமார் 4 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இத்தீவு எவ்வித வணிக சந்தடிகள் இல்லாமல் இயற்கையின் பரிசுத்தத்தை பிரதிபலித்துக் கொண்டு காண்பவரை கவரும்படியுள்ளதோடு கோடை சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாகவும் விளங்குகிறது. இந்த அகத்தி தீவில்தான் உள்நாட்டு விமானநிலையம் அமைந்துள்ளது.உலகிலேயே ‘ட்யூனா’ மீன் அதிகம் பிடிபடும் இடம் இந்த அகத்தி தீவு. அது மட்டுமின்றி ஸ்கூபா டைவிங், ஸ்நார்க்கெலிங் பொழுது போக்கு அம்சங்கள் இங்கு உள்ளன. மேலும் இத்தீவின் கடல் உணவுகளின் சுவை மீண்டும் மீண்டும் சாப்பிடத்தூண்டும் வகையிலிருக்கும். இத்தீவில் மது அருந்த அனுமதியில்லை என்பது குற்ப்பிடத்தக்கதாக்கும்.
அமினி தீவு:
முட்டை வடிவுல் சிறியதாக இருக்கும் இத்தீவானது வெறும் 3 கிலோமீட்டர் நீளமும், 1 கிலோ மீட்டர் அகலமும்
கொண்டு அமிந்துள்ளது. இத்தீவானது எந்த ஒரு ஆரவரமும் இன்றி நிசப்தமாக இருப்பது மனதிற்கு மிகவும்
இதமாக இருக்கும், இங்கு சூரியன் அஸ்தமிக்கும் காட்சியினை இங்குள்ள விடுதிகள் அமைத்துள்ள செயற்கை
மரப்பொருட்களால் அமைக்கப்பட்ட தளங்களில் அமர்ந்து ரசிக்கலாம். அகத்தி தீவிலிருந்து படகின் மூலம் இந்து
அமினி தீவிற்கு எளிதாக வந்து சேரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்காரம் தீவு:
அழகிய கடற்கரைப் பகுதிகளோடு 120 ஏக்கர் பரப்பளவில் தென்னந்தோப்போடு அமைந்துள்ள ஒர் எழிழ்மிகு தீவு
பங்காரம் தீவு. இங்கு கடல்வால் உயிரினங்களோடு நிலவாழ் உயிரினங்களும் வசிக்கின்றன. ஸ்கூபா டைவிங்,
ஸ்நார்க்கெலிங் போன்ற கடல்மூழ்கு நீச்சல் மூலம் நீருக்கடியில் உள்ள பலவிதமான உயிரினங்கள்,
பவளப்பாறைகளை இங்கு காணலாம். அகத்தி தீவிலிருந்து படகு மூலமாகவோ அல்லது ஹெலிகாப்ட்டர்
மூலமாகவோ இத்தீவிற்கு செல்ல முடியும். இலட்சத்தீவுகளில் மது அருந்த அனுமதிக்கப்பட்டுள்ள ஒரே தீவு பங்காரம் தீவு மட்டும்தான்.
மாலிகு தீவு:
லட்சத்தீவு பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள தீவுதான் மாலிகு தீவு என்று அழைக்கப்படும் மினிக்காய்
தீவு ஆகும். 1976 ஆம் ஆண்டு மாலத்தீவும்-இந்தியாவும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் இப்படி இத்தீவானது
இந்தியாவிற்கு சொந்தமானது. 10.கிலோமீட்டர் நீளமும் 1 கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த
மினிக்காய்த்தீவின் இயற்கை அமைப்பானது மாலத்தீவின் இயற்கை அமைப்பை போன்றே அமைந்துள்ளது .
இத்தீவு முழுவதும் தென்னை மரங்களால் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
காவரத்தி தீவு:
லட்சதீவுகளின் தலைநகரமாக இருப்பது காவரத்தி தீவு. 4.22 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த
தீவானது கொச்சி கடற்கரையிலிருந்து சுமார் 360 கிலோமீட்டர் தொலைவிலும், அகத்தி தீவிலிருந்து 50. கிலோ
மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. இத்தீவின் கடற்கரை நீரானது மரகதப் பச்சை நிறத்தில் ஸ்படிகம் போன்று
பிரகாசிக்ககூடியதாக இருக்கிறது.
இங்கு நீச்சல் தெரிந்தவர்கள்,
தெரியாதவர்களுக்கேற்றவாறு நீர் விளையாட்டுகளும், மரைன் என்ற மியூசியமும்
காணப்படுகின்றன.இந்த மரைன் மியூசியத்தில் பலவகையான
மீன்கள், நீர் வாழ் உயிரினங்களை காட்சிக்கு
வைத்துள்ளனர். இங்குள்ள கடலில் கண்ணாடி அடித்தளத்துடன் அமைக்கப்பட்ட
படகுகளில் பயணிப்பதன் மூலம் கடலில் உள்ள பவழப்பாறைகள், கடல் உயிரினங்களை
நேரடியாக பார் கண்டு மகிழலாம்.
கல்பேணி தீவு:
திலக்கம்,
பிட்டி, செரியம் ஆகிய மூன்று தீவுகள் சேர்ந்ததே கல்பேணி தீவு. இலட்ச
தீவுக் கூட்டங்களில் 2.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள ஆழம்
குறைந்த அலைகள் இல்லாத ஸ்படிகம் போன்று தூய்மையான நீருடன் காட்சியளிக்கும்
கடல் நீர்பரப்பான ''தரைக்கடல்'' பகுதியாக அமைந்துள்ளது இக் கல்பேணி தீவு.
இத்தீவில் 37 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கலங்கரை விளக்கத்தின்
மீது ஏறி சென்று பார்த்தால் இத்தீவின் முழு இயற்கை அழகையும் இமைக்காமல்
பார்த்து ரசிக்கலாம். கொச்சியிலிருந்து இத்தீவிற்கு நேரடி படகு
போக்குவரத்து வசதியுள்ளது.
சுஹேலி பார்:
அகத்தி
தீவிலிருந்து சுமார் 75 கிலோ மீட்டர் தொலைவில் சுஹேலி வலியக்கரா ,சுஹேலி
செரியக்கரா எனும் இரண்டு சிறிய தீவுகளை கொண்ட தீவுதான் சுஹேலி பார்
தீவுக்கூட்டமாகும். நீள்வட்ட வடிவில் விளிக்கு வெளிச்சத்தின் விளிம்பை
போன்று மரகதப்பச்சை நிறத்தில் பிரகாசிக்கும் தரைக்கடல் பகுதி இத்தீவின்
சிறப்பாகும். சுஹேலி வலியக்கரா ,சுஹேலி செரியக்கரா ஆகிய இந்த இரண்டு
தீவுகளுக்கும் இடையே உள்ள ஒரு நீண்ட மணல் திட்டுப் பகுதியானது பலவிதமான
பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக உள்ளது. மேலும், அக்டோபர் முதல்
ஏப்ரல் மாதம் வரை ''ட்யூனா'' மீன்களை பதப்படுத்தும் தற்காலிக இடமாகவும்
இந்த சுஹேலி தீவு உள்ளது.
|
Monday, 7 October 2013
இயற்கை எழில் ததும்பும் லட்ச தீவுகள் - சுற்றுலாத்தலங்கள்!
20:38
ram
No comments
பெண்களுக்கான பாட்டி வைத்தியம்!
16:06
ram
No comments
பெண்கள் கண்டிப்பாக ஆறு மாதங்களாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர வேண்டும். மார்பகங்கள் எடுப்பான தோற்றம் பெற அமுக்காரா, அதிமதுரம், முல்தானி மட்டி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு பருப்பு வேகவைத்த தண்ணீரில் இந்தக் கலவையை குழைத்து பற்று போட்ட வேண்டும்.
* மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் மார்பக வலியைக் குறைக்க சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம்.
* மார்பக வலியைக் குறைக்க உளுந்தை அரைத்து பற்றுப் போட்டு அதன் மீது வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.
* வைட்டமின் ஏ சத்துள்ள கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அகத்திக் கீரை மற்றும் முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் வாய்ப்புகளை குறைக்க முடியும்.
* இரவு நேரத்தில் பப்பாளிப் பழம் ஒரு துண்டு சாப்பிடுவதன் மூலம் மாதவிலக்கு பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம். ரத்தம் சுத்தம் அடையும். புற்றுநோயையும் தவிர்க்கலாம்.
* அதிகாலை வெறும் வயிற்றில் சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது நல்லது.
* கொதிக்கும் பாலில் பூண்டைப் போட்டு வெந்த பின்னர் அதனை குழைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும், புற்றுநோய்க்கான வாய்ப்பும் குறையும்.
தாய்ப்பால் கொடுப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
15:32
ram
No comments
கர்ப்பமாக இருக்கும் போது உண்ணும் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது தெரியும். ஆனால் பிரசவத்திற்கு பின்னரும் பெண்கள் பல டயட்களை பின்பற்ற வேண்டியுள்ளது. குழந்தையை பெற்றெடுத்துவிட்டால் மட்டும் ஒரு தாயின் பெரிய கடமை முடிந்துவிட்டது என்பதில்லை.
அதற்கு பின்னர் தான் அந்த கடமையே ஆரம்பிக்கிறது.ஆம், குழந்தை பிறந்த பின் அதன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது மிகவும் குறைவாக இருக்கும். ஆகவே அவர்களுக்கு வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியை தாய்ப்பால் தான் அளிக்கும். ஆனால் அதே நேரம் தாயின் உடலும் மிகவும் வலுவின்றி இருக்கும்.
அதனால் அவர்கள் நிறைய சத்தான உணவுகளை உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். ஆனால் சத்தான உணவுகள் என்றதும், அனைத்து உணவுகளையுமே சாப்பிட்டுவிட முடியாது.குழந்தைகளுக்கு பிரச்சனை வராமல் இருக்க எந்த வகை உணவுகளை தாய்மார்கள் சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம்.
வெங்காயம், மிளகாய் மற்றும் மிளகு போன்ற காரமான உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட்டால், குழந்தையின் வயிற்றிற்கு உப்புசத்தை ஏற்படுத்தும். மேலும் சில நேரங்களில் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு அல்லது வாந்தி போன்றவற்றை கூட ஏற்பட நேரிடும்.
ஏனெனில் குழந்தையின் செரிமான மண்டலமானது மிகவும் சென்சிட்டிவ்வானது. ஆகவே இத்தகைய காரமான பொருட்களை அவர்களது உடல் ஏற்றுக் கொள்ளாது.அன்னாசி, ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் பலவற்றை தாய்மார்கள் சாப்பிட்டால், குழந்தையின் வயிற்றில் ஒருவித அரிப்பை ஏற்படுத்தும்.
ஆகவே இதனை தவிர்ப்பது நல்லது. பிரசவத்திற்கு பின் பெண்கள் உடலை தேற்றுவதற்கு நன்கு காய்கறிகளை சாப்பிட வேண்டியது தான். ஆனால் அவற்றில் முட்டைகோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி மற்றும் வெள்ளரிக்காய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் இந்த உணவுப் பொருட்கள் குழந்தைகளுக்கு வாயுத் தொல்லையை ஏற்படுத்தும். தாய்ப்பால் கொடுக்கும் போது அதிகமான அளவில் பால் பொருட்களை சாப்பிட்டால், அவை குழந்தைக்கு பெருங்குடலில் பெரும் வலி ஏற்படும்.
ஆகவே அந்த பால் பொருட்களை அதிக அளவில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. மீன்களில் கானாங்கெளுத்தி, ஸ்வார்டுபிஷ், டைல்ஃபிஷ் மற்றும் சுறா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றில் அதிக அளவில் மெர்குரி உள்ளது.
இது குழந்தைக்கு மிகவும் பாதிப்பானது. ஆகவே மெர்குரியின் குறைவாக உள்ள மீன்களான டூனா, கெளுத்தி, சாலமன் மற்றும் பல மீன்களை குறைந்த அளவில் சாப்பிடலாம்.காப்பியை குறைந்த அளவில் குடிக்க வேண்டும். ஏனெனில் அவை குழந்தையின் தூக்கத்தை கெடுக்கும். அதுமட்டுமின்றி, குழந்தைக்கு ஒரு வித நடுக்கம் மற்றும் உடலில் எரிச்சலை உண்டாக்கும்.
இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி !
15:29
ram
No comments
இன்றைய பெண்கள் தொப்பை மற்றும் இடுப்பின் அதிகப்படியான சதையால் பெரிதும் கவலைப்படுகின்றனர். இதற்காக உடற்பயிற்சி கூடத்திற்கு போய் தான் பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சியை பார்க்கலாம்.
இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் 3 மாதத்தில் இடுப்பு சதை குறைவதை காணலாம். பயிற்சி செய்முறை விரிப்பில் நேராக படுத்துக் கொள்ளவும். பின்னர் வலது பக்கமாக திரும்பி படுத்துக் கொள்ளவும். வலது காலின் மேல் இடது கால் இருக்க வேண்டும்.
மெதுவாக வலது கையை தரையில் ஊன்றி உடலை மெதுவாக மேலே உயர்த்தவும். இடது கையை இடுப்பில் (படத்தில் உள்ளபடி ) வைத்துக் கொள்ளவும். சில விநாடிகள் இந்த நிலையில் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.
இவ்வாறு வலது பக்கம் 20 முறை செய்யவும். பின்னர் அடுத்த பக்கம் திரும்பி இடது பக்கம் இதே போல் 20 முறை செய்யவும். இவ்வாறு மாறிமாறி செய்ய வேண்டும்.
ஆரம்பத்தில் 10 முறை செய்தால் போதுமானது. பின்னர் எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 20 முறைக்கு மேல் செய்யலாம். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
புத்தகயா மஹாபோதி ஆலயம் - சுற்றுலாத்தலங்கள்!
15:04
ram
No comments
புத்தகயா மஹாபோதி ஆலயம் |
புத்தகயா மஹாபோதி ஆலயம்
ஆசையே
அழிவுக்கு காரணம் என்ற தத்துவத்தை உலகுக்கு போதித்தவர் புத்தர். அஹிம்சையை
வலியுறுத்தியவர். அவர் ஞானம் பெற்ற இடமே புத்தகயா. புத்தர் இங்கு ஆறு
ஆண்டுகள் தங்கி தவமிருந்திருக்கிறார். அவர் ஞானம் பெற்ற மரம் அமைந்துள்ள
பகுதியில் கட்டப்பட்டுள்ள ஆலயம் மஹாபோதி ஆலயம் என்றழைக்கப்படுகிறது. இங்கு
அமர்ந்தவாக்கில் அமைதியின் உருவமாக ஆழ்ந்த தியான நிலையில் புத்தர்
காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.
மஹாபோதி
ஆலயத்தின் 55மீட்டர் உயர பிரம்மாண்ட கோபுரமும் அதைச் சுற்றியுள்ள நான்கு
சிறிய கோபுரங்களும் இன்றளவும் ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
காரணம், அனைத்தும் சுட்ட செங்கற்களால்
கட்டப்பட்டவை. கோபுரம் கட்டப்பட்ட காலம் 3-6ம் நூற்றாண்டுகளுக்கு
இடைப்பட்ட காலம் என கருதப்படுகிறது. சிறப்புக்குரிய மஹாபோதி ஆலயத்தைக்
கட்டியவர் அசோக மன்னர். புத்தர் ஞானம் பெற்று சுமார் 250ஆண்டுகளுக்கு பிறகு
இதை கட்டியிருக்கிறார். புத்தர் தியானத்தில் அமர்ந்த இடத்தில் ஒரு மேடை
அமைக்கப்பட்டு இரண்டு பெரிய பாதச்சுவடுகள் வைக்கப்பட்டுள்ளன.
புத்தர்
பிறந்த இடமான கபிலவஸ்து, ஞானம் பெற்ற புத்தகயா, அவர் முதல்முறையாக போதனை
செய்த சாரநாத், முக்தி அடைந்த குஷி ஆகிய இடங்கள் புத்தமதத்தினருக்கு
புனிதமான இடங்கள். இவற்றில் புத்தகயா புத்தர் ஞானம் பெற்ற இடம் என்பதால்
சிறப்புகுரியதாகிறது.
உலகம்
முழுவதிலும் இருந்தும் புத்தமதத்தினர் இங்கு வந்து செல்கிறார்கள்.
புத்தகயாவில் உள்ள மஹாபோதி கோவில் பீகார் மாநில அரசின் கட்டுப்பாட்டில்
உள்ளது யுனெஸ்கோ சார்பில் உலக பண்பாட்டுச் சின்னமாக 2002ல்
அறிவிக்கப்பட்டது.
எப்படிச் செல்லலாம்?
சிறப்புக்குரிய
புத்தகயா, பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து சுமார் 95கி.மீ தொலைவில்
அமைந்துள்ளது. இங்கு செல்ல பீகாரின் முக்கிய நகரங்களில் இருந்து சாலை வசதி
இருக்கிறது. புத்தகயாவில் ரயில் நிலையம் உள்ளது. பாட்னாவில் விமானநிலையம்
உள்ளது.
|