.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 18 September 2013

குரங்கும்..குருவியும் (நீதிக்கதை)




நல்ல மழை பெய்துக் கொண்டிருந்தது...


குளிரில் நடுங்கியபடி குரங்கு ஒன்று மரத்தடியில் ஒதுங்கி நின்றது.


மரத்தில் கூடுகட்டிக் கொண்டு , அதில் இருந்த தூக்கணாங்குருவி தலையை வெளியே நீட்டி குரங்கைப் பார்த்து..'குரங்காரே! இப்படி மழை காலத்தில் மழையில் நனைகிறீர்...வெயில் காலத்தில் வெயிலில் வாடுகிறீர்..இதையெல்லாம் தடுக்க..ஒரு வீடு கட்டிக் கொள்ளக் கூடாதா.? கைகள் இல்லாத நானே கூடு கட்டிக் கொண்டுள்ளேன்..இரு கைகள் உள்ள நீங்கள் ஏன் சோம்பித் திரிந்து, பின் அவதிப் படுகிறீர் கள்' என்றது.


குருவியின் அறிவுரையைக் கேட்ட குரங்கிற்கு கோபம் வந்தது. உடனே மரத்தில் ஏறி குருவியின் கூட்டைக் கலைத்தது. 'எனக்கு வீடு கட்டிக் கொள்ள சோம்பேறித்தனம் தான்..ஆனால் கூட்டை பிய்ப்பதற்கு அல்ல..இப்போது கூடின்றி நீயும் அல்லல் படு' என்று சொல்லிச் சென்றது.


முட்டாள்களுக்கு புத்தி சொல்லக் கூடாது.அப்படிச் சொன்னால்..நமக்குத்தான் தீங்கு வரும். 
 

ஆரோக்கியம் தரும் ‘ தண்ணீர் சிகிச்சை’


உடலை ஆரோ‌க்‌கியமாகவு‌ம், பு‌த்துண‌ர்‌ச்‌சியாகவு‌ம் வை‌த்து‌க் கொ‌ள்ள நா‌ம் எ‌த்தனையோ முறைகளை‌ப் ‌பி‌ன்ப‌ற்று‌கி‌ன்றோ‌ம். உட‌ல்‌நிலை பா‌தி‌த்தா‌ல் அதனை ச‌ரி செ‌ய்யவு‌ம் எ‌த்தனையோ ‌சி‌கி‌ச்சை முறைகளை‌க் கையாளு‌கிறோ‌ம்.ஆனா‌‌ல் உடலை ஆரோ‌க்‌கியமாக வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம், பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட உடலை மே‌ம்படு‌த்தவு‌ம் த‌ண்‌ணீ‌ர் ந‌ல்ல ‌சி‌கி‌ச்சையாக உ‌ள்ளது எ‌ன்றா‌ல் அது ‌மிகையாகாது.


உடல் இளைப்பது, எ‌ய்‌ட்‌ஸ் பா‌தி‌த்தவ‌ர்க‌ள் உடலை நோ‌ய்க‌ளி‌ல் இரு‌ந்து கா‌ப்பா‌ற்றுவது முதல் புற்றுநோய் பாதிப்பு குறைவது வரை செலவே இல்லாத மருந்து ஒன்று இருக்கிறது எ‌ன்றா‌ல் அது தண்ணீர் ‌சி‌கி‌ச்சைதா‌ன்.த‌ண்‌ணீ‌ர் ‌சி‌கி‌ச்சை எ‌ன்றா‌ல் ஏதோ பு‌திய ‌சி‌கி‌ச்சை முறை எ‌ன்று எ‌ண்‌ணி‌க் கொ‌ள்ள வே‌ண்டா‌ம். உடலு‌க்கு‌த் தேவையான அளவு‌க்கு‌த் த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பதுதா‌ன் த‌ண்‌ணீ‌ர் ‌சி‌கி‌ச்சையாகு‌ம்.


sep 18 - health water
 


பலரு‌ம் சா‌ப்பாடு சா‌ப்‌பி‌ட்ட ‌பிறகு ஒரு ட‌ம்ள‌ர் த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பா‌ர்க‌ள். அத‌ற்கு‌ப் ‌பிறகு த‌ண்‌ணீ‌ர் ப‌க்கமே‌ போக மா‌ட்டா‌ர்க‌ள். அ‌ப்படியானவ‌ர்களது உட‌‌லி‌ல் எ‌ன்னெ‌ன்ன பா‌தி‌ப்புக‌ள் ஏ‌ற்படு‌ம் எ‌ன்று எ‌ண்‌ணி‌ப் பா‌ர்‌த்தா‌ல் அவ‌ர்களது நெ‌ஞ்சே ஒரு ‌நி‌மிட‌ம் ‌நி‌ன்று ‌விடு‌ம்.த‌ண்‌ணீ‌ர் ந‌ம்மை பு‌த்‌துண‌ர்‌ச்‌சியாகவு‌ம், ஆரோ‌க்‌கியமாகவு‌ம் வை‌த்து‌க் கொ‌ள்வ‌தி‌ல் மு‌க்‌கிய‌ப் ப‌ங்கா‌ற்று‌கிறது. த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பதை ஒரு பழ‌க்கமாக‌க் கொ‌ண்டு வர வே‌ண்டு‌ம். நாளொ‌ன்று‌க்கு 8 முத‌ல் 10 ட‌ம்ள‌ர் த‌ண்‌ணீ‌ர் அரு‌ந்த வே‌ண்டு‌ம். கோடை கால‌த்‌தி‌ல் இ‌ன்னு‌ம் அ‌திகமாக த‌ண்‌ணீ‌ர் அரு‌ந்த வே‌ண்டு‌ம்.



அ‌வ்வ‌ப்போது த‌ண்‌ணீ‌ர் அரு‌ந்த வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌த்தை மன‌தி‌ல் ப‌திய வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். உ‌ங்க‌ள் குழ‌ந்தைகளையு‌ம் அடி‌க்கடி த‌ண்‌ணீ‌ர் குடி‌க்க வையு‌ங்க‌ள்.ப‌ள்‌ளி‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் குழ‌ந்தைக‌ள் பலரு‌ம் த‌ண்‌ணீ‌ர் அ‌திகமாக அரு‌ந்த மா‌ட்டா‌ர்க‌ள். அத‌ற்கு மு‌க்‌கிய‌க் காரண‌ம் ப‌ள்‌ளிக‌ளி‌ல் க‌‌ழிவறையை அடி‌க்கடி பய‌ன்படு‌த்த முடியாது எ‌ன்பதுதா‌ன்.
எனவே ப‌ள்‌ளிக‌ளி‌ல் ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்கு‌ம் குழ‌ந்தைக‌ளி‌ன் ‌நிலைமையை சொ‌ல்‌லி‌ப் பு‌ரிய வையு‌ங்க‌ள். குழ‌ந்தைகளு‌க்கு‌ம் போதுமா‌ன ‌நீ‌ர் கொடு‌த்தனு‌ப்பு‌ங்க‌ள்.




என்னதான் உடற்பயிற்சி செய்தாலும், உணவு‌க் க‌ட்டு‌ப்பா‌ட்டை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றினாலு‌‌ம் குறையாத உடல் எடை, அ‌திக‌ப்படியான த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பதா‌ல் குறைவதை‌க் க‌ண்கூடாக பா‌ர்‌க்கலா‌ம்.உடலில் கலோரியை கட்டுப்படுத்த மருந்து தேவையல்ல, தண்ணீர் தான் முக்கியத் தேவை. தண்ணீர் குடி‌த்தா‌ல் வ‌யிற்றில் இருந்து ஆரம்பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடவாழத்தையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கி‌க் கொ‌ண்டு கடைசியில் உட‌லி‌ல் இரு‌க்கு‌ம் தேவைய‌ற்ற ‌விஷய‌ங்களை எடு‌த்து‌க் கொ‌ண்டு வெளியேறி விடுகிறது.எனவே அ‌திகமாக‌த் த‌ண்‌ணீ‌ர் குடி‌த்து வருபவ‌ர்களு‌க்கு சிறுநீரக பிரச்சினை, குடல் பிரச்சினை என்று எதுவும் வராமல் இருக்கு‌ம்.



மேலும் தினமும் காலையில் எழுந்ததும் பல் துலக்குவதற்கு முன்னால் 4 டம்ளர் தண்ணீர் வெறும் வயிற்றில் குடிக்கவும், அதன் பிறகு பல் துலக்க வேண்டும். ஆனால் அடுத்த 45 நிமிடங்களுக்கு எதுவும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது. 45 நிமிடங்கள் கழிந்த பிறகு வழக்கம் போல சாப்பிடலாம், தண்ணீர் பருகலாம்.


மிக மிக முக்கியமான விஷயம்
இந்த தண்ணீர் சிகிச்சை எடுத்து கொள்பவர்கள் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு இந்த 3 க்கும் பிறகு அடுத்த 2 மணி நேரம் எதையும் சாப்பிடவோ, பருகவோ கூடாது. இந்த சிகிச்சையில் எந்த விதமான பக்க விளைவுகளும் கிடையாது, குறிப்பிட்ட நாளைக்கு என்றில்லாமல் தினமும் இந்த பழக்கத்தை தொடர்ந்தால் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்க முடியும்.




தலைவலி, உடம்புவலி, இதயம் சம்பந்தமான பிரச்சனைகள், ஆர்த்ரைடிஸ், காசநோய், உடலில் அதிகபடியான கொழுப்பு சேர்வது, வயிற்றுபோக்கு, கிட்னி மற்றும் யுரினரி பிரச்சனைகள், பைல்ஸ், சர்க்கரை வியாதி, மாதவிடாய் பிரச்சனைகள், கண் நோய்கள், காது, முக்கு, தொண்டை பிரச்சனைகள் இப்படி பல நோய்கள் தீர காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தாலே போதும்….. என்கிறது ஜப்பானிய மருத்துவ முறை.

இயல்பு வாழ்க்கையில் இவர்கள்!



எடிசன்



மிகப் பெரிய ஆளுமைகள் என்று நாம் கொண்டாடுபவர்கள் தங்கள் உறவினர்களிடம் எப்படி நடந்து கொண்டார்கள். இதோ ஒரு சுவையான பதிவு.


எடிசன் வாங்கிய 'பல்பு'

வெகுகாலம் முயன்று மின்சார பல்பை வெகு நேரம் எரிய வைக்கும் இழையை கண்டறிந்துவிட்டு எடிசன் குதூகலித்துக்கொண்டு இருந்தார். யாரிடமாவது தன்னுடைய சாதனையைக் காட்டவேண்டும் என்று கைகள் பரபரத்தன. வீட்டில் உறங்கிக்கொண்டு இருக்கும் மனைவியைத் தவிர வேறு யாரை எழுப்புவது? அவரை எழுப்பி, “டியர் எத்தனை அளப்பரிய சாதனை செய்திருக்கிறேன் நான் பார்!” என்று சொன்னதும், அவரின் மனைவி, “நடுராத்திரியில விளக்கை இப்படியா எரியவிடுவீங்க? கண்ணெல்லாம் எரியுது. தூங்கவிடுங்க!” என்று சொன்னபோது, எடிசனின் முகம் எப்படி ஆகி இருக்கும் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.


புத்தரின் உறுதிமொழி


புத்தர், சித்தார்த்தனாக இருந்த காலத்தில், அவரோடு பிணைந்திருந்த உறவுகளைக் காண நேரிட்டது. அவரின் தந்தை சுத்தோததனரை கண்டு வெகு இயல்பாக அவர் பேசினார். யசோதையை மனைவியாக அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டதும், புன்னகை மாறாமல் தன்னை நோக்கி வந்த யசோதையை புத்தத் துறவியாக தீட்சை கொடுத்துவிட்டு, “அன்னையே!” என்று அழைத்தார். கூடவே, கூடுதல் இணைப்பாக மிக இளைய சிறுவனான ராகுலனுக்கும் துறவை அவர் கொடுத்து விடவே, “இனி நான் என் அரசை ஆள எனக்குப்பின் யாரிருக்கிறார்? புத்தரே எனக்கொரு வாக்கு கொடுங்கள்... இனிமேலே பெற்றோரின் அனுமதி இல்லாமல் இளையவர்களுக்கு துறவு தரமாட்டீர்கள் என்கிற உறுதியை நீங்கள் எனக்குத் தர வேண்டும்!” என்று அவர் கதற, புத்தர் அதற்கு பின் அவ்வாறே நடந்துகொண்டார்.


ஐன்ஸ்டீனும் நிலாவும்


ஐன்ஸ்டீன் புது மாப்பிள்ளை ஆனார். கல்யாணம் முடிந்த சில நாட்களில் அவர் கைகளில் ஒரு தாளை அவரின் இளம் மனைவி திணித்தார். “நிலவைப் பற்றிய கவிதை இது!” என்று அவர் சொல்ல, ஐன்ஸ்டீன் அதை வாங்கி சலனமில்லாமல் படித்தார். ஓரிரு நிமிடங்கள் கடந்திருக்கும். உதட்டை பிதுக்கிவிட்டு, “என்ன இப்படி ஆஹா ஓஹோ அப்படின்னு நிலாவை புகழ்ந்து இருக்கே? நிலாவில் காற்றில்லை, முழுக்க மலைகள்தான். அங்கே ஒருத்தரும் வாழ முடியாது. முழுக்க அலங்கோலம். அதைப்போய் அழகு என்று கவிதை வேறு! என்ன பொண்ணுமா நீ?” என்று கடிந்துகொண்டார் ஐன்ஸ்டீன்.


செப்.20 வெளியாகும் ‘6’: சுதீப் பாராட்டு!






துரை இயக்கத்தில் ஷாம் நடித்திருக்கும் ‘6’ திரைப்படம், செப்டம்பர் 20ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.


ஷாம், பூனம் கவுர், மலையாள நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார் மற்றும் பலர் நடித்து இருக்கும் ‘6’ படத்தினை இயக்கி இருக்கிறார் வி.இசட். துரை. ஸ்ரீகாந்த் தேவா இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.


சுமார் மூன்று வருடங்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. ஷாம் 6 வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து இருக்கிறார். அதுமட்டுமன்றி இப்படத்தின் ஒரு கெட்டப்பிற்காக தூங்காமல் இருந்து கண்ணுக்கு கீழ் எல்லாம் வீங்கி விட்டது. அவ்வாறு இப்படத்திற்கு பெரும் சிரத்தினை எடுத்து நடித்து இருக்கிறார்.


இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டாலும், பெரிய படங்கள் வெளியீட்டால் இப்படத்தினை ஒத்திவைத்து வந்தார்கள். தற்போது இப்படத்தினை அபி பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் ஸ்டூடியோ 9 நிறுவனம் வாங்கி வெளியிட உள்ளன.


இப்படத்தினை பார்த்துவிட்டு ‘நான் ஈ’ பட வில்லன் சுதீப் தனது ட்விட்டர் தளத்தில் “ஷாம் நடித்த ‘6’ படத்தினைப் பார்த்தேன். மிக அற்புதமான படம். அவரது கடின உழைப்பிற்கு எனது பாராட்டு. படம் பார்த்ததும் அவர் மீதிருந்த மரியாதை இருமடங்காகிவிட்டது. படம் முடிந்தவுடன் எழுந்து நின்று கைதட்டினேன். ’6’ மாதிரி ஒரு படத்தினை உருவாக்கியதற்கு பாராட்டுக்கள். இது கண்டிப்பாக ஒவ்வொரு பெற்றோரும் பார்க்க வேண்டிய படம் “


செப்டம்பர் 20ம் தேதி 200 திரையரங்குகளில் இப்படத்தினை வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள். ஷாம் நடித்து வெளியான படங்களில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் படம் ‘6’ என்பது குறிப்பிடத்தக்கது.


தடுப்பு மருந்துக்குக் கட்டுப்படாத நோய்கள்!

தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத சிஆர்இ பாக்டீரியா. இதற்கு துர்க்கனவு பாக்டீரியா என்ற பெயரும் உண்டு.



அமெரிக்காவில் ஆண்டுதோறும் 23,000 பேர் நோய்த் தொற்றுகளால் மட்டும் உயிரிழக்கின்றனர். நோய்த் தடுப்பு மருந்து மாத்திரைகள் ஏராளமாக தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டாலும் அவற்றுக்கும் கட்டுப்படாத நோய்த் தொற்றுகளால் ஆண்டுக்கு 20 லட்சம் பேருக்கு உடல்நலம் கெடுகிறது. இது இப்போது மிகப் பெரிய சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துவருகிறது. எனவேதான், அமெரிக்காவின் சுகாதார அதிகாரிகள் முதல் முறையாக நோய் எதிர்ப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாதவற்றைப் பட்டியலிட்டுள்ளனர்.
"உயிரிழந்தவர் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளைவிடக் குறைவாக இருக்கிறது. காரணம், தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத நோய்த் தொற்று இறந்தவர்களிடத்தில் இருந்தாலும் அதனால்தான் இறந்தார் என்று திட்டவட்டமாகத் தெரியாததால் பலருடைய மரணங்கள் இதில் சேர்க்கப்படவில்லை. 



‘நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைக் கொல்ல மருந்துகளை நாம் தயாரித்தாலும், அந்த மருந்துகளால் பாக்டீரியாக்களிடமும் மருந்து எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பிறகு அது பல மடங்கு வீரியத்துடன் வந்து சமூகத்தைத் தாக்குகிறது. அப்போது சாதாரண நோய்த் தொற்றுக்கே மனிதர்கள் இறக்க நேரிடும்’ என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர். எனவேதான், இப்போதைய உயிரிழப்புகள் கவனமுடன் ஆராயப்படுகின்றன. தோராயமாகக் கணக்கிட்டு இறப்பு எவ்வளவு என்று முன்னர் கூறிவந்தவர்கள் இப்போது துல்லியமாகக் கணக்கிட்டு தெரிவிக்கின்றனர்" என்று டப்ட்ஸ் பல்கலைக்கழக நுண்ணியிரியல் துறைப் பேராசிரியர் டாக்டர் ஸ்டூவர்ட் லெவி தெரிவிக்கிறார். நோய் எதிர்ப்பு மருந்துகளை அளவோடு பயன்படுத்துவதற்கான சங்கத்தின் தலைவராகவும் அவர் செயல்படுகிறார். 



உலகமெங்கும் மருத்துவமனைகளில் ஏற்பட்ட நோய்த் தொற்றுகளால் மட்டும் ஒரு லட்சம் பேர் வரை இறந்திருக்கலாம் என்று 2007-ல் மதிப்பிடப்பட்டது. சிலவகை நோய்த் தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத நோய்க்கிருமிகளால் இந்த மரணங்கள் ஏற்பட்டது. ஆனால் பரவலாகப் பயன்படுத்தப்படும் நோய்த் தடுப்பு மருந்துகள் பல பலனற்றுப் போய்விடவில்லை என்று இந்த ஆய்வு முடிவுக்கு வந்தது. இந்தக் கணக்கெடுப்பில் வேண்டுமென்றே இறப்பைக் குறைத்துக் காட்டியிருப்பதாக டாக்டர் ஸ்டீவன் சாலமன் தெரிவிக்கிறார். "நோய்த் தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாமல் இறப்பு ஏற்பட்டது என்று திட்டவட்டமாகத் தெரியவந்த இறப்புகளை மட்டும் கணக்கில் சேர்க்குமாறு கூறப்பட்டது" என்றார். 



அமெரிக்காவில் உள்ள பால், இறைச்சி, முட்டைகளுக்காக வளர்க்கப்படும் கால்நடைகள், கோழி, வாத்து போன்ற பறவைப் பண்ணை களில்தான் 70% நோய்த்தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த மருந்துகளினால் ஏற்படும் விளைவுகளைச் சரியாக ஆராய அந்தப் பண்ணைகளிடமிருந்து ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. நோய்த் தடுப்பு மருந்துகளைக் கால்நடைகளும் உட்கொள்வதால் அவற்றின் இறைச்சியை உண்ணும் மனிதர்களின் உணவிலும் அப்படியே உடலிலும் இவை சேருகின்றன. எனவே நோய்த்தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத பாக்டீரியாக்களைப் பற்றிய ஆராய்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. பிராணிகளுக்குப் பண்ணையில் நோய்த்தடுப்பு மருந்து நோய் வராமல் இருப்பதற்காக மட்டுமல்ல, வேகமாக வளர்வதற்காகவும் தரப்படுகிறது. 



இப்படி பிராணிகளுக்குத் தரப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளில் பெரும்பாலானவை அவற்றுக்குத் தேவையானவையே அல்ல, அத்துடன் பொருத்தமானவையும் அல்ல. மனிதர்களுக்குத் தரப்படும் நோய் எதிர்ப்பு மருந்து ரகங்களிலும் பாதிக்கு மேல் பொருத்தமானவை அல்ல.
பாக்டீரியாக்களில் 17-வகையும் ஒரு பூஞ்சையும்தான் அமெரிக்காவில் பெரும்பாலான மருந்துகளுக்குக் கட்டுப்படாத நோய்க்கிருமி வகை களை உருவாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


 நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள 10 பெரிய மருத்துவமனைகளிலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் தகவல்கள் பெறப்பட்டு ஆராயப்பட்டன. "சி.ஆர்.இ. என்று பெயரிடப்பட்ட ஒருவகை பாக்டீரியா இப்போது அமெரிக்காவில் விற்கப்படும் எல்லாவகை நோய்த் தடுப்பு மருந்துகளுக்கும் கட்டுப்படாததாக இருக்கிறது. இது மிகவும் அபூர்வமானது ஆனால் ஆண்டுக்கு சுமார் 600 பேர் இதற்குப் பலியாகின்றனர். வியப்பு என்னவென்றால் இது அமெரிக்காவின் 44 மாநிலங்களிலும் மருத்துவமனைகளில் காணப்படுகிறது. 


இந்த ஆராய்ச்சியில் நாங்கள் தீர்வை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்" என்று டாக்டர் மைக்கேல் பெல் நம்பிக்கையுடன் கூறுகிறார். 



"எம்.ஆர்.எஸ்.ஏ. என்று அழைக்கப்பட்ட நோய்த் தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத மற்றொரு வகை பாக்டீரியாவின் தாக்குதலும் இப்போது பாதியாகக் குறைந்துவிட்டது. அதே சமயம் மருத்துவமனை அல்லாத பிற இடங்களில் இந்த நோய்த் தொற்று இரட்டிப்பாகிவிட்டது. அது மருத்துவமனைகளில் உள்ள எண்ணிக்கையைவிட அதிகமாகிவிட்டது. மருந்துகளைக் கொடுத்து கட்டுப்படுத்த லாம் என்றால் அவை வேறு இடங்களுக்குச் சென்று பரவுவது குறிப்பிடத்தக்கது" என்கிறார் அயோவா பல்கலைக்கழக தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு துறையைச் சேர்ந்த எலி பெரன்சிவிச் தெரிவிக்கிறார். 


"கால்நடைப் பண்ணைகளுக்கு அருகில் உள்ள வீடுகளில் வசிப்போரில் 38% பேருக்கு எம்.ஆர்.எஸ்.ஏ. வகை பாக்டீரியாக்களின் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.


மிருதுவான தோல் அல்லது திசுக்கள் உள்ளவர்கள் இந்த பாக்டீரியாக்களால் தாக்கப்படுகின்றனர். இதற்குப் பண்ணைகளில் உள்ள நோய் எதிர்ப்புக் கிருமிகளைவிட வேறு காரணங்களும் இருக்கலாம்" என்று இந்த ஆய்வுகளில் ஈடுபடாத ஆனால் தகவல் தெரிந்த ஆய்வர்கள் தெரிவிக்கின்றனர்.
நோய்த்தடுப்பு மருந்து மாத்திரைகள் விற்பனை உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரூபாய்களில் நடக்கிறது. டாக்டர்கள் தங்களுடைய அனுபவம், படிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மருந்து மாத்திரைகளைப் பரிந்துரைக்கின்றனர். 


ஆனால் அவற்றுக்கும் கட்டுப்படாமல் பாக்டீரியாக்கள் வலுப்பெற்று வருவதை இந்த ஆய்வுகள் சந்தேகமில்லாமல் நிரூபிக்கின்றன. 


 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top