இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, வெளிநாடுகளில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான செலவை, இனி அரசே ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.இந்த ஆட்சிப் பணி அதிகாரிகள் இது போன்று வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ சிகிச்சைப் பெற்றால், அதற்கான செலவுத் தொகையை திரும்பப் பெறும் வசதி, இது வரை கிடையாது என்பது நினைவு கூறத்தக்கது..
இந்தியாவில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகள், அவர்கள் பணியாற்றும் மாநிலத்தை விட்டு வேறு மாநிலத்திலேயோ அல்லது வெளிநாடுகளுக்கு சென்றோ, அவசர மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால், அதற்கான செலவுத் தொகையை திரும்பப் பெறும் வகையில், புதிய விதிமுறைகளை...
Tuesday, 10 September 2013
தகவல் அறியும் உரிமை சட்டத்தை மையமாக வைத்து தயாராகும் ‘அங்குசம்’
மனுஸ்ரீ பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் மனுக்கண்ணன், பானுமதி யுவராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘அங்குசம்’. இதில் நாயகனாக கந்தா, நாயகியாக ஜெயந்தி நடிக்கின்றனர். வாகை சந்திரசேகர், சார்லி, பாலாசிங், பாவா லட்சுமணன், கராத்தே ராஜா, காதல் சுகுமார், காதல் தண்டபாணி, ரஞ்சன், மீராகிருஷ்ணன், ரேகா சுரேஷ், பிருந்தாதரன் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி மனுக்கண்ணன் இயக்குகிறார். படம் பற்றி கேட்டபோது,.”தகவல் அறியும் உரிமை சட்டத்தை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. திருச்சியில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றை கற்பனை கலந்து படமாக்கியுள்ளோம். காதல், ஆக்ஷன், குடும்ப சென்டிமெண்டுடன் கமர்சியல் படமாக தயாராகியுள்ளது. அனாலும்...
இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் பல்வேறு பணி வாய்ப்புகள்!
மத்திய அரசு வேலை வேண்டும் என்று ஏங்கிடும் இளைஞர்கள் எண்ணற்றோர் உண்டு. ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து மத்திய அரசு நிறுவனமான இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் காலியாகவுள்ள 1578 காலியிடங்களுக்கு போட்டியிட விரும்புவோருக்கான வாய்ப்பை இந்த தொழிற்சாலை அறிவித்துள்ளது.
இது குறித்த தகவல்கள் இதோ….
துறை வாரியாக காலியிடங்கள்:மெக்கானிக்கல் 876,ஐ.டி., 23,எலக்ட்ரிகல் 133,கெமிக்கல் 296,சிவில் 39,மெடலர்ஜி 46,கிளாதிங் டெக்னாலஜி 32,லெதர் டெக்னாலஜி 4,ஸ்டோர்ஸ் 47,ஓ.டி.எஸ்., 59,ஆட்டோமொபைல் 3மற்றும் எலக்ட்ரானிக்ஸ் 20
வயது தகுதி : 27 வரை
சம்பளம் : பணிக்கேற்ப ரூ.9300லிருந்து ரூ.34800 வரை
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலமாக மட்டுமே
ஆன்லைனில் விண்ணப்பிக்கக்...
கம்ப்யூட்டர் தரும் பொதுவான பிரச்னைகள்!
உங்களிடம் உங்கள் அப்பா பயன்படுத்திய பழைய எக்ஸ்பி அல்லது விண்டோஸ்
98 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டராக இருந்தாலும், அல்லது புதிய கம்ப்யூட்டராக விண்டோஸ்
7 சிஸ்டத்துடன் இருந்தாலும், சில பிரச்னைகள் எல்லா வகை கம்ப்யூட்டர்
செயல்பாட்டிலும் இருப்பதாக நாம் உணர்வோம். சில உண்மையிலேயே பிரச்னைகளாக இருக்கும்.
சில நாமாக எண்ணிக் கொள்பவையாக இருக்கும். இங்கு அத்தகைய பிரச்னைகள் குறித்தும்,
அவற்றிற்கான தீர்வுகள் சார்ந்தும் சில தகவல்களைப் பார்க்கலாம்.1.
முதலில் இதனை முயற்சிக்க:
எந்தக் கம்ப்யூட்டராக இருந்தாலும், சிக்கல் கொடுப்பது
எந்த புரோகிராமாக இருந்தாலும், அவற்றை மூடி, மீண்டும் இயங்க வைத்தால், எந்தப்
பிரச்னைக்கும் தீர்வாக அது அமையும். கம்ப்யூட்டர்...
காலக்ஸி கியர் ஸ்மார்ட் வாட்ச் வெளியானது!
சென்ற வாரம், பெர்லின் நகரில், சாம்சங் நிறுவனம், தன் முதல் காலக்ஸி கியர் ஸ்மார்ட்
வாட்ச்சினை அறிமுகம் செய்துள்ளது. சோனி நிறுவனத்தை அடுத்து, இத்தகைய கடிகாரத்தை
அறிமுகப்படுத்திய இரண்டாவது நிறுவனமாக, சாம்சங் பெயர் பெற்றுள்ளது. உடலில் சாதனத்தை
அணிந்து கொண்டு, அதன் வழியே கம்ப்யூட்டிங் பணிகளை மேற்கொள்ளலாம் என்ற எண்ணப்
பாங்கு, டிஜிட்டல் உலகில் வலம் வருபவர்களிடையே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
மக்கள் பலரும் இத்தகைய சாதனங்களை எதிர்பார்ப்பதால், இதுநல்ல விற்பனையை மேற்கொள்ளும்
சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கும். மேலும், வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்
நுட்பம் இதற்கு முழுமையாகக் கை கொடுக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் காலக்ஸி கியர்
ஸ்மார்ட் வாட்ச், இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் போனுடன் இணைந்தே செயல்படும்.
இணையாக்கப்பட்ட ஸ்மார்ட் போனுடன், புளுடூத் வழி தொடர்பு கொண்டு இது இயங்கும்.
இந்த கடிகாரத்தில் வைத்து...