.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 13 September 2013

Archos 50 Oxygen ஸ்மார்ட்போன்!


 


ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் காலடி பதித்துள்ள Archos நிறுவனம் இந்த மாதம் ஸ்மார்ட்போன்களின் வரிசையில் புதிய சேர்க்கைகளை ஏராளமாக கொண்டு ஒரு புத்தம் புதிய Archos 50 Oxygen ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


Archos 50 Oxygen 1080p முழு HD IPS காட்சி கொண்டுள்ளது. 1.5GHz வேகத்தில் செயற்படக்கூடிய Quad-Core MediaTek Processor மூலம் இயக்கப்படுகிறது. 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான முன் கமெரா, வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஆகியவை இணைந்த 13 மெகாபிக்சல்களை உடைய பின்புற கமெரா போன்றனவும் காணப்படுகின்றது.



1GB ரேம் இயங்கும். கூகுளின் Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 16GB சேமிப்பு நினைவகமாக கொண்டுள்ளது. மைக்ரோ USB சார்ஜ்க்கான ஒரே போர்ட்டுகள் இருக்கின்றன, மற்றும் data sync, மற்றும் ஒரு 3.5mm ஆடியோ Jack உள்ளன. ப்ளூடூத் 4.0 இருக்கும். 11n Wi-Fi கொண்டுள்ளது.


'ஏமாறாதே....ஏமாற்றாதே'(நீதிக்கதைகள்)



ஒரு காட்டில் நரி ஒன்று இருந்தது.அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி...அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுதுபோக்காக இருந்தது.

ஒரு நாள் ..கொக்கு ஒன்றை...அந்த நரி பார்த்தது.. அதை தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது.

கொக்கும் ...நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.

கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்கு உண்ணக் கொடுத்தது.கொக்கால் ..தன் அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை...ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே ...கொக்கு தன் அலகை அதில் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும்.

கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது...அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது.

நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு..ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது

நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை..

அதைக் கண்ட கொக்கு ..'நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் ...என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள்.ஆனால் நான் அப்படியில்லை..உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்...என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.
தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது.

நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது.

அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.

பிறர் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது..அவர்களுக்கு உதவியும் செய்ய ஆரம்பித்தது.

ஓட்ஸ் பழ கூழ்!








ஓட்ஸ் பழ கூழ்


தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - 4
ஆப்பிள் - 3
கோதுமை ரவை - 1/2 கப்
ஓட்ஸ் - 2 கப்
பால் - 1 1/2 லிட்டர்
வெண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்
பட்டை தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - தேவையான அளவு

செய்முறை:

• வாழைப்பழம், ஆப்பிளை துண்டகளாக வெட்டிக் கொள்ளவும்.

• முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை போட்டு உருக வைக்க வேண்டும்.

• பின்னர் அதில் கோதுமை ரவையை சேர்த்து, பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

• அடுத்து அதில் ஓட்ஸ் போட்டு 3 நிமிடம் வறுக்க வேண்டும்.

• பின் அதில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

• பிறகு தண்ணீர் ஊற்றி கிளறி விட்டு, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.

• இறுதியில் விசிலானது போனதும், அதனை திறந்து அதில் தேன், பட்டை தூள் சேர்த்து கிளறி, குளிர வைத்து, பின் அதில் நறுக்கி வைத்துள்ள வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் சேர்த்து பிரட்டி பரிமாறினால், சூப்பரான ஓட்ஸ் பழ கூழ் ரெடி!!!

ஒன்று பட்டால் வாழ்வு..........குட்டிக்கதை



ஒரு நாள் நம் உடல் உறுப்புகளிடையே சண்டை வந்தது...எல்லா உறுப்புகளும் 'வயிறை'விரோதியாக்கின.

அப்போது கைகள் சொன்னது 'நாங்கள் இரவும் பகலும் கடுமையாக உழைக்கிறோம்...ஆனால் உணவை சுவையாக வயிறு தான் விழுங்கிறது'என்றன..

உடனே கால்கள்..'நாங்கள் மட்டும் என்ன...இந்த உடம்பை சுமந்து தினமும் எவ்வளவு தூரம் நடக்கிறோம்...ஆனால் வயிறோ ஒரு வேலையும் செய்யாது உண்ணுகிறது'என்றன..

தலை குறுக்கிட்டது...'நான்தான் பார்க்கிறேன்,கேட்கிறேன்,முகர்கிறேன்,சிந்திக்கிறேன்..ஆனால் எந்த வேலையும் செய்யாத வயிறு உணவை உண்டு மகிழ்கிறது 'என்றது.

வாயோ...நான் உணவை மென்று வயிறு அனுபவிக்கவே அனுப்புகிறேன் என்றது.

இப்படி எல்லா உறுப்புகளும் வயிறை குறை சொல்லின.பின் அனைத்து உறுப்புகளும் ..வயிற்றுக்கு இனி எந்த உதவியும் செய்யக்கூடாது என தீர்மானித்தன.

அதனால்...வயிறுக்கு உணவு கிடைக்கவில்லை..உடல் மெலிந்தது..கை..கால்..தலை என அனைத்து உறுப்புகளும் வலுவிழந்தன.

அப்போதுதான் அவற்றிற்கு ..தனிப்பட்ட முறையில் தங்களால் எதையும் செய்யமுடியாது.தங்களுக்கு ஆற்றல் அனுப்புவது வயிறே...என்று புரிந்தது.

வயிற்றிடம் அவை மன்னிப்பு கேட்க ..வயிறும் வழக்கம்போல செயல்படத் தொடங்கியது.

நம் உடலில் எல்லா உறுப்புகளும் ஒன்று பட்டு செயல்பட்டாலே ..உடல் சுறுசுறுப்பாய் இயங்கும்.

ஆகவே எந்த காரியத்தை செய்வதாயினும் நமக்குள் ஒற்றுமை அவசியம். 
 
 

சிக்கனமே செல்வம்!



சிக்கனம் என்பது, எல்லா தரப்பினருக்குமே நன்மை தரும். வீட்டுக்குள், "இதிலென்ன பெரிதாக செலவாகி விடப் போகிறது...' என்று நாம் நினைக்கும், விஷயங்கள் தான், சிறுகச் சிறுக செலவைக் கூட்டும். "சிறுதுளி பெரு வெள்ளம்' என்பது, சேமிப்புக்கு மட்டுமல்ல, செலவு வைக்கும் விஷயங்களுக்கும் பொருந்தும்.

வீட்டுக்குள் சிக்கனமாக இருப்பதற்கான சில, "டிப்ஸ்' இதோ:


 

* குண்டு பல்புகளுக்குப் பதிலாக, "சி.எப்.எல்., விளக்குகளைப் பயன்படுத்துங்கள். வீட்டை விட்டு வெளியே புறப்படும்போது, விளக்குகள் 
மற்றும் மின் உபகரணங்களை அணைக்க மறக்காதீர்கள்.
 


* "சார்ஜர்களை' அணைத்து விடுங்கள். அவை, "சார்ஜ்' செய்யா விட்டாலும், மின்சாரத்தை ஈர்த்துக் கொண்டிருக்கும்.
 

* பாத்ரூம் ஷவரில், குறைவாகத் தண்ணீர் விழுமாறு அமைத்துக் கொள்ளுங்கள். அது, தண்ணீர் சிக்கனத்துக்கு உதவும். சோப்பு போடும்போது, ஷவரில் தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்க வேண்டாம்.
 

* பாத்ரூமில் முகம், கை துடைக்க, "டிஷ்யூ' பேப்பரை பயன்படுத்துவதற்கு பதில், துண்டை பயன்படுத்தலாம்.
 

* "இங்க் காட்ரிஜ், சிடிக்கள், டிவிடிக்கள்' போன்ற கணினி பயன்பாட்டு பொருட்களில் பெரும்பாலானவை, மறு பயன்பாட்டுக்கு உரியவையாக உருவாக்கப்பட்டுள்ளன என்பதை ஞாபகத்தில் வையுங்கள். கம்ப்யூட்டர் இணைப்பு ஒயர்கள், "ஸ்பீக்கர்'கள் போன்றவற்றுக்கும் இது பொருந்தும்.
 

* துணி அல்லது பாத்திரம் அதிகமாக இருக்கும்போது மட்டும், "வாஷிங் மெஷின்' அல்லது, "டிஷ் வாஷரை' பயன்படுத்துங்கள். ஆனால், கொள்ளளவில் பாதி இருக்கும் நிலையில், அவற்றை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால், "ஹாப்- லோடு' அல்லது, "எகானமி செட்டிங்'கை அமைத்துக் கொள்ளுங்கள்.
 

* 'ஏசி'யின்,'ஏர் பில்டரை' மாதம் ஒருமுறையாவது சுத்தம் செய்யுங்கள் அல்லது மாற்றி விடுங்கள்.
 

* புதிதாக மின் உபகரணங்கள் வாங்கும்போது, மின்சக்தியை சேமிக்கும் திறன் பெற்றவை என்பதற்கான, "எனர்ஜி ஸ்டார் லேபிளை' பார்த்து வாங்குங்கள்.
 

* மின் சக்தியை அதிகமாக, "சாப்பிடும்' பழைய உபகரணங்களுக்கு விடை கொடுத்து, புதியவற்றை வாங்குங்கள்.
 

* தண்ணீரைச் சுட வைக்க, "சோலார் வாட்டர் ஹீட்டரை' பயன்படுத்தலாம்.
 

* குழாய்களில் தண்ணீர் கசிந்து கொண்டிருந்தால், உடனே, சரி செய்யுங்கள்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top