ஒரு ஊரை ஒரு அரசன் ஆண்டு வந்தான். அந்த ஊர் மக்கள் அனைவரும் சுயநலவாதிகளாகவே இருந்தனர்.யாருக்கும் எந்த உதவியும் செய்யாமல் ...
தங்கள் நலத்தையே எண்ணி,,அதனால் பிறர் துன்பம் அடைந்தாலும் கவலைப்படாமல் வாழ்ந்து வந்தனர்.
அவர்களை திருத்த என்ன செய்யலாம் என மன்னன் நீண்ட நேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.
அந்த ஊருக்குள் வரும் முக்கியமான சாலை ஒன்றிற்கு குறுக்கே ஒரு பெரிய பாறாங்கல்லை போட்டு வைத்தான்.
மறுநாள் மக்கள் ...அவ்வழியில் நடக்கையில் ..அந்த கல்லின் மீது ஏறியே தங்கள்
பயணத்தை மேற்கொண்டனர்.ஒருவருக்காவது வழியில் தடையாயிருக்கும்
அந்தக் கல்லை நீக்கி பின்னால் வருபவர்களுக்கு உதவ வேண்டும் என்று தோன்றவில்லை.
அந்த ஊரில் இருந்த மருதன் என்ற ஒருவன் மட்டும் இந்த கல்லை எடுத்துப்
போட்டால் ....மக்கள் கஷ்டப் படாமல் நடப்பார்கள் என நினைத்து..அவன் மிகவும்
கஷ்டப்பட்டு ...யாருமே உதவிக்கு வராத நிலையில் ...அதை எடுத்து ஒரு ஒரத்தில் போட்டான்.
கல் இருந்த இடத்திற்கு கீழே மன்னன் பல தங்கக்காசுகளை வைத்து ..இதை அகற்றியவனுக்கு கடவுளின் பரிசு என்று எழுதியிருந்தான்.
மருதனுக்கு அக்காசுகள் கிடைத்ததும் மக்கள் மனம் திருந்த
ஆரம்பித்தனர்.பிறருக்கு நன்மை செய்தால் கடவுள் நமக்கு உதவுவார் என்ற எண்ணம்
ஏற்பட
அனைவரும் ஒருவருக்கொருவர் உதவ ஆரம்பித்தனர்.
பிறருக்கு உதவி செய்பவனுக்கு கடவுளின் உதவியும் கருணையும் கிடைக்கும்.