.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 7 September 2013

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..! – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் சமீப காலத்தில் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து பிரமாண்டமான வளர்ச்சியை (சம்பளத்தில் மட்டும்) பெற்றவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் வெளிவந்திருக்கிற படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’… முழுப்படமும் காமெடியை மையப்படுத்தி எடுக்க வேண்டும் என இயக்குனர் பொன்ராம் முயற்சித்திருக்கிறார்… பாவம் பல இடங்களில் காமெடிக்கு பதில் ‘நற…நற…’ கடிதான் மிஞ்சுகிறது.


கதை என பார்த்தால் பெருசாக எதுவும் இல்லை. சிவகார்த்தியும், சத்யராஜூம் கிராமத்தில் எதிர் எதிர் பார்ட்டிகள்… சத்யராஜ் மகள் மீது சிவகார்த்திக்கு காதல்… இந்த காதல் கைகூடியதா… சத்யராஜ் வில்லத்தனம் ஏதாவது செய்தாரா? என்பதுதான் கதை.

sep 7 Varutha-Padatha-Valibar

 

படத்தின் தலைப்பை போலவே எந்த காட்சிக்கும்… பாடலுக்கும்… கதைக்கும்… ஏன் படத்துக்குமே இயக்குனரும், நடிகர்களும் வருத்தப்படாமல் இஷ்டம்போல எடுத்திருக்கிறார்கள்… படம் பார்க்கிற நமக்குத்தான் வருத்தமோ… வருத்தம்… இருக்காதா எதுவுமே புரியமாம போனா…
சத்யராஜ் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் இருந்து மிகவும் மாறுபட்டு மிகவும் கீழே இறங்கி வந்து போயிருக்கிறார்… அவரின் வழக்கமான நடிப்பு கூடஇந்த படத்தில் இல்லை.

தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளின் இரு பெரும் தலைவர்கள் மோதிக் கொண்ட விஷயத்தை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பேரில் நக்கல் செய்திருப்பது இயக்குனரின் குசும்புத்தனத்துக்கு ஒரு உதாரணம்…(எந்த கட்சின்னு நாங்க சொல்ல மாட்டோம்மில்ல)
ஊருக்கே தெரிந்த சத்யராஜின் மகள்தான் ஹீரோயின் என்பது சிவகார்த்திக்கு தெரிந்த பிறகும்… ‘ஊதா கலரு ரிப்பன்… யாரு உனக்கு அப்பன்’ என பாடலிலும் லாஜிக் மீறியிருக்கிறார்கள்..(சினிமாவுல ஏதுப்பா லாஜிக்னு யோசிக்கிறது தெரியுது…)

சிவகார்த்தியை மட்டுமே மையப்படுத்தி படம் ஓடுகிறது… இயக்குனர் ராஜேஷ் வசனம் பெருசாக எடுபடவில்லை… இமானின் இசையில் இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்கிறது… பாலசுப்பிரமணியின் ஒளிப்பதிவு மட்டும் ஓகே ரகம்… கிளைமாக்ஸ் முடியும் என பார்த்தால் நீ…..ண்டு கொண்டே போகிறது… மொத்தத்தில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் பார்க்கிற ரசிகர்களை கூட சேர்த்துக் கொள்ளாது என்பதுதான் வெளியே தெரியாத உண்மை..!
படத்துல கதைன்னு எதுவும் இல்லாம போனாலும் போட்டிக்கு எந்த படமும் ரிலீஸ் ஆகாதது இந்த பட வசூலுக்கு வாய்ப்பா அமையலாம்..!

‘அம்மா’ மினரல் குடிநீர் 15–ந்தேதி அறிமுகம்!


மக்களின் அத்தியாவசிய தேவைகளில் முக்கியமானது குடிநீர். பல இடங்களில் குடிநீர் சுத்தமாக இல்லாத காரணத்தால் ‘மினரல் வாட்டர்’ வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து விட்டது.கடைகளில் 1 லிட்டர் மினரல் வாட்டர் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது. பாக்கெட் மினரல் வாட்டர் ரூ.1 முதல் 1.50 வரை புழக்கத்தில் உள்ளது.
ரெயில்களில் 1 லிட்டர் மினரல் வாட்டர் (ரெயில் நீர்) ரூ.15–க்கு விற்பனை செய்யப்படுகிறது.


மினரல் வாட்டர் விலை அதிகமாக இருப்பதால் குறைந்த விலையில் தரமான குடிநீர் வழங்க முதல்– அமைச்சர் ஜெயலலிதா திட்டமிட்டார்.இதையொட்டி ஏழை எளிய மக்கள் நலனை கருத்தில் கொண்டு குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ‘அம்மா மினரல் வாட்டர்’ உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.


IND1674A.JPG

 


இதை செயல்படுத்தும் வகையில், முதற்கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தினமும் 3 லட்சம் லிட்டர் மினரல் வாட்டர் குடிநீர் தயாரிக்கும் வகையில் ‘அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் அமைக்கவும், இங்கு உற்பத்தி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு 1 லிட்டர் பாட்டில் குடிநீர் 10 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் இவை அரசு பஸ்களிலும், சென்னையில் உள்ள பஸ் நிலையங்களிலும், மாவட்டங்களில் உள்ள புறநகர் பஸ் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த ‘அம்மா மினரல் வாட்டர்’ உற்பத்தி நிலையம் பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான வருகிற 15–ந்தேதி துவங்கப்பட்டு அன்றைய தினமே மினரல் வாட்டர் விற்பனையும் நடை முறைக்கு வரும் என்றும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இதையொட்டி கும்மிடிப்பூண்டியில் அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மினரல் வாட்டர் தயாரிப்பதற்கு தேவையான இயந்திரங்கள் சாலை போக்குவரத்து நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

வருகிற 15–ந்தேதி முதல்– அமைச்சர் ஜெயலலிதா இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மினரல் வாட்டர் விற்பனையை அறிமுகம் செய்கிறார்.எனவே 15–ந்தேதியில் இருந்து பஸ் நிலையங்கள், ஓட்டல்கள், அரசு விரைவு பஸ்கள் நீண்ட தூர பஸ்களில் ‘அம்மா மினரல் வாட்டர்’ 1 லிட்டர் பாட்டில் 10 ரூபாய்க்கு வழங்கப்படும். இந்த திட்டம் பஸ் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.அடுத்த கட்டமாக மேலும் 9 ஊர்களில் அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையங்கள் அமைக்கவும் சாலை போக்குவரத்து நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இனி வருமான வரி வங்கிகளில் செலுத்தலாம்!

கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க வங்கிகளில் வருமான வரி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.பெரும்பாலான வங்கிகள் இணையதளம் மூலமாகவும் வரி செலுத்தும் வசதிகளை அளிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.


sep 7 -income-tax-department


இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் ஜெ.சதக்கத்துல்லாஹ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”செப்டம்பர் மாத கடைசியில், வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள தரமதிப்பீடு உடைய வங்கிகளில் வருமான வரி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


அதன்படி, பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாடியாலா, அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மஹாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, தேனா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, சின்டிகேட் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி, விஜயா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஐ.டீ.பி.ஐ. வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி ஆகிய வங்கிகளில் செலுத்தலாம்.”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சில உணவுகளைக் பார்ப்போமா?


பொதுவாக உடல் ஆரோக்கியமானது இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தான் உள்ளன. ஏனெனில் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கு இரத்தமானதுதான் மிகவும் இன்றியமையாதது.

எனவே அத்தகைய இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், உடலில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, உடலின் உறுப்புக்கள் மெதுவாக பாதிக்கப்படும். இவ்வாறு அதிகப்படியான நச்சுக்கள் இரத்தத்தில் இருந்தால் தான், அலர்ஜி, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, தொடர்ச்சியான தலை வலி, சோர்வு போன்றவை ஏற்படும்.

sep 7 - kealth veg food

அதுமட்டுமின்றி, அசுத்த இரத்தமானது உடலில் இருந்தால், உடலில் மட்டுமின்றி, சருமத்திலும் பல பிரச்சனைகள் ஏற்படும். அதில் பிம்பிள், முகப்பரு, கருமைப் படிதல், பொலிவிழந்த சருமம் மற்றும் வறட்சியான சருமம் போன்றவை ஏற்படும்.


 எனவே தான், கடைகளில் இரத்தத்தை சுத்திகரிக்கும் பல்வேறு மருந்துகள் உள்ளன. ஆனால் இந்த மருந்துகளால் எந்த நன்மையும் கிடைப்பதில்லை. ஆகவே இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுகளை சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, உடலில் இரத்தத்தை சுத்திகரிக்கும்
கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நிணநீர் நாளங்கள் நன்கு செயல்பட்டு, இரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலில் இரத்தத்தை சீராக ஓட வைக்கும்.


இங்கு இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சில உணவுகளைக் பார்ப்போம். அதைப் படித்து, அவற்றை உணவில் சேர்த்து வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, சருமமும் நன்கு அழகாக மின்னும் என்று உறுதிபட கூறுகிறார்கள்.


அதாவது வாரம் 2-3 முறை ஒரு டம்ளர் முட்டைகோஸ் ஜூஸை குடித்து வந்தால், உடலில் உள்ள இரத்தமானது சுத்தமாகும்.

பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான காலிஃப்ளவரில் குளோரோஃபில் என்னும் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் பொருள் அதிகம் உள்ளது. ஆகவே இந்த உணவுப்பொருளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.


கசப்புத் தன்மையுடைய பாகற்காய் அதிகம் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, சர்க்கரையின் அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். அதிலும், பாகற்காயை வேக வைத்து சாப்பிட்டால் தான், அதன் முழு நன்மையைப் பெற முடியும்.


வாரத்திற்கு 2 முறை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு, அந்த நீரை பருகி வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் மட்டுமின்றி, கிருமிகளும் அழிந்துவிடும்.
பூண்டு ஒரு சிறந்த ஆன்டி-பயாடிக் மட்டுமின்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மையும் கொண்டது. மேலும் இது உடலில் தங்கியுள்ள நச்சுகளை மட்டுமின்றி, தேவையற்ற கொழுப்புக்களையும் கரைத்துவிடும்.


கேரட் கேரட் சாப்பிட்டால், சருமம் பொலிவாக இருக்கும் என்று சொல்வார்களே, அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் கேரட் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும் என்பதால் தான். ஆகவே தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடித்து, ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருங்கள்.


எலுமிச்சையில் உள்ள புளிப்புத்தன்மை இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் உள்ள அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். மேலும் இது உடல் எடையை குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.


பழங்களில் அன்னாசிப் பழம் இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. ஆகவே அன்னாசியை டயட்டில் சேர்த்து, இரத்தத்தை மட்டுமின்றி, சிறுநீரகத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.


இஞ்சி டீயை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தாலும், இரத்தம் சுத்தமாக இருக்கும்.

சிறுநீரகத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுத்தப்படுத்தும் தன்மை பார்ஸ்லியில் அதிகம் உள்ளது. மேலும் இது இரத்தத்தை சுத்தப்படுத்தும் வைத்தியங்களில் மிகவும் பிரபலமான பொருளும் கூட.
நெல்லிக்காயிலும் இரத்தத்தை சுத்திகரிக்கும் பொருள் அதிகம் நிரம்பியுள்ளது. ஆகவே தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு, இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.

தகவல் சுரங்கம் - திலகரின் "விநாயகர் சதுர்த்தி'


சமய விழாவான விநாயக சதுர்த்தியை, சமூக விழாவாக மாற்றியவர் பாலகங்காதர திலகர். 


முதன்முதலில் புனேயில் தான் விநாயகர் சதுர்த்தி, சமூக விழாவாக கொண்டாடப்படும் வழக்கம் தோன்றியது. 

பின் இந்த வழக்கம் மும்பைக்கு பரவியது. சிவாஜியின் சாம்ராஜ்யத்தில் விநாயகர் சதுர்த்தி, அரச விழாவாக கொண்டாடப்பட்டது. 


பேஷ்வாக்களின் குல தெய்வமாக விநாயகர் இருந்தார். பேஷ்வாக்களின் வீழ்ச்சிக்குப் பிறகு விநாயகர் சதுர்த்தி, வீட்டிற்குள் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகையாக மாறி விட்டது. 


பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், திலகர் இதனை மீண்டும் சமூக விழாவாக மாற்றினார். ஜாதி வேறுபாடுகளை களைய இந்த விழா உதவும் என எண்ணினார். 

பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக மாற்றினார். 

விநாயகர் சதுர்த்தியை போன்றே, சிவாஜி ஜெயந்தியையும் மகாராஷ்டிராவில் சமூகவிழாவாக திலகர் மாற்றினார்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top