..........................................................................
.......................................................................
......................................................................
skip to main |
skip to sidebar
ஒரு கல் ஒரு கண்ணாடி.சிவா மனசுல சக்தி, பாஸ்என்கிற பாஸ்கரன் ஆகிய ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து ராஜேஷ்.எம் இயக்கி வரும் படம் ஆல் இன் ஆல் அழகு ராஜா.இந்தப் படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
கார்த்தி-காஜல் ஜோடி சேரும் இரண்டாவது படம் இது. இதற்கு முன்பு இருவரும் நான் மகான் அல்ல படத்தில் ஜோடி சேர்ந்திருந்தனர். தமன் இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படம் காமெடி கலந்த ஃபேமிலி சென்டிமென்ட்டாக உருவாகி வருகிறது.மேலும் படத்தில் கார்த்திக்கு அப்பாவாக பிரபு நடிக்கிறார்.
கதையில் பிரபுவுக்கு ஃப்ளாஷ்பேக் காட்சிகள் இருக்கிறதாம். இதில் இளவயது பிரபுவாக கார்த்தி நடித்திருக்கிறார். வழக்கமாக ஃப்ளாஷ்பேக் காட்சியில் சம்பந்தப்பட்ட நடிகர் தான் நடிப்பார். ஆனால் ஒரு புதுமைக்காக ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் ஃப்ளாஷ்பேக் காட்சியில் பிரபுவுக்கு பதிலாக கார்த்தியை நடிக்க வைத்திருக்கிறார்கள்.முதலில் இளவயது பிரபுவாக அவரையே நடிக்க வைக்க முடிவு செய்து பின்பு ஒரு மாறுதலாக இருக்கட்டும் என்று கார்த்தியை நடிக்க வைத்திருக்கிறார்களாம்.
இந்தியாவில் நடக்க உள்ள சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை சேர்ந்த பைசலாபாத் அணி பங்கேற்பதற்கு மத்திய அரசு விசா வழங்க மறுத்துவிட்டது.இந்நிலையில் பாகிஸ்தானுக்கு பதிலாக வேறு நாட்டு அணியை சாம்பியன்ஸ் லீக் தகுதி சுற்றுக்கு அழைக்கப்படும் என்று தெரிகிறது.
10 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் 21ஆம் தேதி முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.முன்னதாக வரும் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை சாம்பியன்ஸ் லீக் தகுதி சுற்று போட்டிகள் மொகாலியில் நடக்கிறது. தகுதி சுற்றில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் (இந்தியா), ஒட்டகோ வோல்ட்ஸ் (நியூசிலாந்து), கந்துரதா மரூன்ஸ்(இலங்கை) ஆகிய அணிகளுடன் பைசலாபாத் வோல்வ்ஸ் (பாகிஸ்தான்) அணியும் களம் இறங்க இருந்தது. தகுதி சுற்று முடிவில் இரு அணிகள் பிரதான சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த பைசலாபாத் அணி சாம்பியன்ஸ் லீக்கில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்து மீறல் அதிகரித்து வருவதால் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் சமீப காலமாக சுமுகமான நிலை இல்லை. இதையடுத்து கவனமாக பரிசீலித்து மிகுந்த முன் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பு கருதியும் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க மறுப்பது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அதன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
India refuses visa to a Pak team for Champions League Twenty20
****************************************************
India has refused visa to Pakistani team, Faisalabad Wolves, to participate in Champions League Twenty20 tournament scheduled to begin from September 17 in view of abundance precaution.The government’s decision not to give visas to the Pakistani team to participate in the limited over cricket tournament comes in the backdrop of recent ceasefire violations along the Line of Control (LOC) creating tension between the two countries.
ஐ.நா. சபையின் சிறப்புக் கூட்டம் வருகிற 24–ந்தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் நடக்கிறது. அதில் உலக நாடுகளை சேர்ந்த சிறுமிகள் கலந்து கொண்டு சமூக சீர்கேடுகள் மற்றும் பசி கொடுமையை நீக்குதல் குறித்து விவாதிக்கின்றனர்.அதில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 11 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பூனம்குமாரி (14), நஷியா அப்ரீன் (19) ஆகியோரும் அடங்குவர்.
பூனம்குமாரி நரிக்குஞ்சன் கிராமத்தில் 5–வது வகுப்பு படிக்கிறார். மகா தலித் இனத்தை சேர்ந்தவர். குழந்தையாக இருந்த போதே உறவினர் ஒருவர் இவரை திருமணம் செய்ய விரும்பினார். அதை எதிர்த்து போராடி கல்வி பயின்று வருகிறார்.
பெண்கள் கல்வி பயில வேண்டும். குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என விரும்புகிறார். தங்களது சமூக பெண் குழந்தைகள் ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளுக்கு வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். கல்வி பயில பள்ளிகளுக்கு அனுப்பப்படுவதில்லை என வருத்தத்துடன் கூறினார். ஐ.நா.வில் தனது கருத்துக்களை பிரதிபலிக்கிறார்.
நஷியா அப்ரீன் குல்ஷார்பக் கிராமத்தை சேர்ந்தவர் ஐ.நா.வில் பேசும் போது ‘‘கிராமப்புறங்களில் வாழும் சிறுமிகளின் பிரச்சினைகள் குறித்தும், அவர்களின் கல்வி நிலை குறித்தும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் விளக்குகிறார்.
2 Bihar girls to address UN assembly on September 24
***********************************************
Two teenage girls from Bihar would tell world leaders about problems facing a girl child in the state at United Nations (UN) general assembly on September 24. Poonam Kumari, 14, and Nazia Afreen, 17, are among the 11 children from India who will get an opportunity to put forth their views on inclusive education and its various aspects in front of the world.
அருண்
நன்கு படிக்கும் மாணவன்.ஆனால் கடந்த சில மாதங்களாக தேர்வில் அவன்
எதிபார்த்த மதிப்பெண்களைப் பெறவில்லை.இது அவனது தந்தையை வேதனை அடையச்
செய்தது.
அவனின் இந்த நிலைக்கு என்னக் காரணம் என்று அவன்
தந்தை...சில ஆசிரியர்களை வினவ ..ஒரு ஆசிரியர்..'சமீபகாலமாக அவன் நண்பர்கள்
சரியில்லை...அவர்கள் படிக்காமல் ஊர் சுற்றுபவர்கள் என்று சொன்னார்.
அது
கேட்டு அவன் தந்தை அருணைக் கூப்பிட்டு நயமாக..கெட்ட சகவாசத்தை விடச்
சொன்னார்...அருணோ அதற்கு இசையவில்லை....தன் நண்பர்களால் தன்னை மாற்ற
முடியாது என்றான்.
அப்போது ..அவன் தந்தை ஒரு கூடையில் சில
ஆப்பிள்களைக் கொண்டு வந்தார்...அருணிடம் ..ஒரு அழுகிய ஆப்பிளைக் கொடுத்து
கூடையில் இருந்த மற்ற ஆப்பிள்களுடன் வைக்கச் சொன்னார்.
இரவு கழிந்தது..
மறுநாள்,,அந்த ஆப்பிள் கூடையை அருணைக் கொண்டு வரச்சொன்னார்...கூடையில் மேலும் சில ஆப்பிள்கள் அழுகியிருந்தன...
அருணின்
அப்பா சொன்னார்...'அருண் பார்த்தாயா நேற்று கூடையில் நல்ல ஆப்பிள்கள்
இருந்தன.அத்துடன் ஒரு அழுகிய ஆப்பிளை வைத்ததுமே மற்ற ஆப்பிள்களும்
கெட்டுப்போகத் தொடங்கி விட்டன.அதுபோல நல்ல நண்பர்களுடன் ஒரு கெட்ட
நண்பன் சேர்ந்தாலும்,நல்ல நண்பர்கள் அனைவரையும் கெடுத்துவிடுவான்.ஆனால்
உனக்கோ கெட்ட நண்பர்கள் அதிகம்' என்றார்.
அது கேட்டு...அருண் ...தன் தவறை உணர்ந்து தன் கெட்ட நண்பர்கள் சகவாசத்தை விட்டான்.
வினோத்தும் விக்னேஷும் நண்பர்கள்..இருவரும் ஒரே பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தனர்.
வினோத்
வீட்டில் வேலைக்காரர்கள் இருந்தனர்.அவனுக்கு பள்ளிக்கு செல்ல சீருடை
அணிவிப்பது..அவனது ஷூவுக்கு பாலிஷ் போட்டு அணிவிப்பது...அவனுக்கு
தலைவாரிவிடுவது எல்லாம் வேலையாட்களின் வேலை...
ஒரு நாள் அவன் பள்ளி செல்லும்வழியில் இருந்த விக்னேஷ் வீட்டிற்கு செல்ல நேரிட்டது.
அப்போது
விக்னேஷ்...தன் ஷூவிற்கு பாலிஷ் போடுவதைப் பார்த்தான்...'உன் ஷூவிற்கு
நீயே வா பாலிஷ் போடுவாய்' என வினோத் ஆச்சிரியத்துடன் கேட்டான்.
'ஆமாம்..நீ வேறு யார் ஷூவிற்கு பாலிஷ் போடுவாய் 'என்று கிண்டலாக பதிலுக்குக் கேட்டான்..விக்னேஷ்.
'என் ஷூவிற்கு வேலையாட்கள் தான் பாலிஷ் போடுவார்கள் 'என்றான் வினோத்.
'அப்படியா..நமக்காக
நம் வேலையை பிறரைச் செய்யச் சொல்வது தவறல்லவா..'.கடவுள் நம் வேலைகளை நாமே
செய்ய வேண்டும் என்பதற்காகத்தானே நமக்கு இரு கைகளை கொடுத்திருக்கிறார்
'என்றான் விக்னேஷ்.
அது கேட்டு தன் தவறை உணர்ந்த வினோத்..இனி தன் வேலைகளைத் தானே செய்யவேண்டும் என்று தீர்மானித்தான்.
தன் வேலையைத் தானே பார்ப்பது ..தவறில்லை..அது நம்மை மேலும் சந்தோஷமாக வைக்கும்.
(ஆப்ரஹாம் லிங்கன் வாழ்வில் நடந்த சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது)