வயிற்றுப்பகுதியில் உள்ள சதை குறைய எளிய பயிற்சிகள் பல உள்ளன. அவற்றுள் இதுவும் ஒன்று. இந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆனால் அதிக தொப்பை உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி பலன் தராது. தரையில் நன்றாக காலை நீட்டி உட்காரவும். வலது காலை இடது தொடையில் உள் பக்கமாக வைக்கவும். மூச்சை உள் இழுத்தபடி வலது கையை மேலே உயர்த்திய படி, இடது கையால் இடது கால் பாதத்தை முடிந்த வைர தொட முயற்சிக்கவும். கைகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருகையில் மூச்சை வெளியே விடவும். கால்கள் மாற்றி மீண்டும் இதேபோல் செய்யவும். இப்படி பத்து முறை தொடர்ந்து செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 10 முறை செய்தால் போதுமானது.படிப்படியாக எண்ணிக்கையின்...
Wednesday, 11 September 2013
தொப்பை குறைய உதவும் க்ரஞ்சஸ் பயிற்சி!
18:56
ram
1 comment
இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை. இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் 3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம். செய்முறை:
முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் முட்டி வரை மடக்கவும். இயல்பான சுவாசத்தில் இருந்தபடி மெதுவாக முன்னோக்கி வந்து கைகளால் கால் முட்டியை தொடவும். இவ்வாறு எழும் போது முதுகு வளைய கூடாது. படத்தில்...
இடை மெலிய எளிய உடற்பயிற்சி!
18:52
ram
No comments
இருபது வயதிலேயே இடை பெருத்து நடை தளர்ந்து போகின்றனர் இன்றைய இளம் பெண்கள். ஃபிட்டான தோற்றம் என்பது பெண்களுக்கு பெரும் சவாலாகவே இருக்கிறது. அதிலும் திருமணம், குழந்தைப்பேறுக்கு பிறகு, தங்களின் உடல் உருமாற்றத்தை பார்த்து பல பெண்கள் பதட்டத்துக்கு ஆளாகின்றனர்.
மெல்லி இடைக்கான சிறப்பு பயிற்சி இதோ... முதலில் தரையில் குப்புறப்படுக்கவும். இரண்டு கைகளையும் தரையில் ஊன்றிய நிலையில் கால்களை லேசாக அகட்டவும். பிறகு மெதுவாக மூச்சை உள் இழுத்தபடி உடம்பை மேலே உயர்த்தவும்.
முகத்தை இடது பக்கம் திருப்பி, வலது கால் பாதத்தை பார்க்கவும். பத்து எண்ணும் வரையில் அதே நிலையில் இருக்கவும். மூச்சை வெளியே விட்டபடி திரும்பவும் பழைய நிலைக்கு திரும்பவும்....
காலி வாட்டர் பாட்டில் கொடுத்தால் ரயில் டிக்கெட்! – சீனா அதிரடி
18:36
ram
1 comment
காலி குடி நீர் பாட்டில்களை கொடுத்து, ரயில் கட்டணம் செலுத்தும் திட்டத்தை பீஜிங் சப்வே ரயில் அறிமுகம் செய்துள்ளது. சீனாவில் ரயில் பயணம் செய்யும் பயணிகள், காலி குடிநீர் பாட்டில்களை ஆங்காங்கே வீசுகின்றனர். இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. காலி குடி நீர் பாட்டில்களை ஒன்றாக சேகரித்து மறு சுழற்சி முறையில் பயன்படுத்த பீஜிங் சப்வே ரயில் நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி 2 சப்வே ரயில் நிலையங்களில், காலி பாட்டில் சேகரிக்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒரு காலி பாட்டிலை இயந்திரத்தில் போட்டால், 0.15 டாலர் அளவுக்கு ஒரு சிறு தொகை வாடிக்கையாளருக்கு கிடைக்கும். 15 பாட்டில் போட்டால், ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு டிக்கெட் எடுக்கும் அளவுக்கு...
ராணுவ விவகாரங்களுக்கான வெளியுறவு உதவி செயலாளராக இந்தியரை நியமிக்க ஒபாமா பரிந்துரை!
18:25
ram
No comments
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்திய அமெரிக்கரான புனீத் தல்வாரை நாட்டின் மிக முக்கிய தூதரக பதவிக்காக பரிந்துரைத்துள்ளார். மத்தியக் கிழக்கு பகுதிகளுக்கான விவகாரங்களில் கடந்த 4 வருடங்களாக ஒபாமாவின் ஆலோசராக புனீத் தல்வார் விளங்கினார். அவரை, அரசியல் ராணுவ விவகாரங்களுக்கான வெளியுறவு உதவி செயலாளராக நியமிக்க நேற்று ஒபாமா பரிந்துரைத்தார். அமெரிக்க அரசுத்துறையின் மிக உயரிய பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இரண்டாவது நபராக புனீத் தல்வார் விளங்குகிறார்.
கடந்த ஜூலை மாதம் நிஷா தேசாய் பிஸ்வால் என்பவர் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான வெளியுறவு உதவி செயலாளராக பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த இரு பதவிகளும் செனட் சபையால் உறுதி செய்யப்படவுள்ளது.
மேலும்,”நாட்டின்...