.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 30 September 2013

மீண்டும் டி.டி.எச்.-ஐ கையில் எடுக்கும் கமல் - விஸ்வரூபம்-2வை வெளியிட திட்டம்!!

இந்தமுறை விஸ்வரூபம்-2 படத்தை டி.டி.எச்.ல் வெளியிடும் முடிவில் உறுதியாக இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவுக்கு ஒவ்வ‌ொரு முறையும் புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வருபவர்களில் நடிகர் கமல்ஹாசனுக்கு முக்கிய இடம் உண்டு. அந்தவகையில் இந்தாண்டு துவக்கத்தில் கமல் இயக்கி, நடித்து, தயாரித்த விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். தொழில்நுட்பத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டார். ஆனால் இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனால் தனது முடிவை கைவிட்டார் கமல். இந்நிலையில் தற்போது விஸ்வரூபம்-2 படத்தை இயக்கி வரும் கமல், இந்தமுறை படத்தை டி.டி.எச்.ல் வெளியிடும் முடிவில் உறுதியாக இருக்கிறார்.   இந்திய திரைப்பட தொழில் வர்த்தக கூட்டமைப்பின்...

அடிமை எழுப்பிய புகழ்க்கோபுரம்- குதுப்மினார்- சுற்றுலாத்தலங்கள்!

      அடிமை எழுப்பிய புகழ்க்கோபுரம்- குதுப்மினார் உலகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள  யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....   அடிமை எழுப்பிய புகழ்க்கோபுரம்- குதுப்மினார்   டெல்லி குதுப்மினார். இந்தியாவின் மிகஉயர்ந்த கோபுரம். செம்மண்-பாறைக் கற்களால் உருவான அரிய பொக்கிஷம். இதன் உயரம் 72.5 மீட்டர் (சுமார் 238அடி). உயர்ந்து நிற்கும் குதுப்மினார்,...

இந்தி, தமிழ் உட்பட 5 மொழிகளில் ஆன்லைனில் படிக்க புதிய திட்டம்!

 இந்தியாவின் உயர் கல்வி துறையில் தற்போதுள்ள புதிய சவால் தரமான கல்விதான். நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்கள், ஆயிரக்கணக்கான பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் உருவாகியுள்ளன. ஆனால், அதற்கு ஏற்றவாறு உயர்கல்வியில் பெரிய அளவில் தரம் இல்லை. உயர்கல்வி துறை தரம் மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் எடுத்து வருகிறது. இதற்காக தேசிய தொழில்நுட்ப வழி கல்வி மேம்பாட்டு திட்டம் (என்பிடிஇஎல்) 2003ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் இலவசமாக அனைத்து வகையான தரமான பாடத்திட்டங்கள் வழங்குவதே முக்கிய நோக்கம்.  http://nptel.iitm.ac.in  மற்றும் http://.youtube.com/iit  என்ற இணையதள முகவரியில் ...

பிசிசிஐயின் தலைவராக சீனிவாசன் போட்டியின்றி மீண்டும் தேர்வு!

கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.இதில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் வேறு எந்த நிர்வாகிகளும் வேட்பு மனுதாக்கல் செய்யாத நிலையில் சீனிவாசன் பி.சி.சி.ஐ தலைவராக போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து என் சீனிவாசனுக்கு அடுத்த ஓராண்டு காலம் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது.   இன்று காலை சென்னையில் நடைபெற்ற பிசிசிஐயின் பொதுக்குழு கூட்டத்தில் சீனிவாசன் போட்டியின்றி மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தலைவர் பதவிக்கு சீனிவாசனை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடவில்லை. கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தற்போது 3வது முறையாக சீனிவாசன்...

கடவுள் பக்தி (நீதிக்கதை)!

ஒரு ஊரில் கடவுள் மீது அதிக பக்திக் கொண்ட ஒருவன் இருந்தான்.அவன் பெயர் முருகன்.அவனுக்கு நாதன் என்னும் நண்பன் ஒருவன் இருந்தான். நாதன் நாத்திகவாதி.கடவுள் என்று ஒன்றும் இல்லை என்று சொல்லித் திரிபவன். ஒரு நாள் நாதன்,முருகனிடம் ' நீ கடவுளை எனக்குக் காட்டு....நான் ஒப்புக்கொள்கிறேன் ' என்றான். என்னுடன் இரு.நான் உனக்கு கடவுளைக் காட்டுகிறேன் என்றான் முருகன். அதன்படியே நாதன் முருகன் வீட்டிற்கு வந்தான்,பல மணிநேரம் ஆகியும் இறைவன் வரவில்லை. நாதன், முருகனிடம் ' பசிக்கிறது என்றான். நீ சொல்வது பொய்- என்றான் முருகன். இல்லை உண்மையிலேயே எனக்கு பசிக்கிறது. அப்படியானால் எனக்கு பசியைக் காட்டு. பசியை எப்படி காட்டமுடியும். அதன் நிறம். பசிக்கு ஏது...
Page 1 of 87912345Next

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top