.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 11 September 2013

கையே சுகாதாரமானது.........குட்டிக்கதை



ராமனும்,லட்சுமணனும் நண்பர்கள்.ஒரு முறை அவர்கள் இருவரும் ஒரு நண்பனின் வீட்டிற்கு சாப்பிடச் சென்றார்கள்.


ராமன்...உணவை,எடுத்து சாப்பிட ஒரு ஸ்பூனும்..ஒரு ஃபோர்க்கும் கேட்டான்.லட்சுமணனோ..தன் கையால் உணவை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான்...

உடனே ராமன் அவனைப் பார்த்து 'ஸ்பூனை உபயோகித்து சாப்பிடு...அதுதான் சுகாதாரமானது...சுத்தமானது..'என்றான்.

ஆனால் லட்சுமணன் சிரித்துக்கொண்டே...'இல்லை..ராமா..கைதான் சிறந்தது..இது தான் சுகாதாரமானது...ஏனெனில் என் கையை என்னைவிட வேறு எவரும் பயன்படுத்தி இருக்கமுடியாது'என்றான்.

ராமன் வாய் மூடி மௌனியானான்.

(உண்மையில் இது வின்ஸ்டன் சர்ச்சிலுக்கும்...நம் நாட்டின் ஜனாதிபதியாயிருந்த ராதாகிருஷ்ணனுக்கும் இடையில் நடந்த சம்பவம்

உடல் உறுதியாகும் பயிற்சி!


உடல் உறுதியாகும் பயிற்சி


உடலில் உறுதி அடைய பல்வேறு பயிற்சிகள் உள்ளது. அதிலும் இந்த பயிற்சி மிகவும் எளிமையானது. இந்த பயிற்சியை வீட்டில் தொடர்ந்து தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் இந்த பயிற்சி செய்ய 20 நிமிடம் இருந்தால் போதுமானது.

இப்போது இந்த பயிற்சியை பார்க்கலாம். முதலில் தரையில் வசதியாக நிற்கவும். காலை லேசாக அகட்டி, மூச்சை உள் இழுத்தபடி ஐந்து விநாடிகள் இருக்கவும். பிறகு லேசாக முதுகைப் பின்னால் நகர்த்தவும். இப்போது மூச்சை உள் இழுத்தபடி இடது காலைப் பின்னால் மடக்கி இடது கையால் பிடிக்கவும்.

மூச்சை வெளியே விட்டபடி மீண்டும் காலைப் பழைய நிலைக்கு கொண்டு வரவும். அடுத்து கால் மாற்றி இதேபோல் செய்யவும். இப்படித் தொடர்ந்து ஐந்து முறை செய்ய வேண்டும்.

பலன்கள்... இந்த பயிற்சி அடிவயிற்றுப் பகுதிகளுக்கு மிகவும் நல்லது. இந்த பயிற்சி தொடர்ந்து செய்து வந்தால் உடல் உறுதியாகும்.


வயிற்றுக்கான எளிய பயிற்சி!


வயிற்றுக்கான எளிய பயிற்சி

வயிற்றுப்பகுதியில் உள்ள சதை குறைய எளிய பயிற்சிகள் பல உள்ளன. அவற்றுள் இதுவும் ஒன்று. இந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆனால் அதிக தொப்பை உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி பலன் தராது. தரையில் நன்றாக காலை நீட்டி உட்காரவும். வலது காலை இடது தொடையில் உள் பக்கமாக வைக்கவும். மூச்சை உள் இழுத்தபடி வலது கையை மேலே உயர்த்திய படி, இடது கையால் இடது கால் பாதத்தை முடிந்த வைர தொட முயற்சிக்கவும்.

கைகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருகையில் மூச்சை வெளியே விடவும். கால்கள் மாற்றி மீண்டும் இதேபோல் செய்யவும். இப்படி பத்து முறை தொடர்ந்து செய்ய வேண்டும்.  

ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 10 முறை செய்தால் போதுமானது.படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 25 முதல் 30 வரை செய்யலாம்.இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பலன்கள்.....அடிவயிற்றுபாகங்களுக்கு அழுத்தம் கிடைக்கும். கல்லீரல், கணையம், பித்தப்பை போன்ற உறுப்புகளின் செயல்பாடுகள் சீரடையும். 


தொப்பை குறைய உதவும் க்ரஞ்சஸ் பயிற்சி!


 தொப்பை குறைய உதவும் க்ரஞ்சஸ் பயிற்சி


இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை. இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை.

அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் 3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.

செய்முறை: 


முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் முட்டி வரை மடக்கவும். இயல்பான சுவாசத்தில் இருந்தபடி மெதுவாக முன்னோக்கி வந்து கைகளால் கால் முட்டியை தொடவும். இவ்வாறு எழும் போது முதுகு வளைய கூடாது. படத்தில் உள்ளபடி தான் செய்ய வேண்டும்.

அப்போது தான் முழுபலனையும் பெற முடியும். இவ்வாறு இந்த பயிற்சியை தினமும் 30 முறை செய்ய வேண்டும். பார்க்க எளிமையாக தெரிந்தாலும் செய்யும் போது இந்த பயிற்சி சற்று கடினமாக தான் இருக்கும்.

ஆரம்பத்தில் இந்த பயிற்சியை குறைந்த எண்ணிக்கையில் உங்களால் முடிந்த அளவு செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 50 முறை கூட செய்யலாம். செய்யும் எண்ணிக்கையின் அளவை பொறுத்து விரைவில் பலன் கிடைக்கும். 

இடை மெலிய எளிய உடற்பயிற்சி!


 இடை மெலிய எளிய உடற்பயிற்சி


இருபது வயதிலேயே இடை பெருத்து நடை தளர்ந்து போகின்றனர் இன்றைய இளம் பெண்கள். ஃபிட்டான தோற்றம் என்பது பெண்களுக்கு பெரும் சவாலாகவே இருக்கிறது. அதிலும் திருமணம், குழந்தைப்பேறுக்கு பிறகு, தங்களின் உடல் உருமாற்றத்தை பார்த்து பல  பெண்கள் பதட்டத்துக்கு ஆளாகின்றனர். 


மெல்லி இடைக்கான சிறப்பு பயிற்சி இதோ... முதலில் தரையில் குப்புறப்படுக்கவும். இரண்டு கைகளையும் தரையில் ஊன்றிய நிலையில் கால்களை லேசாக அகட்டவும். பிறகு மெதுவாக மூச்சை உள் இழுத்தபடி உடம்பை மேலே உயர்த்தவும். 



முகத்தை இடது பக்கம் திருப்பி, வலது கால் பாதத்தை பார்க்கவும். பத்து எண்ணும் வரையில் அதே நிலையில் இருக்கவும். மூச்சை வெளியே விட்டபடி திரும்பவும் பழைய நிலைக்கு திரும்பவும். இதே போல் மூசசை உள் இழுத்தபடி வலது பக்கம் திரும்பி இடது கால் பாதத்தை பார்க்கவும். 



பத்து எண்ணியவுடன் மூச்சை வெளியே விட்டபடி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். இதுபோல் தொடர்ந்து 10 முறை செய்யவும்.

பலன்கள்:

முதுகு வலி நீங்கும். முதுகுதண்டு வலுப்பெறும். மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யும். மலச்சிக்கல் குணமாகும். வயிற்று பகுதியில் சதை நீங்கி ரத்த ஓட்டம் அதிகரிக்கும். முதுகு தண்டுவடத்தில் உள்ள வலி நீங்கும். தைராய்டு பிரச்சனைகளுக்கு இந்த பயிற்சி ஏற்றது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top