.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 2 October 2013

பிரசவத்துக்கு பின் அழகாக எளிய உடற்பயிற்சிகள்!



Beautifully simple exercise after pregnancy



பத்து மாதங்கள் குழந்தையை கருவில் சுமக்கும் போது பத்திரமாக பார்த்துக் கொண்ட தாய்மார்கள், குழந்தை பிறந்த பிறகு குழந் தையின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல தங்கள் ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் உணவு ஆலோசகர் அம்பிகா சேகர்.


குழந்தை பிறந்த பிறகு ஒவ்வொரு தாயும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கிறார். எனவே பிரசவம் முடிந்த  பிறகு உணவு மற்றும் உடற்பயிற்சியில் அவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். சாதாரணமாக தேவைப்படும் கலோரிகளை  விட அதிகமாக 500 கலோரிகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த அளவு ஒவ்வொருவரின் உடலுக்கு ஏற்ப மாறுபடும்.  வேலை செய்யாதவர்களுக்கு தினசரி கலோரி 1800 என்றால் வேலை செய்பவர்களுக்கு 2000 கலோரிகள் தேவையாக இருக்கும்.



பொதுவாக சுகப்பிரசவமோ அல்லது சிசேரியனோ, ரத்த இழப்பு அதிகமாக இருக்கும். அதை அவர்கள் கண்டிப்பாக ஈடு செய்ய  வேண்டும். அதற்கு கீரைகள், பேரிச்சை, கேழ்வரகு, கம்பு, கறிவேப்பிலை பொடி போன்றவற்றை உணவில் சேசர்த்துக்கொள்ள வேண் டும். அதாவது தினமும் ஒரு கீரை அவசியம்.



குழந்தைகள் ஒட்டுண்ணிகள். எனவே தாய்மார்களின் சரியாக சாப்பிட்டால் தான் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும். அதற்காக  கண்ணில் தென்படுவதை எல்லாம் சாப்பிடக்கூடாது. கொழுப்புசத்துள்ள உணவுகளை தவிர்த்து புரதசத்து, நார்சத்து, இரும்பு சத்து, கால்சியம், மற்றும் இதர சத்துள்ள உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.



குழந்தைக்கு பால் புகட்டுவதால் கால்சியம் மற்றும் புரதசத்து, அதிகமாக தேவைப்படும். பால், பால் சார்ந்த பொருட்கள், மீன், நண் டு, இறால், சோளம், போன்றவற்றில் அதிக கால்சிய சத்துள்ளது. தினமும் குறைந்த பட்சம் இரண்டு தம்ளர் பால் குடிப்பது  அவசியம். பாதாம், பிஸ்தா, அக்ரூட், பச்சை வேர்க்கடலை, மீன், முட்டையில் புரதசத்துகள் உள்ளன. இவை பால் சுரக்கவும்  உதவக்கூடியவை.



தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இது மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கும். பால் புகட்டும் முன் ஒரு சொம்பு  நிறைய தண்ணீர் குடித்துவிட்டு பால் புகட்டலாம். இதனால் பால் நன்றாக சுரக்கும்.  கர்ப்ப காலத்தில் கருவில் குழந்தை இரு ப்பதால், வயிறு நன்றாக விரிந்திருக்கும். குழந்தை பிறந்த பிறகு அவை மெதுவாக சுருங்கும். இந்த சமயத்தில் அதிக கொழுப்பு சத் துள்ள உணவுகள், கிழங்கு வகைகள், மற்றும் தேங்காய், போன்ற உணவுகளை சாப்பிட்டால் வாயு, மலச்சிக்கல், அஜீரண கோளாறு  போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.



எனவே பிரசவத்துக்கு பிறகு ஒரு மாத காலம் இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அஜீரணத்தை தவிர்க்க இஞ்சி, பூண்டு, மிளகு, போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சாப்பிடலாம். வேப்பிலை பொடி, சுண்டைக்காய் பொடி மற்றும் நார்த்த இலையை பொடி செய்து  தயிர் சாதத்துடன் சாப்பிடலாம். இது அஜீரண  பிரச்சனைக்கு நல்ல மருந்து. சில பெண்கள் பால் சுரக்காமல் அவதிபடுவார்கள். அவர்கள் சுறாபுட்டுடன் சோம்பு கீரை சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.



இப்படி ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது போலவே சின்னச்சின்ன உடற்பயிற்சிகள், வீட்டு வேலைகள் செய்யலாம்.அறுவை சிகிச்சை என்றால் மூன்று மாதம் கழித்து உடற்பயிற்சிகளை டாக்டரின் ஆலோசனையுடன் செய்யலாம்.



சில எளிய உடற்பயிற்சிகள்



மல்லாந்து படுத்துக்கொண்டு முதலில் வலது காலை மட்டும் மேலே உயர்த்த வேண்டும். பிறகு இடது காலை மேலே உயர்த்த வேண்டும். அதன் பிறகு இரண்டு கால்களையும் மேலே உயர்த்த வேண்டும். இது போல் தினமும் பத்து முறை செய்யலாம். வயிறு உப்புசம் குறையும். நின்றுக் கொண்டு இரண்டு கை விரல்களும் கால் விரல்களும் தொடும் அளவு குனிய வேண்டும்.



பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுவது போல் பத்து முறை கீழே உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும். இடுப்பு பகுதிக்கு இது நல்ல பயிற்சி. மேசை மேல் அமர்ந்து வேலை செய்யாமல் கீழே உட்கார்ந்து வேலை செய்யும் போது அது பெல்விக் மற்றும் கர்ப்பப்பையை வலுப்படுத்தும். அதாவது கீழே அமர்ந்து சாப்பிடலாம், காய்கறி நறுக்கலாம், இது போன்ற வேலைகளை கீழே அமர்ந்து செய்யலாம். நேரம் இருந்தால் குழந்தை பிறந்து ஐந்து மாதம் கழித்து நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.


உயிர் தியாகத்தில் உருவான அமராவதி அணை!





திருப்பூர், கரூர் மாவட்டத்தின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்வதில் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை முக்கிய பங்கு வகிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பல கிளை நதிகளாக உருவாகி சின்னாறு அருகே சங்கமித்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து பின்னர் காவிரியில் கலக்கிறது.


சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் அவ்வப்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கில் அமராவதி ஆற்றை ஒட்டிய பல கிராமங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. 1950களில் தமிழகத்தில் வேளாண் உற்பத்தியை பெருக்க பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டம், பவானிசாகர் அணை பாசன திட்டம் என பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது தான் அமராவதி ஆற்றில் ஒரு அணையை கட்டி தண்ணீரை தேக்கினால் அப்போதைய உடுமலை தாலுகாவின் கிழக்கு பகுதி, தாராபுரம், கரூர் பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். அங்குள்ள மண் வளத்திற்கு நெல் விளையும் பூமியாகவே மாற்றமுடியும் என பசுமை புரட்சிக்கு வித்திட்ட சி.சுப்ரமணியம் கூறியுள்ளார்.



அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த ராஜாஜியும் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கி 1953ம் ஆண்டு அணை கட்டும் பணிகள் துவங்கின. பாதி பணிகள் முடிவடைந்திருந்தது. நான்கு பணியாளர்கள் அணை கட்ட தேவையான கற்களை ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு கட்டுமானம் நடந்த இடத்திற்கு சென்றனர்.



அதே வண்டியில் பயணம் செய்த துணை பொறியாளர் பார்த்தசாரதி, பணியாளர்கள் அந்தோணி, ஏசைய்யா, பழனிச்சாமி கவுண்டர், ஆறுமுகம் என 4  பேர் பயணம் செய்துள்ளார். திடீரென அந்த வண்டி கவிழ்ந்து அதில் பயணம் செய்த பணியாளர்களும், பொறியாளரும் கற்களுக்கு மத்தியில் சிக்கி உயிரிழந்தனர்.  திடீரென ஒரு நாள் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் சில காலம் அணை கட்டும் பணி நிறுத்தப்பட்டது.



பின்னர் ஒரு வழியாக 1957ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 90 அடி உயரத்தில் கட்டப்பட்ட இந்த அணையால் தற்போது திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு மூலம் 54 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. அதேபோல் 100க்கும் மேற்பட்ட கிராமங்களும் குடிநீர் வசதி பெறுகிறது. உயிரிழந்தவர்களின் நினைவுகள் காலம் முழுவதும் அழியாமல் இருக்க, அணையிலேயே கல்வெட்டாக பதித்து வைத்துள்ளனர். 


திகார் ஜெயிலில் முன்னாள் உலக அழகி ஒலிவியா!


அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் உலக அழகி ஒலிவியா, டெல்லி திகார் சிறையை சுற்றிப்பார்த்தார்.சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் குறித்து ஒலிவியா கேட்டறிந்தார்.இதையடுத்து, சிறைச்சாலையில் கைதிகளின் கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



இந்நிகழ்ச்சிகளை அவர் கண்டுரசித்தார். நிகழ்ச்சியின் முடிவில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை கைவிடும் வகையிலான உறுதிமொழி எடுக்கப்பட்டது. கைதிகளுடன் சேர்ந்து ஒலிவியாவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.


2 - oliviya miss world


அமெரிக்காவை சேர்ந்தவர் முன்னாள் உலக அழகி ஒலிவியா பிரான்செஸ் கல்போ(21). கடந்த ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், 10 நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்களுக்கான அதிகாரம் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார் ஒலிவியா.



 கடந்த ஞாயிறுக்கிழமை டெல்லியில் நடைபெற்ற எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஒலிவியா கலந்து கொண்டார். முதன்முறையாக இந்தியா வந்துள்ள ஒலிவியா, மகாவீர் குடியிருப்பு பகுதிக்கு சென்று, துப்புரவு பணியில் இருந்து விடுபட்டு சமூக சேவகர்களாக மாறிய பெண்களிடம் கலந்துரையாடினார்.


கூகுள் நிறுவனம் கூகுள் கிளாஸ் என்ற மூக்குக் கண்ணாடி அறிமுகம்!




கூகுள் நிறுவனம் கூகுள் கிளாஸ் என்ற மூக்குக் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்றைய நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் என்னென்ன வசதிகளைத் தருகின்றனவோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தருகிறது கூகுள் கிளாஸ். நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய, நினைவின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுத்து செயல்படக் கூடிய கருவி கூகுள் கிளாஸ்.

கூகுள் கிளாஸ் அம்சங்கள்:

25 இஞ்ச் கம்ப்யூட்டர் ஸ்கிரீனுக்கு இணையானது,


16 ஜிபி சேமிப்பு வசதி,


கூகிள் கிளவுட் சேமிப்பு வசதி,


5 மெகாபிக்ஸல் கேமெரா,


வீடியோ பதிவுக் கருவிகள்,


Wi-Fi,


புளூடூத்,


24 மணி நேர பேட்டரி சேமிப்பு,


42 கிராம் எடை.



இந்தக் கண்ணாடியில் உள்ள மைக்குக்கு அருகே, 'ஒகே. கிளாஸ்' என்று சொன்னதும் உடனடியாக கிளாஸ் செயல்படத் தொடங்கிவிடும். இதில் பாட்டு கேட்பது, திசை அறிவது, வானிலை முன்னறிவிப்பு, செய்தி, மின்னஞ்சல், குறுஞ்செய்தி, சமூக வலைத்தளங்கள் போன்றவற்றை படிக்கலாம், திரும்ப குரல் வழியாகவே அவற்றுக்கு பதில் அனுப்பலாம். இந்த கிளாஸின் வலது பகுதியில் உள்ள சிறிய லென்ஸ் வழியே ஒளிப்படக் கருவியும் வீடியோ எடுக்கும் வசதியும் உள்ளன. 'டேக் எ பிக்சர்' என்று சொன்னால், கிளாஸ் படம் எடுத்துவிடும். மேலும், நீங்கள் பார்க்கும் காட்சியை, உங்கள் நண்பர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பவும் முடியும்.



இந்த கண்ணாடியில் குரல் மூலமாகவே கூகிளில் வழக்கமான தேடலைச் செய்ய முடியும் ஆனால் வலைத்தளங்களை பார்க்க முடியாது. அதற்காக ஒரு ஆண்ட்ராய்ட் கைப்பேசி வைத்துக் கொண்டு இந்தக் கண்ணாடியின் பலனை முழுமையாக அனுபவிக்கலாம். சாலையில் செல்லும்போது இந்தக் கண்ணாடி வழிகாட்டும். டிரைவிங், சைக்கிள் ஓட்டுதல், நடக்கும்போதெல்லாம் இதை பயன்படுத்தலாமாம். குரல் அடையாளம் காணும் வசதி இருப்பதால், வழியறிய டிரைவிங்கை நிறுத்த வேண்டியதில்லை. ஆனால் இதன் காரணமாக டிரைவிங்கின்போது கவனச் சிதறல் ஏற்படலாம். அதனால் விபத்து நிகழ்வது போன்ற பாதுகாப்புப் பிரச்சினைகளை ஏற்படும் என்றும் கூறுகின்றனர். 



இந்திய அஞ்சல் துறை – க்ம்பளிட ரிப்போர்ட்!


நூறாண்டுகளுக்கு முற்பட்ட நீராவி இரயில் எஞ்சினை இரயில்வேத்துறை இன்னமும் பாதுகாத்து வருவது போல், பாரம்பரியமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களைத் தொல்லியல் துறை அடைகாப்பது போல், நமது பெருமைக்குரிய மக்கள் சேவைகளிலொன்றாக எண்ணியாவது தந்தி சேவையைத் தக்க வைத்திருக்கலாம். அதுதான் இல்லை என்றாகி விட்டது. சரி. தபால் சேவையையாவது ஒழுங்காகக் கொடுக்கலாம் அல்லவா? கிளை அலுவலகங்கள் மூடப்படுவதும், ஊழியர் பற்றாக்குறையென்று சங்கங்கள் ஆர்ப்பாட்டம் செய்வதும் அத்துறையில் வாடிக்கையாகிவிட்டது.



இதற்கிடையில் நமது நாட்டின் எந்த மூலை முடுக்குக்கும் ஐம்பது பைசா செலவில் ஒரு கடிதத்தை அனுப்பிவிட முடியும் என்பது ஏழை நடுத்தர மக்களுக்கு எத்தனை சந்தோஷம் தருகின்ற விஷயம் தெரியுமா?



1 - indian post 1

 


அதிலும் தொலை தூரத்தில் இருக்கும் உறவுகளையும், நட்புகளையும் எழுத்தினால் ஸ்பரிசிக்கும் அனுபவம் எத்தனை மகத்தானது. மூன்றரை ரூபாய்க்கு உள்நாட்டு அஞ்சலும், ஐந்து ரூபாயில் மூடிய உறைத் தபாலும் அனுப்ப முடியும் என்பது எவ்வளவு சவுகரியமான விஷயம்.



இன்றைக்கு என்னதான் எஸ்.எம்.எஸ்.ஸýம், ஈ மெயிலும் வந்துவிட்டதென்றாலும், கடிதங்களின் மூலம் தங்கள் உணர்வுகளைப் பரிமாறிக்கொள்ளும் பரவசத்தை அனுபவிப்பவர்கள் இன்றும் இலட்சக்கணக்கில் இருக்கத்தான் செய்கிறார்கள்.


இந்திய அஞ்சல் துறை ‘இந்தியா போஸ்ட்’ (India Post) என்ற பெயரில் செயல்படுகிறது. இது இந்திய அரசினால் செயல்படுத்தப்படும் அஞ்சல் சேவை ஆகும். பல வழிகளில் மக்களுக்குச் சேவை செய்து வருகிறது. உலகில் அதிகமான அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட நாடு இந்தியா.


இந்திய அஞ்சல்துறை மொத்தம் 154,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய துறையாகும்(சீனா இரண்டாவது இடம், 57,000 தபால் அலுவகங்கள்). இதன் பரந்து விரிந்த அலுவலகங்களால் இந்தியாவின் அனைத்து இடங்களும் இணைக்கப்படுகின்றன. இந்திய அஞ்சல் துறையில் மொத்தம் 593,878 (2001ம் வருடத்தின் படி) ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இந்திய அஞ்சல் துறை சிறிய வகை வங்கி சேவைகளிலும் ஈடுபடுகிறது. இதன் மூலம் வங்கி வசதி இல்லாத கிராமங்களும் பயன்பெறுகின்றன.21 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு, சுமார் 6000 நபர்களுக்கு ஒரு அஞ்சல்அலுவலகம் என்ற விகிதத்தில் இது உள்ளது.


வரலாறு


இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி முதன்முதலாக 1764-1766களில் பம்பாய்(மும்பை), சென்னை மற்றும் கல்கத்தா(கொல்கத்தா) மாகாணங்களில் அஞ்சல் சேவையைத் துவக்கியது. வாரன் காஸ்டிங் கவர்னராக இருந்த போது அஞ்சல் சேவை பொது மக்களுக்காகவும் செயல்படத் துவங்கியது. அப்போது 100 மைல் தூரத்துக்குட்பட்ட கடிதங்களுக்கு 2 அணா (ஒரு ரூபாயில் எட்டில் ஒரு பங்கு) வசூலிக்கப்பட்ட்து.
அஞ்சல் சேவையின் அவசியத்தை உணர்ந்தவுடன் பிறகு அனைத்து மாகாணங்களிலும் அஞ்சல் துறை செயல்படத் தொடங்கியது. 1839ல் வடமேற்கு, 1860ல் பஞ்சாப், 1861ல் பர்மா, 1866ல் மத்திய மாகாணம், 1869ல் சிந்து, 1871ல் ராஜபுதனா, 1873ல் அஸ்ஸாம், 1877ல் பீகார், 1878ல் கிழக்கு வங்காளம் ஆகிய அஞ்சல் வட்டங்கள் துவங்கப்பட்டு அஞ்சல்துறை செயல்படத் தொடங்கியது. பின் 1914ம் ஆண்டுவாக்கில் இந்த அஞ்சல் வட்டங்கள் இணைக்கப்பட்டு 7 அஞ்சல் வட்டங்களாகக் குறைக்கப்பட்டன. 



வங்காளம்&அஸ்ஸாம், பிகார்&ஒரிஸ்ஸா, பம்பாய்(சிந்து உள்ளடக்கியது), பர்மா, மத்திய, சென்னை, பஞ்சாப்&வடமேற்கு மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகியனவாக இணைக்கப்பட்டன. தபால்தலைகளின் உபயோகம் 1 ஜூலை 1852ல் சிந்து மாவட்டதில் அறிமுகப்படுத்தப்பட்டது. தபால்தலைகள் வட்டவடிவில் இருந்தன. பின்னர் 1854ல் பேரரசி விக்டோரியாவின் உருவம் பொரிக்கப்பட்ட தபால் தலைகள் கல்கத்தாவில் அச்சிடப்பட்டு EAST INDIA POSTAGE என்ற பெயருடன் இந்தியா முழுவதும் உபயோகத்துக்கு வந்தன.
1 india post.2

 

துறை அமைப்பு


இந்திய அஞ்சல் துறை இந்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டது. இந்தியாவில் மொத்தம் 22 அஞ்சல் வட்டங்கள் தற்போது உள்ளன. ஒவ்வொரு அஞ்சல் வட்டமும் தலைமை அஞ்சல் அதிகாரியின் கீழ் இயங்குகின்றன. இந்த அஞ்சல் வட்டங்கள் தவிர இந்திய இராணுவத்தின் அஞ்சல்சேவைக்காக ஒரு சிறப்பு அஞ்சல் வட்டமும் செயல்படுகிறது

அஞ்சல் அலுவலகங்களின் வகைகள்

இந்தியாவில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை
தலைமை அஞ்சல் அலுவலகங்கள்
துணை அஞ்சல் அலுவலகங்கள்
புற உறுப்பான துணை அஞ்சல் அலுவலகங்கள்
புற உறுப்பான கிளை அஞ்சல் அலுவலகங்கள்


அஞ்சல் அலுவலகச் சேவைகள்

இந்தியத் அஞ்சல் துறையின் அஞ்சல் சேவைகள் ஆறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை

ராஜதானிப் பிரிவு – தேசியத் தலைநகரத்திலிருந்து மாநிலங்களின் தலைநகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் அஞ்சல்கள் இவை. இவற்றைப் போடுவதற்கான அஞ்சல் பெட்டி மஞ்சள் நிறத்தில் இருக்கும்.


பச்சைப் பிரிவு – தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டத் அஞ்சல் நிலையங்களில் இருந்து பெரும் நகரங்களுக்கு எடுத்துச் செல்லும் தபால்கள் இவ்வகை. இவற்றைப் போடுவதற்கான அஞ்சல் பெட்டி பச்சை நிறத்தில் இருக்கும்.
பெருநகரப் பிரிவு – பெங்களூர் , ஐதராபாத் , கொல்கத்தா , சென்னை , டெல்லி , மும்பை ஆகிய பெருநகரங்களுக்கிடையே செல்லும் அஞ்சல்கள் இவ்வகை. இவற்றைப் போடுவதற்கான அஞ்சல் பெட்டி நீல நிறத்தில் இருக்கும்.


வணிகப் பிரிவு – அதிக அளவு அஞ்சல்களை அனுப்புகிற வணிகர்களுக்காக அமைக்கப்பட்டது. பதிவு அஞ்சல் முதலான பல பிரிவுகளில் இந்த அஞ்சல்கள் மொத்தமாக ஒரு சில தபால் நிலையங்களில் பெறப்படும்.


பருவ இதழ்கள் பிரிவு – அஞ்சல் வழியில் வார, மாத அச்சிதழ்களைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு பத்திரிகை அலுவலகங்கள் அனுப்பும் அஞ்சல்கள் இவ்வகையைச் சார்ந்தது. ஒவ்வொரு இதழுக்கும் குறிப்பிட்ட நாட்கள் ஒதுக்கப்பட்டு அந்த நாட்களில் மட்டும் பத்திரிகை அஞ்சல்கள் பெறப்படுகின்றன.


மொத்தத் அஞ்சல் பிரிவு – பெரும் வணிகர்களிடமிருந்து பெறப்படும் அதிகமான அஞ்சல்கள் அஞ்சல் பெட்டிக்கோ அல்லது அஞ்சலகத்திற்கோ செல்லாமல் அஞ்சல் பையில் இடப்பட்டு அஞ்சல் பிரிப்பகத்திற்கு நேரடியாக எடுத்துச் செல்லப்படும்


அஞ்சல் குறியீட்டு எண்

அஞ்சல்கள் வேகமாகவும் குழப்பமின்றிப் பிரிக்கப்பட்டு குறிப்பிட்ட பகுதிக்கு அனுப்புவதற்கு வசதியாக அஞ்சல் குறியீட்டு எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. 1972 -ல் கொண்டு வரப்பட்ட இந்தக் குறியீட்டு எண் திட்டத்தில் 6 இலக்கங்கள் இருக்கும். முதல் இலக்கம் அதன் மண்டலத்தைக் குறிக்கும். இரண்டாவது இலக்கம் துணை மண்டலத்தைக் குறிக்கும். மூன்றாவது இலக்கம் அந்த அஞ்சல் பிரிப்பக மாவட்டத்தைக் குறிக்கும். கடைசி மூன்று இலக்கங்கள் அந்த அஞ்சல் வட்டத்தின் அஞ்சல் நிலையத்தைக் குறிக்கும்.

உதாரணமாக, * புதுடெல்லி , ஜம்மு – காஷ்மீர் , பஞ்சாப் , இமாசலப் பிரதேசம் , ஹரியானா, சண்டிகர் ஆகியவைகளுக்கு தொடக்க எண் 1 ஆக இருக்கிறது.
உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட் மாநிலத்திற்கு தொடக்க எண்ணாக 2 இருக்கிறது.


ராஜஸ்தான் , குஜராத் , டையூ -டாமன், நாகர்ஹவேலி பகுதிகளுக்கு தொடக்க எண்ணாக 3 இருக்கிறது.


மத்தியப் பிரதேசம் , கோவா , மகாராஷ்டிரம் ஆகியவைகளுக்கு தொடக்க எண்ணாக 4 இருக்கிறது.


ஆந்திரப் பிரதேசம் , கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு தொடக்க எண்ணாக 5 இருக்கிறது.


தமிழ்நாடு , கேரளா , இலட்சத்தீவு , மினிகாய்த்தீவு ஆகிய பகுதிகளுக்கு தொடக்க எண்ணாக 6 இருக்கிறது.


ஒரிசா , அந்தமான் – நிகோபார் , மேற்கு வங்காளம் , மிசோரம் , மேகாலயா , மணிப்பூர் , நாகலாந்து , அசாம் , அருணாச்சலப் பிரதேசம் , திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு தொடக்க எண்ணாக 7 இருக்கிறது.


பீகார் , ஜார்கண்ட் மாநிலங்களுக்கு தொடக்க எண்ணாக 8 இருக்கிறது.



பலதரப்பட்ட அஞ்சல் சேவைகள்

பொதுவாக அனைத்து அஞ்சல் நிலையங்களும் பின்வரும் சேவைகளில் ஈடுபடுகின்றன.

அஞ்சல்தலைகள் விற்பனை, அஞ்சல் அட்டை மற்றும் கடிதஉறைகள் விற்பனை

பதிவுத் அஞ்சல்கள் (Registered post) அனுப்புதல்


அஞ்சல் மூலம் பணம் அனுப்புதல் (Money order)


அஞ்சல் மூலம் பொருட்கள் அனுப்புதல் (Booking parcels)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அஞ்சல் சேவை


செயற்கைக் கோள் வழியில் பணவிடை அனுப்பும் வசதி


மின்னணு அஞ்சல்


இணைய வழி பில் தொகை செலுத்தல்


புத்தகங்கள் விற்பனை


இதர சேவைகள்

இந்தியாவில் அஞ்சல் அலுவலகங்கள் தபால் அனுப்பும் சேவைகளில் மட்டுமல்லாது கீழ்க்கண்ட பிற வசதிகளையும் பொதுமக்களுக்குத் தருகின்றன.

பொதுசேமநலநிதி
தேசிய சேமிப்புப் பத்திரம்
வங்கி சேமிப்புக் கணக்கு
மாத வருவாய்த் திட்டம்
வைப்புத் தொகைத் திட்டங்கள்
கடவுச்சீட்டு விண்ணப்பம்
தங்கக் காசு விற்பனை(தற்போது இல்லை)
காப்பீட்டுத் திட்டம். 



என பலசேவைகளிலும் கால் பதித்துள்ள இந்திய அஞ்சல் துறை, புதியதாக வங்கி ஒன்றைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளதாம். அதற்கு பதிலாக, தனது அடிப்படைச் சேவையான தபால் சேவையைப் பழையபடி சரியாக வழங்குவதையே இந்தியத் தபால் துறை முக்கிய நோக்கமாகக் கொள்ளவேண்டும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top