.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 26 September 2013

குரங்கும்..முதலையும் (நீதிக்கதைகள் )




ஒரு ஊருக்கு வெளியே ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.ஆற்றின் கரையில் ஒரு நாவல் மரம்.அதில் இருந்த நாவல் பழங்களைத் தின்று குரங்கு ஒன்று உயிர் வாழ்ந்து வந்தது.


ஒருநாள் ஆற்றில் இருந்த முதலை ஒன்று நாவல் பழம் தின்று கொண்டிருந்த குரங்கைப் பார்த்து'நாவல் பழம் மிகவும் ருசியானதா?' எனக் கேட்டது.


குரங்கும்.."முதலையாரே! உமக்கும் சில நாவல் பழம் பறித்துத் தருகிறேன். சாப்பிட்டுப் பாருங்கள்" என்று நாவல் பழங்கள் சிலவற்றை பறித்து ஆற்றில் வாயைப் பிளந்துக் கொண்டிருந்த முதலையின் வாயில் போட்டது.முதலையும் பழத்தை ருசித்து விட்டு..குரங்கிடம் மேலும் சில பழங்களை தன் மனைவிக்கு வாங்கிச் சென்றது.


முதலையின் மனைவி அப்பழங்களை சாப்பிட்டு விட்டு முதலையிடம்..'இப்பழங்கள் இவ்வளவு இனிக்கிறதே..இதே பழத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அந்த குரங்கின் குடல் எவ்வளவு இனிக்கும்! அது எனக்கு வேண்டும்." என்றது.


முதலையும் குரங்கிடம் வந்து நயவஞ்சகமாக..'குரங்கே!..நாவல் பழம் தந்த உனக்கு என் மனைவி விருந்திட விரும்புகிறாள்..வா.." என்றதும்.குரங்கும் மகிழ்ந்து..முதலையின் முதுகில் உட்கார்ந்து ஆற்றில்..முதலையின் இருப்பிடம் செல்லத் தொடங்கியது.
 

பாதி தூரம் வந்ததும்..இனி குரங்கால் நீரில் தனித்து ஓட முடியாது என முதலை..'மட குரங்கே!..உண்மையில் விருந்து உனக்கல்ல. என் மனைவிக்குத் தான்.அவள்தான் உன் குடலை சாப்பிட விரும்புகிறாள்" என்றது.


சற்று நேரம் யோசித்த குரங்கு..'முதலையே அதை முதலிலேயே சொல்லக் கூடாதா..நான் என் குடலை கழட்டி மரத்தில் அல்லவா வைத்திருக்கிறேன்..திரும்ப மரத்திற்கு என்னைக் கொண்டு போ. குடலை எடுத்து மாட்டிக்கொண்டு வருகிறேன்..' என்றது.


முதலையும் யோசிக்காது..குரங்கு உண்மை சொல்வதாக எண்ணிக் கொண்டு அதை திரும்ப மரத்திற்கு அழைத்து வந்தது


வேகமாக மரத்தில் ஏறிய குரங்கு..'முட்டாள் முதலையே. குடலை உடலிலிருந்து கழட்டி மாட்ட முடியுமா? உன்னை நம்பிய என்னை ஏமாற்றிவிட்டாயே..நியாயமா? என்று கேட்டது.


முதலையும் ஏமாந்து திரும்பியது.


நாமும் யாரையும் உடன் நம்பக்கூடாது. அவர்கள் நல்லவர்களா..கெட்டவர்களா என நட்பு கொள்ளுமுன் பார்க்க வேண்டும்.


ஆபத்துக் காலத்தில் நம் மூளையை உபயோகித்து..ஆபத்திலிருந்து விடுபட வேண்டும்.
 

Wednesday, 25 September 2013

முகத்தை பொலிவாக்கும் கற்றாலை ஜெல்!

Aloe vera gel for face bright


அழகை பராமரிக்க பெண்கள் எடுத்துக்கொள்ளும் பல சிகிச்சைகளில் கற்றாலையும் ஒன்று.. பொதுவாக அனைவரும் இதனை அழகுக்காகவும், தோல்  பராமரிப்பிற்காகவும் ஆரோக்கிய உடல் நலத்துக்காகவும் பயன்படுத்துகின்றனர். கற்றாலை மூலிகையாக பயன்படுகிறது கற்றாலையிலிருந்து  தயாரிக்கப்படும் மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருள் கற்றாலை..


கற்றாலையை தோல், உள்ளுறுப்புகள் மற்றும் பிற பகுதிகளில் ஏற்படும் கோளாறுகளை குணப்படுத்த பயன்படுத்தலாம். கற்றாலையில் பாலிசாக்கரைடுகள், லெக்டின், மேன்னஸ் போன்ற கலவைகளை கொண்டுள்ளது. கற்றாலையில் முக்கிய உறுப்பாக தண்ணீர் உள்ளது. இது தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் பல செயல்பாட்டு பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இதை அழகுக்கு பயன்படுத்தும் க்ரீமாகவும், முகம் கழுகும் போது உபயோகிக்கும் பேஸ் வாஸாகவும் பயன்படுத்தலாம்.



அலோவேராவின் நன்மைகள்



இது தோலுக்கு ஈரப்பதம் ஏற்படுத்தக்கூடிய சிறந்த மாய்ஸ்சரைசராக பயன்படுத்துகின்றனர். கற்றாலை ஜெல்லில் ஹைட்ரேட்டுகள்  கொண்டுள்ளதால்  சருமத்தை இளமையாக்கி, உங்களின் சருமத்தை எந்த நேரங்களில் பார்த்தாலும் புதியதாக தேற்றமளிக்கும் தனமையை கொண்டுள்ளது. கற்றாலையில்  எதிர்ப்பு நுண்ணுயிர் பண்புகளை கொண்டுள்ளதால் முகத்தில் தோன்றும் ஆக்னோ, பருக்கள் வராமல் தடுக்கும். இதில் இயற்கையாக நிகழ்வதற்கு  எதிராக எதிர்ப்பு ஆக்சிஜனேற்றத்தை கொண்டுள்ளதால் வயது மூப்பிலிருந்து சருமத்தை தக்கவைத்துக்கொள்கிறது.




அலோ வேரா உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் ஏற்படக்கூடிய வலிகளையும், வீக்கங்களையும் குறைப்பதற்கு பெரிதும் பயன்படுகிறது. இது  மருத்துவரீதியாக எரிகாயங்கள், பூச்சி கடி, எக்ஸிமா, வெட்டுக்கள் மற்றும் காயங்களை குணப்படுத்த பயன்படுகிறது. வீட்டிலேயே கற்றாலை  பயன்படுத்தி ஜெல் தயாரித்து ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து முகத்திறக்கு அவ்வப்போது பயன்படுத்தலாம். 


முக அழகிற்கு சில டிப்ஸ்!

Stark, austere beauty facial Tips



முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாறுடன் கடலை மாவு சேர்த்து தடவலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள்   இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும். வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை  காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால்,  முகத்தில் வேர்க்குரு வராமல், வெயிலில் கருத்துப் போகாமல் இருக்கலாம்.



முகச்சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்து உடம்பிற்கு தடவி. பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல்   பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ  வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.



தினமும் இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயத்தம் பருப்பு மாவை கலந்து  முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் கொண்டு ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும்  மறையும். ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.



முகத்தில் உள்ள முடிகளை அகற்ற முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைப்போல் ஆனதும் தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி  சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.

சருமத்தில் ரோமமா? நீக்கலாம்... தடுக்கலாம்!

Hair of the skin? Delete ... Prevent!




நடை, உடை, பாவனை, சிந்தனை, செயல் என எல்லாவற்றிலும் ஆண்களைப் போல இருக்க நினைக்கிற பெண்களும் ஒரு விஷயத் தில் அதை  வெறுக்கவே செய்கிறார்கள். அது ஆண்களைப் போல சருமத்தில் வளரும் தேவையற்ற ரோமங்கள்! பெண்மைக்குப்  பெரிய சவாலான இந்தப்  பிரச்னைக்கு, வாக்சிங், திரெடிங், இன்ஸ்டன்ட் கிரீம், லேசர் என எத்தனையோ சிகிச்சைகள் உண்டு அழ குத் துறையில். அத்தனையும்  பாதுகாப்பானவையா என்பதுதான் கேள்வியே... சருமத்தில் வளரும் தேவையற்ற ரோமங்களை  நீக்க வும், வளர்ச்சியைத் தடுக்கவும் இயற்கை அழகு  சிகிச்சையில் ஏகப்பட்ட வழிகள் உள்ளன என்கிறார் அழகியல் நிபுணர் ராஜம் முரளி.


‘‘பூப்பெய்தும் வயதில் பெரும்பாலான பெண்கள் சந்திக்கிற பிரச்னைதான் இது. ஹார்மோன்களின் இயக்கம் சீராக இல்லாமல்  போவதே முக்கிய  காரணம். உணவுப் பழக்கம், இயற்கைக்கு மாறான வாழ்க்கை முறை, பிசிஓடி எனப்படுகிற மருத்துவப் பிரச்னை  என வேறு காரணங்களும் இதன்  பின்னணியில் உண்டு. இள வயதிலிருந்தே சற்று எச்சரிக்கையாக இருந்தால், ஆரம்பத்திலேயே இந் தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்’’ என்கிற  ராஜம், அதற்கான வழிகளையும் காட்டுகிறார்.



பியூமிஸ் ஸ்டோன் எனக் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கவும். சந்தனக் கல்லில் சந்தனத்தை இழைத்து அந்த பியூமிஸ் ஸ்டோ னில் தடவி  வைக்கவும். ரோமங்களை நீக்க வேண்டிய பகுதியை முதலில் நன்கு கழுவித் துடைக்கவும்.  கடலை மாவு, பார்லி பவு டர், தேன் மூன்றும் தலா 1  டீஸ்பூன் அளவு எடுத்து, சில துளிகள் தண்ணீர் விட்டுக் கெட்டியாகக் குழைத்து, ரோமம் நீக்க வேண் டிய சருமப் பகுதியில் திக்காக தடவவும். அரை  மணி நேரம் ஊற விட்டு, அது காய ஆரம்பித்ததும், தண்ணீரைத் தெளித்து, சந்த னம் தடவி வைத்த பியூமிஸ் ஸ்டோனால், மிக மென்மையாக  ரோமத்தின் எதிர் திசையில் தேய்க்கவும். பிறகு அந்த இடத்தைக் கழுவ வும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் முடி வளர்ச்சியின் வேகம்  குறைந்து, வேர்க்கால்கள் பலவீனமடையும்.



விரளி மஞ்சள், வசம்பு, கோரைக் கிழங்கு, குப்பைமேனியை நன்கு காய வைத்து, சம அளவு எடுத்துக் கலந்து, நீர் விட்டு பேஸ்ட்  போலச் செய்து,  உடல் முழுக்கத் தடவவும். சிறிது நேரம் அப்படியே விட்டு, எதிர் திசையில் தேய்த்துக் குளிக்கவும். எரிச்சலாக  உணர்ந்தால் குளிர்ந்த பாலோ, தயிரோ,  தேங்காய் எண்ணெயோ தடவிக் குளிக்கலாம்.



பெண் குழந்தைகளுக்குப் பிறக்கும்போதே சருமத்தில் நிறைய ரோமங்கள் இருப்பதைப் பார்க்கலாம். கோதுமை மாவில் 2 டீஸ்பூன்  வெல்லத் தண்ணீர்  கலந்து, பேக் மாதிரி செய்து, குழந்தைகளின் முதுகில் தடவி, காய்ந்ததும், மென்மையாக உரித்தெடுத்து விடலாம்.  தொடர்ந்து இப்படிச் செய்தால், பெண்  குழந்தைகள் பருவமடையும் போது, ரோமப் பிரச்னை தீவிரமாகாமலிருக்கும்.



சம்பா கோதுமை மாவு, கஸ்தூரி மஞ்சள் தூள், வெட்டிவேர் தூள், நித்யமல்லிச் செடியின் வேரைக் காய வைத்து அரைத்த தூள்  எல்லாம் சம அளவு  கலந்து கொள்ளவும். தினமும் குளிக்கும் போது, மஞ்சள் மாதிரி இந்தக் கலவையை உடலில் தேய்த்துக் குளித் தால் ரோம வளர்ச்சி கட்டுப்படும்.



செய்யக்கூடாதவை...



சருமத்தில் தேவையற்ற ரோம வளர்ச்சி இருந்தால் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் மாதவிலக்கு சுழற்சிதான். அது சரியில்லாம லிருப்பது  உடலில் ஹார்மோன் கோளாறு இருப்பதற்கான அறிகுறி. எனவே அதற்கே முதல் சிகிச்சை.



கத்தரிக்கோல், ரேசர் போன்ற எந்தக் கருவியையும் உபயோகித்து ரோமங்களை நீக்க முயற்சிக்க வேண்டாம். அப்படிச் செய்தால்,  ரோமங்களை நீக்கிய  இடம், தடித்து, கருப்பதுடன், ரோம வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும். கெமிக்கல் கலந்த ஹேர் ரிமூவிங்  கிரீம்களை உபயோகிப்பதும் ரோம  வளர்ச்சியை மேலும் அதிகரிக்கச் செய்யும்.



ஏற்கனவே கிரீம் மாதிரியானவற்றைக் கொண்டு ரோமங்களை நீக்கியவர்களுக்கு  சருமத்தின் சில இடங்களில் கரும்புள்ளிகள் மாதிரி  நின்று விடும்.  அந்த இடங்களை அப்படியே வறண்டு போகவிடாமல், வாரம் ஒரு முறை உச்சி முதல் பாதம் வரை எண்ணெய் வை த்து, ஊறிக் குளிப்பது மூலம்  ஓரளவு நிவாரணம் காணலாம்.



பிளீச்சிங் செய்வதால் சருமத்தின் மெல்லிய ரோமங்கள் சரும நிறத்துக்கே மாறும். அதனால் ரோம வளர்ச்சி அத்தனை அசிங்கமாகத்  தெரியாமல்  தற்காலிகமாக மறைக்கப்படும். ஆனால், பிளீச்சின் தீவிரம் குறையக் குறைய, அதாவது, நான்கைந்து நாள்களில் மறுபடி  ரோமங்கள் தம் பழைய  நிறத்துக்குத் திரும்பும். கெமிக்கல் கலந்த கிரீம் கொண்டு அடிக்கடி பிளீச் செய்வது சருமத்துக்கும் கேடு.


குடல் பிரச்சனைகளைத் தீர்க்கும் மணத்தக்காளி கீரை!

 The juice of black nightshade is sometimes used to treat fever and alleviate pain.




அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளிக்கு சிறப்பான இடம் உண்டு. மணத்தக்காளி கீரையை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்து சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போது அதில் மணத்தக்காளி கீரையை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளி நிகரற்ற மூலிகையாகப் பயன்படுகிறது.


வயிற்றிலும், வாயிலும் தோன்றும் புண்களை உடனடியாக சிகிச்சை செய்து குணப்படுத்திக் கொள்ளாவிட்டால் பல வீபரீதமான விளைவுகள் ஏற்படக்கூடும். மிக மோசமான நிலையை அடைந்து விட்ட குடற்புண்ணைக்கூட தொடர்ந்து மணத்தக்காளிக் கீரையை சாப்பிட்டு வருவதன் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தி விடலாம். குடற்புண், வாய் புண் அதிகமாக இருந்தால் மணத்தக்காளி கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு போல வைத்து சாப்பிடவேண்டும்.



தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல குணம் பெறலாம். உடலில் தோன்றும் கரப்பான் வகை பிணிகளுக்கும் மணத்தக்காளி நல்ல விதத்தில் பன்படுகிறது. நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. கல்லீரல் நோயை குணப்படுத்தி ரத்தத்திற்கு தேவையான சிவப்பணுக்களை உருவாக்குகிறது. உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளியை சமைத்து சாப்பிட்டால் உடல் சூட்டை தணிந்து குளிர்ச்சியாக்கும். இந்தக்கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது..



மணத்தக்காளி கீரை குடல் பிரச்சனைகளை சரிபடுத்துவதோடு மட்டுமல்லாமல், அஜீரணம், வயிறு சம்பந்தமான பிரச்சனைகள், ஆகியவற்றையும் சரிசெய்கிறது. மணத்தக்காளி கீரையின் சாறு காய்ச்சல், காய்ச்சலால் ஏற்படும் கை கால் வலிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மணத்தக்காளியை அழகுக்காக பயன்படுத்துகின்றனர். சர்க்கரை நோய் உள்ளவர்கள் மணத்தக்காளியை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயிலிருந்து குணம் பெறலாம்.



வடஇந்தியாவில் மஞ்சள் காமாலை, கல்லீரல் தொடர்பான வியாதிகளை குணப்படுத்த மணத்தக்காளியின் பழம் மற்றும் கீரைகளை வேகவைத்து அதன் சாற்றை பருகுகின்றனர். தோலில் ஏற்படும் அலர்ஜி வெயிலுக்கு ஏற்படும் கட்டிகள், தோல் அரிப்பு போன்றவற்றை சரிபடுத்த கீரையை சாறாக பிழிந்து அதன்மேல் தேய்க்க வேண்டும். காபி தயாரிக்கும் போது கீரையின் தண்டு, இலை சேர்த்து காபி தயாரித்து குடிக்கலாம். ஏனெனில் காயங்கள், புற்றுநோய் புண்களை ஆற்றும் வல்லமை கொண்டது மணத்தக்காளி கீரை...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top