.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 8 September 2013

சந்திரனுக்கு ஆளில்லா விண்கலம் நாசா அனுப்பியது!


 nasa


சந்திரனின் வான்வெளி குறித்தும், அதை சுற்றிலும் தூசுகள் மிதப்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மைய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர்.


அதற்காக ‘லாட்’ என்ற ஆளில்லா விண்கலம் தயாரிக்கப்பட்டது. அது நேற்று விர்ஜீனியா விண்வெளி தளத்தில் இருந்து மின்போவர் வி.ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.


இந்த விண்கலம் ‘ரோபோ’ மூலம் இயங்கும் சிறிய கார் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை கலிபோர்னியாவில் உள்ள நாசா அமெஸ் ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ் பீட்டர் வோர்டன் உருவாக்கியுள்ளார்.


இது வருகிற அக்டோபர் மாதம் 6–ந்தேதி அதாவது இன்னும் 2 மாதத்தில் சந்திரனை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு தரை இறங்கும் ‘லாடீ’ விண்கலம் தனது ஆய்வை தொடங்குகிறது.


அங்கிருந்து தகவல்களையும், போட்டோக்களையும் பூமிக்கு அனுப்புகிறது. ரூ.1900 கோடி செலவில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 6 மாத ஆய்வுக்கு பின் ‘லாடீ’ விண்கலம் சந்திரனிலேயே தனது வாழ்நாளை முடித்து கொள்ளும். பூமிக்கு திரும்பாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒபாமாவுக்கான தேசிய நிதி துணைத் தலைவரான இந்திய பெண்மணி!

அதிக தேர்தல் நிதி திரட்டி கொடுத்த இந்திய பெண்ணுக்கு உயர் பதவி அளித்து கொள்ரவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா.


கடந்த 2011-2012 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஒபாமாவுக்கு ரூ.20 கோடி தேர்தல் நிதி திரட்டியவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜிதா ராஜி.நிதி ஆலோசகரான இவர் பெர்னார்டு கல்லூரியில் பி.ஏ. பட்டப் படிப்பும், கொலம்பியா வர்த்தக பள்ளியில் எம்.பி.ஏ. பட்டப் படிப்பும் படித்துள்ளார்.2012 ஆம் ஆண்டு இவர் ஒபாமாவுக்கான தேசிய நிதி துணைத் தலைவராக பதவி வகித்தார். கொலம்பியா வர்த்தக பள்ளியில் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.


sep 7 - lady america
 



இந்நிலையில் அஜிதா ராஜிவை ஒபாமா, அமெரிக்கா அதிபரின் ஆணைய உறுப்பினராக நியமித்துள்ளார். இவரைப் போல மேலும் 9 பேருக்கும் முக்கிய பதவிகளை ஒபாமா வழங்கியுள்ளார். முன்னதாக வாஷிங்டன் போஸ்ட் இதழில், அஜிதா ராஜி ஐரோப்பிய நாடுகளுக்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கப்படுவார் என்று செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

2020ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் நடத்தும் வாய்ப்பை தட்டியது ஜப்பான்!

வரும்  ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கவுள்ளது. 2020 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த டோக்கியோ, இஸ்தான்புல் மற்றும் மாட்ரிட் ஆகிய நகரங்களிடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஜப்பானின் டோக்கியோ நகரம் தேர்வு செய்யப்பட்டது. முன்னதாக, கடந்த 1964ம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.



sep 8 The-Olympic-

 


ஸ்விட்சர்லாந்து நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஆண்டு செயல்குழுக் கூட்டம் கடந்த வெள்ளியன்று துவங்கியது. அர்ஜெண்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்சில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. 


இதில் வரும் 2020ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நகரத்தினை தேர்வு செய்யும் வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் துருக்கியின் இஸ்தான்புல் நகரைத் தோற்கடித்து ஜப்பானின் டோக்கியோ நகரம் இந்த வாய்ப்பினைப் பெற்றது. 


வாக்கெடுப்புக்கான முதல் சுற்றில் கனடாவின் மாட்ரிட் நகரத்துடன் சரிசமமான வாக்குகளைப் பெற்ற இஸ்தான்புல், பின்னர் நடந்த விவாதத்தில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்று வாக்கெடுப்பிற்குத் தகுதி பெற்றது. இதன்பின்னர் நடந்த தகுதிச் சுற்றில் இஸ்தான்புல் பின்னுக்குத் தள்ளப்பட்டு, டோக்கியோ தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ஜாக்குவஸ் ரோக் அறிவித்தார்.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ச்பர்கில் நடைபெற்ற ஜி -20 கூட்டத் தொடருக்குப் பின்னர் இந்தக் கமிட்டியின் கூட்டத்தில் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே கலந்துகொண்டார். சுனாமியினால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் புகுஷிமா அணு உலை குறித்த உறுப்பினர்களின் அச்சத்தை ஜப்பானியப் பிரதமர் நிவர்த்தி செய்தார். 


டோக்கியோவிலிருந்து 220 கி.மீ தொலைவில் உள்ள இந்த அணு உலையானது தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும், அதனால் டோக்கியோ நகரத்திற்கு எந்த ஆபத்தும் நேரிடாது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியினை நடத்த டோக்கியோ தேர்வு செய்யப்பட்டதை தொலைக்காட்சி வாயிலாக அறிய நேரிட்ட ஜப்பானிய மக்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகினர்.


கடந்த 2016ஆம் ஆண்டில் ரியோ டி ஜெனிரோவிடம் இந்த வாய்ப்பை இழந்தபின், டோக்கியோ இந்த முறை நேரிடையாக இரண்டாவது சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டது. கடந்த 1964ஆம் ஆண்டு முதல்முறையாக டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. தற்போது, 2020 ஆண்டிற்கான போட்டிகளை நடத்தும் வாய்ப்பினைப் பெற்றிருப்பதன் மூலம், ஆசிய நகரங்களிலேயே இரண்டாவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நகரம் என்ற பெருமையை டோக்கியோ பெறுகின்றது என்பது அடிசினல் தகவல்.

சீமான்–கயல்விழி திருமணம் சென்னையில் இன்று நடந்தது! மினி ஆல்பம்!!


நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று காலையில் திருமணம் நடந்தது. தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். 


சீமான் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து இருந்தார்.மணப்பெண் கயல்விழி தங்கநிற பட்டு சேலை அணிந்து இருந்தார்.தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. தமிழ் முதல் எழுத்தான ‘அ’ பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தாலியை பழ.நெடுமாறன் எடுத்து கொடுக்க அதை சீமான் கயல்விழி கழுத்தில் அணி வித்தார்.பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.

sep 8 seeman marrage.JODI
 


சீமான் தாலி கட்டுவதற்கு முன் மேடையில் வைக்கப்பட்டு இருந்த பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பானுமதி அம்மாள், காளிமுத்து, மணிவண்ணன் ஆகியோர் படங்களுக்கு மாலை அணிவித்தார். அப்போது மணமக்களும், நாம் தமிழர் கட்சியினரும் ஈழப் போரில் உயிர் நீத்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.



விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன், கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன், ம.தி.மு.க. துணை பொது செயலாளர் மல்லை சத்யா, பாலவாக்கம் சோமு, திருச்சி வேலுசாமி, தமிழருவி மணியன், புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன், கலைக்கோட்டுதயம் பால்வியூமன்,நடிகர்கள் சத்யராஜ், ஜெயம்ரவி, விவேக், ராஜேஷ், டைரக்டர் பாரதிராஜா மகன் மனோஜ், விக்னேஷ், டைரக்டர்கள் பாலுமகேந்திரா, ஆர்.கே.செல்வமணி, சேரன், அமீர், பாலா, பாலாஜிசக்திவேல், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்ட பலர் நேரில் வந்து வாழ்த்தினர்.





திருமண மேடையில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் அவரது மனைவி மதிவதனி ஆகியோர் திருமண கோலத்தில் இருக்கும் படம் பொறித்த பிரமாண்ட பேனர் வைக்கப்பட்டு இருந்தது. மேடையின் இடது புறத்தில் பெரியார் புகைப்படமும், வலது புறத்தில் திருவள்ளுவர் படமும் வைக்கப்பட்டு இருந்தது. சீமான் பிரபாகரனுடன் ஒன்றாக இருக்கும் போட்டோக்கள் விழா அரங்கிலும், வெளியிலும் ஏராளமாக வைக்கப்பட்டு இருந்தன.

Saturday, 7 September 2013

உங்களுக்காக கூகுள் ஒரு புதிய விநோதம்!


கூகில் தேடுபொறியில் நாம் தேடும் வார்த்தையை சேமித்து
ரெக்காட் செய்து ஒரு புதிய முகவரியை கொடுக்கும் இணையதளம்
ஒன்று உள்ளது.முற்றிலும் மாறுபட்ட இணையதளமாகவே உள்ளது.
இனி இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

”லெட் மி கூகுள் தட் பார் யு “இணையதள முகவரி : www.lmgtfy.com
இந்த இணையதளத்திற்கு செல்லவும் கூகுல் போன்றே தோற்றம்
அளிக்கும் இதில் நீங்கள் தேடும் வார்த்தையை டைப் செய்து
“Google search ” பட்டனை அழுத்தவும்.






இப்போது படம் 1- ல்காட்டியபடி அதே முகப்பு திரையில் கட்டத்திற்குள்
இணையதள முகவரி ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும் இதன் அருகில்
மவுஸை கொண்டுசெல்லும் போது “copy” மற்றும் “shorten”  இரண்டு
பட்டன் தெரியும். இப்போது “shorten ” என்ற பட்டனை அழுத்தவும் சில
நொடிகளில் ஒரு shorten முகவரி தெரியும்.அதை ”Copy ”  செய்து
New window -ல் அந்த இணையதள முகவரியை “Paste” செய்யவும்.
இப்போது நீங்கள் எற்கனவே கூகிலில் தேடிய வார்த்தை அதுவாகவே
தானாக டைப் செய்யப்பட்டு கூகுலில் விடைகளை காண்பிக்கும்.
வேடிக்கைகாக மட்டும் இல்லை இதன் பயன் என்னவென்றால் சில
நேரங்களில் பெரிய நிறுவனத்திற்கு நாம் இணையதளம் வடிவமைத்து
கொடுக்கும் போது கூடவே அந்த நிறுவனத்தின் பெயரை கூகுலில்
டைப் செய்தால் தேடுதல் முடிவில் உங்கள் நிறுவனம் முதலிடம் வரும்
என்று சொல்வதை விட இந்த மாதிரி ஒரு இணையதளமுகவரி
கொடுத்தால் அவர்கள் அந்த முகவரியை க்ளிக் செய்யும் போது
அதுவாகவே கூகுலில் அந்த நிறுவனத்தின் பெயரை டைப் செய்து
இவர்களது நிறுவனத்தின் இணையதளம் வருவது போன்ற இந்த முறை
இன்னும் சிறப்பாக இருக்கும்.உதாரணமாக நாம் goodluckanjana என்று டைப்
செய்து ஒரு முகவரி உருவாக்கியுள்ளோம்.  http://bit.ly/1cShbJa


 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top