.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 9 September 2013

நம்பிக்கை தருவாரா நவநீதம் பிள்ளை: இன்று மனித உரிமைமாநாடு!

ஐ.நா. மனித உரிமை அமைப்பின் 24-வது கூட்டம் இன்று ஜெனிவா நகரில் நடக்கிறது. இக்கூட்டத்தில் 20 நாடுகளில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதில் இலங்கையில் உள்நாட்டு போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கையினை, ஐ.நா. மனித உரிமை ஆணைய தலைவர் நவநீதம்பிள்ளை சமர்பிக்கிறார். கடந்த மாதம் 7 நாள் பயணமாக இலங்கை சென்று போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலை குறித்தும், அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ள மறுவாழ்வு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். இதற்கான அறிக்கையினை இன்று தாக்கல் செய்கிறார். இன்று துவங்கும் மாநாடு 27-ம் தேதி வரை நடக்கிறது.போருக்கு பின்னர் முதன்முறையாக, நவநீதம் பிள்ளை இலங்கை சென்று இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததால், அவரின் அறிக்கையில், இலங்கை அரசின் மீதான மனித உரிமை குற்றச்சாட்டு பலமாக எதிரொலிக்கும்...

ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம் மீண்டும் இடம் பெறுகின்றது!

  ஏழு மாதங்களுக்கு முன்னர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட மல்யுத்தப் போட்டிகளை மீண்டும் அனுமதிப்பதாக ஒலிம்பிக் கமிட்டி நேற்று அறிவித்தது. அர்ஜெண்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்சில் கடந்த வெள்ளியன்று துவங்கிய கமிட்டி கூட்டத்தில் வரும் 2020 ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பினை டோக்கியோ பெற்றது. நேற்று நடந்த கூட்டத்தில் மல்யுத்தம், பேஸ்பால்,சாப்ட் பால் மற்றும் ஸ்குவாஷ் போன்ற விளையாட்டுகளுக்கான ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், மல்யுத்ததிற்கு ஆதரவாக 49 வோட்டுகளும், பேஸ்பாலுக்கு 24 வோட்டுகளும், ஸ்குவாஷ் விளையாட்டிற்கு ஆதரவாக 22 வோட்டுகளும் கிடைத்தன. இதன் மூலம், ஏழு மாதங்களுக்கு முன்னால் பலருக்கும் ஆச்சரியத்தை...

விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலம்!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் 1702 இடங்களில் பெரிய விநாயகர் சிலைகளை வைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.இது தவிர ஆயிரக்கணக்கான சிறிய சிலைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட உள்ளன. வீடுகளிலும் களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து பொது மக்கள் பூஜை செய்வார்கள். இந்த சிலைகள் ஒரு வாரத்துக்கு பின்னர் நீர் நிலைகளில் கரைக்கப்படும்.சென்னையில் வருகிற 15 ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் ஊர்வலம் நடத்தப்படுகிறது. இதில் ராமகோபாலன் பங்கேற்கிறார்.   மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாருக்கு 150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டை படையல்...

மூத்த குடிமக்களை பாதுகாக்க 10 அம்ச திட்டம: மத்திய அரசு வெளியீடு!

அண்மை காலமாக வீடுகளில் தனியாக இருக்கும் முதியோர்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். அவர்களின் இயலாமையை பயன்படுத்திக் கொள்ளும் கயவர்கள் முதியோரை தாக்கி பொருட்களை கொள்ளையடித்துச் செல்கின்றனர். பல சமயங்களில் மூத்த குடிமக்கள் கொடூரமாக கொலையும் செய்யப்படுகின்றனர். இதையடுத்து”முதியோர் மிகவும் முக்கியமாக பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்’ என தெரிவித்துள்ள மத்திய அரசு அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில் 10 அம்சங்களைத் தெரிவித்து அவற்றை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.   மத்திய அரசு தெரிவித்துள்ள திட்டங்கள்::: *முதியோர் வாழும் பகுதிக்கு ஏற்ப அவர்களின் பாதுகாப்பு குறித்து சரியான திட்டமிடல் அவசியம். இப்போது...

புதிய சிம் கார்டு பெற ஆதார் கார்டு அவசியமாகிறது!

புதிய சிம் பெற ஆதார் கார்டு கட்டாயம் தேவை. விரல் ரேகை பதிவு செய்து உடனடியாக வாடிக்கையாளர் பற்றிய அடையாள விவரங்களை ஆன்லைன் மூலம் பொது சர்வரில் உறுதி செய்யும் முறையை கொண்டுவருவதற்கான விதி முறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. ”வாடிக்கையாளரின் அடையாளத்தை உறுதி” செய்யும் இந்த முறையை இந்த ஆண்டு இறுதிக்குள் அமல்படுத்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.   இந்த முறை எப்படி செயல்படுகிறது என்பது குறித்து ஆந்திராவில் சமீபத்தில் சோதனை செய்து பார்க்கப்பட்டது. சோதனையில் எதிர்பார்த்த பலன்கள் கிடைத்ததால் இந்த விஷயம் தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். அனுமதி கிடைத்ததும் இந்த ஆண்டு இறுதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்...
Page 1 of 87912345Next

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top