கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க வங்கிகளில் வருமான வரி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.பெரும்பாலான வங்கிகள் இணையதளம் மூலமாகவும் வரி செலுத்தும் வசதிகளை அளிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் ஜெ.சதக்கத்துல்லாஹ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”செப்டம்பர் மாத கடைசியில், வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள தரமதிப்பீடு உடைய வங்கிகளில் வருமான வரி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாடியாலா,...
Saturday, 7 September 2013
இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சில உணவுகளைக் பார்ப்போமா?
பொதுவாக உடல் ஆரோக்கியமானது இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தான் உள்ளன. ஏனெனில் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கு இரத்தமானதுதான் மிகவும் இன்றியமையாதது.
எனவே அத்தகைய இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், உடலில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, உடலின் உறுப்புக்கள் மெதுவாக பாதிக்கப்படும். இவ்வாறு அதிகப்படியான நச்சுக்கள் இரத்தத்தில் இருந்தால் தான், அலர்ஜி, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, தொடர்ச்சியான தலை வலி, சோர்வு போன்றவை ஏற்படும்.
அதுமட்டுமின்றி, அசுத்த இரத்தமானது உடலில் இருந்தால், உடலில் மட்டுமின்றி, சருமத்திலும் பல பிரச்சனைகள் ஏற்படும். அதில் பிம்பிள், முகப்பரு, கருமைப் படிதல், பொலிவிழந்த சருமம் மற்றும் வறட்சியான சருமம்...
தகவல் சுரங்கம் - திலகரின் "விநாயகர் சதுர்த்தி'
சமய விழாவான விநாயக
சதுர்த்தியை, சமூக விழாவாக மாற்றியவர் பாலகங்காதர திலகர்.
முதன்முதலில் புனேயில்
தான் விநாயகர் சதுர்த்தி, சமூக விழாவாக கொண்டாடப்படும் வழக்கம் தோன்றியது.
பின்
இந்த வழக்கம் மும்பைக்கு பரவியது. சிவாஜியின் சாம்ராஜ்யத்தில் விநாயகர் சதுர்த்தி,
அரச விழாவாக கொண்டாடப்பட்டது.
பேஷ்வாக்களின் குல தெய்வமாக விநாயகர் இருந்தார்.
பேஷ்வாக்களின் வீழ்ச்சிக்குப் பிறகு விநாயகர் சதுர்த்தி, வீட்டிற்குள் மட்டும்
கொண்டாடப்படும் பண்டிகையாக மாறி விட்டது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், திலகர்
இதனை மீண்டும் சமூக விழாவாக மாற்றினார். ஜாதி வேறுபாடுகளை களைய இந்த விழா உதவும் என
எண்ணினார்.
பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக மாற்றினார்.
விநாயகர்
சதுர்த்தியை போன்றே, சிவாஜி ஜெயந்தியையும் மகாராஷ்டிராவில் சமூகவிழாவாக திலகர்
மாற்றினார...
இலவச மொபைல் போன், கம்ப்யூட்டர்: மத்திய அரசு பரிசீலனை!
மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் விதத்தில் காங்கிரஸ் இலவச
மொபைல் போன் மற்றும் இலவச கம்ப்யூட்டர் வழங்க பரிசீலனை நடத்தி வருவதாக செய்திகள்
வெளியாகியுள்ளன. இதற்காக 10 ஆயிரம் கோடி செலவு செய்யவும் மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது.
ஆட்சி்யை கைப்பற்ற முயற்சி:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இரண்டு
முறை மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையி்ல் மூன்றாவது முறையாக ஆட்சியை
கைப்பற்றும்நோக்கில் இலவச பொருட்களை விநியோகம் செய்து வாக்காளர்களை கவரும்
நடவடிக்கையி்ல் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2004-ம்
ஆண்டில் மத்தியில் பதவியேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2009-ம் ஆண்டு
முடிவுக்கு வரும் நிலையி்ல் அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் நாடு முழுவதும் உள்ள
விவசாயிகளின் மொத்த கடன் அளவான 50 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தார். இதன்...
எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் பதவிநீக்கம்: உடனடியாக அமலுக்கு வருகிறது சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
குறைந்தபட்சம் 2 வருடம் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ., மற்றும்
எம்.எல்.சி.,க்களின் பதவிகள் உடனடியாக பறிக்கப்பட வேண்டும் என்ற சுப்ரீம்
கோர்ட்டின் உத்தரவு உடனடியாக அமலுக்கு வர உள்ளது. இதற்கான உத்தரவை சுப்ரீம் கோர்ட்
நேற்று பிறப்பித்தது. தண்டனை பெற்ற உறுப்பினர்களை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தால்
பாதுகாக்கப்பட முடியாது எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு :
தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ., மற்றும் எம்.எல்.சி.,க்கள் தகுதி நீக்கம்
செய்யப்பட்டு அவர்களின் பதவிகள் பறிக்கப்படும் எனவும், சிறையில் இருக்கும்
உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் ஜூலை 10ம் தேதி சுப்ரீம் கோர்ட்
தீர்ப்பளித்தது. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு குரல் எழுப்பின.
இதனால் சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு
சார்பில்...