.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 23 September 2013

தெய்வீக திருவண்ணாமலை! சுற்றுலாத்தலம்!

 தெய்வீக திருவண்ணாமலை திருவண்ணாமலை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலைநகராட்சி ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தின் தலைநகரும் இதுவே ஆகும். புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது. ஸ்ரீ அருணாசலேசுவரர் திருக்கோவில். திருவண்ணாமலையில் இருக்கும் ஸ்ரீ அருணாசலேசுவரர் திருக்கோவில். மற்ற இடங்களில் நாம் மலைமேல் சுவாமி இருப்பதாக கேள்வி பட்டிருப்போம், ஆனால் இங்கு மலையே சுவாமியாக இருப்பது தான் விசேஷம். இந்த மலையின் சுற்றளவு 14 கிலோ மீட்டர்.  இந்த மலையானது கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன்...

6 மெழுகுவர்த்திகள்! திரைவிமர்சனம்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு எப்படியாவது தமிழ் சினிமாவில் வெற்றி நாயகர்கள் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் '6 மெழுகுவர்த்தி' படத்தை தயாரித்து, நடித்துள்ளார் ஷாம். ஷாம்- பூனம் தம்பதியர் தங்களின் ஒரே மகனின் 6வது பிறந்த நாளை கொண்டாடி விட்டு கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு மகனை தவற விடுகிறார்கள். தொலைந்து போன மகனை தேடி அலைகிறார்கள். கிடைக்காத சூழ்நிலையில் காவல் துறையில் தகவல் தெரிவிக்கிறார்கள். காவல்துறையினர் இரண்டு நாட்களாக தேடியும் கிடைக்காததால், குழந்தைகளை கடத்தும் கும்பல்களிடம் அழைத்துச் செல்லும்படி ஒரு கான்ஸ்டபிளிடம் சொல்லி அனுப்பி வைக்கிறார் காவல்துறை ஆய்வாளர். அங்கு சென்று விசாரித்தபோது ஷாமின் மகனை கடத்தல் கும்பல்...

கர்ப்பமாக இருக்கும் போது தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்!

ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பம் அடைந்து ஒரு குழந்தையை பெற்று எடுத்தால் தான் முழுமை பெறுகிறாள். ஆனால் அது லேசுபட்ட விடயமல்ல. கருவுற்று ஒரு குழந்தையை பெற்று எடுப்பதற்குள் ஒரு பெண் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் பல உள்ளன. அவைகளை எல்லாம் ஒரே பட்டியலில் வகைப்படுத்தி விட முடியாது.   அவைகளை தெரிந்து கொண்டால், கர்ப்ப காலத்தில் பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதனால் உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்டு உங்களுக்கே வியப்பு ஏற்படும். ஆனால் அவைகளை கண்டு பயப்பட தேவையில்லை. அவைகளில் பலவகைகள் சாதாரண மாற்றங்களே. இதனைப் பற்றி மேலும் அறிய விலாவரியாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.  கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு போதுமான நீர்ச்சத்து கிடைக்க அதிகமாக தண்ணீர் குடித்தாக வேண்டும். அப்படி அதிக அளவில் நீரைக் குடிப்பதனால், தண்ணீரை பார்த்தாலே அலுப்புத்...

மருதநாயகத்தை தூசு தட்டுகிறார் கமல்?

 1997ல் கமல் தொடங்கிய படம் மருதநாயகம். 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரன் முகமது யூசுப்கான் என்கிற மருதநாயகத்தை பற்றிய அந்த வரலாற்றுப்படத்தை தனது கனவு படமாகவும் சொன்னார் கமல். அதனால் இங்கிலாந்து நாட்டு ராணியை சென்னைக்கு அழைத்து வந்து பிரமாண்டமாக படத்தை தொடங்கினார். ஆனால் பின்னர் ஏற்பட்ட பைனான்ஸ் ப்ராப்ளம் காரணமாக அப்படத்தை கிடப்பில் போட்டார் கமல்.                            ஆனால் விஸ்வரூபம் படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தையும் தற்போது இயக்கி வருகிறார் கமல். இந்த பாகத்துக்கு...

கமல் இஷ்டப்பட்டு நடித்தார். நான் கஷ்டபட்டு நடித்தேன். - ரஜினி!

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவினை நேற்று தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் என திரையுலகங்கள் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியினை அமர்களப்படுத்தினர்.மேலும் தமிழ் திரையுலக பிரபலங்களான ரஜினிகாந்த், கமலஹாசன், இளையராஜா, சிவக்குமார், விஜய், அஜித், விக்ரம் மற்றும் பல திரையுலக பிரபல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.இந்த விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார், இந்த விழாவை மிக சிறப்பாக நடத்தியதற்காக, முதல் அமைச்சருக்கு என் நன்றி. என் திரையுலக அண்ணன் கமல்ஹாசனுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி.அன்றும் சரி, இன்றும் சரி, நான் கமல் ரசிகன். இரண்டு பேரும் சேர்ந்து ஏழு எட்டு படங்கள் நடித்தோம். கமல் இஷ்டப்பட்டு நடித்தார். நான் கஷ்டபட்டு...
Page 1 of 87912345Next

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top