.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 2 October 2013

அமெரிக்காவின் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இந்தியா பகிர்ந்துகொள்கிறது!

அமெரிக்காவின் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இந்தியா பகிர்ந்துகொள்கிறது



அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளின் வட்டத்தில் இந்தியா இருக்கிறது. அமெரிக்கா, தனது பாதுகாப்பு தொழில்நுட்பங்களை அதன் நெருங்கிய நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள ஒத்துக்கொண்டுள்ளது.

ஐ.நா. பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்ற இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், இந்திய அமெரிக்க உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் வர்த்தக அடிப்படையில் இல்லாமல், பாதுகாப்பு துறையில் உற்பத்தி மற்றும் மேம்பாட்டில் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்கா இராணுவத்தலைமையகமான பெண்டகன் அதன் 10 பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள ஒத்துக்கொண்டிருப்பதாக இந்திய தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்து இந்திய தரப்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும்,  விரைவில் அந்த தொழில் நுட்பங்களை இந்தியா ஏற்றுக்கொள்ளும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தியாவுடன் அடுத்தடுத்து பகிர்ந்துகொள்வதற்கான புதிய தொழில்நுட்பங்களை கண்டறியவும் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

நெருங்கிய நட்பு நாடுகளின் வட்டத்தில் இந்தியா கொண்டுவரப்பட்டுள்ளதை உறுதிபடுத்திய அமெரிக்க துணை ராணுவ மந்திரி அஷ்டன் கார்டர், ஒபாமா நிர்வாகம் இப்பொழுது குரூப்-8 நாடுகளின் பட்டியிலில் இந்தியாவை இணைத்துள்ளது என்று கூறினார். இந்த நாடுகள் பாதுகாப்பு தொழில் நுட்பங்களை வணிக நோக்கில் அல்லாமல் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கைகளால் பலன்...(நீதிக்கதை)!





ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்களிடம்....

" இறைவன் நமக்குக் கொடுத்துள்ள கைகளால் என்ன பயன் " என்றார்.

ஒரு மாணவன் " எதையும் சாப்பிடலாம் " என்றான்.

மற்றவனோ 'யாரையும் அடிக்கலாம்' என்றான்.

மூன்றாமவனோ " ஆசிரியர் அடிக்க வந்தால் தடுக்கலாம் " என்றான்.

நான்காவது மாணவனோ "இறைவனை கை கொண்டு தொழலாம்" என்றான்.

புத்திசாலி மாணவன் ஒருவன் எழுந்து " கை இருப்பதன் பலன் தானம் செய்வதற்கே,தர்மம் செய்வதற்கே.

தானம் செய்வதால்,தர்மம் செய்வதால் இல்லாதவர்கள் மகிழ்வார்கள்.. ...

"நம்மிடம் உள்ளதை பகிர்ந்து உண்ணுவதற்கே இறைவன் கைகளை படைத்துள்ளான்". என்றான்.

ஆசிரியரும் அந்த புத்திசாலி மாணவனை பாராட்டியதுடன் "மனிதர்களுக்கு இரக்க குணமும் தன்னிடம் உள்ளதை

பிறருக்கு வழங்கி வாழ்தலுமே நன்மை பயக்கும்" என்றார்.
 
 

ஊட்டி ராஜ்பவன் உருவான வரலாறு!




சென்னையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு தான் ராஜ்பவன் என்று பெயர். ஆனால், ஊட்டியிலும் ஒரு ராஜ்பவன் இருப்பது பலர் அறிந்திராத விஷயம். சென்னை கவர்னர் மாளிகையில் என்ன வசதி உண்டோ, அத்தனையும் இங்கேயும் உண்டு. இந்த ராஜ்பவன் உருவாக்கப்பட்டதன் பின்னணியிலும் ஒரு வரலாறு உண்டு. தற்போது, ஊட்டியில் உள்ள ராஜ்பவன் 1876ம் ஆண்டு லாரன் ஆசிலம் டிரஸ்ட் அரசு இல்லம் கட்ட முடிவு செய்தது.


அக்கால கட்டத்தில் சென்னை மகாண வைசிராயாக இருப்பவர்கள் கோடை காலத்தில் ஊட்டிக்கு வந்து தங்கி ஒய்வு எடுப்பதற்காகவும், அரசு பணிகளை கவனிக்க இந்த மாளிகை கட்டப்பட்டது. 1888ம் ஆண்டு ரூ.7 லட்சத்து 81 ஆயிரத்து 633 மதிப்பில் இம்மாளிகை கட்டி முடிக்கப்பட்டது. 1899ம் ஆண்டு கூடுதல் அறை கட்டப்பட்டது. 1904ம் ஆண்டு இந்த மாளிகை முழுவதும் மின்சார இணைப்பு வசதி செய்யப்பட்டது. சுதந்திரத்திற்கு பின் இதற்கு ராஜ்பவன் என்று பெயர் மாற்றப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் இம்மாளிகை தமிழக ஆளுநர் மாளிகையாக அறிவிக்கப்பட்டது.



தமிழக கவர்னர் அல்லது இந்திய குடியரசு தலைவர் ஆகியோர் ஊட்டி வந்தால் இங்கு தான் தங்குகின்றனர்.முன்பு தமிழகத்திற்கு ஆளுநராக வருபவர்கள் பலர் கோடை காலங்களில் அதிக நாள் இங்கிருந்தே நிர்வாகத்தை கவனித்துள்ளனர். மற்ற அரசியல் தலைவர்கள் அல்லது அரசு உயர்பதவிகளில் உள்ளவர்கள் தங்க அனுமதிக்கப்படுவதில்லை.  இந்த மாளிகையில் 17 அறை உள்ளது. வரவேற்பு அறையில் பல்வேறு வகையான ஒவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த மாளிகையை சாதாரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்க்கவோ, புகைப்படமோ எடுக்க அனுமதிப்பது இல்லை.


மிஷ்கினுடன் இணையும் கமல்!



இயக்குனர் மிஷ்கினுடன் கைகோர்க்கும் திட்டத்தில் உள்ளாராம் உலக நாயகன்.


கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கும் படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.


முகமூடி தோல்வியால் வருத்தப்பட்ட மிஷ்கினை, இந்தப் படத்தின் வெற்றியானது மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது.
பாடல்களே இல்லை, முக்கியமாக மிஷ்கினின் குத்துப்பாட்டு இல்லை, கதாநாயகி இல்லை. என பல இல்லை'கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் தாண்டி மிகப்பெரிய முத்திரையைப் பதித்திருக்கிறது.



சமீபத்தில் கமல்ஹாசனை பிரசாத் ஸ்டுடியோவுக்கு பிரத்யேகமாக அழைத்த இளையராஜா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தைத் திரையிட்டுக் காட்டியிருக்கிறார்.



முழு படத்தையும் பார்த்து மிரண்டுபோன கமல் நெகிழ்ந்துபோய் மிஷ்கினைப் பாராட்டி கங்கிராட்ஸ் சொல்லி இருக்கிறார்.


அதுமட்டுமில்லை சீக்கிரமா நாம ரெண்டு பேரும் சேர்ந்து படம் செய்வோம் என்று சொல்லி மிஷ்கினை மகிழ்ச்சியில் மிதக்க வைத்துள்ளாராம் கமல்.

போலிஸ் அவதாரம்! சிவகார்த்திகேயன்!




கொமடி கதாபாத்திரத்தில் இருந்து பொலிஸ் அவதாரம் எடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.       


கொமடி நடிப்பில் புகுந்து விளையாடி தமிழக ரசிகர்களை எல்லாம் தன் வசப்படுத்திவிட்டார் சிவகார்த்திகேயன்.


அப்படியே ஒரே மாதிரி   நடித்துக்கொண்டிருந்தால் ரசிகர்களுக்கும் போரடித்துவிடும். நடிப்பவருக்கும் சலிப்பு தட்டிவிடும்.


இதனை நன்கு புரிந்துகொண்ட சிவகார்த்திகேயன் இப்போது ஓசைப்படாமல் தனது ரூட்டை மாற்றி இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தில் பொலிஸ் வேடத்தில் நடிக்கிறார்.


இப்படி அவர் தடாலடியாக ஆக்‌ஷன் ரூட்டில் இறங்க, சினிமாவில் அவரது குருநாதரான தனுஷ் தான் காரணம்.


எதிர்நீச்சல் படத்தை தயாரித்த தனுஷே இந்தப்படத்தையும் தயாரிக்க, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இசைக்கு அனிருத், காமெடிக்கு சதீஷ் எனஎதிர்நீச்சல் டீம் அப்படியே இதிலும் களம் இறங்குகிறது.
கதாநாயகியாக நடிக்கத்தான் ஒரு முன்னணி நாயகியை தேடிவருகிறார்கள்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top