.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 12 September 2013

ஐ.நா. சபையில் பேச போகும் பீகார் சிறுமிகள்!


ஐ.நா. சபையின் சிறப்புக் கூட்டம் வருகிற 24–ந்தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் நடக்கிறது. அதில் உலக நாடுகளை சேர்ந்த சிறுமிகள் கலந்து கொண்டு சமூக சீர்கேடுகள் மற்றும் பசி கொடுமையை நீக்குதல் குறித்து விவாதிக்கின்றனர்.அதில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 11 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பூனம்குமாரி (14), நஷியா அப்ரீன் (19) ஆகியோரும் அடங்குவர்.

sep 12 united_nations_

 


பூனம்குமாரி நரிக்குஞ்சன் கிராமத்தில் 5–வது வகுப்பு படிக்கிறார். மகா தலித் இனத்தை சேர்ந்தவர். குழந்தையாக இருந்த போதே உறவினர் ஒருவர் இவரை திருமணம் செய்ய விரும்பினார். அதை எதிர்த்து போராடி கல்வி பயின்று வருகிறார்.

பெண்கள் கல்வி பயில வேண்டும். குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என விரும்புகிறார். தங்களது சமூக பெண் குழந்தைகள் ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளுக்கு வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். கல்வி பயில பள்ளிகளுக்கு அனுப்பப்படுவதில்லை என வருத்தத்துடன் கூறினார். ஐ.நா.வில் தனது கருத்துக்களை பிரதிபலிக்கிறார்.



நஷியா அப்ரீன் குல்ஷார்பக் கிராமத்தை சேர்ந்தவர் ஐ.நா.வில் பேசும் போது ‘‘கிராமப்புறங்களில் வாழும் சிறுமிகளின் பிரச்சினைகள் குறித்தும், அவர்களின் கல்வி நிலை குறித்தும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் விளக்குகிறார்.


2 Bihar girls to address UN assembly on September 24

*********************************************** 


Two teenage girls from Bihar would tell world leaders about problems facing a girl child in the state at United Nations (UN) general assembly on September 24. Poonam Kumari, 14, and Nazia Afreen, 17, are among the 11 children from India who will get an opportunity to put forth their views on inclusive education and its various aspects in front of the world.

'கெட்ட சகவாசம்'.........குட்டிக்கதை



அருண் நன்கு படிக்கும் மாணவன்.ஆனால் கடந்த சில மாதங்களாக தேர்வில் அவன் எதிபார்த்த மதிப்பெண்களைப் பெறவில்லை.இது அவனது தந்தையை வேதனை அடையச் செய்தது.

அவனின் இந்த நிலைக்கு என்னக் காரணம் என்று அவன் தந்தை...சில ஆசிரியர்களை வினவ ..ஒரு ஆசிரியர்..'சமீபகாலமாக அவன் நண்பர்கள் சரியில்லை...அவர்கள் படிக்காமல் ஊர் சுற்றுபவர்கள் என்று சொன்னார்.

அது கேட்டு அவன் தந்தை அருணைக் கூப்பிட்டு நயமாக..கெட்ட சகவாசத்தை விடச் சொன்னார்...அருணோ அதற்கு இசையவில்லை....தன் நண்பர்களால் தன்னை மாற்ற முடியாது என்றான்.

அப்போது ..அவன் தந்தை ஒரு கூடையில் சில ஆப்பிள்களைக் கொண்டு வந்தார்...அருணிடம் ..ஒரு அழுகிய ஆப்பிளைக் கொடுத்து கூடையில் இருந்த மற்ற ஆப்பிள்களுடன் வைக்கச் சொன்னார்.

இரவு கழிந்தது..

மறுநாள்,,அந்த ஆப்பிள் கூடையை அருணைக் கொண்டு வரச்சொன்னார்...கூடையில் மேலும் சில ஆப்பிள்கள் அழுகியிருந்தன...

அருணின் அப்பா சொன்னார்...'அருண் பார்த்தாயா நேற்று கூடையில் நல்ல ஆப்பிள்கள் இருந்தன.அத்துடன் ஒரு அழுகிய ஆப்பிளை வைத்ததுமே மற்ற ஆப்பிள்களும் கெட்டுப்போகத் தொடங்கி விட்டன.அதுபோல நல்ல நண்பர்களுடன் ஒரு கெட்ட நண்பன் சேர்ந்தாலும்,நல்ல நண்பர்கள் அனைவரையும் கெடுத்துவிடுவான்.ஆனால் உனக்கோ கெட்ட நண்பர்கள் அதிகம்' என்றார்.

அது கேட்டு...அருண் ...தன் தவறை உணர்ந்து தன் கெட்ட நண்பர்கள் சகவாசத்தை விட்டான்.
 

'தன் கையே தனக்கு உதவி'..........குட்டிக்கதை



வினோத்தும் விக்னேஷும் நண்பர்கள்..இருவரும் ஒரே பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தனர்.

வினோத் வீட்டில் வேலைக்காரர்கள் இருந்தனர்.அவனுக்கு பள்ளிக்கு செல்ல சீருடை அணிவிப்பது..அவனது ஷூவுக்கு பாலிஷ் போட்டு அணிவிப்பது...அவனுக்கு தலைவாரிவிடுவது எல்லாம் வேலையாட்களின் வேலை...

ஒரு நாள் அவன் பள்ளி செல்லும்வழியில் இருந்த விக்னேஷ் வீட்டிற்கு செல்ல நேரிட்டது.

அப்போது விக்னேஷ்...தன் ஷூவிற்கு பாலிஷ் போடுவதைப் பார்த்தான்...'உன் ஷூவிற்கு நீயே வா பாலிஷ் போடுவாய்' என வினோத் ஆச்சிரியத்துடன் கேட்டான்.

'ஆமாம்..நீ வேறு யார் ஷூவிற்கு பாலிஷ் போடுவாய் 'என்று கிண்டலாக பதிலுக்குக் கேட்டான்..விக்னேஷ்.

'என் ஷூவிற்கு வேலையாட்கள் தான் பாலிஷ் போடுவார்கள் 'என்றான் வினோத்.

'அப்படியா..நமக்காக நம் வேலையை பிறரைச் செய்யச் சொல்வது தவறல்லவா..'.கடவுள் நம் வேலைகளை நாமே செய்ய வேண்டும் என்பதற்காகத்தானே நமக்கு இரு கைகளை கொடுத்திருக்கிறார் 'என்றான் விக்னேஷ்.

அது கேட்டு தன் தவறை உணர்ந்த வினோத்..இனி தன் வேலைகளைத் தானே செய்யவேண்டும் என்று தீர்மானித்தான்.

தன் வேலையைத் தானே பார்ப்பது ..தவறில்லை..அது நம்மை மேலும் சந்தோஷமாக வைக்கும்.

(ஆப்ரஹாம் லிங்கன் வாழ்வில் நடந்த சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது)

ஆட்டின் புத்திசாலித்தனம்.........குட்டிக்கதை



ஒரு காட்டில் ஓநாய் ஒன்று இருந்தது..அது இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்து ..ஊரில் இருந்த ஆடு..மாடுகளை வீழ்த்தி உண்டு வந்தது..

அதே ஊரில் மாடசாமி என்பவன் ஒரு ஆட்டை வளர்த்து வந்தான்.அந்த ஆடு புத்திசாலியாக வளர்ந்தது...

ஒரு நாள் இரவு ஊருக்குள் வந்த ஓநாய் மாடசாமியின் ஆட்டைப் பார்த்துவிட்டது,அதன் மீது பாய தயாரானது...ஆடோ..உயரமான இடத்திற்கு ஓடியது.அங்கிருந்தபடியே புத்திசாலியான அந்த ஆடு..
கீழே இருந்த ஓநாயிடம் ..'உமக்கு உணவாக ஆக நான் தயார்...ஆனால் அதற்கு முன் எனக்கு ஒரு சிறு ஆசை...இவ்வளவு அழகாக உள்ள நீங்கள் பாட...நான் ஆட வேண்டும்' என்று கூறியது.

தன்னை அழகன் என்ற புகழ்ச்சியில் மகிழ்ந்த ஓநாய் பாட சம்மதித்து தன் கொடூரக்குரலால் பாட ஆரம்பித்தது.

அந்த சத்தம் கேட்டு ..தூங்கிக்கொண்டிருந்த ஊர்மக்கள் விழித்தெழிந்து வந்து ஓநாயை அடித்துக் கொன்றனர்.

புகழ்ச்சியில் மயங்கிய ஓநாய் உயிரைவிட்டது.ஊரில் இருந்த ஆடு..மாடுகள் பயமின்றி வாழ்ந்தன...மாடசாமியின் ஆட்டின் புத்திக்கூர்மையை அனைவரும் பாராட்டினர்.

தொழில்நுட்ப தேர்வு இன்று முடிவு வெளியீடு!



தொழில்நுட்பத் தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது. தேர்வுத்துறை அறிவிப்பு:கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஓவியம், இசை, நடனம், தையல் பிரிவு, விவசாயம் மற்றும் கைத்தறி நெசவு ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகள் நடந்தன. இதன் முடிவு, 12ம் தேதி (இன்று) வெளியிடப்படுகிறது. தேர்வர்கள், தேர்வெழுதிய மையங்களுக்குச் சென்று, சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். சான்றிதழ்கள், இருப்பிட முகவரிக்கு அனுப்பப்பட மாட்டாது. இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
Click Here

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top