...
Saturday, 5 October 2013
ஜி மெயிலில் இதுதெரியுமா உங்களுக்கு?
ஒட்டுமொத்த இணையத்தையும் தன் வசப்படுத்த கூகுள் பல செயல்களை செய்து வருகிறது அதில் ஒரு முக்கியமான செயல் தான் ஜி மெயில். கூகுள் தரும் ஜிமெயிலில் எண்ணற்ற வசதிகள் உள்ளன. அவற்றில் சில வசதிகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றோம். இங்கு நாம் அதிகம் பயன்படுத்தாத, சில முக்கிய வசதிகளைக் காணலாம். நாள் தோறும் பல மின்னஞ்சல் செய்திகள் நமக்கு வருகின்றன. இவற்றில் ஒரு சில முக்கியமானவையாக இருக்கும். ஒரு சிலவற்றிற்கு கட்டாயம் சில நாட்களில் பதில் அனுப்ப திட்டமிடுவோம். மொத்த அஞ்சல்களில் இவற்றை எப்படி விலக்கிப் பார்ப்பது. இதற்கெனவே, இந்த அஞ்சல்களில் ஸ்டார் அமைத்து குறியிடும் வசதி தரப்பட்டுள்ளது. உங்கள் இன்பாக்ஸில், செய்தியை அடுத்து இடதுபக்கம்...
கமலுக்கும், ஸ்ரீதேவிக்கும்தான் இளநீர் கொடுத்தார்கள்.... ரஜினிக்கு அது கூட இல்லை...
பாரதிராஜா இயக்கத்தில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி நடித்த படம், ‘16 வயதினிலே‘. எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரித்திருந்த இப்படம், டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் ரஜினி பேசியதாவது: அந்த காலத்தில் ‘16 வயதினிலே‘ படத்தை 5 லட்ச ரூபாயில் தயாரித்தார் ராஜ்கண்ணு. அது சாதாரண விஷயம் இல்லை. படத்தை வாங்க அப்போது யாரும் வரவில்லை. துணிச்சலுடன் அவரே ரிலீஸ் செய்தார். பெரிய வெற்றி பெற்றது. அப்போது கமல் பெரிய ஸ்டார். ஸ்ரீதேவி பெரிய ஸ்டார். நான் சின்ன சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தேன்.
இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு புதுமுகங்களை வைத்து, ‘கிழக்கே போகும் ரயில்’...
“ஃபேஸ்புக், ட்விட்டர்தான் இந்த படத்தை காப்பாற்றியிருக்கிறது! – மிஷ்கின் ஓப்பன் டாக்!
“ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படம் இன்று தமிழகமெங்கும,ஒரு வாரமா ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் என்னிடம் போஸ்டர் ஓட்டக் கூட காசு இல்லை. கடன் வாங்கித்தான் இப்போது திருச்சிக்கு வந்திருக்கிறேன். ஃபேஸ்புக், ட்விட்டர்தான் இந்த படத்தை காப்பாற்றியிருக்கிறது. எனினும் இந்த படத்தை விளம்பரப்படுத்த என்னிடம் காசு இல்லை. கோவையை அடுத்து திருச்சியிலும் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட போகிறேன்” என்று கூறி கலங்கினார் மிஷ்கின்.
சமீபத்தில் திரைக்கு வந்து அனைவரின் பாராட்டையும் பெற்று வரும் படம் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆனால் இந்த படத்தின் இயக்குனரும் ,தயாரிப்பாளருமான மிஷ்கின், தியேட்டரில் கூட்டம் அதிகம் வராததால் ஊர் ஊராக சென்று போஸ்டர் அடிக்கும் பணியை செய்துவருகிறார்.
சமீபத்தில்...
“சரக்கடி நண்பா நீ சரக்கடி” சந்தானத்தின் குரலில் உருவான பாடல்!!!
நகைச்சுவை நடிகர் சந்தானம் முதன் முறையாக முழுப்பாடலை பாடியுள்ளார்.
ஸ்ரீகாந்த்- சந்தானத்தின் நடிப்பில் உருவாகும் படத்தில் நம்பியார் என்ற படத்தில் தான் பாடலை பாடியுள்ளார்.
விவேகாவின் எழுத்தில், விஜய் ஆண்டனியின் இசையில் பாடி அசத்தி உள்ளார்.
சந்தானம் பாடியது குறித்து இயக்குனர் கணேஷா, இந்த படத்தில் ஸ்ரீகாந்துடன் இன்னொரு ஹீரோவாக சந்தானம் நடித்து வருகிறார்.
ஏன் இன்னொரு ஹீரோ சந்தானம் என்று சொல்கிறேன் என்பதை படம் வரும்போது நீங்களே புரிந்துகொள்வீர்கள்.
நகைச்சுவைக்கு பஞ்சமில்லாத கதைக்களம், அதற்காக வெறும் நகைச்சுவையை மட்டும் நம்பி பயணப்படும் படம் அல்ல.
சந்தானம் சார் பட்டைய கிளப்பிய படங்களில் இதுவும் ஒன்றாக அமையும். ஆனால் அவர் ஏற்றிருக்கும்...