தமிழில் தூம்-3 டீசர் வெளியீடு! (வீடியோ இணைப்பு)
Share This
Tags
அமீர்கான் நடிக்கும் தூம்-3 படத்தின் டீசர் தமிழில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் வெளியான தூம்-2 வெற்றியைத் தொடர்ந்து தற்போது தூம்-3 வெளியாகவுள்ளது.
இப்படத்தில் அமீர்கான், அபிஷேக்பச்சன், கத்ரினா கைப் மற்றும் உதய் சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஆதித்யா சோப்ரா தயாரிக்கும் இப்படத்தினை விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்குகிறார்.
தூம்-2 தமிழில் வெளியாகி அமோக வசூலை அள்ளியதால் தூம்-3யையும் தமிழில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
மேலும் இப்படத்திற்கு பிரிட்டம் இசையமைக்கிறார்.
- See more at: http://yarlosai.com/?p=57571#sthash.W1CVj81D.dpuf
அமீர்கான்...
Tuesday, 17 September 2013
அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டும் பில்கேட்ஸ் முதலிடம்: போர்ப்ஸ் பத்திரிக்கை !
மைக்ரோசாப்ட் கம்பெனியை உருவாக்கியவர்களில் ஒருவரான பில் கேட்ஸ் இன்னும் அமெரிக்க பணக்காரர்களின் பட்டியலில் முதலாமிடத்தில் உள்ளார் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது. 72 பில்லியன் டாலர் (4 லட்சத்து 52 ஆயிரத்து 376 கோடி) மதிப்புடைய சொத்துகளுக்கு சொந்தக்காரரான பில் கேட்ஸ் கடந்த 20 வருடங்களாக முதலாவது இடத்திலேயே இருந்து வருகிறார்.
பெர்க்ஷைர் ஹாத்வே கம்பெனியின் முதலாளியான வாரென் பப்பெட்ஸ் 58.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாமிடத்தில் உள்ளார். 41 பில்லியன் டாலர் மதிப்பு சொத்துக்கு உரிமையாளரான அராக்ள் கம்பெனியினை உருவாக்கியவர்களில் ஒருவரான லாரி எல்லிசன் மூன்றாமிடத்தில் உள்ளார் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியலிட்டுள்ளது....