..........................................................................
.......................................................................
......................................................................
skip to main |
skip to sidebar
ஒரு
கப்பல் கடலில் சென்று கொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறால்...கடலில்
மூழ்கியது.அதிலிருந்த அனைவரும் மடிந்தனர்.கப்பல் கேப்டன் மட்டும்
உயிர்பிழைத்து..நீந்தியபடியே ஆள் இல்லாதீவு ஒன்றிற்கு வந்தான்
தனியாக
என்ன செய்வது எனத்தெரியாத அவன்..அந்தத்தீவில் கிடைத்த ஓலை..குச்சி
எல்லாவற்றையும் சேகரித்து இருக்க ஒரு குடிசையை அமைத்துக்கொண்டான்.
பின்
வயிற்றைக் கிள்ளியதால் ..உண்பதற்கு ஏதேனும் கிடைக்குமா..என்று தீவைச்
சுிற்றிவரக் கிளம்பினான்.திரும்பி வந்து பார்த்தபோது...அவன் அமைத்திருந்த
குடிசை தீப்பற்றி எறிஞ்சிருந்தது...
அதைப் பார்த்த அவன் கண்களில்
நீருடன் 'கடவுளே நான் என்ன தீங்கு செய்தேன்..என்னை யாருமில்லா தீவில்
சேர்த்தாய்.உண்ண உணவில்லை.இருக்க கட்டிய குடிசையும் தீப்பற்றி எறிய
வைத்துவிட்டாயே' எனக் கதறினான்.
அப்போது ..அந்தத் தீவை நோக்கி ஒரு கப்பல் வந்தது..அதில் இருந்தவர்கள் இவனைக் காப்பாற்றி தங்கள் கப்பலில் ஏற்றினர்.
'நான் இங்கு மாட்டிக்கொண்டது உங்களுக்கு எப்படித் தெரிந்தது'என அவர்களிடம் இவன் கேட்டான்.
அவர்கள்
சொன்னார்கள்..'யாருமில்லா தீவில் நெருப்பு பற்றி எறிந்ததைக்
கண்டோம்...உடன் யாருக்கோ உதவி தேவை என்பதை உணர்ந்து வந்தோம்'. .என்றனர்.
கடவுள் எது செய்தாலும் அது நல்லதற்கே என்பதை உணர்ந்தான் அவன்.
ஐ.நா.சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் சார்பில் சர்வதேச அளவில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் உலக அளவில் உற்பத்தியாகும் உணவு பொருட்கள் பெருமளவில் வீணாக்கப்படுவது தெரிய வந்தது.அதாவது ஆண்டொன்றுக்கு 130 கோடி டன் உணவு பொருட்கள் வீணடிக்கப்படுகிறது. இதனால் உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் பட்டினி கிடக்கின்றனர்.அதாவது நாள் ஒன்றுக்கு 87 கோடி பேர் உணவு இன்றி பட்டினி கிடப்பது தெரிய வந்துள்ளது.
உணவு பொருட்கள் வீணடிக்கப்படுவதன் மூலம் ரூ.55 ஆயிரம் கோடி மதிப்புள்ள உணவு பொருட்கள் வீணாவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மீன்கள் மற்றும் கடல் உணவு பொருட்கள் அடங்காது.உலகம் முழுவதும் 28 சதவீதம் நிலங்களில் விவசாயம் மூலம் உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அவை வளர்ந்த நாடுகளில் பெருமளவில் வாங்கப்பட்டு சாப்பிடாமல் குப்பையில் கொட்டப்படுகின்றன.
இவை தவிர அதிகமாக விளையும் உணவு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை பாதுகாப்பாக வைக்க குளிர்சாதன சேமிப்பு கிடங்கு வசதிகள் இல்லாததும் ஒரு காரணமாகும்.ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்ற காரணங்களால் உணவு பொருள் வீணாகிறது. அதே வேளையில் சீனா மற்றும் அமெரிக்காவில் பயன்படுத்தப்படாமல் உணவு பொருட்கள் வீணடிக்கப்படுவதும் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
One third of food wasted, costs world economy $750 bn: UN
**************************************************
One third of the food produced worldwide is wasted, costing the global economy around $750 billion a year, a new report by the UN food agency said today.The Rome-based Food and Agriculture Organisation (FAO) said some 1.3 billion tonnes of food are wasted every year, with the Asia region including China seen as the worst culprit.The food agency’s director general, Jose Graziano da Silva, told a press conference that in total, “one third of the food produced today is lost or wasted… equivalent to the Gross Domestic Production (GDP) of Switzerland.”
பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரும் மாதவிலக்கையும் அதன் இறுதிக்கட்டமான மெனோபாஸையும் சந்தித்தே தீர வேண்டும். மாதவிலக்கு நிற்க சராசரி வயது 52. இதற்கு மேல் நிற்காவிட்டால் அசாதாரணம். அதே மாதிரி 40 வயதுக்குள்ளேயே மாதவிலக்கு நிற்பது நல்ல அறிகுறியல்ல. இளவயது மெனோபாஸூக்கான காரணங்கள், சிகிச்சைகள், பற்றி ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது அவசியம்.
“ஒரு பெண் அம்மாவோட வயித்துல உருவாகிறப்பவே, அதோட சினைப்பைல இத்தனை மில்லியன் முட்டைகள் இருக்கணுங்கிறது தீர்மானிக்கப்படும். அந்தக்குழந்தை வயதுக்கு வர்றப்ப லட்சக்கணக்குல உள்ள அந்த முட்டைகள், மாதவிலக்கு மூலமா மாசா மாசம் வெளியேறி குறைஞ்சுகிட்டே வரும். பிரசவத்தின் போது இன்னும் குறையும். இப்படி குறைஞ்சிக்கிட்டே வந்து, ஒரு கட்டத்துல முழுக்க முட்டைகளே இல்லாம போகிறப்ப மாதவிலக்கு வராது. அதை தான் மெனோபாஸ்னு சொல்கிறோம்.
சிலருக்கு சராசரியை விட சீக்கிரமே, அதாவது 40 வயசுக்குள்ளேயே மெனோபாஸ் வரலாம். பரம்பரைத் தன்மை புற்றுநோய்க்காக எடுத்துக்கிற கீமோதெரபியோட விளைவுனு இளவயசு மெனோபாஸூக்கான காரணங்கள் பல இருக்கிறது. இவை தவிர ப்ரீ மெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர் பிரச்சனையாலையும் சீக்கிரமே மெனோபாஸ் வரலாம். அதாவது சினைப்பைல சுரக்கிற ஹாமோனுக்கு மூளையிலேர்ந்து சிக்னல் கிடைக்காவிட்டால், 25 வயசுல கூட மெனோபாஸ் வரலாம்.
மாதவிலக்கு சுழற்சி சரியா இருக்கிறவங்களுக்கு (20 முதல் 25 நாட்கள்) மெனோபாஸ் சீக்கிரமே வரும் 2, 3 மாதத்துக்கு ஒரு முறை வர்றவங்களுக்கு மாதவிலக்கு மூலமா இழக்கப்படற முட்டைகள் குறையறதால, மெனோபாஸூம் லேட் ஆகும். சீக்கிரமே வயசுக்கு வர்றவங்களுக்கு மெனோபாஸ் சீக்கிரமாகவும், வயசு கடந்து வாற்வங்களுக்கு அது தாமதமாகவும் வரும். 50வயசுல மெனோபாஸ் வர்றவங்களுக்கு சரியான கவனிப்பு அவசியம்.
அப்படியிருக்கிறப்ப இளவயசு மாதவிலக்கு நிற்கும் போது கூடுதல் அக்கறை அவசியம். ஈஸ்ரோஜென் ஹார்மோன் இல்லாம, எலும்புகள் பாதிக்கப்படும். கால்சியம் சப்ளிமென்ட் எடுத்துக்க வேண்டியிருக்கும். பால், தயிர்னு உணவு மூலமா கிடைக்கிற கால்சியம் மட்டும் போதாது. வைட்டமின் கூட கால்சியமும் சேர்த்து எடுத்துக்கணும். இல்லாட்டி எலும்புகள் பஞ்சு மாதிரி மாறி ஆஸ்டியோபொரோசிஸ் வரும். மெனோபாஸ்ல இதய ஆரோக்கியமும் பாதிக்கப்படுங்கிறதால அதுக்கான பரிசோதனையும் அவசியம். இளவயசு மெனோபாஸை ஏதோ முறை தவறின மாதவிலக்குன்னு தப்பாக நினைத்து அலட்சியப்படுத்தாம சரியான நேரத்துல மருத்துவ பரிசோதனையும் அவசியம்” என வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.
ஒரு கல் ஒரு கண்ணாடி.சிவா மனசுல சக்தி, பாஸ்என்கிற பாஸ்கரன் ஆகிய ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து ராஜேஷ்.எம் இயக்கி வரும் படம் ஆல் இன் ஆல் அழகு ராஜா.இந்தப் படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
கார்த்தி-காஜல் ஜோடி சேரும் இரண்டாவது படம் இது. இதற்கு முன்பு இருவரும் நான் மகான் அல்ல படத்தில் ஜோடி சேர்ந்திருந்தனர். தமன் இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படம் காமெடி கலந்த ஃபேமிலி சென்டிமென்ட்டாக உருவாகி வருகிறது.மேலும் படத்தில் கார்த்திக்கு அப்பாவாக பிரபு நடிக்கிறார்.
கதையில் பிரபுவுக்கு ஃப்ளாஷ்பேக் காட்சிகள் இருக்கிறதாம். இதில் இளவயது பிரபுவாக கார்த்தி நடித்திருக்கிறார். வழக்கமாக ஃப்ளாஷ்பேக் காட்சியில் சம்பந்தப்பட்ட நடிகர் தான் நடிப்பார். ஆனால் ஒரு புதுமைக்காக ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் ஃப்ளாஷ்பேக் காட்சியில் பிரபுவுக்கு பதிலாக கார்த்தியை நடிக்க வைத்திருக்கிறார்கள்.முதலில் இளவயது பிரபுவாக அவரையே நடிக்க வைக்க முடிவு செய்து பின்பு ஒரு மாறுதலாக இருக்கட்டும் என்று கார்த்தியை நடிக்க வைத்திருக்கிறார்களாம்.
இந்தியாவில் நடக்க உள்ள சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை சேர்ந்த பைசலாபாத் அணி பங்கேற்பதற்கு மத்திய அரசு விசா வழங்க மறுத்துவிட்டது.இந்நிலையில் பாகிஸ்தானுக்கு பதிலாக வேறு நாட்டு அணியை சாம்பியன்ஸ் லீக் தகுதி சுற்றுக்கு அழைக்கப்படும் என்று தெரிகிறது.
10 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் 21ஆம் தேதி முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.முன்னதாக வரும் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை சாம்பியன்ஸ் லீக் தகுதி சுற்று போட்டிகள் மொகாலியில் நடக்கிறது. தகுதி சுற்றில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் (இந்தியா), ஒட்டகோ வோல்ட்ஸ் (நியூசிலாந்து), கந்துரதா மரூன்ஸ்(இலங்கை) ஆகிய அணிகளுடன் பைசலாபாத் வோல்வ்ஸ் (பாகிஸ்தான்) அணியும் களம் இறங்க இருந்தது. தகுதி சுற்று முடிவில் இரு அணிகள் பிரதான சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த பைசலாபாத் அணி சாம்பியன்ஸ் லீக்கில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்து மீறல் அதிகரித்து வருவதால் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் சமீப காலமாக சுமுகமான நிலை இல்லை. இதையடுத்து கவனமாக பரிசீலித்து மிகுந்த முன் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பு கருதியும் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க மறுப்பது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அதன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
India refuses visa to a Pak team for Champions League Twenty20
****************************************************
India has refused visa to Pakistani team, Faisalabad Wolves, to participate in Champions League Twenty20 tournament scheduled to begin from September 17 in view of abundance precaution.The government’s decision not to give visas to the Pakistani team to participate in the limited over cricket tournament comes in the backdrop of recent ceasefire violations along the Line of Control (LOC) creating tension between the two countries.