.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 7 October 2013

இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி !

இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி


இன்றைய பெண்கள் தொப்பை மற்றும் இடுப்பின் அதிகப்படியான சதையால் பெரிதும் கவலைப்படுகின்றனர். இதற்காக உடற்பயிற்சி கூடத்திற்கு போய் தான் பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சியை பார்க்கலாம்.


இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் 3 மாதத்தில் இடுப்பு சதை குறைவதை காணலாம். பயிற்சி செய்முறை   விரிப்பில் நேராக படுத்துக் கொள்ளவும். பின்னர் வலது பக்கமாக திரும்பி படுத்துக் கொள்ளவும். வலது காலின் மேல்  இடது கால் இருக்க வேண்டும்.


மெதுவாக வலது கையை தரையில் ஊன்றி உடலை மெதுவாக மேலே உயர்த்தவும். இடது கையை இடுப்பில் (படத்தில் உள்ளபடி ) வைத்துக் கொள்ளவும். சில விநாடிகள் இந்த நிலையில் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.


இவ்வாறு வலது பக்கம் 20 முறை செய்யவும். பின்னர் அடுத்த பக்கம் திரும்பி இடது பக்கம் இதே போல் 20 முறை செய்யவும். இவ்வாறு மாறிமாறி செய்ய வேண்டும்.


ஆரம்பத்தில் 10 முறை செய்தால் போதுமானது. பின்னர் எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 20 முறைக்கு மேல் செய்யலாம். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

புத்தகயா மஹாபோதி ஆலயம் - சுற்றுலாத்தலங்கள்!



   புத்தகயா மஹாபோதி ஆலயம்

 
புத்தகயா மஹாபோதி ஆலயம்
 
சையே அழிவுக்கு காரணம் என்ற தத்துவத்தை உலகுக்கு போதித்தவர் புத்தர். அஹிம்சையை வலியுறுத்தியவர். அவர் ஞானம் பெற்ற இடமே புத்தகயா. புத்தர் இங்கு ஆறு ஆண்டுகள் தங்கி தவமிருந்திருக்கிறார். அவர் ஞானம் பெற்ற மரம் அமைந்துள்ள பகுதியில் கட்டப்பட்டுள்ள ஆலயம் மஹாபோதி ஆலயம் என்றழைக்கப்படுகிறது. இங்கு அமர்ந்தவாக்கில் அமைதியின் உருவமாக ஆழ்ந்த தியான நிலையில் புத்தர் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.
 
மஹாபோதி ஆலயத்தின் 55மீட்டர் உயர பிரம்மாண்ட கோபுரமும்  அதைச் சுற்றியுள்ள நான்கு சிறிய கோபுரங்களும் இன்றளவும் ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கின்றன. காரணம், அனைத்தும் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டவை. கோபுரம் கட்டப்பட்ட காலம் 3-6ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் என கருதப்படுகிறது. சிறப்புக்குரிய மஹாபோதி ஆலயத்தைக் கட்டியவர் அசோக மன்னர். புத்தர் ஞானம் பெற்று சுமார் 250ஆண்டுகளுக்கு பிறகு இதை கட்டியிருக்கிறார். புத்தர் தியானத்தில் அமர்ந்த இடத்தில் ஒரு மேடை அமைக்கப்பட்டு இரண்டு பெரிய பாதச்சுவடுகள் வைக்கப்பட்டுள்ளன.
 
புத்தர் பிறந்த இடமான கபிலவஸ்து, ஞானம் பெற்ற புத்தகயா, அவர் முதல்முறையாக போதனை செய்த சாரநாத், முக்தி அடைந்த குஷி ஆகிய இடங்கள் புத்தமதத்தினருக்கு புனிதமான இடங்கள். இவற்றில் புத்தகயா புத்தர் ஞானம் பெற்ற இடம் என்பதால் சிறப்புகுரியதாகிறது.
 
உலகம் முழுவதிலும் இருந்தும் புத்தமதத்தினர் இங்கு வந்து செல்கிறார்கள். புத்தகயாவில் உள்ள மஹாபோதி கோவில் பீகார் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது யுனெஸ்கோ சார்பில் உலக பண்பாட்டுச் சின்னமாக 2002ல் அறிவிக்கப்பட்டது.
 
எப்படிச் செல்லலாம்?
 
சிறப்புக்குரிய புத்தகயா, பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து சுமார் 95கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு செல்ல பீகாரின் முக்கிய நகரங்களில் இருந்து சாலை வசதி இருக்கிறது. புத்தகயாவில் ரயில் நிலையம் உள்ளது. பாட்னாவில் விமானநிலையம் உள்ளது.

விண்டோஸ் 8.1 சிஸ்டம் டிப்ஸ்!





ஸ்டார்ட் ஸ்கிரீன் இல்லாமல் நேராக டெஸ்க்டாப்: 


விண்டோஸ் 8 சிஸ்டத்தில், பலருக்கும் பிடிக்காத விஷயமாகப் பேசப்படுவது, சிஸ்டம் ஸ்டார்ட் ஸ்கிரீனில் தொடங்கும் செயல் பாடாகும். அனைவரும் ஏன் டெஸ்க்டாப்புடன் சிஸ்டம் தொடங்கினால் என்ன? என்று கேட்டனர். இப்படித்தானே, இதுவரை விண்டோஸ் இயங்கியது எனவும் கேள்வி தொடுத்தனர். பெரும்பாலான வாடிக்கையாளர்களிடம் இருந்து இந்த பின்னூட்டு வந்ததனால், மைக்ரோசாப்ட் நிறுவனம், இதனை, விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில் மாற்றியுள்ளது. நேராக சிஸ்டம், முன்பு போல, டெஸ்க்டாப் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பெற, ஒரு சின்ன செட்டிங் அமைக்க வேண்டும்.


டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Properties என்பதனைத் தேர்ந்தெடுகக்வும். இங்கு தரப்படும் பல டேப்களில், "When I sign in or close all apps on a screen, go to the desktop instead of Start' என்பதனைத் தேடிக் காணவும். இந்த செட்டிங் மீது ஒரு டிக் அடையாளம் அமைக்கவும். இனி, உங்கள் விண்டோஸ் 8.1 கம்ப்யூட்டர், ஸ்டார்ட் ஸ்கிரீனில் தொடங்காது. இந்த வசதி, ஸ்டார்ட் ஸ்கிரீன் தொடக்கத்தினைப் பார்த்து தயங்குவோருக்கு அருமருந்தாக அமையும். விண்டோஸ் 8.1 வரும் அக்டோபர் 17 முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அப்போது புதிய சிஸ்டத்திற்கு மாறிய பின்னர், இந்த செட்டிங் அமைத்துக் கொள்ளலாம்.


புரோகிராம்களை மாறா நிலையில் அமைக்க: 


நம் கம்ப்யூட்டர்களில், இணையம் தேட பல பிரவுசர்களை அமைக்கிறோம். ஆனால், நாம் ஏதேனும் ஓர் இணைய லிங்க்கில் கிளிக் செய்திடும்போது, மாறா நிலையில் (default) அமைத்திட்ட பிரவுசரில் தான் அது திறக்கப்படும். எடுத்துக் காட்டாக, நீங்கள் குரோம் பிரவுசரைத் திறந்து இணையத் தேடலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், கிடைக்கும் லிங்க்கில் கிளிக் செய்தால், உங்கள் கம்ப்யூட்டரில், இண்டர்நெட் எக்ஸ்புளோரர் மாறா நிலை பிரவுசராக செட் செய்யப்பட்டிருந்தால், அதில் தான் அந்த குறிப்பிட்ட இணைய தளம் திறக்கப்படும்.


இதே போல் தான், நாம் பல மீடியா பிளேயர்கள், இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் ஆகியவற்றையும் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் பதிந்து வைத்து இயக்குகிறோம்.


இவற்றில், நமக்குப் பிடித்த புரோகிராமினை எப்படி மாறா நிலைக்குக் கொண்டு வந்து, அதில் திறக்கக் கூடிய புரோகிராம்களை, குறிப்பிட்ட புரோகிராமில் மட்டுமே திறக்கும்படி அமைப்பது. இதனை விண்டோஸ் 8.1ல் எப்படி அமைப்பது எனப் பார்க்கலாம். 


முதலில் சார்ம்ஸ் பாரினைத் (Charms bar) திறக்கவும். இதற்கு Win key + C ஆகிய கீகளை அழுத்தலாம். இங்கு Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Change PC Settings என்பதில் தட்டவும். Search and Apps என்பதில் கிளிக் செய்திடவும். Defaults என்ற வகையின் கீழ், நீங்கள் எந்த புரோகிராமினை மாறா நிலையில் அமைக்க விரும்புகிறீர்களோ, அதனை செட் செய்திடலாம். 


எடுத்துக்காட்டாக, மீடியா பிளேயராக, Windows Media Player என்பதற்குப் பதிலாக, Media Player Classic என்பதனை மாறா நிலையில் அமைக்கலாம். இதே போல குறிப்பிட்ட பைல் வகைகளை எந்த புரோகிராமில் திறக்கலாம் என்பதனையும் அமைக்கலாம். விண்டோஸ் 8.1ல் இதனை புதிய PC Settings அப்ளிகேஷனிலேயே அமைக்கலாம். முன்பு போல, கண்ட்ரோல் பேனல் திறந்து இவற்றை அமைக்க வேண்டியதில்லை.


Click Here

கோவை விரிவான கதை - 100 ஆண்டுக்கு முந்தைய அடையாளம்!




கோவை நகரம் என்பதற்கு 100 ஆண்டுக்கு முந்தைய அடையாளம் கோனியம்மன் கோயிலும், அதை சுற்றி அமைந்த ராஜ வீதி, கோட்டைமேடு, கெம்பட்டி காலனி, வெரைட்டிஹால் ரோடு, காட்டூர் ஆகிய பகுதி மட்டுமே. கோவை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அப்போது பிளேக் நோய் பரவி ஏராளமான பேர் மடிந்தனர். பிளேக் நோய் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கென தனித்தனி குடியிருப்பு உருவாக்கப்பட்டது. கைத்தறி நெசவாளர்கள் அதிகமாக குடியேறிய பகுதி தேவாங்கர்பேட்டையானது. தற்போதைய ராம்நகர் பகுதியில் பிராமணர்கள் அதிகளவில் குடியேறியுள்ளனர். முன்பு அக்ராஹரம் என அழைக்கப்பட்டது. பின்னர் ராம்நகர் என மாற்றப்பட்டது.


வீடு இழந்த மக்களை குடியேற்றுவதற்காக மேட்டுப்பாளையம் ரோடு, தடாகம் ரோடு ஆகியவற்றுக்கு இடையே இருந்த 350 ஏக்கர் தோட்ட நிலத்தை நகரசபை நிர்வாகமே வாங்கி விசாலமான மனையிடங்களாக பிரித்து கொடுத்தது. அந்தப் பகுதி பின்னாளில் கோவை நகரசபை தலைவராக இருந்த ரத்தினனசபாபதி முதலியார் முயற்சியில் வாழ்வதற்கு ஏற்ற கட்டமைப்புகளுடன் மேம்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே அந்த பகுதிக்கு அவரது பெயரும் சூட்டப்பட்டது. அதேபோல் அப்போது நகரின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர்களின் பெயரால் சாலைகளும் அமைக்கப்பட்டது. அப்போது ராமநாதபுரம், புலியகுளம், பாப்பநாயக்கன்பாளையம் போன்ற கிராமங்கள் தனித்தனியாக தான் இருந்தன. நாளடைவில் கோவை நகர வளர்ச்சியில் இந்த பகுதிகளும் இணைக்கப்பட்டன.

ஈஸி எக்ஸ்ட்ரா டிப்ஸ்!


*  காற்றோட்டமில்லாத அறைகளில் அதிக நேரம் இருந்தாலோ அப்படிப்பட்ட வீடுகளில் குடியிருந்தாலோ சிறுநீரகக் கோளாறு வரலாம்.

*  ஊறுகாய், கருவாடு, வடாம் ஆகியவற்றை அடிக்கடியோ அதிகமாகவோ சேர்த்துக்கொள்வது சிறுநீரகத்துக்கு நல்லதல்ல.

*  சிறுநீரகச் செயலிழப்பு இருப்பவர்கள் தண்ணீரை அதிகமாகக் குடிக்கக் கூடாது. மீறினால் நீர்ச்சத்து அதிகமாகி, மூச்சு வாங்குதல், உடல் வீக்கம் போன்றவை நிகழலாம். அதே நேரம் நன்னாரி வேரை இடித்து நீரில் போட்டு அந்த நீரைக் குடிக்கலாம்.

*  தேவையில்லாத பயம், மனத்தளர்ச்சி போன்றவையும் சிறுநீரக சக்தி குறைவதன் அடையாளமே!


அதிகாலை 3 முதல் 5 மணி வரையிலான நேரம் நுரையீரலின் செயல்பாடு உச்சத்தில் இருக்கும் நேரம். ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள் இந்த நேரத்தில் எளிய மூச்சுப் பயிற்சிகளைச் செய்யலாம்.


இனிப்புகள் மற்றும் மைதாவால் செய்யப்பட்ட உணவுப்பொருள்களை ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். மிளகு, பூண்டு முதலானவற்றை அதிகம் சேர்க்கலாம்.


மூச்சுவிட சிரமப்படும்போது நடு மார்பில் கடிகாரச் சுற்றில் இதமாக கட்டை விரலால் அழுத்தி விடும்போது நல்ல பலன் கிடைக்கும்.


தொழிற்சாலைகள் நிறைந்த இடங்களில் வசிப்பவர்கள் திறந்தவெளி இடங்களுக்குச் சென்று அடிக்கடி பிராணாயாமம் போன்ற பயிற்சிகளைச் செய்ய வேண்டியது அவசியம்.


 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top