.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 6 September 2013

பங்குச் சந்தை - முக்கிய கலைச் சொற்களுக்கான அர்த்தம்!


பங்குச் சந்தை முதலீட்டில் சில முக்கியமான வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்து கொண்டால் கம்பெனிகளின் காலாண்டு முடிவுகளை சட்டெனப் புரிந்து கொள்ள உதவும். எனவே, சில முக்கிய கலைச் சொற்களுக்கான அர்த்தம் இதோ உங்களுக்காக...!

முக மதிப்பு (Face Value)

ஒரு பங்கின் முகமதிப்பு என்பது பங்கின் மூலம் பங்கு மூலதனத்துக்குப் போய்ச் சேரும் தொகையைக் குறிப்பதாகும். இந்த மதிப்புக்குதான் டிவிடெண்ட் வழங்கப்படும்.

புத்தக மதிப்பு (Book Value)

கம்பெனியின் மொத்தச் சொத்து மதிப்பிலிருந்து அதன் கடன்களைக் கழித்தால் கிடைக்கும் மதிப்புதான் இது. ஒரு கம்பெனியை விற்றால் என்ன விலை கிடைக்குமோ, அதுதான் அந்த கம்பெனியின் புத்தக மதிப்பு.

செயல்பாட்டு லாப வரம்பு (Operating Profit Margin)

கம்பெனி வழக்கமாகச் செய்யும் செலவுகளான மூலப் பொருட்களின் விலை, பணியாளர்கள் சம்பளம், வரி மற்றும் தேய்மானத்துக்கு முந்தைய செலவு போன்றவற்றை அதன் வருமானத்தால் வகுக்கக் கிடைப்பது இது. வர்த்தகச் செயல்பாடுகளுக்கான செலவை ஒரு கம்பெனி சிறப்பாகக் கையாளுகிறதா என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

மார்க்கெட் கேபிட்டலைசேஷன் (Market Capitalization)

கம்பெனியின் அங்கீகரிக்கப்பட்ட, வெளியிடப்பட்ட மற்றும் முதலீட்டா ளர்களால் வாங்கப்பட்டுள்ள மொத்த பங்குகளின் சந்தை மதிப்பு இது. கம்பெனி எந்த அளவுக்கு பெரிது என்பதை இது காட்டும்.

இ.பி.எஸ். (Earning per share)

ஒரு பங்கு சம்பாதிக்கும் தொகையே இது. குறிப்பிட்ட காலத்தில் ஒரு பங்கு மூலம் எவ்வளவு வருமானம் கிடைத்திருக்கிறது என்பதைக் குறிப்பது இது. கம்பெனியின் நிகர லாபத்தை, அதன் மொத்தப் பங்குகளின் எண்ணிக்கையால் வகுத்தால் இது கிடைக்கும். இ.பி.எஸ். அதிகமாக இருக்கும் பங்குகளை துணிந்து வாங்கலாம்.

பி/இ விகிதம் (Price to Earnings Ratio)

பங்கின் சந்தை விலைக்கும், அந்தப் பங்கின் இ.பி.எஸ்-க்கும் உள்ள விகிதம்தான் பி/இ விகிதம். இந்த விகிதம் குறைவாக இருக்கும் பங்குகளை வாங்கலாம்.

இண்டஸ்ட்ரி பி/இ விகிதம் (Industry P/E)

ஒரு குறிப்பிட்ட துறையில் இருக்கும் மொத்த நிறுவனங்களின் சராசரி பி/இ விகிதம்தான் இது. இந்த சராசரியுடன் குறிப்பிட்ட நிறுவனத் தின் விகிதத்தை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். சராசரி பி/இ விகிதத்தைவிட கம்பெனியின் விகிதம் குறைவாக இருந்தால், அந்த கம்பெனி பங்கை வாங்கலாம்.

பி/பி.வி (Price to book Value)

பங்கின் விலைக்கும் புத்தக மதிப்புக்கும் உள்ள விகிதம். அதாவது, பங்கின் விலையை, பங்கின் புத்தக மதிப்பால் வகுக்கக் கிடைப்பது. பி.இ விகிதத்தைப் போல இந்த விகிதமும் குறைவாக இருந்தால் நல்லது.

ஈபேயில் (eBay) பணம் சம்பாதிப்பது எப்படி?


இணையதளம் 1995 ல் நிறுவப்பட்டது. இவ்விணையதளம் பொருட்களின் ஏல மற்றும் விற்பனை சந்தை போல் செயல்பட்டுவருகிறது. ஈபே மூலம் லட்சக்கணக்கான பொருட்கள் தினமும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது, ebay ல் பொருட்களை
விற்பதன் மூலம் விற்பனையாளர்கள் நிறைய லாபங்களை ஈட்டிவருகின்றனர்.

நீங்களும் இதில் சேர்ந்து பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் உள்ளன.ஈபேயில்
கிடைக்கும் வருமானம் உங்களுக்கு பகுதி நேர பணமாக (Part Time Cash) இருக்கலாம்,
ஏன் இதை நீங்கள் முயன்றால் முழு நேர தொழிலாகவும் (Full time Business) செய்ய
முடியும்.ஈபே ஒரு வணிக தளம், இதில் பொருட்களை விற்பதன் மூலம் பணம்
சம்பாதிக்கலாம் என்பது வரை சரி. ஆனால் எப்படிப்பட்ட பொருட்களை விற்பது?,
அதை எப்படி தயாரிப்பு நிறுவனங்களிடமோ அல்லது தனியாரிடமோ பெறுவது?.
மேலும் அப்படி விற்க்கப்படும் பொருட்களின் மூலம் இதை எப்படி ஒரு தொழிலாக
மாற்றி ஈபேயில் PowerSeller (PowerSeller) என்பது விற்பனையாளர்களின் உயர்
தகுதி ஆகும்) அந்தஸ்தை பெறுவது? போன்ற கேள்விகள் உங்களிடம் தோன்றலாம்.
அதற்க்கு விடைகான இந்த பதிவு உங்களுக்கு உதவும்.

உண்மையில் சொல்லபோனால், ஈபேயில் பணம் சம்பாதிக்க தொடங்குவதென்பது
எளிதான காரியம் தான். உங்களுக்கான விற்பனையாளர் கணக்கை தொடங்கிய பின்,
உங்களிடமுள்ள பழைய அல்லது உங்களுக்கு தேவைப்படாத பொருள்கள் ஏதும்
இருந்தால் அதனை விற்பதற்கான முயற்சியை செய்து பார்க்கலாம். ஒருவேளை
நீங்கள் மற்றவர்களிடம் இருந்து பொருட்களை வாங்கி விற்க முற்படும்
(start buying stock to resell) முன், இவ்வகையான அடிப்படை விற்பனையில்
ஈடுபடும் பட்சத்தில் இது சிறந்த அனுபவங்களை தரலாம்.

நீங்கள் பொருட்களை வாங்கி விற்க்கும் (Reselling) முறையில், எந்த மாதிரியான
பொருட்களை விற்க்கும்விற்பனையாளராக (seller) விரும்புகிறீர்கள் என்பதை
முதலில் தீர்மானிக்க வேண்டும். நிச்சயமாக நீங்கள் எந்த வகையான பொருட்களையும்
விற்கமுடியும், ஆனால் ஒரு பெயர்பெற்ற (Famous) விற்பனையாளராக நீங்கள் மாற
வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட வகையான பொருட்களை விற்பது தான் சிறந்ததாக
இருக்கும்.அதற்காக உங்களின் விற்பனை பொருட்கள் ஒரு குறுகிய வட்டத்தில் தான்
இருக்கவேண்டும் என்பது அர்த்தமில்லை. நீங்கள் விற்பனை செய்வதாக இருக்கும்
பொருள் பிரபலமாக மற்றும் அதிகமாக விற்பனையாக கூடியதாக இருக்கவேண்டும்.
இதை கண்டறிய ஈபேயின் மேம்ப்பட்ட தேடல் (ebay Advanced Search) வசதியை
பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட வகை பொருள்களின்விற்பனை விகிதம் மற்றும் அதன்
விலை நிர்ணயம் போன்றவற்றை தெரிந்து கொள்வது நல்லது.

உதாரணத்திற்க்கு நீங்கள் கணினி விளையாட்டு மென்பொருள்களை (computer Games)
விற்கநினைக்கிறீர்கள் என்றால், நீங்கள் வாங்கி விற்பதற்க்கு ஆயிரக்கணக்கான
விளையாட்டு மென்பொருள்கள் உள்ளன. ஆனால் எவை உங்களுக்கு அதிகமாக விற்று
லாபமீட்டி தரும் அல்லது எவை உங்களை நட்டப்படுத்தும்என்பதை தெரிந்து வைத்துக்
கொள்ளவேண்டும். நீங்கள் தவறான பொருட்களை வாங்கி வைத்து விற்பனை
செய்ய முடியாமல், பணத்தை இழக்க முடியாது. எனவே ஈபேயின் தேடுதல் மூலம்
பட்டியலிட்டுள்ள பொருட்களில் எவை தொடந்து விற்பனை செய்யப்பட்டுவருகிறது,
மேலும் எவை உங்களுக்கு அதிக லாபம் பெற்று தரும் என்பதையும் அறிந்து கொள்வது
சிறந்தது.

சரி, எந்த பொருட்களை விற்று லாபம் சம்பாதிப்பது என்பதை தெரிந்து கொண்டீருப்பீர்கள்,
இப்பொழுதுஅதை நீங்கள் எங்கே வாங்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
விற்பனையாளர்கள் (sellers) யாரும் அவர்கள் எங்கே பொருட்களை வாங்கி விற்கிறார்கள்
என்பதை உங்களுக்கு சொல்லமாட்டார்கள். அவ்வாறுசொல்வது அவர்களின்
பணப்பெட்டியின் சாவியை உங்கள் கையில் கொடுப்பதை போன்றதாக கருதுவார்கள்.
அது தான் உண்மையும் கூட. எனவே நீங்கள் அதை தெரிந்து கொள்ள உங்கள்
மூளைக்கும் கால்களுக்கும் சிறிது வேலைக்கொடுத்தாக வேண்டும்.

தயாரிப்பு பொருள்களை வாங்க நீங்கள் இரண்டு முக்கியமான இடங்களை நாட வேண்டும்.
மொத்த விற்பனையாளர்கள் (wholesalers) அல்லது dropshippers. இரண்டு வகையிலும்
நீங்கள் பொருட்களை வாங்க அவர்களுக்கே உரித்தான சில விதிமுறைகள் உள்ளன.
அதில் எதை நீங்கள் பின்பற்ற போகிறீர்கள் என்பது உங்களை பொருத்தது.

Dropshippers உங்களுக்கான பொருட்களின் கையிருப்பை (product stock) அவர்களே
வைத்திருப்பார்கள். எனவே உங்கள் வாடிக்கையாளரிடமிருந்து (Customer) பணத்தை
பெற்றபின், Dropshippers க்கு பணத்தை கொடுத்தால் போதுமானதாக இருக்கும்.
அதற்காக நீங்கள் அவர்களின் குறிப்பிட்ட சில திட்டங்களில் (scheme) ஒன்றில்
இணைந்திருக்க வேண்டும்.

நீங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொத்த விற்பனையாளர்கள் (wholesaler)
தேர்வு செய்திருந்தால், உங்களுக்கு பொருட்களை வாங்கி வைக்க அறை (stock room),
மற்றும் முன்கூட்டியே அதை வாங்க பணம்(Investment) வேண்டும். சில நேரங்களில்
நீங்கள் வாங்கிய பொருளை விற்க இயலவில்லையெனில், இம்முறைஉங்களை நட்ட
படுத்த நேரிடலாம். அதனால் நான் ஏற்கனவே சொன்னதை போல் தேடல்களின் பட்டியல்
முடிவைபொருத்து இதை தந்திரமாக செய்யலாம். அப்படி செய்வதன் மூலம் ரீஸ்க்
குறையலாம்.



சரி, மீண்டும் தயாரிப்பு பொருட்களை எங்கே வாங்குவது என்பதிற்க்கு செல்வோம்.
ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு பொருளை வாங்கி விற்க திட்டமிட்டு விட்டிர்களெனில்,
எளிமையான வழியென்னவெனில் அந்த பொருளின் pack ல் பெரும்பாலும்சப்ளையர்
பெயரை பார்க்க முடியும். அதன் மூலம் அவர்களின் இணைய முகவரிக்கு சென்று மேலும்
விவரங்களை திரட்ட முடியும்.

மற்றொரு எளிய முறை நீங்கள் Google இல் தேடுவது. இவ்வாறு தேடுவதன் மூலம் சில
சிறந்த மொத்த விற்பனையாளர்களை கண்டறிய முடியும். காலப்போக்கில் நீங்கள்
பொருட்களை பெற பல ஆதாரங்களை பெறுவதன் மூலம், ஒரு மொத்த
விற்பனையாளரிடமிருந்து மற்றவரிடம் செல்ல நேரிடும். மற்றும் நீங்கள் விற்பனையில்
வளர உங்கள் தயாரிப்பு அளவுகளையும் கட்டமைக்க முடியும்.

விற்பனை சேவை பற்றிய கருத்துகளை (feedback) தெரிந்து கொள்வது உங்கள் தொழிலை
மேலும் வளர்க்க உதவும் முக்கியமான ஒன்று. கருத்துகளை(feedback) தெரிந்து கொண்டு
அதற்கேற்றார் போல் செயல்படுவது உங்களை மேம்படுத்தப்பட்ட விற்பனையாளராக
மாற்றும் என்பதில் ஐயமில்லை. மேலும் அவ்வாறாக செயல் படுவதன் மூலம் நீங்கள்
ஈபேயில் powerseller என்ற தகுதியை பெற இயலும்.

PowerSeller சின்னம் என்பது பல வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள்
மத்தியில் உங்களை மிகவும் தீவிரமான ஈபே விற்பனையாளராக காண்பிக்கும். இதில்
ஐந்து நிலைகள் உள்ளன. நீங்கள் PowerSeller என்பதை அடைய ஒரு இலக்கை
நிர்ணயித்தது இருக்கும் போது, உங்கள் தயாரிப்பு அளவு கட்டமைக்க மற்றும் படிப்படியாக
உங்கள் விற்பனையை அதிகரிக்க வெறும் மூன்று மாதங்களில் அதை செய்ய முடியும்
என்றே கருதுகிறேன்.

பல விற்பனையாளர்கள் ஈபேயில் தங்களுக்கென ஒரு தனி விற்பனை நிலையத்தையே
(Own ebay shop) வைத்துள்ளனர். ஆனால் நீங்கள் முதன் முதலில் பொருட்களை விற்க்க
துவங்கும் போது இது தேவையில்லை. ஏனேனில் உங்கள் விற்பனை நிலைய பக்கம்
பொருட்களே இல்லாமல் வெறுமையாக இருக்கலாம். எனவே உங்கள் விற்பனையில்
நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதற்க்கு பிறகு இவ்வகை தனி விற்பனைநிலையத்தையே
(Own ebay shop) வைத்துக்கொள்ளலாம்.

கடைசியாக நீங்கள் சிந்திக்க வேண்டியது, எவ்வகை விலை வரம்பு (price range)
பொருட்களை விற்க வேண்டுமென்பதை தான். மேலும் எந்த பொருட்களை நீங்கள்
விரும்பி விற்க்க முடியும் என்பது மிக முக்கியமானது. அதிக விலை பொருட்கள் அதிக
லாபத்தை தரலாம் என்ற காரணத்தால் மட்டும் அதை விற்க முடிவெடுக்க வேண்டாம்.
உங்களுக்கு பிடித்த மற்றும் உங்களுக்கு சரியானதாக எது இருக்கும் என்று தேர்வு செய்து
அதில் கவனம் செலுத்தவும். அப்படி செலுத்தினால் அதில் உங்களுக்கு மிக பெரிய வெற்றி
 காத்திருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு வெற்றிகரமான விற்பனை வணிகத்தை
(selling business) உருவாக்க காலம் எடுத்து கொள்ளும் என்பதை நினைவில் கொள்க.

ஆனால் நீங்கள் ஈபேயில், உண்மையாக வெற்றியை அடைய தீர்மானித்துவிட்டிர்கள்  என்றால், இந்த பயணம் உங்களுக்குமகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

The Web Blocker: குறிப்பிட்ட இணையத்தளங்களை தடை செய்வதற்கு !


obscene-website-blocked-in-pakistan 
இணையத்தில் எந்த அளவுக்கு நன்மைகள் உள்ளதோ, அதே அளவுக்கு தீமைகளும் உண்டு என்று கூறினால் அது மிகையல்ல.
இணையத்தை பயன்படுத்தி கொண்டிருக்கும் போது, சில தளங்கள் ஓபனாகி எரிச்சலூட்டும்.
அவ்வாறான தளங்களை Block செய்வதற்கு The Web Blocker என்ற மென்பொருள் பயன்படுகிறது.
இதற்கு முதலில் குறித்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவிக் கொள்ளவும்.
நிறுவும் போது ClaroBrowser Tool Bar, PC Utilities Pro, Babylon போன்றவை இன்ஸ்டால் செய்யலாமா என்று கேட்கப்படும், அப்போதெல்லாம் Decline என்பதை கிளிக் செய்யவும்.
மென்பொருளை நிறுவிய பின், குறித்த மென்பொருளை ஓபன் செய்யவும். அதில் தோன்றும் விண்டோவில் Add Address to Block List என்று காட்டப்படும்.
இதில் நீங்கள் Block செய்ய வேண்டிய தளத்தின் முகவரியை கொடுக்கவும்.
அவ்வளவு தான் இனிமேலும் நீங்கள் அத்தளத்தை ஓபன் செய்தால் Error செய்தி காட்டப்படும்.
இதேபோன்று எத்தனை தளங்களை வேண்டுமானாலும் Block செய்து கொள்ளலாம்.

ஹார்ட் டிஸ்க் சிக்கலா??!!

chkdsk.exe என்னும் பைலை பயன்படுத்தி ஹார்ட் டிஸ்க்கில்(hard disk) ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைகளை அறியலாம். இது ஒரு DOS புரோகிராம் ஆகும். 
தேர்ந்தெடுக்கப்பட்ட டிரைவில்(drive) அல்லது முழு டிஸ்க்கை இந்த
 பைல் சோதனை செய்து பிரச்சினைகள் இருந்தால் அவற்றைச் சரி செய்திடும்.
எனவே கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் மாதம் ஒரு முறையேனும் இந்த பைலை இயக்கிப் பார்த்தல் நல்லது..
இதை பைலை இயக்க, ஸ்டார்ட் அழுத்தி கிடைக்கும் ரன் விண்டோவில் ‘command’ அல்லது ‘cmd’ என டைப்செய்து என்டர் செய்தால் கிடைக்கும் விண்டோவில் கீழ்காணும் கட்டளையை இயக்கவும்..

c:\>chkdsk e:
இது ஹார்ட் டிஸ்க்கின் 'e' டிரைவை சோதனை செய்யும்..

c:\>chkdsk e: /f /r

/f என்னும் கட்டளை டிஸ்க்கினை சோதனை செய்கையில் ஏதேனும் பிழைகளைக்கண்டால்; தானாகவே சரிசெய்துவிடும்..
/r என்னும் கட்டளை பழுதாகிப்போன மீண்டும் பயன்படுத்த முடியாத டிஸ்க்கிக் பகுதிகளை( Bad Sectors ) கண்டறிந்து அதிலுள்ள தகவல்களை மீட்டுத்தர முயற்சிக்கும்..


இந்த செக்டிஸ்க் கட்டளை கொடுத்தபின் கம்ப்யூட்டரை ரீ-ஸ்டார்ட் செய்யவும்..பூட் ஆகும் போது செக்டிஸ்க் தானாக இயங்கி விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்ட்டம் திரைக்கு வந்துவிடும்..

குறிப்பு

  • இந்த பைலை இயக்க ஒரு கம்ப்யூட்டருக்குள் நீங்கள் அட்மினாக (admin)நுழைந்திருக்க வேண்டும்.

  • ஹார்ட் டிஸக்கில் உள்ள தவறுகளை இந்த கட்டளை திருத்த வேண்டுமென்றால் நீங்கள் கம்ப்யூட்டரில் உள்ள எந்த பைலையும் திறந்து வைத்திருக்கக் கூடாது.. 
இப்பத்தான் நான் சோதனை செய்து முடித்தேன் என்னுடைய டிஸ்க்கில் இப்போதைக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை..ம்ம்..அப்பாடி..

Thursday, 5 September 2013

மலிவு விலை விமான டிகெட்டை தேட உதவும் இணையதளம்.


இண்டெர்நெட்டின் அருங்குணங்களில் ஒன்று சில நேரங்களில் அது உங்களை ராஜா
போல உணர வைக்கும் என்பது தான்.அதாவது நீங்கள் ஒரு கட்டளையிட்டால் போதும்
அதனை செய்து முடிக்க ஆயிரம் பேரை அது தேடித்தரும்.

இந்த விசுவாசத்திற்கு பதிலாக நீங்கள் சிறு தொகையை செலுத்த
வேண்டியிருக்கும் என்றாலும் உங்கள் சார்பில் ஒரு வேலையை சிறப்பாக முடித்து
தர பலர் தயாராக இருப்பது உங்கள் கையில் அதிகாரம் தரப்பட்டிருப்பது போன்ற
உணர்வைத்தரும்.

இத்தகைய உணர்வைத்தரும் பல இணையதளங்கள் இருக்கின்றன.இப்போதைக்கு பிளைட்பாக்ஸ் இணையதளத்தை மட்டும் பார்க்கலாம்.



பிளைட்பாக்ஸ் விமான சேவை தளங்களில் அடுத்த புதுமையாக
அறிமுகமாகியிருக்கும் தளம்.நீங்கள் செல்லும் இடத்திற்கான மிக குறைந்த
விலையிலான விமான டிக்கெட்டை தேடித்தருவது தான் இந்த தளத்தின்
நோக்கம்.இதற்காக நூற்றுக்கணக்கான விமான டிக்கெட் நிபுணர்களை உங்களுக்கு
சேவை செய்யவும் வைக்கிறது.

அதிலும் எப்படி?உங்களுக்கு சிறந்த முடிவை தேடித்தர இந்த நிபுணர்களை நான் நீ என போட்டி போடவும் வைக்கிறது.

சுவாரஸ்யமாக இருக்கிறது அல்லவா?

பயனுள்ள சேவையும் கூட!

விமான பயணத்திற்கான டிக்கெட்டை இருந்த இடத்திலிருந்தே பதிவு செய்து
கொள்ள எத்தனையோ தளங்கள் இருக்கின்றன.இவற்றில் பல தளங்கள் மலிவு விலை
டிக்கெட்டையும் தேடித்தருகின்றன.

பல் வேறு விமான சேவைகளின் கட்டண் பட்டியலை முன்வைத்து ஒப்பிட்டு
பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்வதில் துவங்கி மலிவு விலை டிக்கெட்டை கண்டு
பிடித்து தருவதற்கான சூத்திரத்தை கண்டு பிடித்து வைத்திருக்கிறோம் என்று
சொல்வது வரை பல் வேறு வழிகளை இந்த தளங்கள் பின்பற்றி வருகின்றன.

கொஞ்சம் மெனக்கெட்டால் நீங்கள் குறைந்த விலையிலான விமான டிக்கெட்டை
கண்டு பிடித்து விடலாம்.இணையத்தில் அதற்கான வழிகள் அநேகம்
இருக்கின்றன.இதில் கில்லாடிகளும் இருக்கின்றனர்.

நிற்க எல்லோருக்குமே இதில் அனுபவமோ நிபுணத்துவமோ இருக்கும் என்று
சொல்வதற்கில்லை.அது மட்டும் அல்ல,இந்த வகையான தேடலுக்கு நேரமும் பொருமையும்
இருக்கும் என்றும் சொல்வதற்கில்லை.

இந்த இடத்தில் தான் பிளைட் பாக்ஸ் தளம் வருகிறது.

விமான பயணம் மேற்கொள்ள இருப்பவர்களுக்கு குறைந்த விலையிலான விமான
டிக்கெட்டை அதற்கான நிபுணர்கள் மூலம் தேடித்தருவதாக இந்த தளம்
சொல்கிறது.அதாவது உங்கள் சார்பில் விமான டிக்கெட் தேடல் நிபுணர்கள்
இணையத்தில் உலாவி மிக குறைந்த விலையிலான டிக்கெட்டை எந்த விமான நிறுவனம்
வழங்குகிறது என கண்டு பிடித்து தருகின்றனர்.

இந்த சேவைக்காக ஒரு கட்டணத்தை மட்டும் நீங்கள் குறிப்பிட்டால் போதுமானது நிபுணர்கள் உங்களுக்காக களத்தில் இறங்கி விடுவார்கள்.

எந்த ஊரில் இருந்து எந்த ஊருக்கு செல்கிறீர்கள் என்பதை குறிப்பிட்டு
எந்த வகையான விமான பயணத்திற்கு தயாராக இருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டு
இதற்கான பதிலுக்கு நீங்கள் தரத்தயாராக உள்ள கட்டணத்தை குறிப்பிட்டால்
நிபுணர்கள் உங்கள் சார்பில் போட்டி போட்டுக்கொண்டு தேடலில் ஈடுபட்டு மலிவான
டிக்கெட் வழங்கும் விமான சேவையை பரிந்துரைக்கின்றனர்.

அந்த பதில் திருப்தி அளித்தால் மட்டுமே நீங்கள் குறிப்பிட்ட கட்டணத்தை
தந்தால் போதுமானது.இல்லை என்றால் கட்டணம் திரும்ப வழஙக்ப்படும்.ஆனால்
அநேகமாக தேடல் முடிவுகள் உங்கள் பயண செலவை கணிசமாக குறைக்கும் வகையில்
குறைந்த விலையிலான டிக்கெட்டை க்ண்டு பிடித்து தரக்கூடியது என்பதால்
கட்டணம் ஒரு பொருட்டல்ல தான்.

யோசித்து பாருங்கள் ஊருக்கு போகிறேன் என்று சொன்னவுடன் யார் யாரோ
உங்களுக்காக மெனக்கெட்டு குறைந்த விலையிலான டிக்கெட்டை தேடித்தருவது சிறந்த
விஷயம் தானே.

ஒரு விதத்தில் பார்த்தால் கூட்டத்தின் திறமையை பயன்படுத்தி கொள்ளும்
கிரவுட் சோர்சிங் வகை தளம் தான் இதுவும்.ஆனால் இந்த வகை தளங்களில் சேவையை
பயன்படுத்தி கொள்ளவோ அல்லது சேவையை வழக்கவோ எல்லோருக்கும் பொதுவாக வாய்ப்பு
வழங்கப்படும்.நீங்கள் வாடிக்கையாளராகவும் பதிவு செய்து கொள்ளலாம்.அல்லது
நிபுணராகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

ஆனால் பீளைட் பாக்ஸ் தளத்தை பொருத்த வரை நிபுணர்களாகும் வாய்ப்பு அத்தனை
வெளீப்படையாக இல்லை.உங்களுக்கான நிபுணர்கள் தேடித்தருவார்கள் என்று
சொல்கிறதே தவிர அந்த நிபுணர்கள் யார்,அவர்கள் எப்ப்டி தேர்வு
செய்யப்படுகின்றனர் என்று இந்த தளம் சொல்லவில்லை.

அதனால் என்ன ,நாம் சொன்னால் குறைந்த விலையிலான விமான பயண டிக்கெட்டை
கண்டு பிடித்து தர தயாராக இருக்கின்றனர்.அதில் திறமையும்
பெற்றுருக்கின்றனர்.அது போதுமே.

சர்வதேச விமான பயணங்களின் போது இந்த சேவையை பயன்படுத்தி
பாருங்கள்.அல்லது உங்கள் நண்பர்கள் வெளிநாடு செல்லும் போது
பரிந்துரையுங்கள் .

இணையதள முகவரி;http://flightfox.com/

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top