.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 9 September 2013

மூத்த குடிமக்களை பாதுகாக்க 10 அம்ச திட்டம: மத்திய அரசு வெளியீடு!



அண்மை காலமாக வீடுகளில் தனியாக இருக்கும் முதியோர்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். அவர்களின் இயலாமையை பயன்படுத்திக் கொள்ளும் கயவர்கள் முதியோரை தாக்கி பொருட்களை கொள்ளையடித்துச் செல்கின்றனர். பல சமயங்களில் மூத்த குடிமக்கள் கொடூரமாக கொலையும் செய்யப்படுகின்றனர். இதையடுத்து”முதியோர் மிகவும் முக்கியமாக பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்’ என தெரிவித்துள்ள மத்திய அரசு அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில் 10 அம்சங்களைத் தெரிவித்து அவற்றை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.

sep 9senior citizen-- 2
 


மத்திய அரசு தெரிவித்துள்ள திட்டங்கள்:::

*முதியோர் வாழும் பகுதிக்கு ஏற்ப அவர்களின் பாதுகாப்பு குறித்து சரியான திட்டமிடல் அவசியம். இப்போது மட்டுமின்றி, எதிர்காலத்திலும் முதியோர் சந்திக்க உள்ள சவால்கள், அச்சுறுத்தல்கள் என்ன என்பது குறித்து திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். அதில் ஒவ்வொரு பகுதியிலும் எத்தனை முதியோர் உள்ளனர்; அவர்களில் எத்தனை பேர், துணையின்றி தனிமையாக உள்ளனர் என்பதை கணக்கிட வேண்டும்.

*அந்தந்த மாவட்ட போலீஸ் தலைமையகங்கள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் தகவல் அனுப்பி முதியோருக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்.

*வழங்கப்படும் போலீஸ் பாதுகாப்பு, போதுமானதாக இருக்கிறதா என்பதை குறிப்பிட்ட கால இடைவெளியில் சரிபார்க்க வேண்டும். முதியோர் வசிக்கும் பகுதியில் போலீஸ் ரோந்து அதிகரிப்பது அவசியம்.

*முதியோர் எண்ணிக்கை, அவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு போன்ற தகவல் தொகுப்பு பராமரிக்கப்பட்டு அவ்வப்போது மூத்த அதிகாரிகள் முன்னிலையில் அவை மேம்படுத்தப்பட வேண்டும்.

*குறிப்பாக செல்வந்தர் குடும்பங்களைச் சேர்ந்த முதியோர் வசிப்பிடங்களில் கண்காணிப்பு மற்றும் ரோந்து அதிகமாக இருக்க வேண்டும். அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் எண்ணிக்கை, அவர்கள் யார், யார், வெளியே இருந்து எத்தனை பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அத்தகைய வேலையாட்களின் குற்ற பின்னணி போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும்.

*அந்த வேலையாட்களை யாராவது ஒருவர் அல்லது அமைப்பு பரிந்துரை செய்திருக்க வேண்டும். தவறு ஏற்படுமானால், அந்த நபர் அல்லது அவரை பரிந்துரை செய்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும்.

*இந்த ஏற்பாடுகளை போலீஸ் துறையின் மூத்த அதிகாரிகள், அவ்வப்போது கண்காணித்து, தேவைப்படின் கூடுதல் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அவர்கள் நேரடியாக முதியோருடன் கலந்துரையாட வேண்டும்.

*மேலும் அரசு மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களும் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்தி முதியோர் பாதுகாப்பிற்கு தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும்.

*விற்பனை பிரதிநிதிகள்,வீடு வீடாகச் சென்று பொருட்களை விற்பவர்கள் போன்றவர்கள், எளிதில் முதியோரை அணுகா வண்ணமும், முதியோரை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது குற்றவாளிகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையிலான செயல்கள் தடை செய்ய வேண்டும்.

*போலீஸ் அதிகாரிகளுடன் இணைந்து பொதுமக்களும், முதியோர் பாதுகாப்பிற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.”என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய சிம் கார்டு பெற ஆதார் கார்டு அவசியமாகிறது!



புதிய சிம் பெற ஆதார் கார்டு கட்டாயம் தேவை. விரல் ரேகை பதிவு செய்து உடனடியாக வாடிக்கையாளர் பற்றிய அடையாள விவரங்களை ஆன்லைன் மூலம் பொது சர்வரில் உறுதி செய்யும் முறையை கொண்டுவருவதற்கான விதி முறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. ”வாடிக்கையாளரின் அடையாளத்தை உறுதி” செய்யும் இந்த முறையை இந்த ஆண்டு இறுதிக்குள் அமல்படுத்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

sep 9 sim_cards

 



இந்த முறை எப்படி செயல்படுகிறது என்பது குறித்து ஆந்திராவில் சமீபத்தில் சோதனை செய்து பார்க்கப்பட்டது. சோதனையில் எதிர்பார்த்த பலன்கள் கிடைத்ததால் இந்த விஷயம் தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். அனுமதி கிடைத்ததும் இந்த ஆண்டு இறுதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Sunday, 8 September 2013

மருத்துவ டிப்ஸ்! - குழந்தைகளுக்கு வாந்தி நிற்க...



* வேப்பம் பூ ரசம் அருந்தினால், வயிற்றில் உள்ள உப்புசம், வாயுத் தொல்லை மற்றும் அஜீரணக் கோளாறுகள் நீங்கி விடும்.
 
* தினமும், அருகம் புல் சாறு குடித்து வந்தால், மலச்சிக்கல் இருக்காது.
 
* வசம்பை சுட்டு சாம்பலாக்கி, பொடி செய்து, தேனுடன் கலந்து குழந்தைகள் நாக்கில் தடவினால், வாந்தி நிற்கும்.
Click Here

"கரு கரு' கூந்தலுக்கு, காய் கறி வைத்தியம்!



கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் உண்டா... கூந்தல் நீளமா, அடர்த்தியா, கருமையா வளர, தவம் கிடக்கும் பெண்களுக்காகவே இந்த கட்டுரை:

* வைட்டமின், 'பி' குறைவினால், விரைவில் தலைமுடி நரைக்க ஆரம்பிக்கும். ஊட்டசத்துமிக்க உணவே, இக்குறைபாட்டை நீக்கும்.


* நெல்லிக்காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து, அந்த விழுதைத் தலையில் பூசி, ஊற வைத்து குளித்தால், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதுடன், கண் எரிச்சலையும் போக்கும்.
 

* அழுகின தேங்காயை தூக்கி எறியாமல், அதனுடன், சிறிது சுடுநீர் சேர்த்து அரைத்து, தலையில் தடவி ஊற வைக்கவும். பிறகு நன்றாக, 'மசாஜ்' செய்தால், மயிர்க்கால்கள் வலுப்பெறும்.
 

* இரண்டு ஸ்பூன் வினிகருடன், கடலைமாவைக் குழைத்து, கால் மணி நேரம் ஊறவைக்கவும். இதை, மயிர் கால்களில் படும்படி பூசி, அரைமணி நேரம் கழித்து அலசினால், பொடுகு தொல்லை போய் விடும்.
 

* உங்களுக்கென்று தனியாக சீப்பு வைத்துக் கொள்ளவும். வாரத்தில் மூன்று தடவை அதைக் கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளை தவிர்க்கவும்.
 

* தேங்காயை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, பால் பிழியவும். இதை இரும்பு கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயை, தலையில் தடவி ஊறியபின், சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.
 

* நல்ல மரச் சீப்பினால் அழுந்த வாரினால், மயிர்க்கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு, முடி வளர்வதும் தூண்டப்படுகிறது.
 

* நேரமில்லை என்பவர்கள், சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயப் பொடி, பயத்த மாவு கலந்து ஊற வைத்து தேய்த்துக் குளிக்கலாம்.
 

* விளக்கெண்ணையை போல உடலுக்கு குளிர்ச்சி தருவது வேறு எதுவும் இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, இலேசாக சுடவைத்து, மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்த சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க முத்தான வழி இது.
 

* தலையில், ஆங்காங்கே சிறு பொட்டல் இருந்தால், சிறிய வெங்காயமும், மிளகுப் பொடியும் சேர்த்துத் தடவி ஊற வைத்தால், மீண்டும் முடி வளரும்.
 

* தலை முடிக்கு, போஷாக்குத் தரும் ஷாம்பூவை, வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப் பயறு அரைப் பங்கு, புங்கங்காய் கைப்பிடி அளவு எடுத்து, மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். ரசாயனப் பொருட்கள் இல்லாத இந்தப் பொடி, எந்த வித தீங்கும் ஏற்படுத்தாது.
 

* பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். இதற்கு, கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்து, பொடி செய்து, பசும்பாலில் குழைத்து, தலையில் தடவி ஊறியபின் குளித்தால், விரைவில் குணம் தெரியும்.
 

* தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளும் வழக்கம் இருப்பவர்கள், அந்த தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களை பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முடி கறுப்பாக வளரும்.

* வெயிலில் அலைந்து, வேலை செய்வோர், தினமும் உச்சந்தலையில் விளக்கெண்ணெயை தடவி வந்தால், கண்ணுக்குக் குளிர்ச்சி; முடியும் உதிராது.


* தலைக்கு சீயக்காய்த் தூள் தேய்க்கும் போது, சீயக்காயுடன் தண்ணீருக்கு பதில், மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும்.



முடி பளபளப்பாக இருக்க...


வெங்காயத்தையும், முட்டைக் கோசையும் பொடிப் பொடியாக நறுக்கி, ஒரு கப் அளந்து எடுத்து, அதை இரவு முழுவதும் ஒரு செப்புப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும். காலையில் சிறிது, யூடிகோலன் சேர்த்தால் வெங்காய வாசனை போய்விடும். இந்த சாறுடன், தேங்காய் எண்ணெய் கலந்து, மயிர் கால்களில் படும்படி நன்றாக, "மசாஜ்' செய்யவும். சீயக்காய்ப் பொடி போட்டுக் குளித்தால், முடி பளபளப்பாக மென்மையாக மாறும்.

ஏற்றுமதி கொள்கையில் ரயில்வே முறைகேடு; புதிய ஊழல் ; ரூ.50 ஆயிரம் கோடி இழப்பு!



நாளுக்கொரு ஊழல் வெளி வருவதில் தற்போது ரயில்வேயில் ஏற்றுமதிக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகளை நடத்தி மத்திய அரசுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக மத்திய தணிக்கை துறை கணக்காயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. மத்திய அரசை எதிர்க்க இதுவும் ஒரு ஊழலாக கிடைத்துள்ளது.

சமீப காலமாக ஸ்பெக்ட்ரம், நிலக்கரி முதல் ஆணுறை விநியோகம் வரை மத்திய அரசு பல்வேறு ஊழல் முறைகேட்டில் சிக்கி பெரும் தலைக்குனிவை சந்தித்து வந்துள்ளது. இந்நிலையில் ரயில்வேயில் ஒரு புதிய ஊழல் பூதம் கிளம்பியிருக்கிறது. ரயில்வேயில் ஏற்கனவே பணியாளர் தேர்வு மையத்தில் நடந்த ஊழல் காரணமாக இந்த தேர்வு முழு அளவில் ரத்து செய்யப்பட்‌‌டது.

இந்நிலையில் ரயில்வே ஏற்றுமதி சரக்கு கட்டணத்தில் குறைத்து வசூலித்து மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது உள்நாட்டு பயனீட்டுக்கு போக ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு இரட்டை முறையை பயன்டுத்தியது, இதன்படி இரும்பு உருக்கு ஏற்றுமதி செய்தவர்களிடம் குறைந்த கட்டணம் வசூலித்து இதில் பல அதிகாரிகள் ஆதாயம் அடைந்துள்ளனர்.

இந்த வகையில் ரூ. 17 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்திருப்பதாகவும், அரசுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் கணக்காயம் (சி.ஏ.ஜி ) தனது அறிக்கையில் கூறியுள்ளது.

இந்த ஊழல் தற்போது மீண்டும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



7 பேர் ரயில்வே அமைச்சர் :


ரயில்வே வாரியத்தில் உயர் பொறுப்புகள் பெற்று தருவதற்கு ரயில்வே அமைச்சராக இருந்த பவன்குமார் பன்சால் மருமகன் பல லட்சம் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில், கடந்த மே 10ல் பன்சால் தனது பதவியை ராஜினாமா செய்தார், கடந்த 2009 முதல் 2013 வரையிலான காலக்கட்டத்தில் 7 பேர் ரயில்வே அமைச்சர் இருந்ததால் அனைவரையும் விசாரிக்க வேண்டும் என எதிர்கட்சியினர் கோரியுள்ளனர்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top